செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கதம்பம் – மாற்றம் – கண்ணம்மா – போகி - தர்பார் – அத்திமலைத் தேவன் – மாங்காய் இஞ்சி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை – லியோ டால்ஸ்டாய்.
 
புகையில்லா போகி  – 14 ஜனவரி 2020:


பழையன கழிதலும்! புதியன புகுதலும்!!

வீட்டில் உள்ள தேவையில்லாத பொருட்களை தீயில் போட்டு எரித்து சுற்றுச்சூழலை மாசடைய வைப்பது போகியல்ல!! மனதில் உள்ள தீய எண்ணங்களை விடுத்து நல்லதையே நினைப்போம்!! நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு நல்லதைச் செய்வோம்! நம் மனது சுத்தமாகும்!!  புகையில்லா போகியைக் கொண்டாடுவோம்!! ஏறக்குறைய ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு எங்களுக்கு இன்று முதல் தான் பண்டிகை ஆரம்பம்!! (இப்படி 14-ஆம் தேதி எழுதி இருந்தாலும் மீண்டும் ஒரு இழப்பு – ஒரு மரணம்! ஒரு வருடத்திற்கு பண்டிகைகள் இல்லை!) கேரட் சேர்த்த சேமியா பாயசமும், முட்டைக்கோஸ் சேர்த்த முப்பருப்பு வடையும் இன்றைக்கு செய்து நைவேத்தியம் செய்தேன். எல்லோரும் எடுத்துக்கோங்க. 

Project கண்ணம்மா - 13 ஜனவரி 2020:

இது சங்கோஜப்பட வேண்டிய விஷயமோ, யாரும் அறியாத விஷயமோ அல்ல. பீரியட்ஸ்!!

சானிடரி நாப்கின்கள் குறித்து நகரங்களில் பெரும்பாலும் விழிப்புணர்வு இருந்தாலும் கிராமப்புற மக்களிடையே அத்தனை விழிப்புணர்வு இல்லாததாலோ, வசதி இல்லாததாலோ இன்னும் பல இடங்களில் துணியும், சாம்பலும், வைக்கோலும் பயன்படுத்தப் படுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாம் :( இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கிராமப்புற பள்ளி மாணவிகளில் பலர் பள்ளிப்படிப்பை விட்டு விடும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். அம்மாதிரி சிறுமிகளுக்கு உதவ உருவாக்கியது தான் இந்த 'ப்ராஜெக்ட் கண்ணம்மா'. இதைப் பற்றி இணையத்தில் பகிர்ந்துள்ளதை பார்த்தேன்.



இந்தக் குழுவில் இருப்பவர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு பத்து வயதிற்கு மேற்பட்ட கிராமப்புற மாணவிகளுக்கு தேவையான சானிடரி நாப்கின்களை வருடம் முழுவதும் வழங்குகின்றனர். இதனால் அவர்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது. கறைபடும் என்று தயங்கி பள்ளிக்குச் செல்லாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்கு வழங்கப்படும் சானிடரி நாப்கின்களையும் மலைவாசி பெண்களால் 100% மக்கும் தன்மையுடையதாய் தயாரிக்கப்படுகிறது. ஒரு சிறுமிக்கு வருடம் முழுவதும் செலவாகக் கூடிய தொகை ரூ 500. உங்களில் யாருக்கேனும் உதவிட மனதிருந்தால் நீங்களும் உதவலாம்.

30 நாள் கிறுக்கல்கள் – 17 ஜனவரி 2020



கோலம் போடுவது ஒரு கலை. மனதை ஒருநிலைப் படுத்தும் செயலாகும். கற்பனைத் திறனை மேம்படுத்தும். அதிகாலையில் கைகளுக்கும், உடலுக்கும் ஒரு பயிற்சியாக அமையும். புத்துணர்வு கிடைக்கும். அரிசிமாவில் போடும் கோலம், எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவாக அமையும். வீட்டில் மங்களகரமாக இருக்கும். இத்தனை சிறப்புகள் கொண்ட கோலம் மார்கழியில் மேலும் சிறப்பு பெறுகிறது.

