வியாழன், 4 ஜூன், 2020

முகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளினை ரமண மஹரிஷி அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்

 

தன்னைத் திருத்திக் கொள்ளுதலே, உலகத்தை திருத்துதலுமாகும். எப்போதும் பிரகாசித்தலை மட்டுமே தன் ஒரே வேலையாகச் செய்கிற சூரியன் ஒரு போதும் நினைப்பதில்லை எவரொருவரையும், எதன்பொருட்டும் திருத்த. உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்; உலகத்திற்கு ஒளி தருவதென்பது அதுவே”.


*****

உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு மாமி?

என்னடா இது? இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு இப்படி ஒரு கேள்வி கேட்கற மாது? சிரித்தபடியே கேட்டாள் பர்வதம் மாமி. 

பர்வதம் மாமி பதில் சொல்வதற்குள் அவரைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடலாம்! இருக்கும் அவளுக்கும் 85 வயசுக்கு மேலே! மாமிக்கே 85-க்கு மேலேன்னா, மாமாவுக்கு 90 வயசுக்கு மேலே! கிட்டத்தட்ட 30 வருஷ பழக்கம் மாதுவுக்கு.  மாமா, மாமி ரெண்டு பேருமே நல்ல சுபாவம். பொதுவா மாமாவுக்கு முன்னாடி மாமி அவ்வளவா பேச மாட்டா. கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் – Short and Sweet-ஆ! ஆனா, அதுவே மாமா இல்லாத நேரத்தில் பர்வதம் மாமியைப் பார்த்தா போதும், வளர்ந்த கதை, படிச்ச கதை, கேட்ட கதைன்னு நிறைய விஷயங்கள் பர்வதம் மாமிகிட்ட கிடைக்கும்!  ஊர்ல இருக்கற பல பேர் கிட்ட பேசினால் கிடைக்கும் விஷயங்கள் அனைத்தும் மாமியிடம் பேசினால் தெரிந்து கொண்டு விடலாம்! தினம் தினம் பக்கத்துல இருக்கும் கோவிலுக்கு, காலைல எழுந்து குளிச்சுட்டு கோவில் திறக்கற நேரத்துக்குப் போனா, கோவில்ல சாமியைப் பார்த்து கொஞ்சம் பர்சனால பேசிட்டு, ஒரு மூணு பிரதக்ஷிணம் முடிச்சு கொஞ்சம் உட்கார்ந்தா, வரவங்ககிட்ட பேசி, க்ஷேம நலன்களை விசாரிச்சுட்டு தான் வீட்டுக்கு வருவா பார்வதி மாமி. அது ஆகும் ஒரு மணி நேரம். 

”இல்லை மாமி, மாமா இல்லாதப்போ, நீங்க பேசறதுக்கும், இருக்கறப்ப நீங்க பேசறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே?” அதான் கேட்டேன். 

அதெல்லாம் அவர் பேர்ல இருக்க ஒரு மரியாதைல தாண்டா.  அந்தக் காலத்துல பொம்மனாட்டிகள்லாம் புருஷா எதிர்க்க வரதே ரொம்பவே குறைவு – அதுவும் அன்னிய மனுஷா இருந்தா வீட்டுக்குள்ள இருந்து பதில் மட்டும் தான் வரும்! அப்படியே வளர்ந்துட்டோம்.  கிராமத்துல இருந்த வரைக்கு நான் கூட அப்படித்தான் இருந்தேன்.  பொழைப்புக்காக மாமா பாம்பே வந்தப்பறம் தான் – இருக்கறதே ஒத்தை ரூம் தான் – கிச்சன், பாத்ரூம் தவிர – அந்த உள்ளேர்ந்து குரல் மட்டும் கொடுப்பதெல்லாம் போச்சு!  எல்லோருக்கும் எதிரே வந்தாலும்,  இன்னும் அவர் இருந்தா பேசறது குறைச்சல் தாண்டா மாது.  அந்தப் பழக்கம் இந்தக் கட்டை போகற வரைக்கும் போகாது!” 

