திங்கள், 13 அக்டோபர், 2014

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!



மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 5

முந்தைய பகுதிகள்: பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4



சென்ற பகுதியில் நடக்க முடியாதவர்கள் என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலைப் பார்த்தோம்.  இப்பகுதியில் நாம் பார்க்கப் போவது நடைப்பயணத்தின் போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் பற்றியது.  நடைப்பயணம் என்றால் பயணக் களைப்பும் அலுப்பும் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் நடக்கும்போதே “ஜெய் மாதா [dh]தி! கோஷங்களை எழுப்பியபடியே நடப்பது வழக்கம். வரிசையாக பல கோஷங்கள் உண்டு –

சாரே போலோ
ஜெய் மாதா [dh]தி!,
ஜோர் சே போலோ
ஜெய் மாதா [dh]தி!
ஆகே போலோ
ஜெய் மாதா [dh]தி!
பீச்சே போலோ
ஜெய் மாதா [dh]தி!,
ஆவாஸ் நஹி ஆயா
ஜெய் மாதா [dh]தி!
                      
போன்ற பல ஜெய கோஷங்களை எழுப்பியபடியே செல்வார்கள். நடக்கும் அனைவரையும் கூடவே சொல்ல வைக்கும் இந்த கோஷங்கள்.



பாதையில் நிறைய இடங்களில் மேளம் கொட்டுபவர்கள் [டோல் வாலா] இருப்பார்கள்.  நடப்பவர்களைப் பார்த்தவுடன் தங்களது மேளங்களை முழங்க, பாதசாரிகள் டோல் வாலாவின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடத் துவங்கி விடுவார்கள். பத்து பதினைந்து நிமிட நடனத்திற்குப் பிறகு அந்த குழுவில் இருக்கும் பெரியவர், ஆடியவர்களின் தலையை ரூபாய் நோட்டுகளால் சுற்றி, டோல் வாலாவிற்கு கொடுத்து விடுவார். அதாவது திருஷ்டி கழிப்பது போன்ற ஒரு செயல்!



நானும் நண்பரும் நடந்து சென்றிருந்த போது மூன்று பேர் கொண்ட குடும்பம், அம்மா, அப்பா மற்றும் அவரது மகன், எங்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தனர்.  டோல்வாலாவினைப் பார்த்தவுடன் மகனுக்கு ஆடத் தோன்றிவிட, ஒரே ஆட்டம் தான்! அவர் ஆட ஆட, அவரது அப்பா-அம்மா இருவருக்கும் ஆட ஆசை! அவர்களும் ஆட்டம்!  என்னுடன் வந்த நண்பருக்கு இந்த ஆட்டங்கள் புதியது என்பதால் அவர் ஒரு ஆச்சரியத்தோடு அந்த ஆட்டத்தினை புகைப்படம் எடுத்துக் கொண்டார்!



ஆட்டம் மட்டுமல்ல, ஒரு சில பக்தர்கள் அன்னையின் அருளைச் சொல்லும் பாடல்களை பாடியபடியே வருவார்கள் – அவர்கள் கையிலும் டோலக் [மிருதங்கம் போன்ற ஒரு மேளம்] நிச்சயம் இருக்கும் – ராகம், தாளம் பல்லவி என்றெல்லாம் எதிர்பார்க்காது, ஒரே மெட்டில் இருக்கும் பாடல்களைப் பாடியபடியே இவர்கள் பயணிக்க, அந்த பயணமே மிகவும் ஆனந்தமயமாக இருக்கும்.

இப்படி சிலர் ஆனந்தமான பயணமாக மாற்றிக்கொள்ள, ஒரு சிலர் தங்களை மிகவும் வருத்திக் கொள்வதையும் பார்க்க முடியும்.  மாதா வைஷ்ணவி தேவியிடம் தங்களது விருப்பங்களைச் சொல்லி, அது நிறைவேறினால் மொத்த பாதையையும் நமஸ்கரித்த படியே கடக்கும் நபர்களும் இருக்கிறார்கள். அதாவது பாதை ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு நமஸ்காரம்...  தலை வைத்த இடத்தில் ஒரு கோடு போட்டு, அந்த இடத்தில் நின்று ஒரு நமஸ்காரம், மீண்டும் ஒரு கோடு. இப்படி நமஸ்கரித்து, எழுந்து நின்று, மீண்டும் நமஸ்கரித்து என மொத்த தூரத்தினையும் கடப்பார்கள். இதற்கு பல மணி நேரங்கள் ஆவதுண்டு.

ஒரு சிலர் தங்களது பாதங்கள் அன்னை குடியிருக்கும் புனிதமான அந்த மலை மீது படாமல், முழங்கால்களால் பயணிப்பதும் பார்த்திருக்கிறேன். இப்படி பயணித்தபடியே நடந்தால் நிச்சயம் தண்ணீர் தாகம், பசி என இருக்காமல் இருக்குமா?  இதற்கான வசதிகள் என்ன, வெறென்ன வசதிகள் இருக்கிறது என்பதை எல்லாம் சொல்லத் தான் போகிறேன் – அதற்கு முன்னால் வைஷ்ணவ தேவியின் கதைக்கு வருவோம்...

