வெள்ளி, 30 நவம்பர், 2018

பதிவர் அறிமுகம் – உலகம் சுற்றும் வாலிபன் - தில்லி பதிவர் திரு இராமசாமிசில சந்திப்புகள் நமக்குத் தெரியாமலேயே நடந்து விடுகின்றன. யாரை எங்கே சந்திக்கப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாமலேயே முடிவு செய்யப் படுகிறது எனத் தோன்றுகிறது. பாருங்களேன் - ஒரு பதிவரை – அதுவும் தில்லி வாழ் தமிழர் – என் அலுவலகக் கட்டிடடத்தின் தொட்டடுத்த கட்டிடத்தில் பணி புரிபவர் – இருந்தாலும், இத்தனை வருட தில்லி வாழ்க்கையில் – எனக்கும் முன்னதாகவே தில்லி வந்திருப்பவர் அவர் – தில்லியில் இது வரை எங்கள் சந்திப்பு நிகழவே இல்லை! சந்திப்பு ஏதோ ஒரு விதத்தில் – அதுவும் முன்னறிவிப்பு இல்லாமல் நிகழ வேண்டும் என்று இருக்கும்போது தில்லியில் சந்திக்க முடியுமா? எங்கள் சந்திப்பு வேறிடத்தில் நடந்தது.

 
16 நவம்பர் – பீஹார் மாநிலத் தலைநகர் பட்னாவில் இருக்கும் தங்குமிடம் ஒன்றில் காலை உணவுக்காகக் காத்திருந்த போது அங்கே தம்பதி சமேதராக இவர் அமர்ந்திருந்தார். தமிழில் பேசுகிறார்கள் என்று தெரிந்தவுடன் எனக்கு ஒரு உணர்வு – தமிழகத்திலிருந்து பீஹார் மாநிலம் வரை யாரும் சுற்றிப்பார்க்க வந்திருக்க முடியாது – தலைநகர் வாசியாகத் தான் இருக்கவேண்டும் என்கிற உணர்வு. அவர்கள் தமிழில் பேசினாலும் நானாகச் சென்று அவர்களிடம் பேசவில்லை. காத்திருந்த வேளையில் அப்படியே பேச்சு ஆரம்பித்தது – பீஹார் மாநிலத்திற்கு எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று தான் நான் ஆரம்பித்தேன் – சுற்றிப் பார்க்க என்று சொன்ன போது கொஞ்சம் வியப்பும் என்னில்! இந்த மாநிலத்தினைப் போய் சுத்திப் பார்க்க வந்திருக்கிறாரே – என்னைப் போல இவரும் சுற்றுலாப் பிரியர் போலும் என நினைத்துக் கொண்டேன்.பேச்சு தொடர்ந்த போது தான் தெரிந்தது – அவரும் ஒரு வலைப்பதிவர் என்பது! இரண்டு பதிவர்கள் சந்தித்துக் கொண்டால் நிச்சயம் அந்த பேச்சு பதிவுலகையும், பதிவுகளையும் பற்றியே இருக்கும் அல்லவா? எங்கள் சம்பாஷணைகளும் பதிவுகள் பற்றியே இருந்தது. கூடவே, பல இடங்களைச் சுற்றிப் பார்ப்பது அவருக்கும் அவரது இல்லத்தரசிக்கும் பிடித்தமான விஷயம் என்று கேட்ட போது, அட “இவர் நம்ம ஆளு!” என்ற ஒரு உணர்வு! இந்தியாவில் பல இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறார் – கடந்த 2016-ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதத்திலிருந்து, இப்போதிருக்கும் வலைப்பூவில் எழுதுகிறார் [அதற்கு முன்னர் இணைய பத்திரிகைகளில் எழுதி வந்தாராம்] – முதல் பதிவே பயணப் பதிவு தான் - அந்தமான் சென்று வந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தமான் தவிர, கோவா, ஷிரடி, கேரளா, லக்னோ என இந்தியாவின் பல நகரங்களுக்குச் சென்று வந்த அனுபவங்களை எழுதி இருக்கிறார்.

