எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, November 20, 2012

என் இனிய நெய்வேலி!'மனச் சுரங்கத்திலிருந்து' என்ற அடையாளத்தோடு நான் பிறந்த நகரமான நெய்வேலி நினைவுகளை அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன்.   ஊரின் சிறப்புகள், நினைவுகள் பற்றி சில காலமாய் எழுத வில்லையே என்று எனக்குள் அவ்வப்போது பட்சி ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தது. இதோ நெய்வேலி பற்றிய பதிவுடன் வந்துவிட்டேன்.

சுதந்திர இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகள் யாவும்  பெரும்பாலும் வடக்கிலேயே அமைக்கப்பட்டு வந்த காலம்.  தமிழ்நாட்டில் கனரகத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை.  அப்போது ஆரம்பித்ததுதான்   வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது என்ற கோஷம்!  தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கர்மவீரர் காமராஜர் முயற்சியினால் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன.
 

 


பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை, சென்னை கிண்டி இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, நீலகிரியில் ஃபிலிம் தொழிற்சாலைன்னு  பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1956-ஆம் ஆண்டு அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தின் [தற்போதைய கடலூர் மாவட்டம்] நெய்வேலி நகரில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் என்று தெரியவந்ததும், பெருந்தலைவர் காமராஜர் முயற்சியில் ரூபாய் 160 கோடி மதிப்பில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.  ஆரம்பித்த காலத்தில் 25 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டதாக இருந்த இந்த நிறுவனம் இப்போது பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கிறது.

நெய்வேலி ஆரம்பித்தது பற்றி  அவ்வூர் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஒருவர் பாடிய பாட்டென என் அம்மா சொன்ன பாடல் கீழே:-

கடலூருக்கு நேர் மேற்கு நெய்வேலிதாங்க!
அங்கே நிலக்கரியின் வேலை ரொம்ப பிரமாதம் தாங்க!
ஆதியிலே ஜெம்புலிங்க முதலியார்தாங்க
அங்கே நிலத்தில் ஒரு கிணறு வெட்ட கரியைக் கண்டாங்க!

முதல் நான்கு அடி மட்டுமே கேட்ட நிலையில் பேருந்து அங்கிருந்து நகர்ந்துவிட அவர் பாடிய முழு பாடலும் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் அம்மாவுக்கு இன்னமும் உண்டு நாற்பது வருடங்கள் கடந்த பின்பும்! அந்த வருத்தம் எனக்கும் தெரிந்திருந்தால் முழுப் பாடலையும் உங்களுடன் பகிர்ந்திருக்கலாமே என்று... நெய்வேலி மேல் கொண்ட காதலினால் பாடலின் இந்த நான்கு வரிகளும் பசுமரத்தாணி போல இன்னமும் அம்மாவின் நினைவிலிருக்கிறது!

சுத்தமான காற்று, நிறைய மரங்கள் [தானே புயலில் பல மரங்கள் விழுந்தது என்னை மனதளவில் மிகவும் பாதித்தது!], வேலை பார்க்கும் தொழிலாளிகளின் பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளிகள், மருத்துவமனை, கல்லூரி, எல்லா மதங்கள் சார்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள், பொழுது போக்கிற்கு திரையரங்கம், விளையாட்டு அரங்கம் என்று ஒரு நல்ல ஊர். 

மின்சாரம் ஒரு யூனிட் வெறும் 11 பைசா தான் [1991 வரை!].  இருபத்தி நான்கு மணி நேரமும் தடையில்லாத மின்சாரம்ன்னு  இருந்த இடத்தை விட்டு இப்போது திருச்சியில் எனது பெற்றோர்கள் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் மின்வெட்டில் அவஸ்தைப் படுகிறார்கள். நெய்வேலியிலே கடைசி வரை இருக்க முடியாதே! 

சென்னையில் மோசமான தண்ணீர் கஷ்டம் வந்தபோது ரயில் மூலம் தண்ணீர் அனுப்பிய நல்லெண்ணம் கொண்ட ஊர். தொட்டி முழுவதும் உள்ள நீரை பக்கெட் பக்கெட்டாக குளித்த எங்களுக்கு சிறிய mug-ல் குளிக்கப்  பழகுவது கஷ்டமாகவே இருந்தது! தோட்டம், மரங்கள், பூச்செடிகள் என்று பசுமையான சூழலில் வளர்ந்து விட்டு இங்கே கான்க்ரீட் காடுகளில் தான் மீதி நாட்களைக் கழிக்க வேண்டும் என்று எண்ணும்போது மனதில் சொல்ல முடியாத வலி!

