எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, August 23, 2017

நேரம் பொன்னானது – ராஜ பரம்பரை கடிகாரங்கள்


நெய்வேலி ஜவஹர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஜூனியர் ஜேசீஸ் என அழைக்கப்படும் Junior Chamber of India கழகத்தின் மாணவர் பிரிவில் இரண்டு வருடங்கள் இருந்தேன் – அதுவும் Chairman பொறுப்பில். சில நிகழ்வுகளை நடத்தியதில் பங்கு வகித்து இருக்கிறேன். கூடவே ஒன்றிரண்டு நாடகங்களில் பங்கு பெற்றதோடு, எங்கள் கல்லூரி சார்பாக திருச்சி REC-ல் நடந்த ஒரு விழாவிற்கும் நண்பர்களுடன் சென்றதுண்டு.  ஜூனியர் ஜேசீஸ்-ல் இருந்தபோது நிறைய வகுப்புகள் – நேரக் கட்டுப்பாடு, பொது சேவை போன்ற தலைப்புகளில் வகுப்புகள் எடுப்பார்கள்.  அதில் நேரக் கட்டுப்பாடு சம்பந்தமான ஒரு வகுப்பு இன்றளவும் நினைவில் இருக்கிறது. அதற்குக் காரணம் உண்டு. அந்த வகுப்பில் காட்டப்பட்ட ஒரு வரைபடமும், அதன் கதையும் தான் காரணம்.

கதைக்கு வருகிறேன் – அமெரிக்காவில் பிரபலமான அதிகாரிகளும், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் கூடி இருக்கிறார்கள். அவர்கள் அன்று சந்திப்பதன் காரணம் – அமெரிக்கச் சந்தையில் ஜப்பானிய நிறுவனங்களின் பொருட்கள் நிறைய விற்பனை ஆவதைத் தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அந்தக் கூட்டம்.  ஜப்பானிய பொருட்கள் மலிந்து விட்டதால், அமெரிக்க பொருட்கள் விற்பனை ஆகவில்லை – அமெரிக்கர்களுக்கு நட்டம்! அதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அந்த முடிவு அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் பதாகைகள் வைக்க வேண்டும் – “ஜப்பானியப் பொருட்களை வாங்காதீர்கள்…. அமெரிக்கப் பொருட்களையே வாங்குங்கள்” என்ற பதாகை தான் அது.

சரி பதாகைகளைத் தயாரிக்க வேண்டுமே அதில் ஈடுபடுகிறார்கள். அந்தக் காட்சியை நம் கண் முன்னே கொண்டு வர ஒரு வரைபடம் காண்பிக்கப்பட்டது – அமெரிக்க Mr.பொதுஜனம் என குறிப்பதற்கு Uncle Sam என்பவரைத் தான் பயன்படுத்துகிறார்கள்.  Uncle Sam உட்கார்ந்து வரைந்து கொண்டிருக்கிறார் – அவர் முன்னே ஒரு Drawing Board – அதில் Uncle Sam படம் – கையால் வரைந்து கொண்டு இருக்கிறார் – ஜப்பானியப் பொருட்களைத் தவிர்ப்பீர் – அமெரிக்கப் பொருட்களையே வாங்குவீர் என்ற வாசகம் எழுதிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒவ்வொன்றாக வரைய வேண்டும்! எத்தனை நேரம்/நாட்கள் ஆகும் இதற்கு?

அதே வரைபடத்தில் – வரைவது போல இருக்கும் Uncle Sam படத்திற்கு அருகே இன்னுமொரு உருவம் – அது ஒரு ஜப்பானியருடையது! தலையில் வைத்திருந்த தொப்பியை கழற்றி பணிவுடன் முட்டி வரை குனிந்து, மற்ற கையில் ஒரு கைப்பெட்டியோடு, Uncle Sam-ஐப் பார்த்து கேட்கிறார் – “Sir, do you need the fastest printing machines in the world?” ஜப்பானியப் பொருட்களை வாங்காதே என்று அமெரிக்கர்களுக்குச் சொல்ல பதாகைகளை, குறைவான நேரத்தில் தயாரிக்கவே ஜப்பானிய பொருளை விற்பனை செய்ய முன் வந்த தன்னம்பிக்கை, நேரக் கட்டுப்பாடு போன்றவற்றை எடுத்துக்காட்ட இந்த வரைபடமும் கதையும் அப்போது எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.  என்ன ஒரு நம்பிக்கை ஜப்பானியர்களுக்கு!  இது உண்மையாக நடந்ததா? இல்லை கட்டுக்கதையோ என்னவாக இருந்தாலும், இந்த கதை கேட்டது இப்போதும் மனதில் பதிந்திருக்கிறது.

நேரம் மிக முக்கியமானது! அதை நம் கட்டுப்பாட்டுக்குள் முடிந்த வரை வைத்திருந்து நேரத்தினை பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்வது நம் கையில் தானே…. 