தலைநகரில் அவருக்குக் கிடைத்த முதல் குளிர்கால அனுபவம், இந்தியாவில் பேசப்படும் பல மொழிகள், கால்பந்து உலகக் கோப்பை என வேறு விஷயங்கள் பற்றியும் பதிவு எழுதி இருந்தாலும், பயணப் பதிவுகள் தான் அதிகம் இருக்கிறது. பதிவின் தலைப்பாக வைத்திருக்கும் பெயரே அதைச் சொல்கிறது – A Globe trotter! அவர் எழுதிய சில பதிவுகளின் சுட்டிகளை கீழே தந்திருக்கிறேன். பீஹார் மாநிலத்தில் நான் இருந்த மூன்று தினங்களும் எங்களுடனேயே பயணித்தார்கள் – அவரும் அவரது இல்லத்தரசியும். நானும் எனது கேரள நண்பர் பிரமோத்-உம் மட்டுமே இந்தப் பயணத்தில் இருந்தோம் – பட்னாவில் திரு இராமசாமி அவர்களைச் சந்தித்த பிறகு அவர்களும் எங்களுடனேயே சேர்ந்து கொண்டார்கள் – பயணத்தில் ஈடுபாடு உடைய இரண்டு பதிவர்கள் சேர்ந்து பயணம் செய்திருக்கிறோம்!

நான் இந்தப் பயணம் பற்றி எழுதுகிறேனோ இல்லையோ திரு இராமசாமி அவர்கள் விரைவில் அவர் பக்கத்தில் எழுதுவார் என எதிர்பார்க்கிறேன். மூன்று தினங்கள் – பட்னா, கயா மற்றும் வேறு சில இடங்களுக்கு ஒன்றாக பயணித்து சில சுவையான அனுபவங்களைப் பெற்றோம். சில இடங்களில் கிடைத்த அனுபவங்கள் – பீஹார் மாநிலத்திற்கே உரித்தானவை – வேறு எந்த மாநிலத்திலும் இப்படியான அனுபவங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை! ஒரு விஷயம் சொல்ல வேண்டும் – திரு இராமசாமி அவர்கள் ஆங்கிலத்தில் தான் பதிவு எழுதுகிறார் – தமிழிலும் முடிந்தால் எழுதச் சொல்லி இருக்கிறேன்! மேலும் பல பதிவுகளை அவர் எழுதிட எனது வாழ்த்துகள்!

இப்படி புதியதாக ஒருவரை – அதிலும் பதிவரை – வேறு மாநிலத்தில் சந்தித்து ஒன்றாக சில இடங்களுக்குப் பயணித்ததில் எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சி. இந்த நட்பு இன்னும் தொடரவேண்டும் என்பதே எங்கள் இருவருடைய ஆவலும்! நானும் நண்பர் பிரமோத்-உம் பீஹாரிலிருந்து ஜார்கண்ட் நோக்கிப் பயணிக்க, திரு இராமசாமி அவர்கள் தலைநகர் தில்லி திரும்பினார்கள். இந்தச் சந்திப்பில் தத்தமது தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டோம். தொடர்ந்து சந்திக்க எண்ணி இருக்கிறோம். இந்த நட்பு தொடர வேண்டும்.


புதியதாக ஒரு பதிவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி. உதாரணத்திற்கு சில பதிவுகளின் சுட்டி கீழே….
அவரது பதிவுகளைப் படித்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே!

விரைவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி..

  அப்புறம் வரேன் பதிவு வாசிக்க...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. குட்மார்னிங் வெங்கட்... இரு பதிவர்கள் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்ளும் மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் ஒத்த ரசனை உடையவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஜி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. ஒத்த ரசனை உடையவர்கள் சந்தித்துக் கொண்டால் மகிழ்ச்சிக்குக் கேட்பானேன்! உங்கள் நட்பு நீடித்து நிற்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. மிக மகிழ்ச்சி..

