ஞாயிறு, 11 நவம்பர், 2018

நவராத்ரி கொலு – சில படங்களும் வரவுகளும்…
கீதாம்மா வீட்டு கொலு...

நவராத்ரி என்றாலே கொலு பார்ப்பதும், தோழிகளுடன் கலந்துரையாடுவதும், கலெக்‌ஷனும் தானே… இந்த வருடம் எங்களுக்கு பண்டிகை இல்லை என்றாலும், அழைத்த சில வீடுகளுக்குச் சென்று வந்தோம் – நானும் மகளும். என்னவர் இங்கே இருந்தாலும், அவர் ஒரே ஒருவர் வீட்டிற்கு தான் வந்தார் – அது கீதாம்மா [எண்ணங்கள் கீதா சாம்பசிவம் அவர்கள்] வீட்டிற்கு தான்! அங்கிருந்து தான் இந்த வருடன் கலெக்‌ஷன் ஆரம்பம்! அவர் இல்லத்துக்கு நேற்று சென்று சிறிது நேரம் பேசி விட்டு கொலுவை பார்த்து தாம்பூலம் பெற்று வந்தோம். நெய் சொட்டும் கேசரியுடன், அழகான பரிசுப்பொருளும் - எங்களுக்கு பிடித்த கணேஷா தான் பரிசாக!

நாங்கள் சென்ற போது மாமா பொடிப் பொடியாக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார்.

”மாமிக்கு ஹெல்பா!!!” என்றதும்...

”இல்ல இல்ல... எங்கப்பாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கார்... உங்கப் பொண்ணை கண்கலங்க விடமாட்டேன்னு... அதான்…” என்றார் கீதாம்மா… எல்லோரும் கலகலப்பானோம்…

அன்றைக்கு இரவு உணவிற்கு நட்புவட்டத்தில் ஒரு குடும்பத்தை டின்னருக்கு அழைத்திருந்தோம். சப்பாத்திக்கு மாவு பிசைந்து தந்தார் என்னவர். மாமி வீட்டிலிருந்து வந்த பின் இரண்டு விதமான சப்ஜி செய்து, அவர் சப்பாத்தி தேய்த்து தர, போட்டு எடுத்து பரிமாறினேன்.
இரண்டாம் நாள் இரண்டு வீடுகளுக்குச் சென்று கொலு பார்த்து வந்தோம்! அப்ப மூன்றாம் நாள் மூன்று வீடா என்ற கேள்வி வரக்கூடாது!


மூன்றாம் நாள் ஒரு வீட்டிலும், நான்காம் நாள் வேறொரு வீட்டிலும் கொலு பார்த்து வந்தோம்.  இந்த வருடம் குறைவான அழைப்புகள் தான் – அதனால் எடுத்த படங்களும் குறைவு.  எங்கள் வீட்டிலும் கொலு இல்லை. இருந்தால் படங்கள் எடுத்து பகிர்ந்திருக்கலாம் – அனைவரையும் கொலுவிற்கு அழைத்திருக்கலாம்…. இருக்கவே இருக்கு அடுத்த வருட கொலு, இந்த வருடமே மூன்று நான்கு பொம்மைகள் புதியதாக வாங்கி வைத்திருக்கிறோம். அடுத்த வருட கொலுவை ஜமாய்த்து விடலாம்!

என்ன நண்பர்களே, நான் எடுத்த படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

ஆதி வெங்கட்

38 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. நாங்கள் சென்ற போது மாமா பொடிப் பொடியாக வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார்.

  ”மாமிக்கு ஹெல்பா!!!” என்றதும்...

  ”இல்ல இல்ல... எங்கப்பாவுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கார்... உங்கப் பொண்ணை கண்கலங்க விடமாட்டேன்னு... அதான்…” என்றார் கீதாம்மா… எல்லோரும் கலகலப்பானோம்…//

  ஹா ஹா ஹா ஹா ஒரு பிட் கிடைச்சிருச்சு...

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. அன்றைக்கு இரவு உணவிற்கு நட்புவட்டத்தில் ஒரு குடும்பத்தை டின்னருக்கு அழைத்திருந்தோம். சப்பாத்திக்கு மாவு பிசைந்து தந்தார் என்னவர். மாமி வீட்டிலிருந்து வந்த பின் இரண்டு விதமான சப்ஜி செய்து, அவர் சப்பாத்தி தேய்த்து தர, போட்டு எடுத்து பரிமாறினேன்.//

  ரெண்டுபேரும் தூள் கிளப்புறீங்க...சூப்பர்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... நீங்க வாங்க... அசத்திடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. இரண்டாம் நாள் இரண்டு வீடு மூன்றாம் நாள் மூன்றா என்று கேட்க வந்தேன் நீங்களே சொல்லிட்டீங்க...ஹா ஹா..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... கேள்வி வரும்னு தெரியுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 5. படங்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு...ஆதி.