அது சரி இன்றைக்கு எதற்கு இந்தக் கதை? சமீபத்தில் ராஜஸ்தான் சென்றிருந்தேன். அங்கே ஜோத்பூர் மஹாராஜாக்களின் அரண்மனை இருக்கிறது – Ummaid Bhavan – அங்கே ஒரு அருங்காட்சியகமும் உண்டு! அதில் ராஜா மஹாராஜா காலத்து கடிகாரங்களின் அணிவகுப்பு பார்த்து பிரமித்தேன் – எத்தனை வகை கடிகாரங்கள்! விதம் விதமாக, பல வடிவங்களில்! சிலவற்றை அலைபேசியில் படம் எடுத்தேன். அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு பகிர நினைத்தபோது மேலே சொன்ன கதையும் நினைவுக்கு வந்தது! இதோ அரண்மனையில் காட்சிக்கு வைத்திருந்த கடிகாரங்கள்……என்ன நண்பர்களே, பதிவினையும், படங்களையும் ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 comments:

 1. படங்கள் அழகு....தகவலும், கதையும் அருமை....

  கீதா: துளசியின் கருத்துடன்.....நீங்கள் சொல்லIஇருக்கும் கதை பொருளாதார வகுப்பில் சொல்லியிருக்கிறார்கள்...அப்புறம் மற்றோன்றும் அறியநேர்ந்தது. ஆப்பிள் உற்பத்தியில், அமெரிக்காவில் ஆப்பிள் அந்த நாட்டின் அதிகமாக விளையும் பழம் என்றாலும் சந்தையில் ஜப்பானின் ஆப்பிலுக்குத்தான் கிராக்கி லாபமும்...அப்போது காரணம் அறிந்தார்கள்...அமெரிக்க்காவில் விளை ஜல் கூடுதல். ஜப்பானில் குறைவு என்றாலும் தரம் அதிகம், உழைப்பும் என்று அறிந்தனர்

  நல்ல பகிர்வு ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. படங்களை ரசித்தேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. ராஜாக்களின்கடிகாரம் விதம்விதமாய் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 5. காலத்தின் கணக்குப்பிள்ளை பற்றிய‌ சுவையோன முன்னோட்டமும், படங்களும் அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

   Delete
 6. temple city jcயில் நாற்பது வயது ஆகும் முன் ஐந்தாண்டுகள் இருந்தேன் ,அப்போது டைம் மானேஜ்மென்ட் வகுப்பில் நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது ,அப்போது பிரபலமாய் இருந்த ரெகோ(சன் டிவி) அவர்கள் jc ஆண்டு விழாவில் தம்பதிகள் போட்டிஒன்றை நடத்தினார் ,அதில் நாங்கள் பரிசு பெற்றதும் பசுமையாக நினைவில் இருக்கிறது ஜி :)

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் JC-ல் இருந்தது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. பொதுவாக தனிமனிதர்களுக்குத்தான் பட்டப் பெயர்கள் வைத்து அழைப்போம். எங்கள் ஊரின் ஒரு பகுதிக்கே நாங்கள் "ஜப்பான் சைடு" என்று பட்டப் பெயர் வைத்திருந்தோம். குழாயடிச் சண்டையிலும் சரி, குடுமி பிடி சண்டையிலும் சரி அந்த பகுதிகாரர்களை மிஞ்ச முடியாது.

  ReplyDelete
  Replies
  1. குழாயடிச் சண்டை! :) நெய்வேலியில் இப்படியான சண்டை பார்த்ததில்லை! வேறு விஷயங்களுக்கு சண்டை நடப்பதுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 8. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. அழகான கடிகாரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 10. கடிகாரங்கள் படங்கள் நல்லா இருக்கு. எதுலயோ செலவழித்திருக்கக்கூடிய பணம் எங்கேயோ செலவழித்திருக்கிறார்கள். த ம

  ReplyDelete
  Replies
  1. நன்கு அனுபவித்திருக்கிறார்கள்! வேறென்ன சொல்ல.... இன்னும் ஒரு கலெக்‌ஷனும் இருக்கு! அது வரும் ஞாயிறில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. அனைத்தும் ரசிக்கக்கூடியதாகவே இருக்கிறது.. படங்கள் மிக தெளிவானதாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 12. விதம்விதமான கடிகாரங்கள். அழகான புகைப்படங்கள், அருமையான செய்திகளுடன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 13. இந்த அமெரிக்கர்களுக்கு எதையும் பாந்தமாக சொல்லத் தெரியாது அவர்கள் பொருட்களை விட எங்களது தரம் வாய்ந்தது என்று கூசாமல் போட்டியாளனின் பொருளோடு ஒப்பிடுவார்கள் என் பொருள் உசத்தி என்று சொல்லாமல் போட்டியாளனி பொருள் தரம்குறைந்தது என்பார்கள்
  ஜப்பானியர்கள் முதலில் குவாண்டிடிக்கு முக்கியத்துவம் கொடுத்து மலிவாக உற்பத்தி செய்தார்கள் பின் தரத்திலும் நேரத்திலும் கவனம் செலுத்தினார்கள் இப்போது தரத்துக்கு எடுத்துக்காட்டாகஜப்பானியர்கள் இருக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 14. படங்கள் அருமை. கதையும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. ஜோத்பூர் உமைத் பவன் (இந்தியன் படத்தில் “மாயா மச்சிந்திரா” பாடல் இங்கு படமாக்கப்பட்டது. ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நான்கு ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறேன். சைக்கிளிலேயே அரண்மனை, கோட்டை & மண்டூர் கார்டன் சென்ற அனுபவம் உண்டு

  ReplyDelete
  Replies
  1. ஜோத்பூரில் பணிபுரிந்தது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன்சந்தர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....