”மாமி, உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு”ன்னு கேட்டதுக்கு பதிலே சொல்லல!

அவசரப் படாதடா மாது… சாயங்காலம் காபி ஆச்சா? ஒரு கப் காபி சாப்பிட்டுப் பேசலாம் இல்லையா? என்று கேட்டவாறே அடுக்களைக்குள் போனாள் பர்வதம் மாமி. மாமி காப்பி போடற சமயத்துல மாமாவைப் பத்தி கொஞ்சம் பார்க்கலாம்! மாமா இத்தனை வருடம் பாம்பேயிலேயே இருந்தாச்சு – ஒரு பையனுக்கு பாம்பேயில் வேலை.  மூத்த பையன் விசாகப்பட்டினத்தில்! இத்தனை வருஷத்துக்கு அப்புறம் மாமாவுக்கு ஆசை – தான் இருந்த ஊரெல்லாம்/கிராமமெல்லாம் பார்த்துட்டு வரணும்னு! ஜனவரி மாசம், ரிடையர் ஆன மூத்த பையனை அழைச்சுண்டு ஊர் ஊரா சுத்தக் கிளம்பினார். ஊரெல்லாம் சுத்தி விசாகப்பட்டினம் வந்தது மார்ச் மாசம் 10-ஆம் தேதி.  அங்கே ஒரு பத்து நாள் இருந்துட்டு பாம்பே திரும்பணும்! பாழாப்போற கொரோனா வந்து ஊரையே அடைச்சு வச்சுருக்கு!  “மாது, உனக்கு காப்பில சர்க்கரை போடலாம் இல்லையா?  இப்பதான் யாரைப் பார்த்தாலும் சுகர்னு சொல்றாளே?” என்று கேட்க, மாது மாமாவின் நினைப்பை விட்டு “ஓ பேஷா! இரண்டு ஸ்பூன் போட்டாக் கூட ப்ராப்ளம் இல்லை”ன்னு குரல் கொடுத்தான்.

 

மாமி  கொடுத்த டிகிரி காபியை ருசித்தவாறே, மாது பார்வதி மாமியை நோக்க, பதில் வந்தது – அது ஆச்சுடா… 70 வருஷம்.  எனக்கு பதினைந்து வயதுல கல்யாணம் நடந்தது. இரண்டு கொழந்தேள்! இரண்டும் ஆண் கொழந்தேள் தான்.  இத்தனை வருஷத்துல நாங்க பிரிஞ்சு இருந்தது மிஞ்சி மிஞ்சி போனா நாலஞ்சு தடவை தான்! ஒண்ணாவே இருந்துட்டோம். இதோ இப்பதான் நாலு மாசமா அவர் இல்லாமல் நான் மட்டும் தனியா இருக்கேன்! இத்தனை வருஷத்துல, இவ்வளவு நீண்ட நாள் பிரிஞ்சு இருக்கறது இப்ப மட்டும் தாண்டா…  என்னவோ பகவான் எல்லாரையும் ரொம்பவே சோதிக்கிறான்.  எல்லாரையும் நல்லா வையுடா அய்யப்பான்னு இன்னிக்குக் கூட அவன்கிட்ட பேசிட்டு வந்தேன்.  சொல்லிட்டு ஏனோ மௌனமானாள் பார்வதி மாமி.

 

