அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மீட்டாத வீணை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விஜி வெங்கடேஷ் அவர்கள் அன்னையர் தின சிறப்புப் பகிர்வாக எழுதிய ஒரு பதிவு - அவர் அன்னையர் தினம் அன்றே எழுதி அனுப்பி இருந்தாலும் இன்றைக்கு தான் இங்கே பகிர்ந்து கொள்ள முடிந்தது. படித்துப் பாருங்களேன் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
அன்னையர் தினம் - 10.05.26 :
என் அம்மா (நான் Mumbai போன பிறகு) எழுதிய inland கடிதங்களை நான் ஒரு file இல் தேதி வாரியாக போட்டு வைத்திருக்கிறேன். அவள் 2004 இல் எங்களை விட்டுச் சென்று விட்டாள்.
ஆனால் அவள் தொட்டு எழுதிய கடிதங்கள் அவள் நினைவாக இப்போதும் என்னோடு. அதில் அவள் தொடாத subjects ஏ கிடையாது. சமையல், சங்கீதம், சினிமா, இலக்கியம், வீட்டு அக்கம் பக்கம் சமாசாரங்கள் அனைத்தும் அடங்கும். சிலவற்றை படம் போட்டு விளக்கி எழுதியிருப்பாள்! அவளுக்கு excellent sense of humour, பூ தொடுத்தல், சமையல், கைக்காரியம், கோலம், பாட்டு, பேச்சு எல்லாவற்றிலும் அதீத திறமை. எங்கப்பா அவளைச் சீண்டினாலோ, கோபித்துக் கொண்டாலோ அவ்வளவுதான் எங்கிருந்து அவ்வளவு law points வரும் என்று தெரியாது… எங்கப்பா ஜகா வாங்கிக்கொண்டே சொல்வார், உன்னை வக்கீலுக்குப் படிக்க வைத்திருக்கணும் என்று! அவர்கள் வேலைக்குச் செல்லாததாலும் அதிகமாக இப்போது போல் socialising செய்யாததாலும் அவர்கள் திறமை குடத்தில் விளக்காகவே போய்விடுகிறது.
முத்து முத்தான கையெழுத்துடன் (எழுத்து நேர் கோட்டில் வரவேண்டும் என்பதற்காக inland லெட்டரில் சில சமயம் பென்சிலால் மெலிதாகக் கோடு போட்டு எழுதுவாள்! அவ்வளவு மெனக்கெடல்!) inland letter இல் ஒரு மில்லிமீட்டர் கூட விடாமல் ஒட்டும் இடம் தவிர எழுதுவாள். ரெண்டு page க்கு நடுவில் மடிக்கும் இடத்திலும் கூட!
மிகவும் சுவாரசியமாக சுஜாதா கதையைப் படிப்பதுபோல் இருக்கும். என் அப்பாவைப் பற்றி எழுதாமல் (வாராமல்😁) அவளால் கடிதத்தை முடிக்க முடியாது. எல்லாம் எழுதி முடித்துவிட்டு மற்றவை அடுத்த கடிதத்தில்! (அதாவது எழுதியது போறலையாம்..) என்று எழுதி எப்போதும் உன் நினைவுகளுடன், முத்தங்களுடன் அம்மா… இந்த வரியைப் படித்தவுடன் குபுக்கென்று கண்களில் நீர் பொங்கும்...😥
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீ தான் என் வயிற்றில் பிறக்கணும் கண்ணா என்று சொல்வாள். அதற்கு நான் தகுதி உடையவளே அல்ல🥲அவளுக்கு அக்கறையையும் பிரியத்தையும் காட்ட அல்ல கொட்டத்தான் தெரியும்… அதற்குப் பிரதியாக செய்வதற்கு இவ்வுலகில் எதுவுமே இல்லை என்பது தான் உண்மை...
எந்த ஒரு சுப நிகழ்வுக்குப் போனாலும், பெண்கள் ஒருவரை சூழ்ந்து கொண்டு கலகலவென சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் நடுவே என் அம்மா இருக்கிறாள் என்று அர்த்தம்..
என் தோழிகள் வீட்டிற்கு வந்தால் என்னை கண்டுகொள்ளவே மாட்டார்கள். மாமி என்று கூவிக்கொண்டே நேரே உள்ளே போய் விடுவார்கள். இவளுக்கும் அவர்களைக் கொஞ்சி மாளாது (எனக்குப் பொறாமை தாளாது...😕)
இப்போதெல்லாம் என்னால் அவள் கடிதங்களைப் பார்க்க, படிக்க முடிவதில்லை. ஏதோ என்னையே இழந்ததுபோல் ஒரு ஏக்கம்… அவள் மறைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன....
