எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 4, 2013

என்ன இடம் இது என்ன இடம்.....


இந்த ஞாயிறில் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ஆனால் எந்த இடத்தில் எடுத்த படங்கள் இவை என்பதை சொல்லப் போவதில்லை......


பச்சைப் பசேலென்று ஒரு மலை.... அதில் ஒரு கட்டிடம். இது ஆரம்பமா இல்லை முடிவா?
மலையின் மேலும் சரகொன்னை....   இதன் காய் கூட மருந்தாகுமாம்....


தூரத்தில் தெரிவது மலைகள்....  அருகில் தெரிவது சில இலைகள்......
சேர்ந்திருந்த எங்களை இப்படி பிரித்து விட்டீர்களே...  நியாயமாரே......


என்னை மாதிரியே இந்த வெங்கட்டுக்கும் கொஞ்சம் வாலு....  நிம்மதியா சாப்பிட உடாம நணபரை ஃபோட்டோ புடிக்கச் சொல்லுதான்....
வெட்டி வெட்டியே சாய்த்து விடுவார்களோ......
கரும் பாறையிலும் நான் மரமாய் முளைப்பேன் எனச் சொல்லாது சொல்கிறதோ மரங்கள்.....
என்னா லுக்கு.....  நான் சாதுவா இருக்கறமாதிரி தான் இருக்கும்....  நான் மிரண்டா காடு தாங்காது....


என்ன இடம் என்று தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். படங்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த வாரம் இணைத்திருக்கும் படங்கள் நான் எடுத்தவை அல்ல. எடுத்தது எனது நண்பரொருவர்......  அவருக்கு எனது நன்றி.மீண்டும் அடுத்த வாரம் ஞாயிறன்று வேறு புகைப்படங்களோடு சந்திக்கிறேன்.....நட்புடன்வெங்கட்.

புது தில்லி.

31 comments:

  1. இடத்தை அனுமானிக்க முடியவில்லை
    அழகான படங்களை பகிர்வாக்கித் தந்த
    உங்களுக்கும் படமெடுத்த தங்கள் நண்பருக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.....

      இடம் மாலையில் சொல்லி விடுகிறேன்!

      Delete
  2. Replies
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

      Delete

  3. தூரத்தில் தெரிவது மலைகள்.... அருகில் தெரிவது சில இலைகள்......
    >>
    மனசுக்குள்ள டி.ஆர்ன்னு நினைப்பு!?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அடுத்த பேரா..... :) நல்லாருக்கும்மா....

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி......

      Delete
  4. வெள்ளியங்கிரி மலையா?!

    ReplyDelete
    Replies
    1. இல்லை....

      இடம் மாலையில் சொல்கிறேன்...

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      Delete
  5. வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "என்ன இடம் இது என்ன இடம்.....":


    படங்களும் இயற்கைக்காட்சிகளும் மிக அருமை.

    நான் சமீபத்தில் பெங்களூர் புதிய விமான நிலையம் தாண்டி, 10 கிலோமீட்டரில் உள்ள ”நந்தி ஹில்ஸ்”ஸுக்கு மேலே சென்று வந்தேன். அங்கும் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது.

    எனக்கு அந்த நினைவு தான் வந்தது.

    இது எந்த இடமோ ...... சரியாகத் தெரியவில்லை.

    பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

    [பிளாக்கர் தந்திரத்தால் காணாமல் போன திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டம்..... - மின்னஞ்சலில் இருந்து வெளியிட்டு இருக்கிறேன்]

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      Delete
    2. //[பிளாக்கர் தந்திரத்தால் காணாமல் போன திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் பின்னூட்டம்..... - மின்னஞ்சலில் இருந்து வெளியிட்டு இருக்கிறேன்]//

      மிக்க நன்றி. இந்த பிளாக்கரினால் எனக்கும் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு தொல்லைகள். எப்போதான் அதுவாகவே சரியாகுமோ?

      இன்றைய என் புதிய வெளியீடுகூட டேஷ் போர்டில் தெரியவில்லை.

      http://gopu1949.blogspot.in/2013/08/35.htm

      ஈஸ்வரோ ரக்ஷது !

