அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பும் அனுபவமும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விஜி வெங்கடேஷ் அவர்களது இல்ல வளாகத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த பதிவு - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
CGV நவராத்திரி விழா 2026:
அழகான பொம்மைகளின் அணிவகுப்பு;
நேர்த்தியாய் அவற்றை ஜோடித்தது அதி சிறப்பு;
பஜனையும் பாட்டும் அமர்க்களம்;
பாலகர்கள் பாட்டும் ஆட்டமும் அற்புதம்;
சிவனாய் வேடமிட்டு வந்ததோர் வாண்டு;
அனைவரும் மயங்கினர் அதன் குறும்புகளைக் கண்டு;
கோலாட்டம் என்பது கோல்கொண்டு ஆடும் ஆட்டம்;
இங்கு நடந்ததோ அற்புத காந்தர்வ களியாட்டம்;
பால் நிலவு தண்ணொளி சிந்த;
ஜில்லென காற்று நமைத் தடவிச் செல்ல;
கண் முன்னே வர்ண ஜாலம்;
இன்பமாய் கழிந்தது நேரம்;
கண்டு ரசிக்க கண்கள் போதவில்லை;
இதுபோல் எங்குமே பார்த்ததில்லை;
பெண்களின் ஆட்டம் கோலாகலம்;
ஆண்களின் ஆட்டமோ அட்டகாசம்!
அனைத்தையும் வடிவமைத்து இயக்கியது Smt.மஹாலக்ஷ்மியா?
இல்லையில்லை, அவளுள் இருந்து இயங்கியது சாக்ஷாத் மஹாமாயா!
பஜனைப் பாடல்கள் கற்பிக்கும் குரு வருகை;
சிறார் பாட குரு மிருதங்கம் இசைத்தது பேர் உவகை!
சரஸ்வதி கோலத்தில் வந்தது சின்னஞ் சிறு பெண்;
அது மழலை மொழியில் பாடியதோ தித்திக்கும் தேன்;
பஸ்மாசுரன் சிவனிடம் கேட்டது அபாய வரம்;
அதை நடித்துக் காட்டிய Smt.பார்வதி திறமை அபாரம்;
அவர் ஆடி ஆடி ஓடி ஓடி உட்கலந்த காட்சிகள்;
ரசித்து சிரித்து கூவி மகிழ நேர்ந்ததே அதற்கு சாட்சிகள்;
மோகினியாய் மறுபடி நம் மஹா;
அவள் நடன அசைவுகள் ஆஹா!
நிகழ்வுகளைத் தொகுத்தவர்கள் பணி முதல் தரம்;
அவர்தம் அளவளாவல் அதி ருசிகரம்;
பெண்களை, பாலகர்களைப் பாட வைத்தது Smt.லதா;
அக்குயில் கற்பித்தால் காக்கைக்கும் (அடியேன்) பாட வராதா!
நேரம் காலம் பாராது, அயராது இவர் உழைப்பு;
பலனாய்க் கிடைத்தது அற்புதமான இந்நிகழ்வு;
தினமும் விதவிதமாய் பிரசாதம்;
அதன் ருசியும் மணமும் பிரமாதம்;
வண்ண வண்ணமாய் ஆடை அணிந்து கடவுள்களை பாடி அழைத்தப் பெண்கள்;
நிகழ்வுகளை கண்டு ரசித்து, உரை நிகழ்த்தி, பாடிக் களித்த ஆண்கள்;
பாடி, ஆடி, இசைக்கருவிகள் இசைத்து அசத்திய சிறார்கள்;
ஆடி ஓடி குதித்து கும்மாளமிட்ட குழந்தைகள்;
அனைவரையும் கட்டிப் போட்டது ஒரு கொண்டாட்டம்;
அது CGV யின் நவராத்திரி கொண்டாட்டம்;
அருமையாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்குப் பாராட்டுக்கள்;
ஒலி ஒளி இதர ஏற்பாடுகளைச் செம்மையாய்ச் செய்த முத்து & Co விற்கு நன்றிகள்;
இறுதியாய் நன்றி நவின்ற திரு ரகோத்தமன் பேச்சு கலக்கல் ரகம்;
அதைக் கொங்குத் தமிழில் விளாசியது அசத்தல் ரகம்;
CGV யின் நவராத்திரி விழா இனிதே நிறைவுற்றது;
மனத்தினுள் இனிய நினைவுகள் இடம் பிடித்தது;
நன்றி, வாழ்த்துக்கள் வணக்கங்களுடன்,
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
24 அக்டோபர் 2026


.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சிறப்பு. வர்ணனை அருமை. இவ்வகை கொண்டாட்டங்கள் மனதை உற்சாகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
பதிலளிநீக்குவாசிக்கும்போது எனக்குள் நவராத்திரி சிறப்பை நானே அங்கு நேரில் வந்து பார்த்ததுபோல் உணர்ந்தேன்.
பதிலளிநீக்குRengarajan