அவளுக்கு என், என் அண்ணாவின் friends எல்லோரும் அவள் குழந்தைகள்தான். முத்த மழைதான்.... குழந்தைகள் வாண்டுகள் இன்னும் உயிர்!
எங்கள் வீட்டில் சென்ட் மல்லி & ஜாதிப் பூ கொடிகள் இருந்தன. கூடை கூடையாய் பூக்கும். அதை நெருக்கமாக மாலை போல் தொடுத்து வாசல் கேட்டில் நின்று கொண்டு யார் வருகிறார்கள் என்று பார்த்துக் கொண்டு நிற்பாள். தெருவில் வரும் போகும் பெண்களை நிறுத்தி அதைக் கொடுப்பாள். (நீ இங்கு இருந்தா உனக்குத் தொடுத்து தருவேன்… எப்போ வரப் போற என்பாள், கடிதத்தில்)
கொய்யா, சப்போட்டா பழங்களையும் பறித்து வைத்துக் கொண்டு வாசலில் சிறு school போகும் குழந்தைகளுக்கு விநியோகம் நடக்கும்...
நாங்கள் முன்பு இருந்த வீட்டில் பக்கத்து வீட்டு 5 மாத பிள்ளைக் குழந்தையை (ரத்தி அக்னிஹோத்ரி ஜாடையாம் அது, கண்ணு, நிறம் எல்லாம் - எங்கம்மா version! புதிய வார்ப்புகள் வந்த புதிது!)
Almost தானே வளர்த்தாள் (குளிப்பாட்டி அதை towel சுற்றி எங்கம்மாவிடம் அந்தப் பெண் கொடுத்துவிட்டு பாத்துக்கோங்க மாமி என்று தன் வேலையை கவனிக்கப் போய் விடுவாள்). எங்கம்மா will take over. Powder போட்டு dress போட்டுவிடுவது, சாப்பாடு, விளையாட்டு, தூக்கம் எல்லாம் இங்குதான்… அதுவும் அவர்கள் வீட்டில் நன்றாக அழுதுவிட்டு எங்கம்மாவைப் பார்த்தவுடன் டப்பென்று அழுகையை நிறுத்திவிட்டு எங்கம்மாவிடம் தாவும்!
எங்கம்மா மார்பின் மேல்தான் அது ஆலிலை கிருஷ்ணர் போல் படுத்துறங்கும்! நாங்கள் சப்தம் போடக் கூடாது, ஏன் அந்தப் பக்கம் நடக்கவே கூடாது!
ஒரு வருஷம் அதைக் கொண்டாடிவிட்டு அவர்கள் transfer ஆகி மதுரை சென்றவுடன் கண்ணும் கண்ணீருமாக ' என்(!!??) குழந்தையை என்னை விட்டு பிரிச்சு கூட்டிண்டு போய்ட்டா என்று ஒரே அழுகை.தினம் sanskrit இல் ஶ்ரீராமஜெயம் எழுதுவா (அவள் திருமணத்துக்கு முன்பிருந்தே இந்தப் பழக்கம் உண்டு) எழுதும்போது கண்களிலிருந்து நீர் கசிந்து ஶ்ரீராமஜெயம் எழுத்துக்கள் மறையும்! … எப்படி இருக்கு கதை? அப்படி ஒரு பாசம் பொழியும் ஜீவன்!
என்னிடம் சொல்வாள் யாரிடமும் பாசத்தை பிரியத்தை வைக்கக் கூடாது, கடவுள் பிரிச்சிடும் என்று! (நான் மும்பை வந்த பின்). அடிக்கடி என்னிடம் நீ அப்படியே ஒரு வயசுக் குழந்தையாய் ஆயிடணும் உன்னை என் மடியில் போட்டுக் கொள்ளணும் என்பாள். எனக்கு கவிதைகள் பிடிக்கும். மு.மேத்தா, நா.காமராசன் கவிதை வரிகளை என் rough note இல் கிறுக்குவேன். அதைப்பார்த்துவிட்டு ஒரு முறை எங்கப்பாவிடம் இதப் பாருங்கோ, விஜி எவ்வளவு நன்னா அவளுக்கு என்,என் அண்ணாவின் friends எல்லோரும் அவள் குழந்தைகள்தான்..முத்த மழைதான்....என் அண்ணாவின் நெருங்கிய நண்பன் ஒருவன் office விட்டு சில சமயம் நேராக எங்கள் வீட்டிற்கு வருவான். பாவம், office லிருந்து பசியோட வந்திருக்கான் என்று உடனே ரவாதோசைக்குக் (இட்லி மாவு இருந்திருக்காது) கரைத்து மொறு மொறு வென்று சூடாக வார்த்துப் போடுவாள்..