அப்படி இவ்வருடம் மார்கழி முழுதும் எங்கள் வீட்டு வாசலில் போட்ட கோலங்கள் இங்கே ஒரு தொகுப்பாக. சிறிய கோலம் என்றாலும் முதல் நாளே தேர்வு செய்து, அதை பேப்பரில் இரண்டு, மூன்று முறை போட்டுப் பார்த்துக் கொள்வதுண்டு. வாசலில் கோலம் போட்டவுடன், மகளும், நானுமாக சேர்ந்து நிறங்களை தேர்வு செய்து கொடுத்து, பின்பு அதன் மேல் அவுட்லைன் கொடுத்து, உள்ளே டிசைன்களை போட்டு என இந்த மெனக்கெடுதலில் மனதிற்கு மிகுந்த நிறைவு கிடைத்தது. இந்த 30 நாள் கோலங்களும் ஒருமுறை மட்டுமே வாசலில் போட்டது, அதாவது மீண்டும் மீண்டும் இவை வராதது என்பதும், இவையெல்லாம் சென்ற வருடம் கூட போட்டது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது :)

தர்பார் – 17 ஜனவரி 2020:



போகலாமா! வேண்டாமா! என யோசித்த நாங்கள் சட்டென்று போகியன்று என்னவரிடம் சொல்லி டிக்கெட்டை புக் செய்யச் சொல்லி விட்டு, மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டோம். ஓலாவில் புக் செய்து வெகுநேரம் காத்திருந்து வராததால், பின்பு கிடைத்த ஆட்டோவை பிடித்து சிறிது தொலைவில் இறங்கி, அங்கிருந்து வேறு ஆட்டோவை பிடித்து என எப்படியோ சரியான நேரத்திற்கு தியேட்டருக்கு சென்று விட்டோம். ஆங்காங்கே கட் அவுட்களும், தோரணங்களும் கட்டப்பட்டு ரசிகர் மன்ற உறுப்பினர்களால் தியேட்டரே அலங்காரமாய் காணப்பட்டது.

மும்பையின் போலீஸ் கமிஷனராக வந்து போதைப் பொருள் விற்கும் எதிரிகளை ஒழிப்பதும், ரவுடிகளை ஹீரோவாக பந்தாடுவதும் தான் கதை. இந்த வயதிலும் தலைவரின் வேகம் ஆச்சரியப்படுத்துகிறது. சில விஷயங்களை சினிமா அதுவும் ரஜினி என்பதால் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது :) இப்போதெல்லாம் பார்க்கும் படங்களின் கதையோ, காட்சிகளோ மனதை பெரிதாக பாதிப்பதில்லை என்பது "எனக்கு வயசு ஏறிக் கொண்டே வருகிறது" என்று சொல்கிறதோ :)

அத்திமலைத் தேவன் – 22 ஜனவரி 2020:



புதுவரவு - அத்திமலைத் தேவன் - காலச்சக்கரம் நரசிம்மா!!

சரித்திரத்துக்குள் ஆழ்ந்து போக வேண்டும்.தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்காக சென்னை புத்தகத் திருவிழாவில் பதிப்பகத்தின் ஸ்டாலுக்குச் சென்று புத்தகங்களை வாங்கி, ஆசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா சாரின் கையொப்பத்தையும் பெற்று, உடனே கூரியரிலும் அனுப்பி வைத்த Ganesh Bala சாருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பசுமஞ்சளும் மாங்காய் இஞ்சியும் – 25 ஜனவரி 2020:



இந்த சீசனில் தான் பசுமஞ்சளும், மாங்காய் இஞ்சியும் கிடைக்கும். இங்கு மஞ்சளை நறுக்கி காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்வார்கள். வருடத்துக்கும் சமையலுக்கு, குளிக்க மற்றும் அவ்வப்போது தாயார் ரங்கநாச்சியாருக்கும் மஞ்சள் காப்பிற்குக் கொடுப்பார்கள். நான் எப்போதும் பொங்கலுக்கு வாங்கும் மஞ்சள் கொத்தில் உள்ள மஞ்சளை தோல் சீவி மிக்சியில் அரைத்து மாடியில் நன்கு காயவைத்து, மீண்டும் பொடித்து சலித்து வைத்துக் கொள்வேன். வீணாக்குவதில்லை.

