ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி ஆறுஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

ஒரு ஆண்டிற்குள் ஒரு சிறந்த நண்பனைப் பெற முடியாது; ஆனால் ஒரு மணி நேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழக்க முடியும் – சீனப் பழமொழி
நண்பனை இழக்க ஒரு மணி நேரம் கூடத் தேவையல்ல! ஒரு சில நொடிகளே போதும் – உங்களது சொல்லும் செயலும் அப்படியானதாக இருந்தால். 

அந்தமான் சுற்றுலாப் பயணத்தின் போது எடுத்த சில படங்களை நிழற்பட உலாவாக, இந்த பதிவு தவிர ஐந்து பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். அப்பதிவுகளை பார்க்காதவர்கள் வசதிக்காக, இதோ இங்கே அப்பதிவுகளின் சுட்டி…


அந்தமானின் அழகு நிழற்பட உலாவாக, இந்த வாரமும் நண்பரின் மகன் – அவர் ஒரு மருத்துவர் – தனது One Plus அலைபேசியில் நிறைய கோணங்களில், விதம் விதமாக எடுத்த எண்ணற்ற நிழற்படங்களிலிருந்து சில படங்கள் இங்கே… அவர் எடுத்த படங்களில் சிலவற்றை நீங்களும் பாருங்களேன்.

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

30 கருத்துகள்:

 1. சூரியன் மறைந்திருக்கும் மேகங்களும் அழகு... One Plus ஆச்சரியம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. படங்கள் அனைத்தும் அழகு.
  எடுத்த கோணங்களும் ரசிக்க வைத்தன ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. உண்மையான நண்பனை இழக்க முடியாது. அவன் விலகிவிட மாட்டான். அவர்களுக்குள் வரும் கோபதாபம் சண்டை எல்லாம் கணவன் மனைவிக்கு இடையில் வருவது போன்றது. நீர் அடித்து நீர் விலகாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீர் அடித்து நீர் விலகாது - சரியான புரிதல் இருந்தால் நல்லதே நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி.

   நீக்கு
 6. இன்னமும் சிறப்பாக எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விவரங்கள் சேர்த்து விரைவில் விரிவாக எழுதுகிறேன் ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பழமொழியும் படங்களும் மிக மிக அருமை..வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி.

   நீக்கு
 8. நிறைய படங்கள்  மிக அழகாய் இருக்கின்றன.  மரவேற்களினாலான வீடு, மேகங்கள், அந்தி சூரியன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாழடைந்த வீடுகள்/கட்டிடங்கள் அவை - அதன் மீது இயற்கையாக வளர்ந்த மரங்கள் இவை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. இயற்கை அழகு ரசிக்க வைத்தது. திறன்பேசி கெமரா நல்ல தெளிவான படங்களை வழங்கியிருக்கிறது.

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று (16) ஐந்து வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் 16.02.2020 எனும் தலைப்பில் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலை ஓலை - நல்ல முயற்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும் சிகரம் பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. எல்லாப் படங்களும் அழகு என்றாலும் மரவேர்களில் ஆன வீடு, சூரியாஸ்தமனம்/உதயம்? ஆகியவை மிக மிக அழகு. கை தேர்ந்த புகைப்பட நிபுணர் என்பது தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரவேர்கள் பின்னர் வந்தவை - கட்டிடம் தான் முதலில் கீதாம்மா! இடிபாடுகள் மீது இப்படி மரங்கள் முளைத்து பார்க்கவே ஒரு வித அழகு - அழிவின் மீது உருவானது என்றாலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. சீன பழமொழி நன்று!. புகைப்படங்கள் அருமை அதிலும் சிவந்த வானம் மிக சிறப்பாய் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிழற்படங்களும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமேஷ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. மிக அழகிய காட்சிகள்...

  கீழிருந்து 5, 6,7 படங்களின் காட்சிகள் மிகவும் கவர்ந்தன... நானும் அது போல எடுக்க முயற்சித்து இருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனு ப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. படங்கள் அனைத்தும் அழகு. அதிலும் மைதானத்தில் மரத்தின் அருகே அந்தமான், பிறகு அந்த முயலின் கண்.. ஆகா!
  மரத்தின் வேரில் படுத்துக்கொண்டு புத்தகம் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.. உங்கள் தளத்தையும் வாசிக்கலாம் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   மரத்தின் வேரில் படுத்துக் கொண்டு புத்தகம் வாசிக்க வேண்டும் - நல்ல ஆவல். வாசிக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   நீக்கு
 15. ஐந்து இணைப்புகளையும் படிக்கப் பிறகு வருவேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது படியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....