புதன், 15 ஜூலை, 2015

சங்கத்தில் நீங்களும் இருக்கீங்களா?



பல சமயங்களில் போதும் என்கிற மனம் இல்லாது எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். பணம், புகழ், வீடு, வசதி, என எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். எத்தனை கிடைத்தாலும், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என தொடர்ந்து நிம்மதியில்லாத ஒரு தேடல்.  ஓட்டம் முடிவதே இல்லை – நம் மூச்சு நிற்கும் வரை.

எல்லோராலும் பட்டினத்தார் போல இருந்து விட முடிவதில்லையே.... அவருக்கென்ன சுலபமாய்ச் சொல்லி விட்டார்.  அப்படி என்ன சொல்லி விட்டார்னு தானே கேட்கறீங்க! கேளுங்க!

உடை கோவணம், உண்டு உறங்கப் புறந்திண்ணை, உண்டு உணவிங்கு
அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே விடை ஏறும் ஈசர் திருநாமம் உண்டு, இந்த மேதினியில் வடகோடு உயர்ந்தென்ன, தென்கோடு சாய்ந்தென்ன வான்பிறைக்கே.


அதாவது, “இந்த பூவுலகில் வாழ்வதற்கு வழியா இல்லை? உடுக்க கெளபீனம், படுத்து உறங்குவதற்கு வீட்டின் வாயிற்புறத் திண்ணை, பசிக்கிறதா கவலை இல்லை உண்பதற்கு இலைகள், காய்கள் இவைகள் உண்டு, தாகமெடுத்தால் அருந்துதற்குத் தண்ணீர் உண்டு, உற்ற துணையாக ரிஷப வாகனம் மீது அமர்ந்திருந்து அருள் பாலிக்கும் சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருமந்திரமுண்டு, ஆதலினாலே இவ்வுலகில் எனக்கு என்ன கவலை. அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனுடைய வடகோடு உயர்ந்தால் என்ன, தென்கோடு தாழ்ந்தால்தான் எனக்கென்ன கவலை. (மூன்றாம் பிறையின் வடகோடு உயர்ந்து, தென்கோடு தாழ்ந்திருந்தால் மழைக்கு அறிகுறி. இப்படி உடுக்க, இருக்க, உண்ண, அருந்த, எண்ண எல்லாம் இலவசமாய்க் கிடைக்கும்போது சந்திரன் காட்டும் குறிகளின்படி மழை பெய்தால் என்ன, பெய்யாவிட்டால்தான் என்ன, நன்மைகள் விளைந்தாலென்ன, தீமைகள் விளைந்தால் என்ன). [பாடலும் பொருளும் வல்லமை தளத்திலிருந்து]

என்னடா, திடீர்னு, இப்படி ஒரு பதிவு என சந்தேகம் வந்துடுச்சா உங்களுக்கு. சமீபத்தில் மின்னஞ்சலில் ஒரு நண்பர் ஆங்கிலத்தில் ஒரு செய்தியை பகிர்ந்து இருந்தார். அது படித்த பிறகு தோன்றிய விஷயம் தான் இப்பகிர்வு.

அப்படி என்னய்யா அனுப்பினார் நண்பர்?

ஒரு நாட்டோட ராஜா - வசதியான வாழ்க்கை, ஆடம்பரமான மாளிகை, கையைத் தட்டினால், வேலை செய்ய ஓடோடி வந்து நிற்கும் வேலைக்காரர்கள் – என இத்தனை இருந்தும், ஏனோ வாழ்வில் மகிழ்ச்சியோ, திருப்தியோ இல்லை. அப்படி இருக்கும் போது, அவரிடம் வேலை பார்க்கும் ஒரு வேலைக்காரன், மிகுந்த மகிழ்ச்சியுடன், பாட்டுகளை பாடியபடியே வேலை செய்வதைப் பார்த்தாராம். எப்படி இவனுக்கு மட்டும்  இவ்வளவு மகிழ்ச்சி எப்படி என சந்தேகம் வர, அவனையே கேட்டாராம்.

அதற்கு அவன், அரசே நான் சாதாரண வேலைக்காரன் தான். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பெரிதாய் தேவைகள் ஒன்றுமில்லை. உறங்க ஒரு இடமும், உண்ண உணவும் இருக்கிறது. அதனால் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்என்று சொல்ல, அரசனுக்கு அந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை.  அது எப்படி அவன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் என்று யோசனையில் ஆழ்ந்தார்.

 இப்பதிவிற்கான ஓவியம் - வரைந்தது என் மகள் ரோஷ்ணி.  இணையத்தில் இருந்த ஒரு படம் பார்த்து வரைந்தது.....

