ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ப்ரயாக்ராஜ் - கும்பமேளா – நிழற்பட உலா – பகுதி ஒன்று




கரையோரக் கவிதைகள் நிழற்பட உலா வரிசையில் ஐந்து பகுதிகளாக வாராணாசி நகரில் எடுத்த படங்களைப் பகிர்ந்து கொண்டேன். இந்த வாரத்திலிருந்து 2019-ஆம் ஆண்டு நடந்த கும்பமேளா சமயத்தில் நாங்கள் அலஹாபாத் [எ] ப்ரயாக்ராஜ் நகருக்குச் சென்ற போது எடுத்த சில படங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். 


கும்ப மேளா சமயத்தில் நான் ப்ரயாக்ராஜ் நகருக்குச் செல்வது இரண்டாவது முறை! சென்ற முறை சென்றதர்கும் இம்முறை சென்றதற்கும் இடையே சில வருடங்கள் இடைவெளி. ஆனால் முதல் முறை பார்த்த அலஹாபாத் நகருக்கும் இரண்டாம் முறை பார்த்த ப்ரயாக்ராஜ் நகருக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததை நன்கு உணர முடிந்தது. கும்பமேளாவினை முன்னிட்டு நகரமெங்கும் மிகச் சிறப்பாக ஓவியங்கள், சிலைகள் என மிகவும் அழகுற வடிவமைத்து இருந்தார்கள்.

நகரத்தின் பல பகுதிகளிலும், பாலங்களின் கீழும் இப்படி வரைந்திருந்த ஓவியங்களை படம் எடுத்தாலே பல படங்கள் வந்து விடும்! அவ்வளவு ஓவியங்கள். அதைப்போலவே, ஒவ்வொரு சாலை சந்திப்பிலும் மிகச் சிறப்பான சிலைகளை வடிவமைத்து வைத்திருந்தார்கள். எல்லா இடங்களிலும் அழகான சிலைகள்/ஓவியங்கள் என்ற விஷயங்களைத் தவிர, பாதுகாப்பு ஏற்பாடுகள், வரும் பயணிகளுக்கான ஏற்பாடுகள் என அனைத்துமே மிகச் சிறப்பாக இருந்தது. குறைகள் சொல்ல முடியாத அளவு ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பதை இங்கே சொல்ல வேண்டும். பிரம்மாண்டமான ஒரு நிகழ்வு இந்த கும்பமேளா! கும்ப மேளா நடக்கும் நாட்கள் – கிட்டத்தட்ட இரண்டு மாதம் – தை ஒன்றிலிருந்து மஹா சிவராத்திரி வரை இந்த மேளா!

மேளா சமயத்தில் கோடிக்கணக்கான மக்கள் ப்ரயாக்ராஜ் நகருக்கு வருவார்கள். அவர்கள் அத்தனை பேரும் தங்க இடம், அவர்களுக்கான கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றைச் செய்வது சுலபமான விஷயம் அல்ல! அதுவும் ஷாஹி ஸ்னான் என்று சொல்லக்கூடிய சிறப்பு நாட்களில், ஒரே நாளில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் கங்கையில் குளித்து தங்களது புண்ணியக் கணக்கினை அதிகமாக்கிக் கொள்வதுண்டு. நகரத்திற்குள் இத்தனை பேர் வர வேண்டுமெனில் எத்தனை ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும், அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் மனக்கண்ணில் ஓட்டிப் பாருங்கள். பிரம்மாண்டம் தானே இந்த நிகழ்வு. நான் இரண்டு முறை கும்பமேளா சமயத்தில் ப்ரயாக்ராஜ் சென்றபோதும், இந்த ஷாஹி ஸ்னான் இல்லாத நாளாகத் தான் சென்றேன். இருந்தும் மக்கள் வருகை மிகவும் அதிகமாகவே இருந்தது.

ப்ரயாக்ராஜ் நகரில் எடுத்த படங்களில் நகரில் வரைந்திருந்த ஓவியங்கள் மற்று சாலைச் சந்திப்புகளில் வைத்திருந்த சிலைகளின் படங்களை மட்டும் இந்த முதலாம் பகுதியில் பார்க்கலாம்.







































என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி


28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    படங்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    ஐராவத யானை அழாக இருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி!.