மாமிட்ட பேசிட்டு வந்து ஒரு வாரம் தான் ஆச்சு – சரி இன்னிக்கு சாயங்காலம் ஆஃபிஸ்ல இருந்து வரும்போது மாமி வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வரணும்னு மாது நினைச்சுட்டு இருந்த போது அலைபேசியில் அழைப்பு. பர்வதம் மாமியின் பையன்…  “மாது, கொஞ்சம் வீட்டுக்கு வரையா? இராத்திரி அப்பா போயிட்டா… கொரோனா காலம் – ஃப்ளைட், இரயில்னு எதுவுமே ஓடல… சரி ரோடு வழியா போலாம்னா என்னென்னவோ ரூல் சொல்றான் – 65 வயசுக்கு மேலே இருக்கறவங்க வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதுங்கறான்...  என்ன பண்றதுன்னு புரியவே இல்லை… அம்மாவுக்கு சொல்லியாச்சு! போக வழியும் இல்லை, அப்பாவை நல்லபடியா அனுப்பி வைக்கணும்! அதனால வேற வழியில்லாம, நாங்க போகாமலே அண்ணா எல்லாம் பார்த்துண்டார்.  “முகமுழி கிடைக்காம பண்ணிட்டியேடா”ன்னு அய்யப்பன் படம் முன்னாடி நின்னு அழுதுண்டே இருக்கா… எந்த சமாதானமும் சொல்ல முடியலடா மாது… நீ கொஞ்சம் வரியா?” அம்மாட்ட வந்து கொஞ்சம் பேசேன்…. 

பார்வதி மாமி மட்டுமல்ல, மாதுவும் பேச்சின்றி, மாமியைப் பார்த்தபடியே கலங்கி நின்று கொண்டிருக்கிறான்! என்ன பேசி பார்வதி மாமியை சமாதானம் செய்ய முடியும் நீங்களே சொல்லுங்களேன்!

*****

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை….

 

நட்புடன்,

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி


42 கருத்துகள்:

  1. மனதைத்தொட்ட சம்பவம்/கதை.  நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த பார்வதி மாமி சீக்கிரம் சமாதானமடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஆறுதல் சொல்லித் தேறும் விஷயமா இது? காலம் தான் ஆற்ற வேண்டும். ஆனால் பல குடும்பங்களில் இத்தகைய நிலைமை தான்! என்ன சொல்ல முடியும்? இறைவன் தான் எல்லாவற்றையும் தன் அருளால் மாற்ற வேண்டும். ஒவ்வொருத்தரது பிரச்னைகளையும் கஷ்டங்களையும் பார்த்தால் நமக்கெல்லாம் ஒண்ணுமே இல்லை என்றே தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறுதல் சொல்லித் தேறும் விஷயமா இது? இல்லை! ஆனாலும் எப்படியாவது தேற்றமுடியாதா என்று உருகும் மகன்.

      பல குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகளைக் கேட்டால் நமக்கு இருக்கும் பிரச்சனைகள் ரொம்பவே சின்ன விஷயமாகத் தான் இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. ஏதோ உண்மை நிகழ்வை கேட்டது போன்ற பிரமை ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல புனைவுகள் உண்மை நிகழ்வுகளிலிருந்து தானே கில்லர்ஜி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    கதை மனது கனத்து விட்டது. உண்மை நிகழ்வா? எதுவானாலும் இன்றைய சூழலில் இந்தக் கதை மனதை சஞ்சலப்படுத்துகிறது. துயரங்களின் நோவு என்றுமே தீர்க்க முடியாததுதான்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      மனம் கனக்க வைத்தது - உண்மை நிகழ்வு தான். //துயரங்களின் நோவு என்றுமே தீர்க்க முடியாதது தான்// - உண்மை.

      நீக்கு
  5. தானே ஆறுதல் அடைய வேண்டும்... கதையாகவே இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் மட்டுமே இதற்கான மருந்து தனபாலன்.

      கதையாக இருந்திருந்தால் நல்லதே! ஆனால்.....

      நீக்கு
  6. நண்பர் ஆர். சுப்ரமணியன் வாட்ஸ் அப் வழி அனுப்பிய கருத்துரை:

    The ground reality of Corona is
    Dont feel, practice or preach hatred
    No one knows who will be of help to whom at any given circumstances
    Ulagil ondrum saasvadham alla
    Promote friendship. Keep at least a few friends. Moreover keep in touch with somebody known to you always.
    Try to help mankind as much as you can in any manner possible
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைந்த நன்றி மணி அண்ணே!

