எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 10, 2012

சொல்லுங்கண்ணே சொல்லுங்க!


க்ர்ர்ர்ர்ர்... க்ர்ர்ர்ர்ர்....

அட என்ன சத்தம்பா இது?

என்னோட குறட்டை சத்தம் தான். என் குறட்டை சத்தம் எனக்கே எப்படி தெரியும்னு கேட்காதீங்க!

“டுடுடிங்ங்... டுடுடிங்ங்.... டுடுடிங்ங்..... டுடுடிங்ங். டுடுடிங்ங். “

அடுத்து இது என்ன சத்தம்?

இந்த சத்தம் என்னோட அலைபேசியிலிருந்து வந்த சத்தம்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் தலைமாட்டில் இருந்த அலைபேசியை தட்டுத் தடுமாறி எடுத்துப் பார்த்தால் Sripathi Calling” என்று வந்தது. பேசுவதற்கான விசையை அழுத்தி,

‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க!என்றேன்.

எதிர் புறத்தில் முதலில் சொன்ன அதே கிர்ர்ர்ர்ர்....  சத்தம்! இது அவருடைய குறட்டை சத்தம்.திரும்பவும் இமான் அண்ணாச்சி போல, சொல்லுங்கண்ணே...சொல்ல, அங்கிருந்து, The person has put you on hold. Please hold the line or call again later” என்றாள் ஏர்டெல் பெண் காந்தக் குரலில்.

சில நொடிகள் காத்திருந்த பின், அழைப்பினை துண்டித்து, நேரம் பார்த்தேன்.  நள்ளிரவும், அதிகாலையும் இல்லாது 03.19! என்றது கடிகாரம்.  “என்னது, இந்த நேரத்துல அழைக்கிறாரே என்ற எண்ணத்துடனே இருந்த போது மீண்டும் அழைப்பு. எடுத்தால், திரும்பவும் The person has put you on hold. Please hold the line or call again later” எனும் காந்தக் குரல்.  இந்நேரத்தில் அழைக்கிறாரே,  என்ன பிரச்சனை தெரியவில்லையே என நானே அழைத்தால், இம்முறை, காந்தக் குரல்காரி The person you have called is busy. Please hold the line or call again later” என்றாள்.

ஒன்றல்ல, இரண்டல்ல, இப்படியே எட்டு முறை அழைப்பு வரவே, வேறு வழியின்றி, அவர்கள் இல்லத்தின் தொலைபேசியில் அழைத்தேன். நண்பரின் மனைவி, பாதி தூக்கத்திலேயே, “என்னப்பா, என்ன விஷயம், இந்த நேரத்துல ஃபோன்?என்று கேட்க, அண்ணாச்சி மொபைல் எங்கே?, அதுலேருந்து தொடர்ந்து அழைப்பு வருது!என்று சொல்ல, “ஓ கையில வைச்சுக்கிட்டே தூங்கறார், நான் எடுத்துடறேன்என்று சொல்லி, ஒரு “சாரியும் சொல்லி வைத்தார்.

இங்கே ஒரு Flashback சொல்ல வேண்டியிருக்கிறது.  Flashback என்றவுடன் ரொம்ப பின்னாடி போயிடாதீங்க, சுவத்துல முட்டிப்பீங்க! நேற்றிரவு பத்தரை மணிக்கு ‘நித்திரா தேவிஅழைக்க அப்போது தான் படுத்து கண் அயர்ந்தேன்.  தூக்கத்தினைக் கலைத்து, அலைபேசி அடிக்க, Sripathi Calling”  என்று வந்தது. எடுத்தால், “என்ன அதுக்குள்ளே தூங்கியாச்சா?என்று கேட்டு சில விஷயங்கள் பேசிய பின் படுத்து உறங்கினேன். 