  கொலு பொம்மைகளில் அந்த தெர்மகோலில் செய்திருக்கும் கைவினை செம...க்ரியெட்டிவ்...கோயில் செட்டும்...ரொம்ப க்ரியேட்டிவா இருக்கு அதுவும் அவங்க செஞ்சதா இல்லை வாங்கிய செட்டானு தெரியலை...ஆனா அரேஞ்ச்மென்ட் அதுக்கான கைவினை வீட்டுல செஞ்ச மாதிரிதான் தோன்றுது.. ரொம்ப அழகா இருக்கு...உங்க நெருங்கிய ஃப்ரென்ட்னா பாராட்டுகள் சொல்லிடுங்க...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டின் அருகே இருக்கும் நண்பர் வீடு. கனரா வங்கி கிளை கூட தர்மகோலில் செய்து வைத்திருக்கிறார்கள். வாங்கியது இல்லை. அவர்களாகவே செய்கிறார்கள் - கோவில், பூங்கா, வங்கி என...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. ஏற்கெனவே முகநூலில் பார்த்துப் படித்திருந்தாலும் எங்க வீட்டுக் கொலுவை இங்கே மறுபடி பார்த்து மகிழ்ந்தேன். அருமையான பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 7. குட்மார்னிங் மிஸ்டர் அண்ட் மிஸஸ் வெங்கட்... படங்கள் குறைவா? இவ்வ்வளவு படங்கள் வெளியிட்டு விட்டு இப்படி வேறு குறையா?!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... நிறைய வீடுகளுக்குச் செல்லவில்லை. சில வீடுகள் மட்டுமே... அங்கே எடுத்த படங்களே இவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. சாம்பு மாமாவும், வெங்கட்டும் அவரவர் பாஸ்களுக்கு உதவுவது படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்! "நீ தனியாளு இல்லடா கொமாரு!" என்று சொல்லிக்கொண்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”நீ தனியாளு இல்லடா கொமாரு!” ஹாஹா.... பல வீடுகளில் நடப்பது தானே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. முதலில் இருப்பதுதான் கீதாக்கா வீட்டு கொலுவா? படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன. சுண்டல் படம் ஒன்றையும் காணோமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்னிக்கு முதல்நாள்னு நினைக்கிறேன். அதோட மாமாவுக்கு நக்ஷத்திரப் பிறந்த நாளும் கூட! அதனால் கேசரி மட்டும் தான்! :))))

   நீக்கு
  2. முதலில் இருப்பது கீதாம்மா வீட்டு கொலுவே தான்.

   சில வீடுகளில் கொடுத்த சுண்டல் - பேப்பர் கப்பில் இருக்கிறது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. அட ஆமாம்... மாமாவின் நக்ஷத்திரப்படி பிறந்த நாள் என்பது குறிப்பிடவில்லை இங்கே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. ரசித்தேன் வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கியதையும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. அத்தனையும் அழகு... அந்த நிஜாம் பாக்கும் பிள்ளையார் படம்போட்ட தட்டுக்களும் சூப்பர்.

  கீசாக்கா சொன்ன கட்டிலையும் பார்த்திட்டனே ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 14. நாங்கள் கீதா சாம்பசிவம் வீட்டுக்குப்போயிருந்தபோது என்மனைவிக்கு மட்டும்சில நினைவுப் பொருட்கள் கொடுத்தார் எனக்கு எதுவுமே தரவில்லை அதே போல் நாகராஜுக்கும் ஏதும் இல்லையா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... நமக்கு எதுவும் கொடுப்பதில்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 15. படிகளே இல்லாதகொலு முதல் முறையாகப் பார்க்கிறேன் திருமதிகீதா வீட்டில்தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம இஷ்டம் தான் படி வைப்பதும் வைக்காததும் நம் இஷ்டம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. கொலு படங்களை ஆதி முக நூல் போஸ்டில் பார்த்து விட்டேன்.
  மீண்டும் இங்கும் பார்த்து மகிழ்ந்தேன்.
  கீதா வீட்டு விளையாட்டு சாமன்களை வைத்து பேரனுடன் விளையாட ஆசை வந்து விட்டது.
  எங்கள் அம்மாவீட்டில் உண்டு, மாக்கல், இரும்பு, பித்தளை , மரத்தில் என்று வித் விதமாட் விளையாட்டு சாமான்கள் உண்டு.
  எல்லோர் வீட்டு கொலுவும் அருமை.
  கீதா வீட்டில் கொடுத்த் பிள்ளையார் குங்கும சிமிழ் அமெரிக்காவிற்கு வாங்கி போனேன் எல்லோருக்கும் கொடுக்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாக்கல் சொப்புக்களும், மரச் சொப்புகளும் வலப்பக்க ஓரத்தில் வைச்சிருக்கேன் பாருங்க கோமதி! மரச்சொப்புகள் நான் விளையாடியவை! பித்தளையும், மாக்கல்லும் அப்பா காலத்தில் இருந்தே இருக்குனு சொல்வாங்க! கோலாட்டக் குச்சியும் நான் பள்ளியில் விளையாட எடுத்துச் சென்றவை!

   நீக்கு
  2. எங்கள் வீட்டிலும் மாக்கல் விளையாட்டு சொப்பு சாமான்கள் உண்டு. முன்னரே வலைப்பூவில் பகிர்ந்து கொண்டது நினைவிலிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 17. மிக அருமையான கொலு விசிட். இத்தனை படங்கள் போட்டு விட்டு, படம் குறைவு என்கிறீர்களே வெங்கட்.
  கீதா வீட்டுக் கொலு மிக அழகு..
  அடுத்த வருடம் உங்க வீட்டு கொலு இன்னும் சிறப்பாக
  அமைய இப்போதே வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....