சனி, 20 ஜூலை, 2013

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்.... – வாலி

வாலி..... எனக்கு மிகவும் பிடித்த அகண்ட காவிரி ஓடும் திருப்பராய்த்துறையில் பிறந்து எனக்கே எனக்கான திருவரங்கத்தில் வளர்ந்து சென்னையில் திரையுலகில் கோலோச்சிய அவதார புருஷன்! பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என அவர் எழுதிய காவியங்களுக்காகவே அவை வாரா வாரம் வெளிவந்த இதழ்களை வாங்கியிருக்கிறேன்..... என்ன ஒரு அற்புதமான எழுத்து. அவரது பாடல்களில் இருக்கும் சுவை, அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் என கலக்கல்! 

கண்ணதாசன் இறந்தபோது வாலி சொன்னது – “எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்’.... வாலியின் இறப்பில் மீண்டும் ஒரு கவிதைப் புத்தகத்தினை எமன் கிழித்துப் போட்டு விட்டான்...... 

அவர் பாடல்களிலிருந்து நான் ரசித்த சில பாடல்களை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சிட்டுக்குருவி படத்திலிருந்து “அடடட மாமரக் கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே” பாடல்..... எஸ். ஜானகியின் குரலில், இளையராஜாவின் இசையில்....
  

கோபுர வாசலிலே படத்திலிருந்து இளையராஜாவின் இன்னிசையில், இதோ “தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது தம்பி....” பாடல்.


அகல்விளக்கு படத்திலிருந்து, கே.ஜே. யேசுதாஸ் குரலில் இளையராஜா இசையில் “ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே....”
  

”என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்” - அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்திலிருந்து வாணி ஜெயராம் குரல் கொடுக்க இளையராஜா இசையமைத்த பாடல்....
  

தாய் மூகாம்பிகை படத்திலிருந்து இளையராஜாவின் குரலில், இசையில் வெளிவந்த “ஜனனி... ஜனனி.... ஜகம் நீ அகம் நீ” பாடல்....
  

”கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா” – மௌனம் சம்மதம் படத்திலிருந்து – கே.ஜே.யேசுதாஸ் மற்றும் சித்ராவின் குரலில்.... 


”கண்ணா வருவாயா.... மீரா கேட்கிறாள்” – மனதில் உறுதி வேண்டும் படத்திலிருந்து, இளையராஜாவின் இன்னிசையில் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் சித்ராவின் குரலில்....
  

 மறைந்த பாடகர் டி.எம்.எஸ். குரலில் பேசும் தெய்வம் படத்திலிருந்து எம்.எஸ்.வி. இசையில் “நான் அனுப்புவது கடிதம் அல்ல....” பாடல். 
  

வைதேகி காத்திருந்தாள் படத்திலிருந்து ஜெயச்சந்திரன் குரலில்.... இசை – இளையராஜா..... பாடல் – ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு....
  

எஸ்.பி.பி.-எஸ். ஜானகி குரல் கொடுக்க, இளையராஜா இசையமைக்க, வாலி பாட்டெழுத, “தனிக்காட்டு ராஜா” படத்திலிருந்து ”சந்தனக் காற்றே, செந்தமிழ் ஊற்றே” பாடல்....
  

”சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்” - இங்கேயும் ஒரு கங்கை படத்திலிருந்து கங்கை அமரன் – எஸ்.பி. ஷைலஜா குரலில் இளையராஜாவின் இசையில்..... 


ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை – அது போலவே வாலி நீ இம்மண்ணுலகில் இருந்து மறைந்து விட்டாலும் எங்கள் மனதை விட்டு மறையப் போவதில்லை.....


இன்னும் பலப் பல பாடல்கள்..... வாலி எழுதிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுப்பது திருப்பதியில் மொட்டையடித்தவரைத் தேடுவது போலத்தான்..... நான் ரசித்த பாடல்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். வாலி மறைந்து விட்டாலும் அவரது பாடல்கள் என்றும் நம்மை விட்டு மறையாது.... 


