ஞாயிறு, 18 நவம்பர், 2018

திருச்சி – ஒரு நிழற்பட உலா


அலைபேசியில் கேமரா வந்தாலும் வந்தது – நிறையவே படங்கள் எடுத்துத் தள்ளுகிறார்கள். நானும் கேமரா வாங்கிய புதிதில் நிறைய படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறேன். என்னிடம் இருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு எனப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது – அனைத்தையும் தொகுத்து வைக்க தலைப்பட்டால் பாதியிலேயே விட்டு விட நேர்ந்து விடுகிறது – இதுவரை எதைப் பகிர்ந்து இருக்கிறேன், பகிர வில்லை என்பதையும் நினைவில் வைக்க முடியவில்லை! சமீபத்தில் படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது பார்த்த சில படங்கள் பகிர்ந்து கொள்ளாதவை போலவே தோன்றின. சரி இந்த ஞாயிறில் ஒரு நிழற்பட உலாவாக வெளியிடலாம் என முடிவு செய்ததன் விளைவு இப்பதிவு….
என்ன நண்பர்களே, பதிவில் வெளியிட்ட நிழற்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  படங்கள் எல்லாம் அருமை ஜி. அதன் கீழே எந்த இடம் என்று கொடுத்திருக்கலாமோ...இல்லை பயணப் பதிவு வருமோ...!!!

  எனக்கும் குழப்பம் வரும் எந்தெந்தப்படங்கள் பகிர்ந்திருக்கிறேன் என்று. அதனால் நான் பகிர்ந்த படங்களைத் தனியாக ஒரு ஃபோல்டர் ஷேர்ட் என்று போட்டு வைத்துவிடுகிறேன். அதுவும் எடுத்த படங்களை நான் பிரித்து தலைப்பிட்டு அதாவது அந்த இடங்களை ஹெட்டிங்க் போட்டு ஃபோல்டரில் போட்டு வைத்து விடுகிறேன்...நேரம் எடுக்கத்தான் செய்கிறது....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா ஜி!..

   //அதன் கீழே எந்த இடம் என்று கொடுத்திருக்கலாமோ...// ...லாம்.

   நிறைய ஃபோல்டர்களில் சேமித்து இருக்கிறேன். எதைப் பகிர்ந்து கொண்டோம் என்பதை தனியாக சேமிப்பதில்லை. நேரம் தான் இருப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. கல்லணைதானே அது? தண்ணீர் பாய்வது?

  அப்புறம் அந்த குன்றின் மீது கோயில் நீங்கள் ஸ்ரீரங்கம் வந்த போது சின்ன குன்றின் மீது உள்ள ஒரு கோயில் போனதாகச் சொல்லியிருந்தீங்க உங்கள் பதிவு ஒன்றில் என்று நினைவு....அந்தக் கோயிலா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லணையே தான்.

   குன்றின் மீது இருக்கும் கோவில் உச்சிப் பிள்ளையார் கோவில் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. குட்மார்னிங் வெங்கட். உங்கள் புகைப்படத் தொகுப்பை ரகவாரியாகப் பிரித்துத் தலைப்பிட்டு வையுங்கள். ஒரே நேரத்தில் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நம்மால் செய்ய முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   ஒரே நேரத்தில் முடியாது. கொஞ்சம் நேரம் எடுத்துச் செய்ய வேண்டிய பணி தான். பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. உச்சிப்பிள்ளையார் கோவில் புகைப்படம் எடுக்க அருமையான இடம். எவ்வளவு காட்சிகள் கிடைக்கும் இல்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அங்கிருந்து நிறைய படங்கள் எடுக்க முடியும். சில முறை எடுத்ததுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. அணையில் தண்ணீர் அளவாகப் பாயகிறது. அதிகமாகப் பாய்ந்தால் பயம்தான் வரும்! குழந்தைகள் சிரிப்பு மனதைக் கவர்கிறது. பச்சை வயல் மனது! அனைத்துப் புகைப்படங்களையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிகமாகப் பாயும் போது சற்றே பயம் வரத்தான் செய்கிறது.