குழந்தைகள் வாண்டுகள் என்றால் இன்னும் உயிர்!
எங்கள் வீட்டில் சென்ட் மல்லி & ஜாதிப் பூ கொடிகள் இருந்தன. கூடை கூடையாய் பூக்கும்.அதை நெருக்கமாக மாலை போல் தொடுத்து வாசல் கேட்டில் நின்று கொண்டு யார் வருகிறார்கள் என்று பார்த்துக் கொண்டு நிற்பாள். தெருவில் வரும் போகும் பெண்களை நிறுத்தி அதைக் கொடுப்பாள்.(நீ இங்கு இருந்தா உனக்குத் தொடுத்து தருவேன்...எப்போ வரப் போற என்பாள்,கடிதத்தில்)
கொய்யா,சப்போட்டா பழங்களையும் பறித்து வைத்துக் கொண்டு வாசலில் சிறு school போகும் குழந்தைகளுக்கு விநியோகம் நடக்கும்...
நாங்கள் முன்பு இருந்த வீட்டில் பக்கத்து வீட்டு 5 மாத பிள்ளைக் குழந்தையை (ரத்தி அக்னிஹோத்ரி ஜாடையாம் அது, கண்ணு,நிறம் எல்லாம் - எங்கம்மா version! புதிய வார்ப்புகள் வந்த புதிது!)
Almost தானே வளர்த்தாள் (குளிப்பாட்டி அதை towel சுற்றி எங்கம்மாவிடம் அந்தப் பெண் கொடுத்துவிட்டு பாத்துக்கோங்க மாமி என்று தன் வேலையை கவனிக்கப் போய் விடுவாள்).எங்கம்மா will take over. Powder போட்டு dress போட்டுவிடுவது,சாப்பாடு,விளையாட்டு,தூக்கம் எல்லாம் இங்குதான்...அதுவும் அவர்கள் வீட்டில் நன்றாக அழுதுவிட்டு எங்கம்மாவைப் பார்த்தவுடன் டப்பென்று அழுகையை நிறுத்திவிட்டு எங்கம்மாவிடம் தாவும்!
எங்கம்மா மார்பின் மேல்தான் அது ஆலிலை கிருஷ்ணர் போல் படுத்துறங்கும்! நாங்கள் சப்தம் போடக் கூடாது, ஏன் அந்தப் பக்கம் நடக்கவே கூடாது!
ஒரு வருஷம் அதைக் கொண்டாடிவிட்டு அவர்கள் tranfer ஆகி மதுரை சென்றவுடன் கண்ணும் கண்ணீருமாக ' என்(!!??) குழந்தையை என்னை விட்டு பிரிச்சு கூட்டிண்டு போய்ட்டா என்று ஒரே அழுகை.தினம் sanskrit இல் ஶ்ரீராமஜெயம் எழுதுவா (அவள் திருமணத்துக்கு முன்பிருந்தே இந்தப் பழக்கம் உண்டு) எழுதும்போது கண்களிலிருந்து நீர் கசிந்து ஶ்ரீராமஜெயம் எழுத்துக்கள் மறையும்! ...எப்படி இருக்கு கதை? அப்படி ஒரு பாசம் பொழியும் ஜீவன்!
என்னிடம் சொல்வாள் யாரிடமும் பாசத்தை பிரியத்தை வைக்கக் கூடாது, கடவுள் பிரிச்சிடும் என்று! (நான் மும்பை வந்த பின்).அடிக்கடி என்னிடம் நீ அப்படியே ஒரு வயசுக் குழந்தையாய் ஆயிடணும் உன்னை என் மடியில் போட்டுக் கொள்ளணும் என்பாள்.எனக்கு கவிதைகள் பிடிக்கும். மு.மேத்தா, நா.காமராசன் கவிதை வரிகளை என் rough note இல் கிறுக்குவேன்.அதைப்பார்த்துவிட்டு ஒரு முறை எங்கப்பாவிடம் இதப் பாருங்கோ, விஜி எவ்வளவு நன்னா எழுதியிருக்கா என்றாள்.. நான் சிரித்துக்கொண்டே அம்மா அது இன்னார் எழுதியது என்னுடையதில்லை, என்மேல case போட்டுடப் போறாங்க.. என்று சொன்னேன்...அதற்கு நீயும் try பண்ணினா எழுத முடியும் என்றாள் (அவ்வளவு நம்பிக்கை என்மேல்! பாவம்...)
