எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, August 5, 2013

காதல்...


திடம்கொண்டு போராடும் சீனு “சும்மா கிடந்த சங்கை, ஊதிக்கெடுத்தான் ஆண்டிங்கற [அட சீனு உங்கள ஆண்டின்னு சொல்ல வரலை! :)] மாதிரி திடீர்னு காதல் கடிதம் எழுதும் போட்டி வைக்க, கல்யாணத்துக்கு முன்னாடி வரை காதல் செய்ய வாய்ப்பே கிடைக்காத [அது ஒண்ணுதான் குறைச்சல்... அப்படின்னு ஒரு மைண்ட் வாய்ஸ் கேட்குது!] என்னையும் காதல் கடிதம் எழுதியே தீரணும்னு அன்புக் கட்டளை. ஆனா என்னிக்கு நாம சொல்பேச்சு கேட்டுருக்கோம்....  அதனால காதல் கடிதம் எழுதலை! போட்டியில் பங்கும் பெறலை!ஆனாலும் காதல் பற்றிய எனது எண்ணங்களை ஒரு பதிவு எழுதி வெளியிடலாம்னு தோணியதால, இந்த பதிவு எழுதி வைச்சுட்டு போட்டிக்கான நாள் முடியற வரை காத்திருந்தேன். தோ முடிஞ்சுடுச்சு. யாருக்கு பரிசு தரப்போறாங்கன்னு இன்னும் கொஞ்ச நாள்ல தெரிஞ்சுடும். அதுக்கு முன்னாடி காதல் பற்றிய எனது எண்ணங்கள் சில இங்கே.....“அது என்னமோ தெரியலை....  என்ன மாயமோ தெரியலே...அப்படின்னு குணா படத்துல கமல் சொன்ன மாதிரி நம்மளை பார்த்தா பொண்ணுங்களுக்கு ஒரு அண்ணா ஃபீலிங் தான் வருது போல. அதுனால கல்லூரி காலம் வரையில் நிறைய பொண்ணுங்க “அண்ணேன்னு செந்தில் கவுண்டமணியைக் கூப்பிடமாதிரி தான் கூப்பிட்டாங்க! எனக்கும், எந்தப் பொண்ணைப் பார்த்தும் காதல் உணர்வு வரலை! அதுக்கு அவங்களோட அழகோ, என்னுடைய பேரழகோ நிச்சயம் காரணம் இல்லை!என்னைப் பொருத்தவரை காதல் என்கிற உணர்வுக்கு வெளி அழகு முக்கியமில்லை. மனசு சுத்தமா இருந்தா போதும். வெளியே காதல் எனப் பேசிக்கொண்டு மனது முழுக்க காமம் நிறைஞ்சுருந்தா நல்லாவா இருக்கும்..... நான் பார்த்த பல காதல்கள் இப்படி காமம் அதிகமாயிருந்த காதல் தான். அதுக்காக காதலிக்கும் அனைவருக்கும் இப்படித்தான் என நான் பொதுவாச் சொல்லலை.....எட்டாவது வரை கோ-எட் பள்ளியில் படித்தாலும், ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டு வரை என்.எல்.சி. யோட ஆண்கள் மட்டுமே படித்த பள்ளி தான்.  கல்லூரியில் மீண்டும் வசந்தகாலம் – கோ.எட்.  அதுவும் பெண்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம் – எங்க க்ளாஸ்லேயே பசங்க 8 பேர் [முதல் வருஷம் 10 பேர்... பொண்ணுங்களைப் பார்த்து பயந்து போய் இரண்டு பேர் படிப்பை விட்டாங்கன்னு நினைக்காதீங்க..... சூழ்நிலை காரணங்களால் படிப்பை தொடரமுடியவில்லை] பொண்ணுங்க கிட்டத்தட்ட 40 பேர். ஆனாலும் யாரைப் பார்த்தும் எனக்குக் காதல் வரலை! எல்லாரோடையும் நல்லா பேசுவேனே தவிர காதலிக்கும் எண்ணமே எனக்கு வந்ததில்லை. கல்லூரியில் இருந்த பெண்களில் யாரும் என்னை காதலிச்சதா சொன்னதுமில்ல! இன்னிக்கு வரைக்கும் நல்ல நண்பர்களாகவே இருக்கோம்.....அதே மாதிரி காதலிச்ச பொண்ணுங்களுக்காக காத்திருக்க கடலோ மணல் வெளியோ இல்லவே இல்லை நெய்வேலில! தில்லியிலும் இல்லை! இருந்திருந்தா ஒரு வேளை நான் இப்படி காதல் கவிதை எழுதியிருப்பேனோ என்னமோ!