      நீக்கு
    2. எதோ ஒன்று மனதை குடைந்தது... ம்... எதுவும் கடந்து போகட்டும்...

      நண்பர் ஆர். சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    சீனாவின் செல்லப்பிள்ளை விளையாட்டு பல பிரிவுகளை சந்திக்க வைத்திருக்கின்றது உறவுமுறை அழைத்து சொல்லிய கண்ணோட்டம் சிறப்பு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.

      பிரிவுகள் நிறையவே இந்தக் காலக் கட்டத்தில். வேதனை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மனதுக்குள் வேதனையாக இருந்தது. யாராலும் இந்த சோகத்துக்கு ஆறுதல் கூற முடியாது. உலகம் முழுவதும் ஒருமித்த கவலை இந்த ஆண்டு தந்த அனுபவம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உலகம் முழுவதும் ஒருமித்த கவலை இந்த ஆண்டு தந்த அனுபவம்// உண்மை தான் கௌசி ஜி. சில இழப்புகள் வேதனை தருபவையே.

      நீக்கு
  9. சட்டென எதிர்பாராமல் வந்த கோடையிடி மாதிரி மரணத்தைச் சொன்னது மனம் அதிரச் செய்தது....சொல்லிய விதம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சட்டென எதிரபாராமல் வந்த கோடியிடி மாதிரி// அதிரச் செய்யும் விஷயம் தான் ரமணி ஜி.

      //சொல்லிய விதம் அருமை.../ - நன்றி.

      நீக்கு
  10. காலத்துக்கேற்றபடி கதை எழுதியிருக்கிறீங்கள்... மிக அழகாக எழுதியிருக்கிறீங்க, நேரடியாக நடப்பதைப்போலவே இருக்குது படிக்க... மனதை நெருடுகிறது.. இத்தனை வருடம் ஒன்றாக வாழ்ந்தும் முடிவில் முகம் பார்க்க முடியாமல் போச்சே என.. ஆனால் எழுத்து அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலத்துக்கேற்றபடியான கதை - நன்றாக எழுதி இருப்பதாகச் சொன்னதற்கு நன்றி அதிரா.

      பல புனைவுகள் சிறு கற்பனையோடு நிகழ்ந்ததை எழுதுவது தானே...

      முகம் பார்க்க முடியாமல் போவது வருத்தம் தரும் விஷயம் தான்.

      நீக்கு


  11. இப்போ அறிஞ்சேன், 60 வயசு அவருக்கு, பப்ம்பாயில் வேர்க் பண்ணுபவராம், லொக்டவுனால வீட்டுக்கு வந்திருக்கிறார்.. தமிழ்நாட்டுக்கு.. நல்ல நலமாக குடும்பத்தினரோடு இருந்தபோது, வேர்க் க்கு முடிஞ்சால் வரவும் என அழைப்பு வந்திருக்குது, சரி நன்றாகத்தானே இருக்கிறோம் எனப் பிளேனில போனாராம்.. இறங்கியதும் காச்சல் வந்து தனியே அவரது ரூமிலேயே காலமாகி 2 நாட்கள் யாருக்கும் தெரியாமல் இருந்து, பின்பு பொலிஸ் போய் மீட்டிருக்கின்றனர், குடும்பத்தினரும் பார்க்க முடியவில்லை.. பாருங்கோ.. விதி எப்படி விளையாடுகிறது...//

    .......................
    இப்பொழுது புளொக் சரியாக இருக்கிறது வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி நிறைய நிகழ்வுகள் - கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நானும். ஆவை மனதில் வலி தருபவையாக இருக்கிறது அதிரா.

      இப்போழுது Blog சரியாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி அதிரா.

