இந்த வார செய்தி:
ரயில் பயணம் செய்யும் போது என்றாவது அதைச் செலுத்தும்
ஓட்டுனர் பற்றி யோசித்ததுண்டா? அவருக்கு என்ன வேலை, வேலை செய்யும் சூழல் என்ன என
நம்மில் ஒருவரும் யோசித்திருக்க வாய்ப்பில்லை. ”ரயிலில் பயணம் செய்வதில் ஒரு பெரிய வசதி – தொலைதூர பயணங்களின் போது கழிவறை
வசதிகள் ரயிலில் உண்டு” என்பது தான் என
நாம் சொல்வது வழக்கம். இந்த கழிவறை வசதி அந்த தொலைதூர ரயிலினை இயக்கும்
ஓட்டுனருக்கு கிடையாது.....
இந்த ரயில் ஓட்டுனர்கள், தனது இயற்கை உபாதைகளை கழிக்க ஒரே
வழி, ஏதாவது ரயில் நிலையம் வந்தால் தான் உண்டு. துரன்ந்தோ, ராஜ்தானி போன்ற
ரயில்களில் ஐந்து மணி நேரத்திற்கு ஒரு முறை தான் ரயில் நிலையம் வரும்.... அவர்களின் நிலை எவ்வளவு கடினம். அதுவும் இப்போதெல்லாம்
பல ரயில்களில் ஓட்டுனர்கள் பெண்களாக இருக்கின்றபோது ஒரு அடிப்படை வசதி கூட
இல்லாதிருப்பது எவ்வளவு கஷ்டம்.....
பல சமயங்களில் நிறுத்தம் இல்லாத இடத்தில் கூட இயற்கை
உபாதையை தாங்க முடியாது நட்ட நடு வழியில் ரயிலை நிறுத்தி விட்டு தனது உபாதையை
தீர்த்து வந்ததாக சில ஓட்டுனர்கள் சொல்கிறார்கள்.
இந்த அடிப்படை வசதியை ஏற்படுத்தித் தர இப்போது முடிவு
செய்திருக்கிறது. இந்திய ரயில்வே துறை ஆரம்பித்து பல வருடங்கள் ஆகியும், இது பற்றி
யோசிக்காத ரயில்வே நிர்வாகம், இப்போதாவது இது பற்றி யோசித்திருக்கிறதே என பாராட்ட
வேண்டியிருக்கிறது. இந்த முடிவு எடுத்து அது பயன்பாட்டுக்கும் வந்தால், இந்திய
இரயில்வேயில் இருக்கும் எண்ணற்ற ஓட்டுனர்களின் பணிநேர தலையாய பிரச்சனைக்கு ஒரு
தீர்வு கிடைக்கும்.
பயணிகளுக்கு வசதிகள் இல்லை என்று மட்டுமே நினைக்கும் என்னை
போன்ற சராசரி ரயில் பயணிகள் இதுவரை ரயில் ஓட்டுனர்களுக்கான வசதிகள் பற்றி என்றுமே
யோசித்தது இல்லை! இனிமேலாவது அவர்களைப்
பற்றியும் யோசிப்போம்!
இந்த வார முகப்புத்தக இற்றை:
தீபாவளி
சமயத்தில தத்கல் டிக்கட் கூட கிடைச்சுடும்.. ஆனா பசங்களுக்கு பொண்ணுங்க
கிடைக்கிறது தான் கஷ்டம்.....
இப்படித் தான் ஜாதகம் பார்த்து, பொருந்தி, வூட்ல உள்ள
பெரியவங்களுக்கெல்லாம் புடுச்சி, அல்லாருமா
சேர்ந்து... ஒரு நல்ல நாள் பார்த்து, பொண் ணு பார்க்க
போலாம்னு,
பொறப்படறப்போ.... எவனோ ஒருத்தன்
வந்து, 'பாஸ்
நாங்க ரெண்டு பேரும்..', ங்கறான்... ங்ஙொய்யால ... என்ன பொழப்புடா இது?
இந்த வார குறுஞ்செய்தி:
WE LEARN
SOMETHING FROM EVERYONE WHO PASSES THROUGH OUR LIVES. SOME LESSONS ARE PAINFUL,
SOME ARE PAINLESS. BUT, ALL ARE PRICELESS.
ரசித்த காணொளி:
சமீபமாக, டாடா டோகோமோ விளம்பரம் ஒன்று வந்து
கொண்டிருக்கிறது. OPEN UP என்ற
அந்த விளம்பரத்தில் வருவது போல நமக்கும் பல சமயங்களில் ஆடத் தோன்றும் – ஆனால் வெட்கம்
தடுக்கிறது! :)
ரசித்த பாடல்:
திகம்பர சாமியார் என ஒரு தமிழ் படம். நம்மில்
பலர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை! அந்த படத்திலிருந்து ஒரு பாடல் – தீபாவளி வர
இருக்கிறதே - ஒரு பட்டாசு பாடல் – இந்த வார ரசித்த பாடலாக.
இந்த நாளின் அறிமுகம்:
சுற்றுலா என்பது நம் எல்லோருக்கும் பிடித்த விஷயம் தானே.... தொடர்ந்து அலுவலகத்திலும், வீட்டிலும்
இருக்கும் வேலைகளின் பதட்டத்தில், “அப்பாடான்னு ஒரு நாலு நாள் எங்கேயாவது போயிட்டு
வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்”னு
யோசிக்காதவர்களே கிடையாது. அதிலும் பெண்களில் பலருக்கு இந்த கரண்டி ஆஃபீஸ்
உத்தியோகம் இல்லாது, ஹோட்டலிலோ, அல்லது வேறு யாராவது சமைச்சு போட்டு சாப்பிடும்
போது கிடைக்கிற குஷி இருக்கே..... :) அதுக்காகவே சுற்றுலா போகலாம்.
என்னங்க, உங்களுக்கு ரொம்பவே பிடிச்ச விஷயமாச்சே, உங்களுக்காக
தானே போறீங்க, அதுக்கு அம்மணியை வேற எதுக்கு இங்கே இழுக்கணும்னு
முணுமுணுக்காதீங்க! இன்னிக்கு உலக சுற்றுலா தினம். இந்த நாள்ல உடனே ஒரு முடிவு
எடுங்க.... ஒரு நாலு நாளு எங்காவது
குடும்பத்தோடு சுற்றுலா போயிட்டு வாங்க!
படித்ததில் பிடித்தது!:
இன்றைக்கும் ஒரு போஸ்டர் தான் – நீங்களும் படத்தினைப்
பாருங்க – உங்களுக்கும் பிடிக்கும்! ஆணின் பார்வைக்கும், பெண்ணின் பார்வைக்கும்
வித்தியாசம் உண்டு! :)
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா?
மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வெங்கட்.
புது தில்லி.


