ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

வாரணாசி – கரையோரக் கவிதைகள் – நிழற்பட உலா – பகுதி நான்கு



வாரணாசி சென்ற போது நாங்கள் சில இடங்களுக்கெல்லாம் சென்று வர வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்று நினைக்கும் என்பது எங்கள் விஷயத்தில் சரியாக இருந்தது.
 
இரவு ஏழு நாற்பது மணிக்கு புறப்பட வேண்டிய இரயில்வண்டி, ஒன்பதரைக்கு தான் புறப்பட்டது. நடுவில் வேறு சில பிரச்சனைகள்! கொஞ்சம் கொஞ்சமாக தாமதம் ஆகி, காலை ஆறே முக்கால் மணிக்குள் தீன் தயாள் உபாத்யாய் இரயில் நிலையம் [முகல்சராய் என முன்னர் அழைக்கப்பட்ட நிலையம்] சென்று சேர வேண்டிய இரயில் அங்கே போய்ச் சேர்ந்த போது மதியம் ஒரு பன்னிரெண்டு மணிக்கு மேல்! அங்கிருந்து வாரணாசி சுமார் 18 கிலோமீட்டர் தொலைவு! ஒரு மணிக்கு மேல் தான் எங்களால் வாரணாசி சென்றடைய முடிந்தது. அதனால் திட்டமிட்ட இடங்களில் பலவற்றை விட்டோம். நேரடியாக கங்கையில் குளியல், படகு வழியே அஸ்ஸி Gகாட்-லிருந்து காசி விஸ்வநாதர் கோவில் அருகே இருக்கும் Gகாட்-ல் இறங்கிக் கொண்டு காசி விஸ்வநாதர் தரிசனம், அன்னபூரணி மற்றும் காசி விசாலாட்சி தரிசனம் ஆகியவை மட்டுமே திட்டமிட்ட படி செய்ய முடிந்தது.

அஸ்ஸி Gகாட்டிலிருந்து அஸ்ஸி Gகாட் வரை படகுப் பயணம்! வழியில் இருந்த அனைத்து இடங்களையும் படகிலிருந்து தான் பார்க்க முடிந்தது. வாரணாசியில் கிடைக்கும் ஒரு லஸ்ஸி சுவையானது. கிட்டத்தட்ட 100 வருடங்களாக, பஹல்வான் லஸ்ஸி பண்டார் என அழைக்கப்படும் கடை அங்கே இருக்கிறது.  இம்முறை செல்லும்போது அங்கே சென்று அங்கே கிடைக்கும் ஸ்பெஷல் லஸ்ஸி, ரப்டி போன்றவறை சுவைக்க நினைத்திருந்தோம். ஆனால் கிடைத்த கொஞ்சம் நேரத்தில் இறைவனைத் தரிசித்து, மதியம் மூன்று மணிக்கு மேல் மதிய உணவை அன்னபூரணா அருளால் உண்டு, மாலை வாரணாசி நகரின் புதிய இரயில் நிலையமான Manduadih இரயில் நிலையத்திலிருந்து ப்ரயாக்ராஜ் நகருக்கு இரயில் பிடிக்கத்தான் நேரம் இருந்தது! ஒரு முறை வாரணாசி நகருக்குச் சென்று சில நாட்களாவது தங்கி இருக்க ஆசை உண்டு! ஹரித்வாரிலும் சில நாட்களாவது தங்க விருப்பம். ஆசைக்கு அளவேது! நடக்க வேண்டாமா?

வாருங்கள் நண்பர்களே, வாரணாசி நகரில் கங்கை நதியில் படகுப் பயணத்தின் போது எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில்!
































ஹரிஷ்சந்திர Gகாட்...

வாழ்க்கைய்ப் பயணத்தின் முடிவு இங்கே தான்....




என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்ஜி, ஆதி அண்ட் ரோஷிணி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாஜி.