ராமபிரான் சொன்னது போலவே வைஷ்ணவ தேவியின் புகழும் திறமையும் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. பல இடங்களிலிருந்தும் மக்கள் அவரது அருளைப் பெற வைஷ்ணவ தேவியின் ஆஸ்ரமத்திற்கு வந்தபடியே இருந்தார்கள். காலம் உருண்டபடி இருக்க, [G]கோரக் நாத் எனும் தாந்த்ரீகர் ராமபிரானுக்கும் வைஷ்ணவிக்கும் நடந்த சம்பாஷனைகளை அறிந்திருந்தார்.  ராமபிரான் சொன்னபடியே வைஷ்ணவி சக்தி மிகுந்தவராக ஆகிவிட்டாரா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு, தனது பிரதம சீடரான [B]பைரோன் நாத் என்பவரை அனுப்பி வைத்தார்.  திரிகூட மலைப் பகுதியில் வைஷ்ணவ தேவியை கண்டுகொண்ட பைரோன் நாத் வைஷ்ணவி தேவியை ரகசியமாக தொடர்ந்து அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார்.

சாத்வி கோலத்தில் இருந்தாலும், வைஷ்ணவ தேவி எப்போதும் வில்-அம்பு வைத்திருந்ததையும், பல லங்கூர் வகை குரங்குகளும், கொடூரமான சிங்கம் ஒன்றும் அவருடன் எப்போதும் இருந்ததையும் பார்த்தார்.  அது மட்டுமல்லாது வைஷ்ணவி மிக மிக அழகாக இருந்ததையும் பார்த்த பைரோன் நாத் அவர் மீது தீராத காதல் கொண்டு அவரை அடையவும் துடித்தார். தன்னுடைய நல்ல பண்புகளை விட்டொழித்து வைஷ்ணவ தேவியை திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தார். வைஷ்ணவ தேவியை தொந்தரவும் செய்ய ஆரம்பித்தார்!

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! :)

இந்த வாரத்தில் நடந்து கொண்டே, நமக்கு கிடைக்கும் பல்வேறு அனுபவங்களையும், நிகழ்வுகளைகளையும் பார்த்தோம்.  அடுத்த வாரம் வேறு சில அனுபவங்களையும் தகவல்களையும் பார்க்கலாம்... 

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. ஆஹா ஆஹா.... ஆட்டம் கொண்டாட்டம். நானும் கொண்டாட்டம் னு ஒரு பதிவு இப்பதான் போட்டுட்டு வந்தேன். ஆனா,... அது சாமி இல்லையாக்கும்:-)

    இந்த பைரோன் நாத் ஏன் இப்படி? அடராமா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      கொஞ்ச நாளாவே பதிவுகள் படிப்பதில் தடை - வேலை அதிகம்! :(((

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    மனதை கவர்ந்த பதிவு பார்க்கவே உச்சாகமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  4. பயணத்தின் வர்ணனையைப் படிக்க சந்தோஷமாக இருக்கின்றது.. தொடர்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பயணக்கதையும் புராணக்கதையும் சுவாரஸ்யம்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  8. அன்புள்ள திரு.வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு,
    வணக்கம். தங்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கண்டு களிப்புற்றேன்.

    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  10. போலோ! போலோ! – அடுத்த பதிவினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்!
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  11. ஆட்டம் பாட்டத்துடன் வைஷ்ணவோ தேவியின் கதையும் சொல்லிச் சென்ற விதம் அருமை அண்ணா... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  12. என்ன ஒரு உற்சாகமான பயணம். அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான பயணம் . (முழங்கால்களால் பயணிப்பதும் !!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  15. ஆமாம்! வட இந்தியாவில் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரைகள் பெரும்பாலும் இப்படி ஆட்டம் பாட்டமாகப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் தான் வருகின்றார்கள்..உற்சாகமான பயணமே! சில பய்ணங்கள் நீங்கள் சொல்லியிருப்பது..முழங்கால்.....நம்மூரிலும் முதுகில் கம்பி குத்திக் கொண்டு தொங்கிக் கொண்டும், வாயில் வேல் குத்திக் கொண்டும் செல்கின்றார்களே அது போலத்தான் போலும்......ராமானுஜர் கூட திருப்பதிக்கு முழங்காலில் தான் நடந்திருக்கிறார்.... ....அது போல காரைக்கால் அம்மையாரின் பயணம் ....
    தொடர்கின்றோம் நண்பரே ! அருமையான அனுபவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி பழக்கம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  16. சபரிமலைப் பயணத்தையும் எருமேலி பேட்டைத் துள்ளலையும் நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  17. I am continuously reading this and making as a bookmark in my system. I feel that none of the article in the net is as detail as this, and when I plan to take my wife there sure this is going to help. Good job sir !
    Are you coming to Madurai Bloggers meet ? Looking forward to meet you.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

      அலுவலகத்தில் பணி அதிகம். அதனால் மதுரை சந்திப்பிற்கு வர இயலாது.... :( பிறிதொரு சமயத்தில் சந்திப்போம்.....

      நீக்கு
  18. வைஷ்ணவதேவி வரலாறு, அனுபவங்கள், படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  19. பயணக் களைப்பும் தெரியாமல் இருக்க நல்ல ஏற்பாடுதான் இவை!
    மிக அருமை!

    தொடரும்போது சற்று இடறிவிடப் பார்த்தேனோ...!
    இருப்பினும் தடம் பார்த்து வந்து இணைந்துகொண்டேன்!..
    தொடருங்கள் சகோதரரே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      முடிந்த போது எல்லா பகுதிகளையும் படியுங்கள்....

      நீக்கு
  20. பயணம் பற்றி தங்களால் மட்டுமே இப்படி சுவையாக எழுத முடியும்! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதைக்கு நிச்சய ஈடாகாது ஐயா

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  21. டோல்வாலாக்கள் இசையே நம்மையும் ஆடச் சொல்லும் விதமாய் இருக்கும் பாங்குரா டான்சை நீங்களும் ஆடவில்லையா ?
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆடினால் டோல் வாலா ஓடிவிடுவார்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....