  பயணம் நமக்கும் பிடிக்கும் என்பதால் அங்கு வாசிக்க செல்கிறேன் ...புதிய தள அறிமுகத்திற்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி.

   நீக்கு
 6. அட! ஒரே ஆர்வம்...ரசனை...செம...வெங்கட்ஜி. உங்கள் நட்பும் தொடர வாழ்த்துகள். சுட்டிகள் பார்க்கிறேன்..

  //தமிழகத்திலிருந்து பீஹார் மாநிலம் வரை யாரும் சுற்றிப்பார்க்க வந்திருக்க முடியாது –//

  ஹா ஹா நான் பீஹார் அல்லது ஜார்கன்ட் அல்லது எந்த வட இந்திய மாநிலம் பயணம் வந்தால் (எனக்கு பயணம் மிக மிக மிக பிடித்த ஒன்று....ஆனால் கூட வரும் நபர்கள் நம் அலைவரிசையில் இருக்க வெண்டும்...) நான் வெங்கட்ஜி அங்கு எங்கேனும் சுற்றிக் கொண்டு இருக்கிறாரா என்று தேடுவேன்....ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா என்னைத் தேடுவீர்களா? மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 7. வெங்கட்ஜி நீங்கள் திரு ராமசாமி என்று இங்கு சொல்லியிருந்ததும் ஒரு வேளை நாம் வாசித்த ராமசாமியாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது ஆனால் ஆங்கிலம் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்ததும் ஓ அவரேதான் இருக்கும் என்று நினைச்சு சுட்டி சென்றல் இவர் அவரில்லை என்றில்லாமல் இவரேதான்....சில பயணங்கள் பற்றி வாசித்துள்ளேன். கருத்து இட்டதில்லை. கூகுளில் இடங்கள் பற்றி ப்ரௌஸ் செய்யும் போது கிடைத்த வலை இவர் வலை.

  நன்றி வெங்கட்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துளசிதரன் அவர்களே எனது வலைப்பதிவை வாசிப்பதற்காக நன்றி. தயவு செய்து கருத்து சொல்லுங்கள்.

   நீக்கு
  2. ஆஹா... நீங்கள் இவரது வலைப்பூவை வாசித்து இருக்கிறீர்களா? மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. ஓ வலையுலகில் நமக்குத் தெரியாத ஒரு பதிவர் அறிமுகமாகிறார்... அப்பூடியே அவருக்கும் எங்களைக் கொஞ்சம் அறிமுகப்படுத்தி விடலாமே வெங்கட்?:).. ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா உங்களுக்கு அறிமுகமா? நீங்கள் பிரபல பதிவர் ஆயிற்றே.... இருந்தாலும் உங்கள் பதிவின் சுட்டியும் அனுப்பி வைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
  2. அச்சச்சோ ச்ச்சும்மா ஜோக்குக்காக சொன்னேன் அப்பூடியெல்லாம் அனுப்பிடாதீங்கோ பிளீஸ்ஸ் ஹா ஹா ஹா..

   நீக்கு
  3. ஹாஹா... அந்த பயம் இருக்கட்டும்! :)

   நீங்க பிரபல பதிவர் என்பதால் அனுப்பப் போவதில்லை.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 10. பயணத்தில் நட்பு ! அவரும் வலைத்தளம் வைத்து எழுதுகிறார் என்று படித்ததும் மகிழ்ச்சி.
  நட்பு வாழ்க !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 11. எதிர்பாரா அறிமுகம் நட்பில் கொண்டு விடுமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதிர்பாரா அறிமுகம் நட்பில் கொண்டு விடுமா? விடுவதும், விடாததும் உங்கள் கையில்!

   இரயில் ஸ்னேகம் - பல வருடங்களுக்குத் தொடர்ந்தது கேள்விப்பட்டதில்லையா நீங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....