உனக்கென்ன
சாமி பூதம் கோயில் குளம்
ஆயிரமாயிரம்....
ஜாலியாய் பொழுது போகும்....
வலப்பக்க கடல் மண்ணை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக் கணுக்கள் வலிக்கின்றன
அடியே நாளையேனும்
மறக்காமல் வா!கல்லூரி காலத்தில் காதல் வலையில் விழுந்ததா நிறைய பேர் சொல்லுவாங்க....  என்னைக் கேட்டா, பாதி காதல், கூட இருக்கறவங்க ஏத்தி விடறது தான்....  ஒரு பொண்ணு சாதாரணமா பார்த்துட்டு போவும் – உடனே பசங்க “நாங்க எல்லாரும் நிக்கறோம். ஆனா உன்ன மட்டும் பார்த்து சிரிச்சுட்டு போறா. நிச்சயம் இது காதல் தான்என உசுப்பேத்தி விட்டே காதலிச்ச பசங்க நிறைய! அந்த பொண்ணு இவனைப் பார்த்து “இப்படி லூசுப்பயபுள்ளயா இருக்கானேன்னு நினைச்சு கூட சிரிச்சிருக்கலாம்!இப்படித்தான் கல்லூரி சமயத்தில இப்படி ஒருத்தன உசுப்பேத்தி உசுப்பேத்தி, கல்லூரி காலம் முழுவதும் ஒரு பெண்ணைக் காதலிச்ச பையனை தெரியும். ஒர் நாள் கூட அந்த பொண்ணுகிட்ட காதலை சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லவும் இல்லை. கடமை உணர்வோட தினம் காலைல அவன் வீட்டுல இருந்து 10 கிலோமீட்டர் பயணித்து [நடுவில் தான் கல்லூரி] அந்த பொண்ணு வீட்டுக்கிட்ட ஒரு கடையில காத்திருந்து அந்த பெண் கிளம்பினவுடனே கொஞ்சம் இடைவெளி விட்டு தொடர்வான்.  மாலையிலும் இதே மாதிரி அந்தப் பொண்ணு வீட்டு வரைக்கும் போய் விட்டுட்டு வேற பக்கமா திரும்புவான் அவன் வீட்டுக்கு.  இத்தனைக்கும் அந்தப் பொண்ணு அவன திரும்பிக் கூட பார்த்ததில்லை!கல்லூரி காலமும் முடிந்து 20 வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. இரண்டு மூணு வருஷம் முன்னாடி அந்த நண்பனைப் பார்த்தபோது “மச்சி, அவ எப்படி இருக்காடா? எங்க இருக்காடா.... உனக்கு தெரியுமாடா? நான் அவளை இன்னும் காதலிக்கறேண்டா.....ந்னு சொல்லிட்டு இருந்தான். அவளை நினைச்சு நினைச்சு நான் கல்யாணமே பண்ணிக்கலைன்னு வேற சொல்றான்...... அவன் வீட்டுல இருக்கற அக்கா தங்கைகளை கரையேத்த கஷ்டப்படும் நிலையிலும் இப்படி இருக்கற அவன என்னத்த சொல்றது.கல்யாணம் ஆகும் வரை நான் காதலிக்காவிட்டாலும் என்னைச் சுற்றிலும் நிறைய காதல்.....  கல்யாணத்தில் முடிந்ததும், முடியாததும் என நிறைய அனுபவங்கள்...  அதுவும் தன்னந்தனியாய் தில்லி வந்த பிறகு பார்த்த கண்மூடித்தனமான காதல்கள் நிறைய. அதற்காக நடந்த அடிதடிகளும், சண்டைகளும், சமரச பேச்சு வார்த்தைகளும் என நிறைய இருக்கு.....காதலிப்பதில் தவறில்லை. காதல் திருமணத்தில் முடிந்த பின் கடைசி வரை ஒருவொருக்கொருவர் காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும். கல்யாணத்திற்குப் பிறகும் மனைவியைக் கணவனோ, கணவனை மனைவியோ காயப்படுத்தாது இருந்தாலே அது காதல் தானே....  நம்ம காதல் ஆரம்பிச்சதே கல்யாணத்துக்கு அப்புறம் தான்! அட நான் என் மனைவியைத் தாங்க காதலிக்கிறேன்..... வேற ஏதாவது ஏடாகூடமா போட்டுக் கொடுத்துடாதீங்க! இந்த பதிவை அவங்களும் படிப்பாங்க! சரியா......நிச்சயம் ஆனபிறகு கிட்டத்தட்ட இரண்டு மாசம் அவங்க கோவையிலும் நான் தில்லியிலும்! அப்ப கடிதங்கள் பரிமாற்றம் நடந்தாலும் அப்படி ஒண்ணும் காதல் ததும்பிய கடிதங்களா இல்லை! கடிதங்களை விட தொலைபேசியில் பேசியது தான் அதிகம்.....  பேசிட்டே இருப்போம்.....  திடீர்னு சொல்லுவாங்க..... “நாளைக்கு பேசலாங்க! பில் 100 ரூபாய் ஆயிடுச்சுங்க போதும்..... 

