ஞாயிறு, 17 மே, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எழுபத்தி ஒன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



ஏம்பா அந்த மாம்பழம்  எனக்குத்தானே? அண்ணாக்குத்தான் ஏற்கெனவே கொடுத்தாச்சே...


ஆமாம் குமரா. என்ன சந்தேகம்? நாரதர் மாமா வந்திருக்கார், எதுக்கும் அவர் என்ன சொல்றார்னு கேப்போம்...


சர்தான், அப்ப நான் பழனி கிளம்ப  நேரம் வந்தாச்சு.. மயில் bro எங்க இருக்க? வண்டிய start பண்ணு....😏


ஓம் சண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



இன்னிக்கி சித்ரா பௌர்ணமி நீங்க மூணு பேரும் உலக மக்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கணும்🙏🏻நல்லதே நடக்கணும்🙏🏻நாங்களும் உங்களோட வரோம், கிளம்பலாமா முருகா?


ஓ கண்டிப்பா..

(ஏன் அண்ணா காளி தேவி ரொம்ப காரம் சாப்பிடுவாங்களோ?


இப்ப அது ரொம்ப முக்கியம்....☹️

சண்முகா... உஷ்.....🤫)


ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு நந்தி bro...


ஏன் சிம்மா? 


எனக்கு நெத்திச் சுட்டியோட போச்சு. மயில் bro வும் தப்பிச்சிட்டான்.. பாவம் உனக்குத்தான் கெடெச்ச இடத்துல எல்லாம் ஜிகு ஜிகுன்னு மாட்டி விட்ருக்காங்க… அதுவும் அடிக்கிற இந்த வெயில்ல...🥵


(போட்டா எனக்கு அழகா இருக்குன்னு போட்டிருக்காங்க....

எல்லாம் பொறாம....😕)


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா இட்டுவிட்டது புது சாந்துன்னு நினைக்கிறேன். இழுக்குது. இப்பல்லாம்தான் ஒட்டும் டிக்லி வந்துடுச்சே… அவளுக்குத் தானே சாந்து பண்ணி இட்டு விடணும்… அதுலதான் சந்தோஷம்.... ஹ்ம்ம். படுத்தல்ல எவ்வளவு ரகம்!😟


ஓம் கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻


*******



சிரசுல கங்கை இருக்கறது பத்தாதுன்னு பிரம்மாவும் விஷ்ணுவும் வேற மகேஷ்வரனுக்கு அபிஷேகம் பண்றாங்க.அடிக்கிற வெயிலுக்கு அது
தேவதான்... நம்மகிட்டயும் கொஞ்சம் கருணை காட்டுவாங்களா...அதுக்குத்தான நெருங்கி உக்காந்திருக்கோம்! புரிஞ்சா தேவலை...😕

ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻

*******



முகத்தை ஏன் இப்படி வெச்சுக்கற சிம்மா? smiling ஆ வெச்சுக்கோ, என்னைப் பாத்தியா? எது நடந்தாலும் நன்மைக்கே....

என் சிரிப்பே அப்படித்தான் தேவி..👹
(என் மேல ஜம்முனு உக்காந்துட்டு ஏன் சொல்ல மாட்டீங்க? விளக்கு என் பக்கத்துல தான இருக்கு. பிடரி முடி வேற புசு புசுன்னு இருக்கு...😧)

ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



தேவிகள் அபய ஹஸ்தம் காட்டி  ஆசிவாதிக்கறாங்க. சரி. ஆனா குழந்தையின் சிரசு மேலயும் பல கரங்கள் இருக்கு, எல்லாம் எங்கிருந்து வருதுன்னுதான் தெரியல... ஒண்ணும் புரியல🙁 நம்ம பங்குக்கு கைய வெக்கலாம்னு பாத்தா தேவி கோச்சுப்பாங்க.

ச்சும்மா இல்லாம என்ன நடக்குதுன்னு தலைய உள்ள விட்டு பாத்ததுக்கு எனக்கு நல்லா வேணும்.... தேமேன்னு ஒரு ஓரமா படுத்து rest எடுத்திட்டுருக்கலாம்...☹️


ஓம் தேவ்யை நமஹ 🙏🏻🙏🏻🙏🏻



*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

17 மே 2026


1 கருத்து:

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....