ஞாயிறு, 31 டிசம்பர், 2017

திரும்பிப் பார்க்கிறேன் - புத்தாண்டு நல்வாழ்த்துகள்




2017 – ஆம் ஆண்டு முடிவடைந்திருக்கிறது. நாட்கள் வேகமாகவே கடந்து கொண்டிருக்கிறது. மிகச் சமீபமாகத் தான் இந்த ஆண்டு ஆரம்பித்த மாதிரி இருக்கிறது என்றாலும் அதற்குள் வருடத்தின் முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்த வருடம் மட்டுமல்ல எல்லா வருடங்களுமே இப்படித்தான் வேக வேகமாகவே கடந்து விடுகிறது – கல்லூரி முடித்து 1991-ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தது நேற்று போல இருக்கிறது – அதற்குள் 26 வருடங்கள் முடிந்து 27 ஆம் ஆண்டுகளாக தில்லி வாசம்! காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே! எல்லா வருடங்கள் போல இந்த வருடம் நன்றாகவே கடந்திருக்கிறது.

குஜராத் மாடல் – அப்படி என்னதான் இருக்கு?


சில வருடங்களாகவே “குஜராத் மாடல்” ரொம்பவே பிரசித்தி பெற்ற இரு வார்த்தைகள்! யாரைக் கேட்டாலும் குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று தான் பேசுகிறார்கள் – சிலர் உயர்த்தியும் சிலர் தாழ்த்தியும்! அப்படி என்னதாங்க இருக்கு இந்த ‘குஜராத் மாடல்’ல! இந்தப் பதிவுல கொஞ்சம் குஜராத் மாடல் பத்தி பார்க்கலாம்!

சனி, 30 டிசம்பர், 2017

கதம்பம் – 21 காய்கறி பை – வைகுண்ட ஏகாதசி கோலம் – இறைவனின் படைப்பில் – கோதுமை சேமியா



21 காய்கறிகள் கொண்ட பை - கோலங்கள்

கோவிலில் இருந்து வரும் வழியில் பொம்மைக் கடைகள், காய்கறி கடைகள், வீடுகளில் போட்டிருக்கும் கோலங்கள் என கண்களை கவர்ந்தது. அதிலும் நாளை துவாதசிக்கு 21 வகை காய்களை போட்டு குழம்பு செய்வார்கள். அதனால் எல்லா காய்களிலும் சில துண்டுகள் நறுக்கி சேர்த்து பை போட்டு தருவார்கள்.


வெள்ளி, 29 டிசம்பர், 2017

லாலுவுக்கும் புதிருக்கும் சம்பந்தம் - புகைப்படப் புதிர் – இரண்டு – விடைகள்….



நேற்று காலை நான்கு புகைப்படங்களை வெளியிட்டு அவை பற்றிய கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்த படங்களில் இருப்பவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்!


புதிர் படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?

விடை: இந்த இயந்திரத்திற்குப் பெயர் chசாரா குட்டி! வட இந்திய கிராமங்களின் பெரும்பாலான வீடுகளில் இந்த இயந்திரத்தினை பார்க்க முடியும். chசாரா, Bபூசா என அழைக்கப்படும் மாடுகளுக்கு வழங்கும் புல், வைக்கோல் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக்க இந்த இயந்திரத்தினை பயன்படுத்துவார்கள். புல்/வைக்கோலை அதற்கான இடத்தில் வைத்து, சக்கரத்தினைச் சுற்ற, சிறு சிறு துண்டுகளாக்கும் இந்த இயந்திரம். இப்போதெல்லாம் மின்சார மோட்டார் கொண்டும் இயக்கப்படுகிறது என்றாலும் கொஞ்சம் அபாயமானது – கிராமத்தில் பலருக்கும் கை விரல்கள் வெட்டுப்பட்டிருக்கின்றன! இந்த chசாரா Gகோட்டாலா [Fodder Scam]-ல் தான் லாலு பிரசாத் யாதவ் குற்றம் செய்தவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!


புதிர் படம்-2: இது என்ன?



விடை: பார்ப்பதற்கு வழிபாட்டுத் தலம் போல இருந்தாலும், இது அப்படி அல்ல! கிணற்றின் மேலே நான்கு பக்கங்களிலும் இப்படிச் சுவர் எழுப்பி, அதில் நான்கு புறத்திலும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வழி செய்திருப்பார்கள். முதலில் கொடுத்த படம் தவிர, தண்ணீர் எடுக்க வசதி செய்திருக்கும் படமும் கொடுத்திருக்கின்றேன்.



புதிர் படம்-3: இந்த இடம் என்ன இடம், எங்கே இருக்கிறது. ஒரு Clue – முன்னரே இப்படம் எனது பதிவில் வந்திருக்கலாம்!

விடை: கோனார்க் என சிலர் பதில் சொல்லி இருந்தாலும் இது கோனார்க் அல்ல! ஆனால், இதுவும் சூரியனார் கோவில் தான்! குஜராத் மாநிலத்தில் உள்ள Modhera எனும் இடத்தில் உள்ள சூரியனார் கோவில் இது. முன்பு பிரம்மாண்டமாக இருந்திருந்தாலும், இப்போது இருப்பது இவ்வளவு தான்! இந்த இடம் பற்றி விரைவில் எழுதுகிறேன்.



படம்-4: இந்த முதியவரின் பக்கத்தில் ஒரு கருவி இருக்கிறது... அது என்ன கருவி!

விடை: இந்த மாதிரி கருவியை நம் ஊரில் நிச்சயம் பார்த்திருக்க முடியாது! இந்த கருவியின் பெயர் DHதூனி. இயக்குபவர் DHதூனியா! வட மாநிலங்களில் குளிர் அதிகம் என்பதால் ரஜாய் பயன்படுத்துவது வழக்கம். ரஜாயில் இருக்கும் பஞ்சை சுத்தம் செய்ய, மீண்டும் பயன்படுத்தத் தகுந்த வகையில் ஆக்குவதற்கு இந்தக் கருவி பயன்படுகிறது! குளிர் காலங்களில் இக்கருவியைச் சுமந்து கொண்டு வருவார்கள். இந்தக் கருவியில் இருக்கும் String-ஐ மீட்ட வித்தியாசமான ஒரு இசை வெளியாகும்! அந்த String எதிலிருந்து செய்கிறார்கள் என சமீபத்தில் கேள்விப்பட்டேன் – அது ஆட்டுக் குடலிலிருந்து செய்யப்படுகிறது என்பது தான் அந்த விஷயம்! கருவியை எப்படி இயக்குவார்கள் என பார்க்க விரும்பினால் இங்கே பார்க்கலாம்!


புகைப்படங்களைப் பார்த்து புதிர்களுக்கு விடை சொல்ல முயற்சித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.

முடிந்த போது வேறு சில புகைப்படங்களுடன் வருவேன் – உங்களுக்கும் விருப்பமிருந்தால்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


ஒரு திருமணமும் அதன் விபரீத விளைவும்


வட இந்திய மாநிலங்களில் ஒரு பழக்கம் உண்டு – குறிப்பாக ஹரியானா, உத்திரப் பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் இப்பழக்கம் வெகு சாதாரணம். என்ன பழக்கம்?