      Delete
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      Delete
  6. மலையின் மேலும் சரகொன்னை.... இதன் காய் கூட மருந்தாகுமாம்.

    மூட்டுவலிக்கு நிவாரணம் தருமாம் ..

    அழகான பகிர்வுகள்..!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      Delete
  7. கோபாலஸ்வாமி ஹில்ஸ் தானேப்பா வெங்கட்???

    ஏன்னா இந்த முறை இந்தியா போனப்ப அங்க போனோம்.. கிட்டதட்ட மலை, மரங்கள், குரங்கு, நம்ம வெங்கட் உள்பட எல்லாம் அங்க பார்த்தமாதிரியே இருக்குப்பா.. அதனால தான் கேட்கிறேன்..

    அழகான படங்கள் வெங்கட்.... ஏன்பா சஸ்பென்ஸ்?? அதுவும் மாலை வரை வொய்ப்பா???

    சரி காத்திருப்போம் :)

    ReplyDelete
    Replies
    1. இந்த இடம் இருப்பது வட இந்தியாவில்......

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி......

      Delete
  8. //என்ன இடம் என்று தெரிந்தால் பின்னூட்டத்தில்//

    மலையும் மலை சார்ந்த இடமும் . (நன்றி சீனு!)

    ///ஆனால் எந்த இடத்தில் எடுத்த படங்கள் இவை//


    எல்லா இடத்திலுமே அதன் அருகில் அல்லது கீழே நின்றுதான் எடுத்திருக்கிறீர்கள். :))

    ReplyDelete
    Replies
    1. //எல்லா இடத்திலுமே அதன் அருகில் அல்லது கீழே நின்றுதான் எடுத்திருக்கிறீர்கள். :))//

      சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே... இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  9. எல்லாமே நீங்கள் போய்விட்டு வந்த இடங்கள்தான் (ஹி...ஹி...என்ன கண்டுபிடிப்பு!)
    வட இந்தியா ரொம்ப தெரியாது. தென்னிந்தியா என்கிறீர்களா? அதுவும் ரொம்ப தெரியாது.
    ஆனால் இடங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. எப்படியும் எழுதப் போகிறீர்கள், இல்லையா? அப்போது படித்துவிடுகிறேன்!

    ReplyDelete
  10. சுவையான கருத்துரை......

    எழுதுவது பற்றி ஒன்றும் யோசிக்கவில்லை......

    இடம் நான் சமீபத்தில் சென்று வந்த இடம்..... :)

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

    ReplyDelete
  11. இந்த படங்கள் எடுக்கப்பட்ட இடம் - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி.....

    கருத்துரைத்த அனைவருக்கும், தமிழ்மணம் மற்றும் தமிழ் 10 ல் வாக்களித்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  12. அருமையான புகைப்படங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சக்கர கட்டி.

      Delete
  13. அருமையான படங்கள்... இடத்தை சொல்லமால் ஏற்படுத்திய சஸ்பென்ஸ் சுவாரசியம் :)

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

      Delete
  14. கஷ்மீரில் பனி படராத மலையா...ஆச்சரியமா இருக்கு!!

    //பச்சைப் பசேலென்று ஒரு மலை.... அதில் ஒரு கட்டிடம். இது ஆரம்பமா இல்லை முடிவா//

    ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. இது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதியில் இருக்கிறது. இங்கே பனிப்பொழிவு இருப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.

      Delete
  15. இமயமலைப் பிராந்தியம் என்ற வரை புரிந்தது. எந்த இடம்னு தெரியலை. வைஷ்ணோ தேவி போனதில்லை. :))))

    ReplyDelete
    Replies
    1. முடிந்தால் போங்க...


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      Delete
  16. ஹிஹிஹி, இதுக்கப்புறமாப் பல பதிவுகள் போட்டாச்சு, ஆனால் எங்கள் ப்ளாகிலே இதான் காட்டுது. அதைப் பார்த்துட்டுக் கொஞ்சம் ஆச்சரியத்தோடு வந்தேன். :))))

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....