      படங்களை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஷாஹி ஸ்னான் என்று சொல்லக்கூடிய சிறப்பு நாட்களில், ஒரே நாளில் இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் கங்கையில் குளித்து//

    பிரமிப்பாக இருக்கிறது. நல்ல ஏற்பாடுகள் அதுவும் குறை சொல்ல முடியாத அளவு என்பதை வாசித்த போது அட! போட வைத்தது.

    சிலைகள் எல்லாம் அழகா செஞ்சுருக்காங்க. ஒட்டகச் சிவிங்கி கன்றுகுட்டி பால் குடிக்கும் சிலை படம் என்று எல்லாமே அழகு. ஊர் மிகப் பழமையான ஊர் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமையான ஊர் தான் கீதாஜி!. சில புதியவை. கண்டோன்மெண்ட் பகுதி சுத்தமாகவும் இருக்கும். இப்போது மற்ற இடங்களும் சற்று பரவாயில்லை. இன்னும் சிறப்பாக பராமரிப்பது மக்கள் கையிலும் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. சென்ற முறை அலஹாபேட் இப்போ ப்ரயாக்ராஜ்! போன வருடம் தானே பெயர் மாறியது இல்லையா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சில மாதங்களுக்கு முன்னர் தான் பெயர் மாற்றம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    ஆம், இந்த ஓவியங்களை நானும் பார்த்தேன். நீங்கள் அப்போதே இதுபற்றி எபி வாட்ஸாப் க்ரூப்பிலும் சொல்லியிருந்தீர்கள். ஓ... கும்பமேளாவை ஒட்டிய அலங்கார ஏற்பாடுகளா அவை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கும்பமேளாவிற்கான அலங்காரங்கள் தான். பராமரித்தால் நல்லது! பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. கைகூப்பி நிற்கும் அந்த முனிவர்...

    இரண்டு மூன்று முறை தாண்டிச் செல்லும்போது படமெடுக்க முயன்று தோற்றேன். மேலும் என் படங்கள் அவசரமாக எடுக்கப்படும் அலைபேசிப்படங்கள் வேறு.. உங்கள் துல்லியத்துக்கு முன் நிற்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவில் இருக்கும் படங்களும் பயணித்தபடியே எடுத்தவை தான். அதனால் அத்தனை சிறப்பாக இல்லை. நின்று நிதானித்து எடுப்பதற்கும் பயணித்தபடியே எடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. தெரியலைம்மா... யாரென்று தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  6. அழகான, அருமையான படங்கள். நாங்க இருபது வருஷங்களுக்கும் முன்னால் போனது. இப்போப் ப்ரயாக்ராஜ்னு பெயர் மாறினதும் ஒரு முறை போய்ப் பார்க்க ஆவல் தான். கூப்பிடட்டும். பார்ப்போம். எல்லாப் படங்களும் நன்றாக இருந்தாலும் கன்னுக்குட்டி அம்மாவிடம் பால் குடிக்கும் காட்சி எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. ஐராவதத்தையும் உச்சிஸ்ரவைஸ் குதிரையையும் கிடைத்தால் அதிலேயே பயணம் செய்து ப்ரயாக்ராஜ் வந்துடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐராவதம் அல்லது உச்சிஸ்ரவைஸ் கிடைத்தால் - உலகையே சுற்றி வந்து விடலாம்! :) ஆனால் நமக்குக் கிடைப்பதில்லை என்பது தான் சோகம்.

      அலுக்காத காட்சி - உண்மை. அந்த அன்பு வேறெதில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  7. ப்ரயாக்ராஜ் நகரில் வரைந்திருந்த ஓவியங்கள் மற்று சாலைச் சந்திப்புகளில் வைத்திருந்த சிலைகள் எல்லாம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. படங்கள் அழகாகவும் வண்ணமயமாகவும் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  11. முதல் படம் அருமை. மற்ற படங்கள் பரவாயில்லை. மெட்டலில் செய்த சிலை நன்றாக இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான படங்கள் பயணித்தபடியே எடுத்தவை. எனக்கும் இப்படங்களில் திருப்தியில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. காசியும் கங்கையும் பார்க்காத என் போன்றவர்களுக்கு
    அருமையாக விளக்கிச் சொல்கிறீர்கள்.
    படங்களில் உள்ள காட்சிகள் இதம் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  13. ஓவியங்களும் சிற்பங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....