ஞாயிறு, 18 அக்டோபர், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி 90 - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும்  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




*******



வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



ஆஹா வெல்வெட் மாதிரி soft ஆ இருக்கே நாதா, இந்த டிரஸ்… ஆன்லைன் ல கிடைக்குமா?


எதுக்கு தேவி சிரமப்படற? சாயந்திரம் 2 🐅 புலியோட வரேன்....


ஐயையோ.. ச்சும்மா சொன்னேன்.... நல்லாவேயில்ல, வரி வரியா, வேண்டாம்...😟


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



கம்பிக்கு பூவெல்லாம் சுற்றி, மயில் தோகையையும் அழகா சொருகி ஊஞ்சலை சிரமப்பட்டு செஞ்சிருக்கா   அம்மா.. பாவம்... ஆனா உக்காரத்தான் முடியல. U வடிவத்துல பண்ணினா உக்கார்ர மாதிரி நடிக்கத்தான முடியும்... அதுலயும் சிரிச்சாமாதிரி pose குடுக்கணுமாம்...🤨 


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



மோதகத்துக்கு வெண்ணை topping வெச்சு சாப்பிட்டா super ஆ இருக்கும், தெரியுமா கணேசா?


தெரியாது… try பண்ணிட்டா போச்சு.... நாம வேலைய முடிக்கற வரைக்கும் யாரும் வராம இருக்கணும்...


உனக்குத்தான் காது பெருசா இருக்கே, காலடி சத்தம் கேக்குதான்னு கொஞ்சம் உத்து கவனிச்சுக்கோ கணேசா, OK யா?


(நிம்மதியா சாப்பிட விட மாட்டானே....😕)


ஓம் கணேசாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


********



சரி சரி style ஆ திரும்பி pose குடுத்ததெல்லாம் போதும், கிளம்பு முருகா, நேரமாச்சு...


இத பாரு மயில் bro உன்னால இப்படியெல்லாம் pose குடுக்க முடியலன்னா பரவாயில்ல அதுக்காக பொறாமைப் பட்றது தப்பு....


நேரமாச்சேன்னு சொன்னேன், எனக்கென்ன...😏


ஓம் ஷண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


********



ஆஹா அற்புதமான அலங்காரம் முருகன்னா அழகுங்கறது சரியா இருக்கு.... ஆனா ஒண்ணு(மட்டும்) புரியல அது கொலுசா இல்ல காலணி யோட வாரா… இல்ல two in one ஆ? சரி சரி எனக்கென்ன அதப் பத்திக் கவல? என் கழுத்துல வழக்கம்போல ஒரு necklace ஐ போட்டு விட்டிருக்கலாம்.... நான் என்ன கொலுசோ தொங்கட்டானோ மாட்டிவிடுன்னு கேக்கறேனா? ☹️ 


ஆமா கேட்டா உடனே உனக்கு மாட்டிவிடமுடியும்! இந்த ஆசைதான்...


(அடடா கேட்டுடுச்சா....🫢)


ஓம் சண்முகா போற்றி🙏🏻🙏🏻


********



ஐயையோ என்னங்க இது மல இப்பிடி ஆடுது? பூகம்பம் வந்துடுச்சா என்ன?  


அதெல்லாம் ஒண்ணுமில்ல பாரூ.. அத நான் handle பண்ணிக்கிறேன். நீ என்னை கெட்டியாப் பிடிச்சுக்கோ போதும்.(கிச்சு கிச்சு மூட்டாம.....)


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******



என்ன ரிஷபா settle ஆயிட்ட? எழுந்து கிளம்பு சீக்கிரம்..


எப்பவும் நீங்கமட்டும்தான் இருப்பீங்க. இன்னிக்கி family யோட ஏறிட்டீங்க. weight limit தாண்டிடுச்சுன்னு நெனக்கறேன் boss...


அதான் கணேசன தேவி மடில தூக்கி வெச்சுக்கிட்டாளே, அப்புறம் என்ன? கிளம்பு...


அப்ப சரி... இதோ… (என்னை இன்னும் பயித்தியக்காரன்னே நெனச்சுக்கிட்டிருக்கீங்க இல்ல?🤨) 


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


********


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…




நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

18  அக்டோபர் 2026


3 கருத்துகள்:

  1. படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு சிறப்பாக உள்ளது. இன்றைய வாசகமும் அருமை.

    அழகிய படங்களையும், அதற்கேற்ற பொருத்தமான வாசகங்களையும் ரசித்துப் பார்த்து படித்தேன். சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ரசித்த உள்ளங்களுக்கு நன்றிகள்.
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....