என்ன நண்பர்களே இந்தப் பகிர்வினை படித்து ரசித்தீர்களா..... கருத்து சொல்ல விரும்புனா சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 


நன்றி: பகிர்வில் கொடுத்திருக்கும் படங்கள்/கவிதைகள் அனைத்தும் இணையத்திலிருந்து.... எழுதிய கவிஞர்களுக்கும் புகைப்படம் எடுத்த காமிரா கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி....."அடியே நாளையேனும் மறக்காமல் வா” கவிதை - நன்றி பாலகுமாரன்.....

பின்குறிப்பு: நேற்று வெளியிட்டு என்னை தொடர்பவர்களின் டாஷ்போர்டில் வராத பதிவு - என்ன இடம் இது என்ன இடம்.....   முடிந்தா பாருங்களேன்.....  

70 comments:

 1. காதல் என்கிற உணர்வுக்கு வெளி அழகு முக்கியமில்லை. மனசு சுத்தமா இருந்தா போதும். //ஆம் காதலுக்கான தகுதி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.

   Delete
 2. அருமை ஐயா. தங்களின் அலசலை ரசித்தேன்.
  “நாளைக்கு பேசலாங்க! பில் 100 ரூபாய் ஆயிடுச்சுங்க போதும்.....” இதையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயகுமார் ஜி!

   Delete
 3. நிச்சயம் நடந்த பிறகு போன்ல காதல் பகிரும் சுகம் இருக்கே....அருமை...!

  நாம கமல் ரசிகன் ஆனதால எல்லாமே காதல் காதல் காதல்தான், கல்யாணமும் காதல் கல்யாணம்தான், எனக்காக ஒரு மரணம் நடந்தபிறகு வந்த காதலிதான் என் மனைவி, இறந்தது மனைவியின் உயிர் தோழி...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 4. //நம்மளை பார்த்தா பொண்ணுங்களுக்கு ஒரு அண்ணா ஃபீலிங் தான் வருது போல. அதுனால கல்லூரி காலம் வரையில் நிறைய பொண்ணுங்க “அண்ணே”ன்னு செந்தில் கவுண்டமணியைக் கூப்பிடமாதிரி தான் கூப்பிட்டாங்க!//

  அண்ணே, நீங்க ரொம்ப நல்லவங்க....

  //காதலிப்பதில் தவறில்லை. காதல் திருமணத்தில் முடிந்த பின் கடைசி வரை ஒருவொருக்கொருவர் காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும். //

  இதெல்லாம் நடக்கிற காரியமா....


