எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 1, 2013

பூலோக ரம்பை


சாதாரணமாக ரம்பை, ஊர்வசி, மேனகை எல்லாமே மேலுலகில் அதாவது இந்திரலோகத்தில் இருப்பார்கள் எனச் சொல்வார்கள். புவியில் இருக்கும் சில அழகான பெண்களையும் பூலோக ரம்பை எனக் கவிஞர்கள் வர்ணிப்பதுண்டு.....  அப்படி ஏதோ பூலோக ரம்பை ஒருத்தியைப் பற்றிய பதிவு இது நினைத்துக்கொண்டு ஓடோடி வந்தவர்களுக்கு..... அப்படி என்னங்க உங்களுக்கு ஒரு ஆசை!

உங்கள் மனைவி, சௌபாக்கியவதி பவானி, பதிபக்தி-யோடு “அன்பே தெய்வம்”, நீங்கள் என் “குலதெய்வம்என இருக்கும்போது, நீங்க என்னடான்னா “பூலோக ரம்பைன்னு ஓடி வரீங்க! அவங்களுக்கு உங்க மேலே இருக்கிற பக்தியை நீங்க புரிஞ்சிக்கலையே! உங்க முதலாளி, “தாய்க்குப்பின் தாரம்”-ன்னு சொன்னதையும் கேட்காம இருந்துட்டீங்களே!   வேற வழியே இல்லை! உங்களை “ராஜா தேசிங்குகிட்ட புடிச்சு கொடுத்துட வேண்டியது தான்!

இதிலே வந்துள்ள சொற்களான –

சௌபாக்கியவதி
பவானி
பதிபக்தி
அன்பே தெய்வம்
குலதெய்வம்
பூலோக ரம்பை
முதலாளி
தாய்க்குப்பின் தாரம்
ராஜாதேசிங்கு

ஆகிய பெயர்களில் 1950-களில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் விளம்பரங்கள் இன்றைய பொக்கிஷப் பகிர்வாக.....  இதோ உங்களுக்காக!
என்ன நண்பர்களே..... இந்த பொக்கிஷப் பகிர்வினை ரசித்தீர்களா....  மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 


50 comments:

 1. Replies
  1. ம்ம்ம்ம். அதே தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 2. அனைத்தும் சிறந்த படங்கள்...

  பொக்கிசம் தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. நான் இந்தப் போஸ்டர்களீல் சில்வற்றைப் பார்த்திருக்கிறேன். விகடனில்.:)எத்தகைய தமிழில் எழுதி இருக்கிறார்கள் பார்த்தீர்களா. அருமையான பொக்கிஷம். நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 4. ரசிக்கவைத்த பொக்கிஷப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. பொக்கிஷ பகிர்வு நன்றாக இருக்கே! என்னிடமும் பழைய சினிமா பாடல்கள் தொகுப்பு இருக்கு அம்மாவின் பொக்கிஷமாய் அதில் இந்தமாதிரி அட்டைபடங்கள் அழகாய் இருக்கும் பாடல்கள், கதை சுருக்கம் மீதியை வெள்ளிதிரையில் காண்க என்று இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 6. ஆஹா ரசித்தேன் ரசித்தேன்.. இன்னும் பகிருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 7. அபூர்வ பொக்கிஷங்கள்தான்
  கண்டு ரசித்தோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. Replies
  1. தமிழ்மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. நீங்களும் பொக்கிசமா... ம்ம்ம்ம்ம் கிளப்புங்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. இதற்கு முன்னரும் பகிர்ந்திருக்கிறேன் சீனு. பொக்கிஷம் எனும் லேபிளில் இது பத்தாவது பகிர்வு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 10. பொக்கிஷப் பகிர்வு அருமை:)! னா, ணா எழுத்துகளை (ரத்னா, கிருஷ்ணா) இப்படிதான் எழுதுவோம் எங்கள் காலத்தில். லை, ளை எங்கேனும் இருக்கிறதா தேடினேன்:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   லை,ளை தேடினீர்களா.... :)

   Delete
  2. சென்னை - னை இருக்கு பாருங்க ராமலக்ஷ்மி. பழைய எழுத்து. எங்கள் அப்பா எங்களுக்கு டியூசன் சொல்லித்தரும்போது இந்த எழுத்துகளைத்தான் பயன் படுத்துவார்.