வாலி நீ வாழி..... 


மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.... 

நட்புடன் 

வெங்கட். 
புது தில்லி. 

டிஸ்கி: இணையத்தில் இந்தப் பாடல்களை தரவேற்றி வைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...... 

56 கருத்துகள்:

  1. நல்ல தொகுப்பு .வாலியின் பல பாடல்களை எழுதியது அவர் என்று தெரியாமலே ரசித்திருக்கிறேன்.
    அவர் ஒருசகாப்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  2. வாலி மறைந்து விட்டாலும் அவரது பாடல்கள் என்றும் நம்மை விட்டு மறையாது....


    ஆழ்ந்த இரங்கல்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  3. // வாலி..... எனக்கு மிகவும் பிடித்த அகண்ட காவிரி ஓடும் திருப்பராய்த்துறையில் பிறந்து எனக்கே எனக்கான திருவரங்கத்தில் வளர்ந்து சென்னையில் திரையுலகில் கோலோச்சிய அவதார புருஷன்! பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அவதார புருஷன் என அவர் எழுதிய காவியங்களுக்காகவே அவை வாரா வாரம் வெளிவந்த இதழ்களை வாங்கியிருக்கிறேன்..... என்ன ஒரு அற்புதமான எழுத்து. அவரது பாடல்களில் இருக்கும் சுவை, அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் என கலக்கல்! //

    நினைவஞ்சலி வரிகளே உங்களுக்கு வாலியின் மீது இருக்கும் காதலை வெளிப்படுத்தி விட்டன. திருவரங்கம் என்றாலே தமிழ்தானே! கவிஞர் வாலிக்கு எனது அஞ்சலி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  4. தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள பாடல்கள் அனைத்தும் அருமை.

    வாலி மறைந்து விட்டாலும் அவரது பாடல்கள் என்றும் நம்மை விட்டு மறையாது....

    ஆழ்ந்த இரங்கல்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

      நீக்கு
  5. அழகான தொகுப்பு அருமையான அஞ்சலி.

    ஒவ்வொரு பாடலும் தேன்!

    அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.....

      நீக்கு
  6. நீங்கள் பதித்த அத்துனை பாடல்களின் வரிகளிலும் தெறிக்கும் அர்த்தங்களில் உறைந்து இருக்கிறார் வாலி மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்கள் நன்றி பதிவிற்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை மு. சரளா

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  8. எவ்வளவு இனிமையான பாடல்கள் வரிகள் வாலிக்கு நிகர் அவரே தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கர கட்டி

      நீக்கு
  9. அவரது வரிகளுக்கு சாவில்லை... ஆழ்ந்த இரங்கல்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. அற்புதமான அஞ்சலி அன்பரே
    பாடல்களில் இருக்கும் இனிமை, அவர் இல்லாததை நினைக்கும் போது வேதனையாக மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜகோபாலன்.

      நீக்கு
  11. கண்ணதாசன் அவர்களின் பாடல்களை இனங்கண்டு கொள்வதுபோல் வாலி அவர்களின் பாடல்களை சட்டென அறிந்துகொள்ளவியலாத என் அறியாமையை நொந்துகொள்கிறேன். இன்னும் சொல்லப்போனால் பிற பல கவிஞர்களுடைய பாடல்களையும் கவியரசர் எழுதியதாகவே நினைத்திருக்கிறேன். இங்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள் அனைத்தும் மனம் தொட்டப் பாடல்கள். பகிர்வுக்கும் வாலி அவர்களுடைய பெருமை போற்றும் பதிவுக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  12. மிக அருமையான பாடல் தொகுப்புகள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.

      நீக்கு
  13. மனதை வருத்தும் மறக்க முடியாத நினைவுகள் .வாலி அவர்களின்
    ஆத்மா இந்நேரம் நன்நிலை அடைந்திருக்கும் என நம்புவோம் .சிறந்த
    ஆக்கம் .மிக்க நன்றி சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.....