  அழகான படங்களுடன் நல்லதும் கேட்டதுமான அருமையான காதல் அனுபவங்கள்.... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 5. அந்த பொண்ணு இவனைப் பார்த்து “இப்படி லூசுப்பயபுள்ளயா இருக்கானேன்”னு நினைச்சு கூட சிரிச்சிருக்கலாம்!

  நல்ல சிரிப்புதான் ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 6. அருமையான பகிர்வு. காதல் கல்யாணத்தில் முடிகிறது என்று யார் சொன்னது?.. கல்யாணத்தின் மூலமாக இன்னும் உறுதி பெறுகிறது என்றுதான் நான் சொல்வேன் :-)

  எங்கியோ ஓர் ஓரத்துல ஊடுபாவா இழையோடற எச்சரிக்கையுணர்வையும் ரசிச்சேன்.

  '100 ரூபாய் ஆகிடுச்சு'.. செம ஆதி. ரசிச்சேன் :-)))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 7. அருமை .காதலின் பல வேறு பரிமாணங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். இதுவே அழகு. கட்டுப்பாடு,
  கல்யாணம் ,காதல்;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 8. படங்களுடன் பதிவும் அருமை.
  ரசித்தேன் நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

   Delete
 9. கட்டுப்பாடான காதல் கல்யாணத்தின் மூலம் விகசிக்கிறது.

  ஆதியின் ஒத்துழைப்போடு உங்கள் காதல் மலர்ந்தது அருமை.

  நல்லதொரு கருத்துள்ள பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 10. ஒரு பெண் பக்கத்தில் இருந்தாலே சந்தோஷத்தில் காது அடைச்சாப்புல இருக்கும் அதுவும் 40 பெண்கள் அருகில் இருந்தால் உங்களுக்கு எப்படி காது கேட்டு இருக்கும்.. அந்த பெண்கள் எல்லாம் உங்களை கண்னே கண்ணே என்று கூப்பிட்டு இருக்கும். ஆனால் அது உங்கள் காதில் அண்ணே அண்ணே மாதிரி ஒலித்திருக்கிறது

  அதுவும் நல்லதுக்குதான் இல்லைன்னா கோவையில் இருந்து ஒரு அப்பாவி பொண்ணு உங்களுக்கு கிடைத்திருக்குமா என்ன?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 11. நண்பரின் கதை நெஞ்சைத் தொடுகிறது. துணிச்சல் இல்லாதவர்கள் காதலிக்கக் கூடாது; காதலிப்பவர்கள் துணிச்சலைக் கைவிடக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா உண்மை தான் அப்பா சார்

   Delete
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
  3. ஆமா சீனு... தைரியமில்லை எனத் தெரிந்தும் எதற்கு காதலிக்க வேண்டும்.....

   Delete
 12. இந்த காலம்ன்னா ... செல்போனோட டாப் அப்பும் செஞ்சுக் கொடுத்து கடலை போட்டுக்கிட்டு இருக்கலாம் !நமக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லாமேப் போச்சேங்கிற வருத்தம் உங்களுக்கும் இருக்குமென நினைக்கிறேன் ...இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பார்ப்போம் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 13. பட்டும்படாமலும் சுதாரிப்புடன் எழுதி தப்பிச்சுட்டீங்க, வெங்கட்ஜி. படிக்க சுவாரஸ்யமாக இருக்குது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 14. ரசித்தேன்.. பார்க்கிற பெண்கள் அனைவரும் உங்களை அண்ணா அண்ணா என்று அழைத்ததிலிருந்து தெரிகிறது, நீங்க எவ்ளோ நல்லவர்ன்னு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி....

   Delete
 15. //அடியே நாளையேனும் மறக்காமல் வா// மிக மிக அற்புதம்

  //கணவனை மனைவியோ காயப்படுத்தாது இருந்தாலே அது காதல் தானே....// டெய்லி டெல்லில பூரிக் கட்ட பறக்குது போல :-)

  ReplyDelete
  Replies
  1. ////அடியே நாளையேனும் மறக்காமல் வா// மிக மிக அற்புதம் //

   பாராட்டுகள் திரு பாலகுமாரனுக்கு உரியவை.....