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  2. வாரணாசியில் கிடைக்கும் ஒரு லஸ்ஸி சுவையானது. கிட்டத்தட்ட 100 வருடங்களாக, பஹல்வான் லஸ்ஸி பண்டார் என அழைக்கப்படும் கடை அங்கே இருக்கிறது. இம்முறை செல்லும்போது அங்கே சென்று அங்கே கிடைக்கும் ஸ்பெஷல் லஸ்ஸி, ரப்டி //

    நோட்டர்!!

    படங்கள் எல்லாமே மிக அழகு. அந்த கூடாரம் உள்ள போட்டும், கொடியுடன் போகும் போட்டும் ரொம்ப அழகு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. அன்பின் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  4. ப்ரயாக்ராஜ் இதை அவசரத்தில் பாக்யராஜ் என்றே படிக்க வருகிறது படங்கள் ஸூப்பர்

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரயாக்ராஜ் - பாக்யராஜ்! ஹாஹா... ஸ்ரீராமும் இதே தான் சொன்னார் முந்தைய பதிவொன்றில்!

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    அழகான படங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. அந்த 'காட்'ஐ இப்படி G-காட் என்று எழுதினால் தானே உச்சரிப்பு பொருந்தி வரும்?.. எனக்குத் தெரியாமல் போச்சே! தெரிந்து கொண்டேன்.

    ஹிந்தி தெரிந்த புண்யவான்கள்! எது எங்கே கிடைக்கும்? எந்த இடத்திற்கு எப்படிப் போகவேண்டும்?-- எல்லாம் தெரிந்த பயணங்கள் தாம் சிறப்பு.

    படங்கள் சில் நினைவுகளைத் திரட்டித் தந்தன. நன்றி. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிற மொழி வார்த்தைகளை தமிழில் எழுதும்போது படிப்பவர்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான். இந்த மாதிரி எழுதுவதை சக பதிவர் துளசி டீச்சரிடம் தான் கற்றுக் கொண்டேன்.

      ஹிந்தி தெரிந்த புண்ணியவான்கள் - :) இங்கே வந்த பிறகு தான் பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீ.வி. ஐயா.

      நீக்கு
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    காசி படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், புத்தாண்டு வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  9. படங்களும் பகிர்வும் அருமை.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. புத்தாண்டும் அதுவுமாக ஹரிச்சந்திர கட் போட்டு புண்ணியம் தேடிக்கொண்டீர்கள். அஸ்வமேதகட் போன்ற பல இருக்கின்றனவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. காசிப் பயணப்படங்கள் அழகு.
    ஒரே நாளில் போய் வந்தீர்களா.

    அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாள் மட்டும் காசியில். அன்றைய இரவு கிளம்பி ப்ரயாக்ராஜ். அடுத்த நாள் இரவு அங்கிருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலையில் தில்லி! கொஞ்சம் ஹெக்டிக் பயணம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  12. அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் விஷு வாழ்த்துகள்.

    படங்கள் அனைத்தும் மிக மிக அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  13. நீங்க குறிப்பிட்டிருக்கும் அந்த லஸ்ஸியையும், ரபடியையும் நாங்க சுவைத்திருக்கோம். அதே போல் மத்ரா கோகுலத்திலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரணாசியில் வேறு கடைகளில் சுவைத்திருக்கிறேன். பஹல்வான் கடையில் குடித்ததில்லை. மதுராவிலும் கோகுலத்திலும் நிறைய Gகோ ஷாலாக்கள் உண்டு என்பதால் அங்கேயும் பால் பொருட்கள் நன்றாகவே இருக்கும். அங்கே கிடைக்கும் பேடா சுவை ரொம்பவே நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. எல்லா கட்டங்களுக்கும் போய் முக்கியமான கட்டங்களில் இறங்கிக் குளித்தது எல்லாம் நினைவலைகளில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் காசி நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  15. அடுத்த முறை அந்த லஸ்ஸியை குடித்துவிட்டு எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது அடுத்த காசி பயணம் எப்போதோ? காசி விஸ்வநாதனே அறிவான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  16. அழகான படங்கள். எங்களுக்கும் லஸ்ஸியை சாப்பிட்ட அனுபவம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....