அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
நீ ஆசப்பட்டியேன்னு miniature திரிசூலம் பண்ணிக் குடுத்தேன்டா செல்லம். அதுக்காக அதை எங்கபோனாலும் இப்படி கைல வெச்சுண்டு அலையக்கூடாது....
என்ன? கொஞ்சம் தள்ளிப் பிடிச்சுக்கோ...
Sharp ஆ இருக்காம்மா? குத்திப் பாக்கட்டுமா?
இதுக்குத்தான் சொன்னேன்..😕
ஓட்டுப் போடாதவங்களா மா....
ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
சேவல் bro நீ இறங்கி கொடில போய் உக்காந்துக்கோ..சண்டை போட்டுட்டு இப்ப என்ன கொஞ்சல்?
குமரன்தான் என்னைப் பிடிச்சுண்டு இருக்கான், அதனால நீ இறங்கிப் போ மயில் bro.
நான்தான் முருகனோட வாகனம், தலைல வெச்சுக்க இறகும் கொடுத்திருக்கேன்... மயிலோன்னுதான் அவனை சொல்றாங்க செவலோன்னு சொல்றதில்ல... இறங்கு...
அடடா, ரெண்டு பேரும் இறங்குங்க… (இதுகளுக்கு அதிகமா இடம் குடுத்தா போச்சு....☹️)
ஓம் சண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
*******
இப்பிடி போற வரவங்களுக்கெல்லாம் நீ ஹாய் சொல்லிக்கிட்டிருந்தேன்னா எப்பிடி முருகா? என் கழுத்தப் பிடிச்சுக்கோ. அப்பத்தான் பறக்க முடியும்.... இல்லன்னா இப்பிடியே நடத்தித்தான் கூட்டிண்டு போவேன். பரவாயில்லையா? (அதுக்கு உனக்கு சேவலே போதுமே… நான் எதுக்கு...😏.)
ஓம் சரவண பவாய நமஹ🙏🏻
*******
நம்ம boss கண்ணுல படறதுக்கு முன்னால இத லாக்கர் ல வெச்சு பூட்டிட்டு வரேன்.. இல்லன்னா இதுவும் மிஞ்சாது...☹️
ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ
*******
போகாத ராதா.. please.. உன் கண்ணில் நீர்...
போதும் விடு கிருஷ்ணா .... ஒரு cylinder க்கு வழி பண்ணுன்னா flute வாசிக்கற, இல்ல ஸ்திரப்பிரக்ஞன் பத்தி போதிக்கற...எனக்குப் புரியல.. நான் கிளம்பறேன்....😢
இரு ராதா..அக்ஷய பாத்திரத்துக்கு order போட்டாச்சு. வந்துரும்.
suspense ஆ இருக்கட்டும்னு சொல்லல.
(அதுலயும் அதே சாம்பார் ரசத்தத்தான் கேட்டு வரவழைக்கப்போற...☹️)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணா நம்ம தலைலயும் மயிலிறகு வெச்சு விட்டிருக்கான் பாரு, எவ்வளவு பாசம் இல்லம்மா?
அது ஒண்ணுமில்ல, நாம அவன் வாசிக்கறதக் கேட்டு ரசிச்சு தலையாட்டினா அவனுக்கு மணிச்சத்தம் தொந்தரவா இருக்குமில்ல? இப்ப தலையாட்டமாட்டமே... அதுக்குத்தான்..
ஓ அதுக்கு இப்பிடி ஒரு angle இருக்கா, சர்தான்....😕
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
என்ன சொல்லு இப்படி யாருக்கும் சொல்லாம ரகசியமா இது மாதிரி ஒரு இடத்துல வந்து ஒரு குட்டித் தூக்கம் போடறது மாதிரி சுகம் வராது இல்ல அண்ணா?
ஆமா முருகா, ஆனா நம்ம ரெண்டு பேரோட வாகனங்களுக்குத்
தெரியாம ஒண்ணும் நடக்காது… அதனால அதுகள கொஞ்சம் தனியா கவனிச்சுக்கணும்...
ஓம் கணேசாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் வேலவா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
10 மே 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....