   பூரிக்கட்டை - நம்ம கையில! அதுனால தப்பிச்சேன்...

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 16. காதல் இந்த வார்த்தையே காந்த சக்தி கொண்டது!

  உங்கள் ’காதல்’ பதிவு அசத்தல்! படங்களும் அதிலுள்ள வரிகளுமே மிகவும் பெறுமதியாய் இருக்கின்றன.

  // உனக்கென்ன
  சாமி பூதம் கோயில் குளம்
  ஆயிரமாயிரம்....
  ஜாலியாய் பொழுது போகும்....
  வலப்பக்க கடல் மண்ணை
  இடப்பக்கம் இறைத்திறைத்து
  நகக் கணுக்கள் வலிக்கின்றன
  அடியே நாளையேனும்
  மறக்காமல் வா!//

  இது நீங்கள் எழுதியதென நினைக்கின்றேன். அருமை! எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

  நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் சகோ!

  த ம.3

  ReplyDelete
  Replies
  1. கவிதை நான் எழுதியதல்ல..... பாராட்டுகள் அனைத்தும் திரு பாலகுமாரன் அவர்களைச் சேரட்டும்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 17. பெரும்பாலும் காதல் என்பது காமம் தான் என நீங்கள் சொல்வது சரியே. அதிலும் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்தி சினிமா ஹீரோ மாதிரிக் காதலிக்கிறவங்க தான் அதிகம். இதிலே சவால் வேறே விடுவாங்க. என்னை விட்டா வேறே எவன் உன்னைக் காதலிப்பான், கல்யாணம் பண்ணிப்பான் பார்த்துடலாம் அப்படினெல்லாம். வேறே வழியில்லாமலேயே அந்தப் பெண்ணுக்கு இவனைக் காதலிக்க வேண்டி இருக்குமோனு நினைச்சுப்பேன். நல்லதொரு பதிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 18. என்னைப் பொருத்தவரை காதல் என்கிற உணர்வுக்கு வெளி அழகு முக்கியமில்லை. மனசு சுத்தமா இருந்தா போதும். வெளியே காதல் எனப் பேசிக்கொண்டு மனது முழுக்க காமம் நிறைஞ்சுருந்தா நல்லாவா இருக்கும்....//

  உண்மையான வரிகள். கண்டதும் காதல் என்று நினைப்பவர்களுக்கு இது தெரிவதில்லை. அழகிய படங்களுடன் பதிவு அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 19. அருமை. வித்தியாசமான பார்வையில் காதல். புகைப்படங்களுக்கு நன்றி சொன்னது போல 'உனக்கென்ன கோவில் குளம் ' கவிதைக்கு பாலகுமாரனுக்கு தேங்க்ஸ் சொல்லவில்லையே....! :)

  ReplyDelete
  Replies
  1. //'உனக்கென்ன கோவில் குளம் ' கவிதைக்கு பாலகுமாரனுக்கு தேங்க்ஸ் சொல்லவில்லையே....! ://

   எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என விட்டுவிட்டேன்.... இப்போ சொல்லிட்டேன்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 20. பாலகுமாரன் கவிதை அந்தக்கால சாந்தோம் நினைவுகளை கிளறி விட்டு விட்டது!(பாலகுமாரன்தானே?)
  உண்மைக்காதல் என்பது ஒரு சுகமும் வலியும் கலந்த வேதனை நிறைந்த இன்பம்!
  நன்று

  ReplyDelete
  Replies
  1. பாலகுமாரனே தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 21. என்னைக் கேட்டா, பாதி காதல், கூட இருக்கறவங்க ஏத்தி விடறது தான்....
  >>
  அப்படி உசுப்பேத்தி விட ஆளில்லாமதான் நீங்க லவ் பண்ணலியா?!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 22. நாட்டு நடப்பைப் பார்க்கையில் “ வர வர காதல் கசக்குதைய்யா” என்று பாடத் தோன்றுகிறது. உங்கள் பதிவைப் பார்த்ததும் ரசிக்கத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 23. Kittuu unnoda kadal patraya kanidaigalum , padivugalum padithen, migavum rasithen. Nandraga araindhu yeshudi irukkirai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தி.