இரவு உறங்கு முன் கடைசியாக பேசியது என்னுடன் என்பதால், அவர் தூங்கும்போது மேலே சொன்ன விஷய[ம]ங்கள் நடந்திருக்கிறது.  அவரது அலைபேசியில் Auto Keygaurd Off செய்து வைத்திருக்கிறார். தூங்கும்போது கூட கையிலே அலைபேசியை வைத்துக்கொண்டே இருந்து, “Call” விசையை அழுத்தி அழுத்தி என்னை எழுப்பி விட்டார்!  சாதாரணமாகவே அவருக்கு நிறைய அழைப்புகள் வரும்.  அதுக்குன்னு தூங்கும்போதும் வரும்னு கையிலேயே அலைபேசியை வைத்திருப்பது கொஞ்சம்... இல்லை இல்லை ரொம்பவே ஓவர்! 

அவர் தூங்கிக் கொண்டு இருக்க, நான் சிறிது நேரம் தூங்க முயற்சித்து, தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே என்று பாட எஸ். ஜானகி அருகில் இல்லாததால், எழுந்து, பல் துலக்கி, ஒரு தேநீர் பருகி, கணினி முன் அமர்ந்து இப்பதிவினை தட்டச்சுகிறேன்!

அவர் செய்த இத் திருவிளையாடல் அவருக்கே தெரியுமா என விடிந்த பிறகு தான் கேட்க வேண்டும் “சொல்லுங்கண்ணே, சொல்லுங்க!

மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

டிஸ்கி:  தலைப்பைப் பார்த்து, ஆதித்யா டி.வி.யில் வரும் “சொல்லுங்கண்ணே, சொல்லுங்க! நிகழ்ச்சி பற்றி தான் நான் ஏதோ எழுதி இருக்கேன் என்ற நினைப்பில் வந்தவர்களுக்கு, அதைப் பற்றியும் எழுதிட்டா போச்சு!”.... 


36 comments:

 1. அவர் செய்த இத் திருவிளையாடல் அவருக்கே தெரியுமா என விடிந்த பிறகு தான் கேட்க வேண்டும் கேட்டு “சொல்லுங்கண்ணே, சொல்லுங்க!”

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. சில நேரங்களில் இது போன்ற கால் வந்து தூக்கத்தை கெடுப்பது உண்டு.அவர்களுக்குத் தெரியாமலேயே ஸ்பீட் டயல் செட் செய்து வைத்திருப்பார்கள்.இரவில் தலைமாட்டில் வைத்து தூங்கும்போது ஏதேனும் எண்ணில் பட்டு அழைப்பு சென்றுவிடுகிறது. நீங்கள் சொல்வது போல கீ பேட் லாக் செய்து வைக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 3. nallaa pochi....


  aamaam
  intha maathiriyum enakkum nadantha-
  sampavangalum undu...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 4. ஒரு சுவாரஸ்யமான, திகிலான பதிவு கொடுக்க உதவினாரே.... அவருக்கு நீங்க தேங்க்ஸ் 'சொல்லுங்கண்ணே.....சொல்லுங்க......'

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. நல்ல திருவிளையாடல்...

  சொல்லுங்கண்ணே, சொல்லுங்க!” நிகழ்ச்சி பற்றியும் எழுதுங்க...

  நன்றி...
  tm3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 7. என்ன ஒரு வித்தியாச அனுபவம். பேசாமல் இரவில் செல்லை ஸ்விட்ச் ஆஃப் அல்லது சைலன்ட் மோடில் வைத்துவிட்டுத் தூங்கச் சொல்லுங்கள். தன் மேலேயே போட்டுக் கொண்டு உறங்கினால் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவாரே. உடனே அவரை கேட்டுட்டு பதிலைச் சொல்லுங்கண்ணே... செர்ல்லுங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால கணேஷ்.

   Delete
 8. ஒரு பதிவிற்கு வாய்ப்பு கொடுத்த உங்கள் நண்பருக்கு முதலில் வாழ்த்துக்கள் ஹா ஹா ஹா ஆனாலும் தூக்கம் போச்சே ( வாட போச்சே)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 9. நடுநிசி அழைப்பு நடுங்கத்தான் வைக்கும் .

  இது ரசனையானது.