நேற்று கடைத்தெருவில் வாங்கிய மா இஞ்சியையும், மஞ்சளையும் வைத்து செய்த உடனடி ஊறுகாய் இது. மீதி மஞ்சளை அன்றாடம் சமையலில் உபயோகித்துக் கொள்ள வைத்துள்ளேன். கடையில் வாங்கும் மஞ்சள்தூளில் கலப்படம் செய்யப்படுகிறதாம். முடிந்தவரை சீசனில் கிடைக்கும் போது உபயோகிக்கலாமே!

என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

32 கருத்துகள்:

  1. முடிவில் பயனுள்ள தகவலோடு கதம்பம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கதம்பச் சோற்றுப் பிரியர் நான்...இந்தக் கதம்பச் சோற்றையும் இரசித்துச் சுவைத்தேன்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ஐயோ மஞ்சள் ஊறுகாய் போட்டதிற்கு கீசாக்கா ராயல்டி கேட்கப் போறாங்கோ.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜேகே அண்ணா, புரிதல் என்பது தேவை! நான் சொன்ன்ன்ன்ன்ன வழிமுறையை எழுத்துக்கு எழுத்து வரிக்கு வரி அப்படியே காப்பி செய்து தன்னுடைய பெயரில் போட்டுக்கொண்டவரைத் தான் நான் கண்டித்தேன். அதுவும் ஆதியின் இந்தப் பதிவுக்கு முகநூலில் பதில் சொல்கையில் தான் தெரிய வந்தது. ஆகவே நான் ஆதிக்கு நன்றி தான் சொல்லவேண்டும். ஆதியின் செய்முறை முழுக்க முழுக்க வேறு. அதோடு அவர் செய்முறையைத் தானே அவர் சொல்லி இருக்கார். உடனடி ஊறுகாய் என்று வேறு சொல்லி இருக்கார். அதையும் என்னோட செய்முறையையும் கூர்ந்து கவனித்துப் படித்துப் பார்க்கவும். பதில் சொல்லாமல் கடந்து விடலாம் என்றே நினைத்தேன். :))))))) காப்பி அடித்துப் பதிவு போடுபவர்களை நீங்கள் ஊக்குவிக்கலாம். என்னால் இயலவில்லை. :(((((

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. அனைத்தும் மீண்டும் படித்தேன், பார்த்தேன். கோலங்கள் தொகுப்பு அருமை.
    ஊறுகாய் சூப்பர்.

    உங்கள் சின்ன மாமனார் இறந்ததால் மீண்டும் ஒரு வருடம் பணடிகை இல்லை என்பது வருத்தமே.
    அவர்களை இழந்து வாடும் அன்பு குடும்பத்திற்கு இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. கதம்பம் மிகவும் ரசிக்கும் படியும் மற்றும் பயன் உள்ளதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  6. கோலங்கள் அனைத்தும் அழகு. வாழ்த்துகள். கோலங்களில் நீல நிறம் அதிகம் காணப்படுகிறது. உங்களது அல்லது மகளின் பிரியமான நிறமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இணைய திண்ணை.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. கதம்பம் மணக்கிறது.

    சிரத்தையுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இடப்பட்ட அழகிய கோலங்கள் மிக அழகு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  9. முகநூலிலும் அனைத்தையும் படித்தேன். இங்கேயும் படித்தேன். இதே போல் காரட், இஞ்சி, மஞ்சளில் கூட உடனடி ஊறுகாய் போடலாம். 2 நாட்களுக்குள் தீர்க்கணும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. குணம்,மனம்,சுவை மிகுந்த கதம்பம். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா...

      நீக்கு
  11. சுவாரஸ்யமான கதம்பம்.  சிலவற்றை பேஸ்புக்கிலேயே படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. கதம்பம் பகிர்வினை ரசித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. மார்கழி கோலங்கள் - படத்துடன் மிக அருமையாக வந்துள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்கழி கோலங்கள் - ஒவ்வொரு நாளும் முகநூலில் வெளியிட்ட கோலங்கள் அனைத்தும் இங்கே ஒன்றாக.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. கதம்பம் மிக அருமை...

    அத்திமலைத் தேவன் - காலச்சக்கரம் நரசிம்மா!!...
    ஆஹா வாசிக்க வேண்டும்...


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்திமலைத் தேவன் - மொத்தம் ஐந்து தொகுதிகள். வாய்ப்புக் கிடைத்தால் வாசியுங்கள் அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. கதம்பம் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....