      நீக்கு
  14. இன்னும் ஒரு பாடல், இன்னும் ஒரு பாடல் என்று இணைத்துக் கொண்டே இருக்கத் தோன்றியிருக்குமே..... நிறுத்தவே வந்திருக்காது. எல்லாம் நல்ல வரிகளைக் கொண்ட அமுதத் தமிழ்ப் பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்..

      உண்மை தான் ஸ்ரீராம். எதை விடுவது என்று முடிவே செய்ய இயலவில்லை.....

      நீக்கு
  15. அழகான தொகுப்பு அருமையான அஞ்சலி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  16. எல்லாமே அருமையான பாடல்கள். விஜயகாந்த் ஷோபா!
    பாடல்வரிகளை ரசிக்கும் போதே மறைந்த கவிஞரின் நினைவும் வருகிறது.
    அவரது பாடல்களில் என்றேன்றும் அவர் மறையாமல் இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  17. நீங்கள் எழுதிய
    “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை – அது போலவே வாலி நீ இம்மண்ணுலகில் இருந்து மறைந்து விட்டாலும் எங்கள் மனதை விட்டு மறையப் போவதில்லை.....“ என்பதையே நானும் இங்கே கூறிக்கொள்கிறேன் நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....

      நீக்கு
  18. அருமையான தொகுப்பு சகோ!
    அவர் நினைவுகள் மேலிடுகிறது...

    பகிர்விற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  19. சுகமான ராகமாக அருமையான பாடலகளாக
    அவர் இருக்கும் வரையில் இருந்த பாட்லகள்
    இப்போது நீ கசிவை ஏற்படுத்துவதைத்
    தவிர்க்க இயலவில்லை
    அவர் ஆன்மா சாந்தியடையட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  20. பதில்கள்
    1. தமிழ் மணம் ஒன்பதாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  21. ரொம்பக் கஷ்டம் வெங்கட்... எத்தனை எத்தனையோ மனசுல ரீங்காரமிடற அவரோட பாடல்கள்லருந்து சிலவற்றை மட்டும் எடுத்துப் போடறது ரொம்பவே கஷ்டம்! நீங்க பகிர்ந்திருக்கறது எல்லாமே ரசனைக்கு விருந்து! அந்த மகத்தான கவிஞனின் ஆன்ம சாந்திக்காய் என் பிரார்த்தனைகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்....

      நீக்கு
  22. வாலிபக் கவிஞனின் அழகிய பாடல்களில் சிலவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    காலத்தால் அழியாத பாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  23. ரசித்த பாடல்கள், மீண்டும் மனதில் முனுமுனுக்க செய்ததற்கு நன்றி...
    தமிழ் பேசும் உலகம் அழியும் வரை, வாலிக்கு அழிவு இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

      நீக்கு
  24. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  25. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  26. நெஞ்சை விட்டு நீங்காத பாடல்கள். ஸ்ரீராம் சொல்லியிருப்பதையும் வழி மொழிகிறேன்.

    கவிஞருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  27. ஆயிரக்கணக்கில் வாலியின் அற்புதமான பாடல்கள் இருக்கையில் ஏன் இப்படி அடுத்தவர் எழுதிய பாடல்களை இங்கே இட்டிருக்கிறீர்கள்?

    ஏதோ கனவுகள் நினைவுகள் - கங்கை அமரன்
    கல்யாணத் தேன் நிலா - புலமைப்பித்தன்
    சோலை புஷ்பங்களே - வைரமுத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி app_engine.....

      நீக்கு

  28. நீங்கள் தொகுத்துக்கொடுத்திருக்கும் அநேக பாடல்களை நானும் ரசித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் இவையெல்லாம் வாலியின் பாடல்களா என்று ஆச்சரிய மளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....