  தூங்கும்போது கூடவா வைத்திருப்பார் ரேடியேசன் தாக்கம் இருக்கும் அல்லவா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 10. உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் அய்யா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 11. தலைமாட்டில் செல்போன் வைத்துக் கொண்டு தூங்குவது நல்லதில்லை-
  செல்போனிலிருந்து வரும் மின்னணுக் கதிர்கள் நம் மூளையை பாதிக்கும்-
  நம்மை பாதிப்பதுடன், இது போல ஏடாகூடமாக நிகழ்ந்து மற்றவர்களையும் பாதிக்கும் - என்றல்லாம், வெங்கட் அண்ணே! உங்கள் நண்பருக்கு சொல்லுங்கண்ணே சொல்லுங்க!

  இதனால எங்களுக்கு ஒரு நல்ல பதிவு கிடைத்ததுன்னும் சொல்லுங்கண்ணே சொல்லுங்க....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 12. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சரண் சக்தி.

   Delete
 13. உங்களுக்கும் இந்த அனுபவம் உண்டா?!! என் கணவரின் பெயர் “A" யில் ஆரம்பிக்கும் என்பதால், அடிக்கடி நாங்களும் இந்த கதிக்கு ஆளாவதுண்டு!! :-))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

   Delete
 14. தலைப்பை அட்டகாசமா வைக்கிறீங்க தலைவரே!

  உங்களுக்கும் ஆதிக்கும் உங்கள் தேவதைக்கும் என் அன்பு தீபாவளி வாழ்த்துக்கள் தம்பி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் அண்ணா.

   வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றி.

   Delete
 15. என் குறட்டை என்னை எழுப்பியதை என் சொல்வேன்... ஹிஹி..

  ReplyDelete
  Replies
  1. அட... குறட்டை உங்களை எழுப்பிவிட்டதா. ஹா.ஹா...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 16. இந்த அனுபவம் எனக்கு உண்டு. என்ன நான் உறக்கத்தில் விழிக்க வில்லை. விழிக்க வைத்திருக்கிறேன் எனக்கே தெரியாமல். தோழி அழைத்து நள்ளிரவு இரண்டு மணிக்குக் கேட்ட பின் தான் எனக்கு தெரியும். அதுக்காக ஏண்டி இந்த இரவில் எழுப்புற ------ என்று நான் அவளைச் செல்லாமாக கடிந்தது வேறு விஷயம். அதெல்லாம் அரசியல்ல சகஜம். ஹா ஹா.


  தங்கள் இல்லத்திலும் உள்ள்த்திலும் மகிழ்ச்சி ஒளி சூழ இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அட இந்த விளையாட்டை நீங்களும் விளையாடுவீங்களா... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 17. சொல்ல மறந்துட்டேன். அடுத்த நாள் தோழியின் கணவர் அலைபேசியில்.. அவர் பெயர் c யில் ஆரம்பிக்கும். லாஸ்ட் டயல் கூட இல்லை. (எப்படி என்று இன்னும் புரியவில்லை)

  பேய் மாதிரி இராத்திரியெல்லாம் என் வீட்டைச் சுத்திச் சுத்தியே வந்திட்டிருக்கியே” என்று அவள் சொன்னதும்

  “பேய் இல்லடி உங்கள் வீட்டைக் காக்கும் நாய்டி” என்று நான் சொன்னதும் இன்னும் மறக்க முடியாது. நல்ல வேளை... வேறு யாருக்காவது அழைப்பு போயிருந்தால்........ நினைவே பயமுறுத்துகிறது. அதிலிருந்து அருகில் அலைபேசியை வைத்துக்கொள்வதே இல்லை.

  அறிவில் அடிப்படையிலும் தலைக்கு அருகில் வைத்துக் கொள்ளக் கூடாதம்.

  ReplyDelete
  Replies
  1. உறங்கும்போது கண்டிப்பாக அருகில் வைத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் இன்னும் பலர் அதை வைத்துக்கொண்டு தான் தூங்குகிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 18. நல்லதொரு அனுபவம். விழிப்புணர்வுப்பதிவு. நன்றிகள் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....