அவரது மந்திரியை அழைத்து விஷயத்தினைச் சொல்ல, அவர் சொன்னாராம், “அடடே இந்த வேலைக்காரன் இன்னும் 99-சங்கத்தில் சேரவில்லை போலும்என்றாராம்.

அது என்ன 99-சங்கம் என நீங்களும் அரசனைப் போலவே கேள்விக்குறியோடு பார்ப்பது தெரிகிறது! மேலே படியுங்கள்.

அந்த வேலைக்காரனின் வீட்டு வாசலில் ஒரு பொன்முடிப்பை வைக்கச் சொல்லி உத்தரவு போட்டார் மந்திரி.  அந்த பொன்முடிப்பில் மொத்தமாக இருந்தது 99 தங்கக் காசுகள் மட்டுமே. வீட்டு வாசலில் இருந்த பொன்முடிப்பில் தங்கக்காசுகளை பார்த்ததும் வேலைக்காரனுக்கு மனதிலே ஆனந்தம். ஆனால் எத்தனை முறை எண்ணினாலும், அதில் 99 தங்கக் காசுகள் மட்டுமே இருக்க, அட இதில் மேலும் ஒரு தங்கக்காசு இருந்தால் நம்மிடம் 100 தங்கக் காசுகள் இருக்குமே....  எப்பாடு பட்டாவது ஒரு தங்கக் காசு வாங்க வேண்டும் என முடிவு செய்தான்.

அன்றிலிருந்து இன்னும் அதிகமாய் உழைக்க ஆரம்பித்தான். வீட்டாரிடம் அதிகமாக செலவு செய்யக்கூடாது என சண்டை போட ஆரம்பித்தான். பாடல், மகிழ்ச்சி என அனைத்தும் போனது. முகத்தில் எப்போதும் ஒரு வித கோபம்.  அவன் சுத்தமாக மாறிப் போனான். அப்படி மாறிப் போன அவனைப் பார்த்த ராஜா, தனது மந்திரியிடம் ஏன் இப்படி எனக் கேட்க, மந்திரி சொன்னது நம்மில் பலருக்கும் பொருந்தும். ஆஹா, அவனும் 99-சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிட்டான்!

நாம் அனைவருமே இந்த 99-சங்கத்தில் உறுப்பினர்களாக ஆகிவிட்டோம். மேலும் மேலும் தேவைகளை அதிகரித்துக் கொண்டோம். அதற்காக மேலும் மேலும் உழைக்க ஆரம்பித்து மகிழ்ச்சியை தொலைத்து விட்டோம்.  ஆனாலும் எத்தனை கிடைத்தாலும், நம் மனதில் இப்படி சொல்லிக் கொள்கிறோம் – இன்னும் இது மட்டும் கிடைத்து விட்டால் போதும், அதற்குப் பிறகு எதற்கும் ஆசைப்பட மாட்டேன்!”.  ஆனால் மேலும் மேலும் ஆசைகள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறதே தவிர போதும் என்ற மனமே நமக்கு வருவதில்லை!

99-சங்கத்தில் சேர எந்த வித கட்டணமும் இல்லை. ஆனால் அதில் இருக்க வாழ்நாள் முழுவதும், ஏதோ விதத்தில் கட்டணம் செலுத்திக் கொண்டே இருக்கிறோம்.

இந்த 99-சங்கத்தில் நீங்களும் ஒரு உறுப்பினரா? சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

48 கருத்துகள்:

  1. 99 – ஏக்கர் விளம்பரம் பார்த்து இருக்கிறேன். 99 - சங்கம் பற்றி உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். ”போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  2. வேறு தலைப்பில் படித்ததாக நினைவு. சங்கத்துல சேர்ந்தா உழைக்கணும்போல, அதனால இப்போதைக்கு சேரும் ஐடியா ஏதும் இல்லை.

    பதிவுக்கேற்ற படம், ரோஷிணி சூப்பரா வரைஞ்சிருக்காங்க, வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. தங்களின் கைவண்ணத்துடன் தங்களின் மகளின் கைவண்ணமும் அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  5. கதையும் தலைப்பும் அருமை
    நானும் அந்த சங்கத்தில்தான் இருக்கிறேன்
    விலக முயற்சிக்கணும்

    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  6. சங்கத்தில் சேர்ந்து பல காலங்கள் ஓடி விட்டது ... நிற்கத்தான் முடியவில்லை.
    சங்கத்தில் உறுப்பினர் எப்படி விலகுவது என்பதை விளக்கினாள் நலம்.
    நான் விலகினாலும் குடும்ப உறுப்பினர் விலகுவாரா அல்லது என்னையும் பட்டினத்தார் என்று பகடி செய்வாரா தெரியாது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விலகுவது எப்படி எனத் தெரியாமல் தானே பலரும் மூழ்கி இருக்கிறோம்.... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி SSK TPJ.