அவள் போல் ஒரு தாய் யாருக்கும் வாய்க்காது.😢
அவளின் கடைசி தினங்களில் KG hospitalil காத்திருந்தபோது அவளால் உட்கார முடியவில்லை.என் மடியில் அவளை சாய்த்துக் கொண்டேன்.இது போதும் எனக்கு, வேற என்ன வேண்டும் என்றாள்!(தாய் மடியாம்!😥).
மகள் என்ற உறவைக் கடந்து ஒரு உயிர் சிநேகிதியாகவும் என்னைப் பார்த்தவள்..எங்களுக்குள் பகிரப்படாத விஷயங்களே கிடையாது...இரவு பேசிப் பேசி சிரித்து சிரித்து நேரம் 12, 1 மணியைக் கடந்து விடும்...
பக்கத்து ரூமிலிருந்து இப்போ தூங்கப் போறீங்களா இல்லையா(அப்பா,அண்ணா) என்று சப்தம் வந்த பின்னும் வாயை மூடிக் கொண்டு கிசுகிசுப்பாக சிரிப்பு பேச்சு தொடரும்....
+2 முடிக்கும் வரை என்னை வேலை வாங்கியதில்லை.கையில் கொண்டுவந்து எல்லாம் கொடுப்பாள்.எங்கப்பா திட்டுவார் அவளை வேலைக்குப் பழக்கு என்று....அதற்கு, பரவாயில்லை, அப்புறம் கல்யாணத்துக்குப் பின் அவள்தான செய்யணும், அவள் கெட்டிக்காரி கத்துனுடுவாள் என்று.. எந்த அம்மாவாவது பெண் இரவு 12 வரை படிப்பதைப் பார்த்து, போறும் படுத்துக்கோ கண்ணு வலிக்கக் போறது, 35 மார்க் வருமோனோ? என்று கேட்பாளா?எங்கம்மா கேட்பாள்! (நானே exam க்கு முந்தின நாள்தான் புத்தகத்தைத் திறந்திருப்பேன்! -எல்லாம் புதுசா இருக்கும்!🙄).
எழுத எழுத முடிவு பெறாத சகாப்தம் அவள்..
ஹ்ம்ம்ம்..... அவளை எப்போது பார்க்கப் போகிறேன்!
அவளை
நினைத்துக் கொண்டாட ஒரு தினம்தானா? ஒவ்வொரு நொடியும் நம் உடலாக, உயிராக, மூச்சாக அவள் நிறைந்திருக்கிறாள்....
அம்மா என்னுருவில் இருப்பதும் நீயேதான்.....🙏🏻🙏🏻🙏🏻
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
19 மே 2026
கட்டுரையை மறுபரிசீலனை செய்து வெளியிடலாம். சில இடங்கள் ரிப்பீட் ஆகி இருக்கின்றன. கவிதையைப் படித்து விட்டு அப்பாவிடம் அம்மா என்ன சொன்னார் என்பது மிஸ்ஸிங்.
பதிலளிநீக்குபடிக்கப் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது. என்ன ஒரு அன்பு... என்ன ஒரு கலகலப்பு.. என்ன ஒரு ஈகை உள்ளம்... அருமை.
பதிலளிநீக்குஅம்மா பற்றிய பஹ்டிவு வெகு சுவாரஸியம். பெண்ணை ஒரு தோழியாக நினைத்து பகிர்ந்து கொண்ட அந்த அன்பு, குழந்தைகளுக்குக் கொடுக்கும் மனம் என்று Great! என்று சொல்ல வைத்தது. பதிவு அருமை. உங்க அம்மாகிட்டருந்துதான் உங்களுக்கும் இந்த நகைச்சுவை வந்திருக்கு என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஓரிரு வரிகள் சற்று லிங் ஆகாமல் இருந்தாலும் புரிந்து கொள்ள முடிந்தது.
கீதா