   குழந்தைகள் படம் - எனக்கும் பிடித்த படம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. இந்தச் சிறுவர்கள் அறிமுகமானவர்களா ? இல்லை என்றே காண்கிறேன். படங்கள் அருமை. ரசனையாக எடுத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிமுகமான சிறுவர்கள் அல்ல! காமிராவுடன் பார்க்கும்போது இது போன்ற சிறுவர்களுக்கு தங்களை படம் எடுக்க மாட்டார்களா என்ற ஆவல் வருகிறது. படம் எடுத்துக் காண்பிக்க அத்தனை மகிழ்ச்சி அவர்கள் முகத்தில்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமன் ஜி!

   நீக்கு
 7. நல்ல அருமையான நினைவலைகளைத் தூண்டும் படங்கள். உச்சிப் பிள்ளையார் கோயில்ப் படம் நாங்க 2013 ஆம் ஆண்டு போனதை நினைவூட்டியது. படம் எடுக்கக் காமிராவெல்லாம் கொண்டு போயும் உடம்பு முடியாமல் படம் எடுக்க முடியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படஙகளும் முன்னர் எடுத்தவை தான். சமீப வருடங்களில் இங்கே போகவில்லை. போக வேண்டும்...

   படிகளில் ஏறி இறங்குவது சிரமம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. சென்னைக்காரன் நான்.. 2013க்கு அப்புறம் உச்சிப்பிள்ளையார் கோவில் சென்றிருக்கிறேன். தாயுமானவர் சன்னிதியில் பிரசாதம் வேறு, கூப்பிட்டுக் கொடுத்தார்கள்.

   நீக்கு
  3. நான் சென்று சில வருடங்கள் ஆகிவிட்டன. போக வேண்டும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. அனைத்து படங்களும் மிக அழகு.
  உச்சி பிள்ளையார் கோவில் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. படங்கள் அனைத்தும் அருமை, முக்கியமாக குழந்தைகளின் புன்னகை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தைகளின் புன்னகை - ஆஹா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. ஒன்பதாவது படம் எங்கு எடுத்தது தக்ஷிணாமூர்த்தியா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தக்ஷிணாமூர்த்தியே தான். திருச்சி அருகே உள்ள ஒரு கிராமக் கோவிலில் எடுத்த படம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 12. பட‌ங்கள் அனைத்தும் அழகு! மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலுக்கு கல்லூரிக்காலத்தில் சென்று வந்த்து நினைவுக்கு வந்தது. ப‌டங்களின் கீழ் விளக்கங்கள் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வெங்கட்! அந்த வயலின் ப‌சுமை மிகவும் அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களின் கீழே விளக்கங்கள் கொடுத்திருந்தால்..... கொடுத்திருக்கலாம். Schedule செய்து வைக்கும்போதே சேர்த்திருக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 13. படங்களை ரசித்தேன். எப்போதும் போல உங்கள் கேமராவில் வந்து முகம் காட்டும் மகிழ்ச்சியான குழந்தை முகங்கள். பாராட்டுகள். திருச்சியில் இருந்த போதும், என்னால் படத்தில் உள்ள சில இடங்களை யூகிக்க இயலவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களைப் பகிரும்போது வழக்கமாகத் தரும் விளக்கம் தரவில்லை. தந்திருக்கலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது முதல் வருகை. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி!

   நீக்கு
 16. மலைக்கோட்டை, கல்லணை என விரிகின்றன - படங்கள்...

  அந்த வயல்வெளியும் சிறார்களும் அழகோ அழகு...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 18. ஒரு ரசிகரின், கலைஞரின் புகைப்படத்தொகுப்பினைப் பாராட்டிக்கொண்டேயிருக்கலாம். அருமையான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 19. படங்கள் நல்லா இருக்கு. சில என்னிடமே இருக்கின்றன (அந்த ஆங்கிள்). மலையை ஒட்டி ஒரு கட்டிடத்தின் தலை மட்டும் (மேலே கோபுரம்போல்) இருக்கிறதே... அது என்ன? (பாறைகளை ஒட்டி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் கேட்ட படமும் உச்சிப் பிள்ளையார் கோவிலிலிருந்து எடுக்கப்பட்ட படம் தான். தாயுமானவர் சன்னதிக்கும் பிள்ளையார் கோவிலுக்கும் இடைப்பட்ட இடமாக இருக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....