   Delete
  3. கவனமாய் பார்த்துச் சொன்ன ஸ்ரீவிஜிக்கு ஒரு பூங்கொத்து ராமலக்ஷ்மி சார்பில்! :)

   Delete
 11. பொக்கிஷப் பகிர்வு அருமை...
  காணக்கிடைக்காத படங்கள்... பொக்கிஷம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 12. 'பதிபக்தி' 'ராஜாதேசிங்கு' 'பூலோக ரம்பை' ஆஹா! மலரும் நினைவுகள்!
  "என் கண்ணிலாடும்..." என்ற இனிமையான 'பூலோக ரம்பை' பாடல் நினைவுக்கு வருகிறது. இசை சி.என்.பாண்டுரங்கம் என்றறிந்துகொண்டேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   உங்களது நினைவுகளை மீட்டெடுத்ததில் சந்தோஷம்.....

   Delete
 13. பவானிங்கற பேரிலே படம் வந்திருக்கிறது இன்னிக்குத் தான் தெரியும். :))) எங்கே இருந்து பிடிச்சீங்க இவங்களை எல்லாம்? பழைய தீபாவளி மலர்களா?

  ReplyDelete
  Replies
  1. பழைய தீபாவளி மலர்களே தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 14. இப்போ மாதிரியான விளம்பரங்கள் எல்லாம் அப்போக் கிடையாது. எல்லாப் பத்திரிகைகளிலும் சினிமா விளம்பரங்கள் வரவும் வராது. புது சினிமா வந்துட்டால் ஒரு மாட்டு வண்டியிலே இரண்டு பக்கமும் பெரிய பெரிய போஸ்டர்களைத் தட்டியில் ஒட்டிக் கட்டி உள்ளே இசைக்கலைஞர்கள் உட்கார்ந்து கொண்டு வாத்திய முழக்கம் செய்து கொண்டு வருவார்கள். வண்டியோடு கூடவே இரண்டு நபர்கள் சினிமாக் கதைச் சுருக்கம் உள்ள பிட் நோட்டீஸை வீசி எறிவார்கள். ஓடிப் போய் அதைப் பொறுக்குவதில் தனி சந்தோஷம். எந்த நோட்டிஸும் கைக்குக் கிடைக்காவிட்டால், வண்டி பின்னாடியே, "அண்ணே, அண்ணே!" என்று ஓடிப் போய் ஒரு கை நோட்டீஸ்களை வாங்கி வருவது எவரெஸ்ட் சிகரத்தை எட்டுவதை விட சந்தோஷம்.

  சினிமாப் பாட்டுப் புத்தகங்களும் விற்பாங்க. அரையணா, ஓரணா என்றிருந்தது மாறிக் கடைசியில் எனக்குத் தெரிந்து ஒரு ரூபாய் விற்றது.

  ReplyDelete
  Replies
  1. நெய்வேலி அமராவதி தியேட்டரில் படம் மாற்றும்போதெல்லாம் ஆட்டோவில் விளம்பரம் செய்து கொண்டு வருவார்கள்..... ஆட்டோவின் பின்னே தட்டி கட்டி அதில் போஸ்டர் ஒட்டி இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 15. 'பூலோக ரம்பை' யைக் காண ஒடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்களே! இனி எங்கே செல்வேன். எட்டணா பெஞ்ச் டிக்கெட் எங்கே? விரல் விட்டு பஞ்ச் அடிக்கும் கோலி சோடா எங்கே? பத்து பைசா அரிசி முறுக்கு எங்கே? சமோசா எங்கே?

  (டெல்லியில் கொஞ்சம் சூடு அதிகம்தான்)

  ReplyDelete
  Replies
  1. தில்லியில் ரொம்பவே சூடு அதிகம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 16. இத்தனையும் நானும் பார்த்த ஞாபகம் வருகிறது. நல்ல பதிவு.