ஆனாலும் இதுவும் கடந்து போகும் என்றே, பழைய நினைவுகளுடன் காலத்தினைக் கடத்த வேண்டியிருக்கிறது.  என் நண்பர் ஒருவர் நெய்வேலியில் அப்படி என்னதாண்டா இருக்கு!” என்று கேட்கும்போது அத்தனை கோபம் வரும் எனக்கு! எங்க ஊர் மாதிரி வரவே வராது’ என்று அடித்துச் [அவரைத்தாங்க!] சொல்வேன்.

தில்லி வந்து சில வருடங்கள் வரை [அதாவது அப்பா அங்கே வேலையிலிருந்த 1996 வரை] அங்கு தொடர்ந்து செல்ல முடிந்தது.  இப்போது முடிவதில்லை ஒரு வேளை சென்றால் இப்போதைய நெய்வேலி எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லாம் இல்லை!  - நேரமும் சூழ்நிலைகளும் வாய்க்கவில்லை.   சில வருடங்களுக்கு முன் பங்குனி உத்திரத்தின் போது சென்று வந்தேன். அந்த பயணத்தின் போது நான் சைக்கிளில் நண்பர்களோடு பயணம் செய்த அத்தனை தெருக்களையும், ஆசையாக  சுற்றி வந்தேன்!  இன்னமும் ஆசை இருக்கிறது. நெய்வேலி பயணம் எப்போது வாய்க்கும்  என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.    

மீண்டும் அடுத்த பகிர்வுடன் உங்களைச் சந்திக்கும் வரை அந்த இனிய நினைவுகளை அசை போட்டபடியே இருப்பேன்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


56 comments:

 1. ‘எங்க ஊர் மாதிரி வரவே வராது’ என்று அடித்துச் [அவரைத்தாங்க!] சொல்வேன்.

  எல்லோரும் அப்படித்தான் சொல்லுவோம் ..!!

  ReplyDelete
  Replies
  1. //எல்லோரும் அப்படித்தான் சொல்லுவோம் ..!!//

   அதே அதே....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. அருமையான கட்டமைப்புடன் எல்லா வசதிகளும் உள்ள நகரம் நெய்வேலி. எனது சகோதரர் அங்குதான் பணியாற்றுகிறார்.

  ReplyDelete
  Replies
  1. ஓ உங்கள் சகோதரர் அங்கு பணியாற்றுகிறாரா? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 3. என்ன இருந்தாலும்....எங்கூர் கோவை மாதிரி வராதுங்கோவ்....

  ReplyDelete
 4. அவிங்கவங்களுக்கு அவிங்கவங்க சொந்த ஊர் ஸ்பெசலுதேன்!

  ReplyDelete
  Replies
  1. அதானே.... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. மின்சாரம் ஒரு யூனிட் வெறும் 11 பைசா தான் [1991 வரை!]. இருபத்தி நான்கு மணி நேரமும் தடையில்லாத மின்சாரம்..

  ஏன் ஸார் வயிற்றேரிச்சலைக் கிளப்புறீங்க

  ReplyDelete
  Replies
  1. //ஏன் ஸார் வயிற்றேரிச்சலைக் கிளப்புறீங்க//

   அச்சச்சோ! :(

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 6. ஏபரல்1991 முதல் அக்டோபர் 1995 வரை நெய்வேலியில் பணிபுரிந்து பின்னர் சென்னைக்கு மாற்றலில் சென்றேன்! என் திருமணம் நெய்வேலியில்தான் நடைபெற்றது. அருமையான நகரம்! வில்லுடையான்பட்டு கோயிலுக்கு சைக்கிளில் சென்றுவந்தது இனிமையான அனுபவம்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வில்லுடையான்பட்டு கோவில் - அங்கே பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாக இருக்கும்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 7. ஊரின் தகவல்கள் அறிந்தேன்... இனிய நினைவுகளை தொடர்கிறேன்...

  tm5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 8. நெய்வேலி பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 9. // அந்த பயணத்தின் போது நான் சைக்கிளில் நண்பர்களோடு பயணம் செய்த அத்தனை தெருக்களையும், ஆசையாக சுற்றி வந்தேன்! //

  சின்ன வயதினிலே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டவுடன் எல்லோருக்கும் வரும் ஆசைதான். நெய்வேலி நினைவுகளை இன்னும் எழுதலாமே!