   Delete
 24. Dear kittu,


  Unnoda nee paditha kavidhaigalaiyum, nee yezhudiya karuthugalaiyum padithu rasithen. Migavum

  Iyalbagavum, unarumbadiyum irundhadu.

  ReplyDelete
 25. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்தி.....

  ReplyDelete
 26. தங்களது காதல் பகிர்வு ரசிக்கும்படியாக இருந்தது...

  நாங்கள் படிக்கும் போதும் நண்பன் ஒருவனை இரண்டாம் ஆண்டில் உசுப்பேத்தி மூன்றாம் ஆண்டு முடிவில் இருவரும் காதலர்களானார்கள்... வாழ்க்கைச் சூழலில் காதல் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 27. ஏனோ எதற்கும் இல்லாத சக்தி, இந்த காதலுக்கு மட்டும் அதீதமாக உள்ளது... தங்கள் பதிவு அழகாக உள்ளது...! கலக்கல்.

  நலமா? கடந்த இரு வாரங்களாக இந்தப் பக்கம் வர இயலவில்லை... சுகம் தானே?

  ReplyDelete
  Replies
  1. சுகமே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இரவின் புன்னகை.

   Delete
 28. "கல்லூரியில் இருந்த பெண்களில் யாரும் என்னை காதலிச்சதா சொன்னதுமில்ல! இன்னிக்கு வரைக்கும் நல்ல நண்பர்களாகவே இருக்கோம்....." என்று ஏராளமாகப் புள்ளி வைத்திருக்கிறீர்களே, இது எதில் கொண்டுபோய்விடுமோ என்று அஞ்சுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்லப்பா யோகஸ்வாமி.

   Delete
 29. என்னைப் பொருத்தவரை காதல் என்கிற உணர்வுக்கு வெளி அழகு முக்கியமில்லை. மனசு சுத்தமா இருந்தா போதும்.

  காதலிப்பதில் தவறில்லை. காதல் திருமணத்தில் முடிந்த பின் கடைசி வரை ஒருவொருக்கொருவர் காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.


  உங்களை சுத்தி நடந்த நிகழ்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 30. காதல் பற்றிய உங்கள் பதிவு அருமை.
  ஆதியின் “நாளைக்கு பேசலாங்க! பில் 100 ரூபாய் ஆயிடுச்சுங்க போதும்.....” என்பதை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 31. உண்மைதான் .. நண்பர்கள் உசுப்பி விடுவதால் காதலில் விழுந்து அதைக் காப்பாற்றிக் கொள்ள கஷ்டப்படுபவர் பலர். அதே போல் தைரியமில்லாதவர்கள் காதலிக்க ஆசைப்படவே கூடாது..காதலை சொல்லக்கூட தைரியமில்லாதோர் அதன் பின் தொடரும் பிரச்சனைகளை எப்படி கையாள்வார்கள்?
  இடையிடையே இருந்த கவிதைகள் அருமை....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 32. venkat, Bala Kumaran avarkali nerli mendum partha madaithri irukku.. Thanks for that fantastic kavithai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜு.

   Delete
 33. காதல் பற்றி அருமையாக சொல்லிவிட்டீர்கள். இனிய பகிர்வு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி மாதேவி.

   Delete
 34. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 35. 'நாளையேனும் மறக்காமல் வா' இந்த வரியில் இருக்கும் யதார்த்தம் ரொம்ப பிடித்திருந்தது. 'உலகின் மூலையில் நான்' படம் திகில்!

  எனக்கென்னவோ காதல் என்பதை யாருமே சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஆரம்பத்தில் வரும் காதல் கடைசி வரை தொடருகிறதா என்பதும் கேள்விக்குறி தான்.

  நிறையக் காதல் கடிதங்களைப் படித்ததானால் இப்படி பேசுகிறேனோ, தெரியவில்லை.

  உங்கள் பதிவைப் படித்ததும் பலமான சிந்தனைகள் மனதில்.

  ReplyDelete
  Replies
  1. /நிறைய காதல் கடிதங்களைப் படித்ததனால் இப்படி பேசுகிறேனோ, தெரியவில்லை.//

   :)))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....