  மன்னிக்கவும் முதல் கமெண்ட் வல்லிம்மா பதிவில் போடவேண்டியது! தவறி இங்கும் வந்து விட்டது. அதை வெளியிட வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிகக் நன்றி ஸ்ரீராம்....

   கமெண்ட் வேறு பதிவுக்கோ என நினைத்தபடியே பப்ளிஷ் செய்துவிட்டேன். இந்த கமெண்ட் பார்த்தபின் நீக்கி விட்டேன் ஸ்ரீராம்...

   Delete
 17. பழைய படங்கள் என்றால் எனக்கு உயிர் .அருமையான பொக்கிசங்கள் சகோ !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.

   Delete
 18. மிக ரசித்தேன்... உங்கள் பொக்கிஷங்களை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 19. ரம்பைகள் எல்லாம் பொக்கிசங்களாக :)))))

  ReplyDelete
  Replies
  1. ரம்பைகள் எல்லாம் பொக்கிஷங்களாக! :) அட!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 20. ஹீரோக்களைக் காட்டிலும் கதாநாயகிகளின் படங்களைப் பெரிதாகப் போட்டு விளம்பரம் செய்த காலம். இனிமேல் வராது. 'குடும்பப் படம்' என்ற சொல்லே இப்போதெல்லாம் கிடையாது போலிருக்குதே?!

  பவானினு ரெண்டு தமிழ்ப் படம் வந்திருக்குனு நினைக்கிறேன் கீதா சாம்பசிவம். இதுல வந்திருக்குற (வந்துச்சா?) மகத்தான திரைக்காவியம் பத்தி சத்தியமா எனக்குத் தெரியாது. ஆனா 'புன்னகையில் ஒரு பொருள் வந்தது'னு டிஎம்எஸ் பாட்டு வர படம் பவானினு ஒண்ணு தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. குடும்பப் படம் எனும் சொல்லே இப்போது கிடையாது போலிருக்குதே.... கரெக்ட்....

   பவானின்னு இரண்டு படம் வந்திருக்கிறதா..... எனக்கும் தெரியாது.

   In fact, இந்த போஸ்டரில் குறிப்பிட்டு இருக்கும் ஒரு படம் கூட நான் பார்த்ததாய் நினைவில்லை!

   பழைய படங்கள் என்பதால் சிலரின் நினைவுகளை மீட்டும் என்றே இங்கே பதிவு செய்தேன்!

   மேலகதிக தகவல்களுக்கு நன்றி அப்பாதுரை.

   Delete
 21. பிட் நோடீஸ் துரத்தி வாங்கிப் பிடித்த சந்தோஷம் எவரெஸ்ட் உச்சிதான்.. உண்மை. உண்மை.

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் ஆட்டோ பின்னாடி ஓடி பிட் நோட்டீஸ் வாங்கி இருக்கிறோம். கிடைத்தவுடன் ஏதோ பெரியதாய் சாதித்து விட்டதாய் ஒரு அல்ப சந்தோஷம் - அது வேறெதிலும் இருந்ததாய் நினைவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 22. @அப்பாதுரை, ரெண்டு பவானி பத்தியும் தெரியாது எனக்கும். அதிலும் முதல் பவானி சுத்தமாத் தெரியாது. ஆனால் நீங்க சொல்லும் இரண்டாவது பவானி னு நினைக்கிறேன். இந்த வாரம் மகளிர் வா ஆ ஆ ஆரத்திலே ஒரு நாளைக்கு சன் தொலைக்காட்சியிலே காட்டறாங்க. படம் விஜயசாந்தி நடிச்சதோனு நினைக்கிறேன். எதுக்கும் கூகிளிட்டுப் பார்த்துடலாம். இல்லைனா ம.கு. அதிகம் ஆகும். :))))))))

  ReplyDelete
  Replies
  1. சில சமயம் இது போன்ற படங்கள் முரசு தொலைக்காட்சியில் காண்பிக்கிறார்கள். ஆனால் சேனலை ஓட்டி விடுவதிலேயே மும்மரமாக இருப்பதால் கவனித்த நினைவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 23. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....