  ReplyDelete
  Replies
  1. நெய்வேலி நினைவுகளை “மனச் சுரங்கத்திலிருந்து” என்ற லேபிளில் இது வரை 18 பதிவுகள் எழுதி இருக்கிறேன்.... இன்னும் எழுதுவேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 10. என்ன இருந்தாலும் சொந்த ஊரின் சிறப்பை மறக்க முடியுமா? அந்தப் பாடலின் முழு வரிகளும் கிடைச்சுருந்தா எவ்ளோ நல்லாருந்துருக்கும். கிட்டத்தட்ட நெய்வேலியின் முழு வரலாற்றையும் அந்தப்பாடல் அடக்கியிருந்துருக்கும்ன்னு தோணுது.

  ஆதி :-)))))))))

  ReplyDelete
  Replies
  1. முழுப் பாடல் கிடைத்திருந்தால் - மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கும்....

   ஆதி :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 11. நம்ம பிறந்த ஊர் பற்றி சொல்லனும்னா
  நமக்கு அச்சுவெல்லம் சாப்பிட்டது போல இல்லையா...
  ...
  அந்தக் கால தலைவர்கள்
  தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டார்கள்.
  நாடும் வளர்ந்தது...

  இன்றோ..???
  என்ன சொல்ல??

  நெய்வேலியின் அழகும் ஆற்றலும் தங்களின் பதிவில் மிளிர்கிறது
  நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   இக்காலத் தலைவர்கள் - என்னத்தைச் சொல்ல! :(

   Delete
 12. பூலோக சொர்க்கமென்றால் இப்போதைக்கு நம் நெய்வேலி தான் சகோ... தடையற்ற மின்சாரம், தண்ணீர் மற்றும் நீங்க சொன்னாற்போல் ஊழியர்களுக்கு குறைவற்ற வசதிகள்... பெருகிவிட்ட தொழிற்சங்கங்களுக்கு போராட மட்டும் ஏகப்பட்ட காரணங்கள் கிடைத்து விடுவதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. பூலோக சொர்க்கம் - சத்தியமான வார்த்தை சகோ.....

   பெருகிவிட்ட தொழிற்சங்கங்கள் - இருபது வருடங்களுக்கு முன்னரே நிறைய தொழிற்சங்கங்கள் இருந்தன. இப்போது கட்சிகள் பெருகிவிட்ட நிலையில் இன்னும் அதிகமாகிவிட்டன...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 13. காமராஜரையும் ஜம்புலிங்க முதலியாரையும் கட்டுரையில் மட்டுமே நினைவில் கொண்டிருப்பதையும் குறிப்பிட வேண்டும். தேசிய ஒருமைப் பாட்டு தின விழாவுக்காக செய்யப்பட்டுள்ள மின் அலங்காரங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில். மின்வெட்டில் அவதிப்படும் சக நண்பர்களை நெருடலுடன் நினைத்துக் கொள்ளச் செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஜம்புலிங்க முதலியார் - பாதி நெய்வேலி மக்களுக்கு அவர் யாரென்றே தெரியாத நிலை தான். ஒரு தெருவுக்கு அவர் பெயர் மட்டும் வைத்து இருப்பதோடு சரி!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 14. சொர்க்கமே என்றாலும்......
  அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 15. //’வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது’//

  இப்போது மட்டும் என்ன! தமிழ்நாட்டுக்குள்ளேயே வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறதுதானே! தென் தமிழகம் முழுவதுமே வேலை தேடி வடக்குத் தமிழகத்துக்குத்தானே ஓடுகிறது.

  அதான் கூடங்குளம் வருகிறதே என்று கேட்காதீர்கள். வரும், ஆனா வராது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது கருத்து என் பக்கத்தில். மிக்க மகிழ்ச்சி.

