அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட தேவர்களின் குளம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விஜி வெங்கடேஷ் தனது குடியிருப்பு வளாகத்தில் நடந்த சத்சங்க நிகழ்வு குறித்த தனது அனுபவங்களை நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
VERDANT சத்சங்கம் - 21 ஆகஸ்ட் 2025
நம ஓம் நம ஓம் எங்கும் எதிரொலிக்க சுப ஆரம்பம்.
சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம் நல் அதிர்வுகளோடு பாராயணம்..
நாயகி நான்முகி அபிராமி முன் செல்ல பாடல் 50 வரை படனம்.
மோகினி அவதாரம் வாழ்வின் மூன்று தத்துவம் என்பது ஒரு கோணம்..
கலைவாணிக்கு ஒரு கோவில் வேணும் என்பது ஆதிசங்கரரின் ஏக்கம்.
நீ விரும்பும் இடத்தில் கோவில் கொள்வேன் எனச் சொல்ல வைத்தது அவர் தவம்.
ஆதிசங்கரர் முன் செல்ல அம்பாளின் சலங்கை ஒலியில்
அவர் கவனம்.
திரும்பிப் பார்த்தால் நின்றுவிடுவேன் என்பது அவள் வாக்கியம்..
ஒலி நிற்க, திரும்பிய சங்கரர் பார்த்தது கொல்லூர் லிங்கத்தில் அவள் ஐக்கியம்.
அவளை மூர்த்தி ரூபத்தில் பார்க்க ஊர்மக்கள் ஆர்வம்.
மறுபடி கடும் தவத்தால் அவர் கண்டது ஜகஜ்ஜோதியான அற்புதம்.
அவர் மனக்கண்ணில் பார்த்ததை சிலையாய் வார்த்தது சிற்பியின் கரம்.
அற்புத கோலத்தில் அம்பாள் தரிசனம் பேரின்பம்.
இதுவே கொல்லூர் மூகாம்பிகையின் தல புராணம்.
சேனா நாவிதர் சதா திளைத்தது பாண்டுரங்கனின் பண்டரி நாதம்.
சிறந்த பக்திக்கு அவன் ஓர் உதாரணம்.
பாண்டுரங்கனே அரசனிடம் நாவிதராய் சென்றது அவன் பக்திக்கு சன்மானம்.
கேட்ட நற்ச்செய்திகள் நினைவில் உலவ அமைதியாய் கலைந்தது ஜனம்.
*******
Verdant விநாயக சதுர்த்தி விழா - 27.08.2025
ஒற்றை மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் வெற்றி புனைந்த விழி மூன்றும் பெற்றதொரு தண்டைக்கால் வாரணத்தை தன் மனதில் எப்போதும் கொண்டாக்கால் வாராது கூற்று🙏🏻
அமர்க்களமாக 108 உருவம் தாங்கி அமர்ந்த சுமுகன்;
முதாகராத்த மோதகத்தால் ஏகமாய் மகிழ்ந்த ஏகதந்தன்;
கணபதி கானம் கேட்டு கருணை புரிந்த கபிலன்;
சந்திரன் தேய்ந்த கதை கேட்டு கலகலவென சிரித்த
கஜகர்ணன்;
நகைச்சுவை பேச்சு கேட்டு நகைத்த
லம்போதரன்;
திலகரின் பொது விநாயகர் யுக்தியை வியந்த விகடன்;
விழா ஏற்பாடுகளால் அசத்திய குழுவை வாழ்த்திய விக்னராஜன்;
சறுக்கு மரத்தில் ஏறி விளையாடிய விநாயகன்;
ஊஞ்சலில் உல்லாசமாய் தூள் கிளப்பிய தூமகேது;
சாப்பிட்ட அசதியால் போர்வைக்குள் கண்துஞ்சிய கணாத்யக்ஷன்;
அழகிய ஒசிந்த இடைப் பாவையாய் பாலச்சந்திரன்;
புஜங்காசனம் செய்து நமக்குக் காண்பித்த கஜானனன்;
மடியில் புத்தகம் விரித்து வாசித்த வக்ரதுண்டன்;
அரங்கன்போல்
படுத்து பல கணபதி சூழ்ந்த
சூர்ப்பகர்ணன்;
அஷ்ட விநாயகராக அமர்ந்து அருளிய ஹேரம்பன்;
பஞ்சமுகம் கொண்டு நெஞ்சகம் நிறைந்த ஸ்கந்தபூர்வஜன்;
இரு கண்கள் போதவில்லை அவனுருவம்(கள்)
கண்டு களிக்க;
என்(👈🏻) தமிழுக்கும் திறனில்லை வார்த்தைகளால் வடிக்க;
சொல்ல விழைந்தது 108; சொன்னதோ ஈரெட்டு;
அதுவும் அவன் அருளாலே; அவன் தாள் பணிந்ததாலே🙏🏻🙏🏻🙏🏻
சீதக்களப செந்தாமரைப்பூம் பாதம் பணிவோம்;
நற்பலன்கள் யாவும் பெறுவோம்🙏🏻🙏🏻🙏🏻
வாழ்த்துக்கள்,
நன்றிகள், வணக்கங்களுடன்,
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
2 செப்டம்பர் 2025
கொல்லூர் லிங்கத்தில் ஐக்கியமான மூகாம்பிகை வரிகள் சூப்பர். இக்கதை எங்கோ எப்போதோ வாசித்த நினைவு வந்தது.
பதிலளிநீக்குவிநாயகசதுர்த்தி கொண்டாட்டம் பற்றிய உங்கள் கவிதை வரிகள் நல்லாருக்கு.
அதில் 108 திரு உருவங்களின் பெயர்களா? நீங்கள் சொல்லியிருப்பவை? ஒரு சில, கணபதியின் பெயர்கள் என்று முதலில் புரியவில்லை அப்புறம் தெரிந்தது 108 ல் இவையும் அடக்கம் என்று.
கீதா
கொல்லூர் மூகாம்பிகை தலவரலாறு அருமை. விநாயகர் சதுர்த்தி விழாவும் அருமை.
பதிலளிநீக்குபடங்களும் கவித்துவமாக சொல்லிச் சென்ற விதமும் அருமை..வாழ்த்துக்களுடன்..
பதிலளிநீக்கு