      உங்கள் முதல் வருகையோ?

      நீக்கு
  7. தங்கள் மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள். 99 சங்கம் சுவார்யஸ்மான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  8. ரோஷ்ணியின் அருமையான படத்தோடு ஏற்கெனவே படிச்ச கதைன்னாலும் திரும்பப் படிக்கச் சுவை! நல்ல கருத்து. 99 சங்கத்திலே எத்தனை பேர் இருக்காங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிச்ச கதையாக இருந்தாலும் மீண்டும் படித்ததற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. ஓவயம் அருமை! வளர்க பேத்தியின் கைவண்ணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      மகளிடம் சொல்லி விடுகிறேன்.

      நீக்கு
  11. வணக்கம்,
    தங்கள் பதிவு அருமை,
    மகளின் கைவண்ணம் அருமை,
    வாழ்த்துக்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  12. முதலில் உங்கள் எண்ணத்தை ஓவியமாக வரைந்த உங்கள் செல்வி ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்! நம்மில் பெரும்பான்மையோர் இந்த 99- சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறோம் என்பதை சொல்லித் தெரியவேண்டுமா என்ன? அருமையான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஓவியத்திற்கு மாதிரி இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  13. நான் எப்போதோ உறுப்பினர் ஆகிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  14. ஆச்சர்யம். இந்த 99 பற்றி நானும் ஒரு பதிவு எழுதி பிறகு மெல்ல வெளியிடலாம் என்று வைத்திருந்தேன். இன்று வெளியிடுவதாக இருந்த பதிவை மாற்றி இந்தப் பதிவையே (இதே பதிவு அல்ல!) நானும் வெளியிடலாமா என்று யோசிக்கிறேன்.

    பதிவை ரசித்தேன். ரோஷ்னியின் ஓவியத்தையும் ரசித்தேன். நல்ல முயற்சி. இனி உங்கள் பதிவுகளுக்குப் படங்கள் வரைய ஒரு ஓவியர் வீட்டிலேயே கிடைத்து விட்டார் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... இரண்டு பேரும் ஒரே மாதிரி பதிவு.... போட்டாச்சா? பார்க்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. 99 -சங்கத்துல சேர ஆசை இல்லைதான் இருந்தாலும் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் அதில்தான் இருக்கின்றோமோ என்ற ஒரு எண்ணம் அடிக்கடி தோன்றத்தான் செய்கின்றது. அதுவும் இக்காலகட்டத்தில் சங்கத்துல இல்லாம இருக்க முடியாது. ஆனாலும் என்ன அப்படியே அதில் இருந்தாலும் மகிழ்வாக ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழக் கற்றுக் கொண்டுவிட்டால் போதுமே. தேவையானதற்கு மட்டும் உழைத்துவிட்டு மகிழ்வாக இருக்கலாமே..

    பாடல் சொல்லி, மின் அஞ்சலையும் சொல்லி இணைத்துச் சென்றவிதம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது ஜி! தலைப்பும் ஜோர்!





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  16. 99 சங்கத்தில் உறுப்பினராகும் எண்ணம் துளியும் இல்லை! நல்லதொரு பதிவு! நன்றி! ரோஷ்ணியின் ஓவியம் அசத்தல்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  18. அழகான ஓவியம் மகளுக்கு வாழ்த்துக்கள். சங்கத்தில் சேர்ந்த்தால் தான் ஓடி ஓடி உழைக்க வேண்டிய தேடல். அருமையான கதை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      நீக்கு
  19. வணக்கம்
    செமையான பதிவு
    ரோஷனி ஓவியம் ஜோர்..
    வாழ்த்துக்கள்
    நான் பத்தொன்பதுதான் வைத்திருக்கிறேன்.... ஹ ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா உங்களிடம் பத்தொன்பது தானா! :))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  20. அப்புறம்
    நமக்கு வாக்கு முக்கியம்
    தம +

    பதிலளிநீக்கு
  21. படிப்போரை சுயபரிசீலனை செய்யத் தூண்டும் கதை! வரைதிறனை வளர்த்துக் கொள்ள ரோஷிணிக்கும் ஒரு வாய்ப்பு! வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  23. பெரிய விஷயத்தைக் கதையாகச் சொல்லிவிட்டீர்கள்
    நிச்சயமாக நான் உறுப்பினர் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறுப்பினர் ஆகாத வரை மகிழ்ச்சி தான்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
  24. பாப்பாவின் படமும்
    தங்கள் பகிர்வும் அருமை...

    பதிலளிநீக்கு
  25. Greetings and wishes to Roshini. Good drawing, my dear.
    &
    பட்டினத்தார் சொன்ன இன்னொரு முக்கியமான வரி.. "காதருந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே "

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....