   Delete
 16. ‘எங்க ஊர் மாதிரி வரவே வராது’ - எல்லாரும் இதே டயலாக் பேசினாலும் எல்லாருக்கும் இது உண்மையாக இருப்பதே உண்மை. படித்ததும் ஜம்புலிங்க முதலியார் - அப்புறம் என்ன ஆயிற்று என்ற வரலாற்றைப் படிக்கும் ஆவல். உங்களுக்காவது நெய்வேலி மட்டும்தான். எனக்கு பல ஊர்கள், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊருக்கும் போய் வந்துகொண்டிருக்கிறேன். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டாலும் வளர்ந்த ஊருக்கு மட்டும் போகாமல் திரும்பியதே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு முறையும் நெய்வேலி போக நினைத்தாலும் முடிவதில்லை. அடுத்த முறை கண்டிப்பாக போக நினைத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!

   Delete
 17. ஊரின் சிறப்பை தெரிந்து கொண்டேன் சிறந்த பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 18. நெய்வேலிக்கும் கோவைக்கும் போட்டி நடக்கிறதா:))) நடக்கட்டும் அன்புப்போட்டி.

  நெய்வேலி அறிந்துகொண்டோம்.

  ReplyDelete
  Replies
  1. நெய்வேலிக்கும் கோவைக்கும் போட்டி - :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 19. அப்போ ஆதி கோவை பற்றி எழுதணும். என்னப்பா சரியா.
  நெய்வேலி வெய்யில் மட்டும்தான் நான் பார்த்திருக்கிறேன்.
  குடும்ப நண்பர் குடும்பம் அங்கே இருந்தது. Kகிருஷ்ணன் என்று பெயர். அவர்கள் பெண்கள் அந்தக் கேந்திரிய வித்யாவில் தான் படித்தார்கள். உங்கள் பதிவு நெய்வேலியைப் போய்ப் பார்க்கத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. வல்லிம்மா,

   முன்பு நான் கோவை பற்றி எழுதிய பதிவு இது. முடிந்த போது வாசித்து பாருங்கள்.

   http://kovai2delhi.blogspot.in/2010/10/blog-post_25.html

   Delete
  2. வாங்க வல்லிம்மா... நெய்வேலி ஒரு முறை போய்ப் பாருங்க. நிச்சயம் ரசிப்பீங்க.

   Delete
  3. அட விளம்பரமா.... சரி சரி... :)

   Delete
 20. சிறுவயதுக் கோடை விடுமுறைப் பயணம் இன்னும் நினைவில் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஓ... நீங்களும் நெய்வேலி சென்றதுண்டா... நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   Delete
 21. நெய்வேலிப் பதிவு நன்று.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 22. எங்க ஊர் மாதிரி வரவே வராது....OK OK..நெய்வேலி/கோவை மாதிரி வரவே வராது...-:)

  ReplyDelete
  Replies
  1. சரி நாட்டாமை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 23. கேரளாவுக்குச் செல்லவிருந்த பாரத மிகுமின் தொழிலகம் [BHEL] கர்மவீரர் காமராஜ் அவர்கள் தமிழ்க முதலமைச்ச்சராக இருந்தபோது அவரின் விடா முயற்சியினால் மட்டுமே, திருச்சியில் அமையப்பெற்றது.

  நெய்வேலி [நிலக்கரி]பற்றிய செய்திகள் [வைரம்] அருமை.

  பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 25. கர்ம வீரர் காமராஜர் மாதிரி தன்னலமில்லாத தலைவர்களை எண்ணி மனம் ஏங்குகிறது....

  பிரபல பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன் எங்கள் குடும்ப நண்பர் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்...

  த.ம.13

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

   Delete
 26. சொந்த ஊர் பாசம் பிரிக்க முடியாததுதான்.
  நெய்வேலியில் இருந்து வரும் லீகோ கரியில் அம்மா சமைத்ததும் நினைவுக்கு வந்தது.
  இனிய நினைவு பகிர்தல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 27. இப்போதெல்லாம் (ரொம்ப காலமாகவே) இங்கு வேலை செய்யும் நிறைய பேர் முதல் வேலையாக நெய்வேலிக்கு அருகிலேயே ப்ளாட் வாங்கி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிவிடுகிறார்கள். இப்போதெல்லாம் (ரொம்ப காலமாகவே) இங்கு வேலை செய்யும் நிறைய பேர் முதல் வேலையாக நெய்வேலிக்கு அருகிலேயே ப்ளாட் வாங்கி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிவிடுகிறார்கள்.

  பிறந்து வளர்ந்த ஊரை மறக்க முடியாதுதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....