      நீக்கு
  12. கதை நல்லா இருக்கு. அதான் பிரிஞ்சதில்லை பிரிஞ்சதில்லைனு சொல்லிச் சொல்லி, நிஜ பிரிவே வந்துவிட்டது போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை உங்களுக்கும் பிடித்த்தில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. நெஞ்சை உறுக்கிய கதை. உண்மையிலும் விசு ஐய்யா உட்பட பிரபலங்களுக்கும் இந்த நிலமைதான். மிக கடினமான காலக்கட்டம் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் இந்த நிலை தான் அரவிந்த். கடினமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை பலரும் உணரவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. அன்பு வெங்கட், இத்தனை காலத் தாம்பத்யத்தின் முடிவு இப்படியாச்சே.
      அந்தப் பாட்டியை நினைத்தால்
      மிகக் கவலையாக இருக்கிறது.இந்தத் தண்டனை எந்த
      வயதில் வந்தாலும் இந்தத் தண்டனை கொடிது.
      அதுவும் முகம் பார்க்க முடியாமல் போவது இன்னும்
      வயிற்றைக் கலக்குகிறது.

      அதுவும் அதிரா சொல்லி இருப்பது இன்னும் மோசம்.
      இறைவனே துணை. நன்றி வெண்கட். பத்திரமாக இருங்கள்.

      நீக்கு
    3. பாட்டியை நினைத்தால் இன்னும் வருத்தமும் கவலையும் தான் வல்லிம்மா...

      நான் பத்திரமாக இருக்கிறேன். முடிந்த அளவுக்கு பாதுகாப்பு விஷயங்களைக் கவனித்தில் கொண்டிருக்கிறோம். ஆண்டவன் துணையிருக்கட்டும்.

      நீக்கு
  14. மனதை உருக்கி விட்டது. மாமிக்கு என்றும் ஆறாத துயரம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனதை உருக்கி விட்டது// என்ன செய்வது சோகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  15. கதையாக இருப்பினும், உண்மையாகவே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையும் கலந்த புனைவு தானே கதைகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  16. வெங்கட்ஜி கதை மிக மிக அருமை. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நிஜ நிகழ்வாக இருந்தாலும் கூட அதையும் அழகான கதையாக எழுதியிருக்கீங்க ஜி. மனதை மிகவும் நெகிழ்த்திவிட்டது.

    தொடர்ந்து எழுதுங்க ஜி இப்ப்டிக் கதைகள். உங்களுக்கு அழகாக எழுத வருகிறது.

    இப்படி நிறைய கேள்விப்படுகிறோம் இப்போதைய சூழலில். சீக்கிரம் இந்நிலை மாற வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /கதை மிக மிக அருமை// நன்றி கீதாஜி.

      இப்போதைய சூழல் மாற வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும். நலமே விளையட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  17. மாமிக்கு என்ன ஆறுதல் சொல்ல இயலும்? அவரிடம் இதமாகப் பேசி பேசி மனதை டைவர்ட் செய்து அன்பு காட்டினால் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக மீட்டு விடலாம். காலமும் ஆற்றிவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாமிக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?// யாரால் என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும்? காலம் மட்டுமே அவரது மனதிற்கு மருந்து இடமுடியும் கீதாஜி.

      நீக்கு
  18. எங்கே வாழ்க்கை தொடங்கும்
    அது எங்கே எவ்விதம் முடியும்
    இது தான் பாதை இது தான் பயணம்
    என்பது யாருக்கும் தெரியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான பாடலை இங்கே தேர்ந்தெடுத்து தந்திருக்கிறீர்கள் அபயா அருணா ஜி.

      நீக்கு
  19. வாசகம் அருமை.
    கதை மனதை கனக்க வைத்து விட்டது. மாமிமனதை தேற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லலாம், ஆனால் முடியாது. காலம் மாற்றலாம்
    நிறைய இது போன்ற கதைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறது காதில். இந்த கொரோனா காலத்தில்.
    இறைவன் நல்ல வழி காட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாசகம்// - நன்றி கோமதிம்மா...

      ஒவ்வொரு நாளும் இப்படி நிறைய விஷயங்கள் காதுக்கு வந்து கொண்டே இருக்கின்றன. பல சோகம் தருபவை, சில நம்பிக்கை தருபவை. நலமே விளையட்ட்டும்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....