ஞாயிறு, 21 ஜூன், 2020

Middle Class – கவிதை – ஆர். சுப்ரமணியன்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, படித்ததில் பிடித்த ஒரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


கடன் வாங்கி வெளி ஊர்ல போய் படிக்கிற ”மிடில் கிளாஸ்” பையனுக்குத் தெரியும்… ஃபோன்ல அப்பா பேசும்போது அவரோட குரல்ல தெரியற வலி என்னன்னு….


இந்த வாரம் ஒரு ஹிந்தி கவிதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  என்னது ஹிந்தில கவிதையா?  பேசினாலே புரியாது! இதுல கவிதை வேறயா!  நான் வரல இந்த விளையாட்டுக்குன்னு அவசரப் பட்டு நகர்ந்துடாதீங்க!  ஹிந்தி புரியாம இருக்கற அவஸ்தை தில்லில வந்த நாள்ல நானும், என்னைப் போல பல நண்பர்களும் பட்டு இருக்கோமே!  ஹிந்தில கேளுங்க…. ரொம்பவே சிறப்பான குரல்ல இருக்கு இந்த கவிதை. கவிதை - பவன் மாலு... குரல் - ஷ்ரேயஸ் அனில் தால்பாடே...  கூடவே அதில் வரும் ஓவியங்களும் நன்றாகவே இருக்கிறது. முதலில் காணொளியைப் பார்த்து/கேட்டு விட்டு பிறகு தமிழிலும் படிக்கலாம்…


 


காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


Middle Class


கேட்டீங்களா?  சரி அந்த கவிதைக்கு என்ன அர்த்தம்னு புரியலைன்னு கஷ்டப்படாதீங்க…..  இதோ நம்ம தில்லி நண்பர் சுப்ரமணியன் தமிழில் அதை மொழிபெயர்த்து இருக்கிறார் – ஹிந்தி தெரியாதவர்களுக்காக!  வாருங்கள் படிக்கலாம்!


நடுத்தர வர்க்கம்….



இவர் ஒரு நாயகன் அல்ல!

            இவரால் வில்லனாகவும் ஆகமுடிவதில்லை…

வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில்,

            பெரும்பாலும் இடையிலேயே நின்றுவிடுகிறார்.

கனவுகளை நனவாக்கவும் இவரால் முடிவதில்லை…

            கனவுகளிலிருந்து விலகி நிற்கவும் முடிவதில்லை..

இருப்பினும் தராசின் முள்ளைப் போல,

            சமுதாயத்தின் நடுநிலையாய் இருந்துவிடுகிறார்.


இவரைத்தான் நடுத்தர வர்க்கம் என அன்போடு அழைக்கிறார்கள்….

            நடுத்தர வர்க்கம் என அழைக்கிறார்கள்….


இவருக்கு நடுநடுங்கவும் தெரியாது….

            அடுத்தவரிடமிருந்து அபகரிக்கவும் தெரியாது.

இவருக்கு தன்னுடைய தேவைகளை மட்டுமே

            அன்போடு கவர்ந்திழுக்கத் தெரியும்….

சில நேரம் செல்வந்தர்களின் சாரதி ஆகிறார்….

சிலநேரம் ஏழைகளின் தோழன் ஆகிறார்…

ஆனால் தனது தேவைகளுக்கென்று…

யாரிடமும் எதையும் கேட்க முடிவதில்லை.

சுயமரியாதையுள்ள இவரை…

நடுத்தர வர்க்கம் என அழைக்கிறார்கள்….

            நடுத்தர வர்க்கம் என அழைக்கிறார்கள்….


தேவைகள் இவருக்கும் உண்டு…

ஆனால் கேட்பார் தான் யாருமில்லை.

கேள்விகள் இவருக்கும் உண்டு….

ஆனால் விடை அளிப்பவர் எவருமில்லை.

கஷ்டங்கள் இவருக்கும் உண்டு…

ஆனால் இவர் பிரபலம் அல்ல….

அதனால் தானோ என்னவோ…

இவருக்கும் பிரச்சனைகள் உண்டு….

ஆனால் செய்திகளில் இவர் இல்லை….


கூட்டத்தில் சிக்கி தவித்து விடுவதுண்டு….

வரும்படியின் கதைகளைக் கேட்டுவிடுவதுண்டு…

சோர்வுடனேயே வாழ்ந்து விடுகிறார்.

கசந்த உண்மைகளை விழுங்கி விடுகிறார்.

சற்றே அதிர்ஷ்டத்தை கடிந்து கொள்வார்

மனதிற்குள்ளேயே அழுது விடுகிறார்.

தவணைகளில் வாழும் வாழ்க்கையிலிருந்து…

            விடுபட முடியாமல் இருந்து விடுகிறார்.

தராதரத்தின்(status) விளிம்பில் கூட…

புன்னகையில் அனைத்து இன்னல்களையும் மறந்துவிடுவார்.

சகிப்புத்தன்மை என்பது நாடி நரம்பெல்லாம் உள்ளது.

சகிப்புத்தன்மை என்பது நாடி நரம்பெல்லாம் உள்ளது….

தைரியத்துடன் மனதைத் தேற்றி விடுவார்….


தைரியமானவர் தான் இவர்…

நடுத்தர வர்க்கம் என அழைக்கிறார்கள்….

புரிதலுள்ளவர் தான் இவர்….   

நடுத்தர வர்க்கம் என அழைக்கிறார்கள்….


மொழிபெயர்ப்பு:  ஆர். சுப்ரமணியன், தில்லி.


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட கவிதை உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

28 கருத்துகள்:

  1. வாசகமும் நன்று. கவிதையும் தன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் கவிதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  3. இந்தி தெரியாது என்பதால், தமிழ் மொழிபெயர்ப்பை இரசித்தேன். நன்று, நன்று, மிக நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கௌதமன் ஜி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. ஹிந்தி கவிதையும் மிக நன்றாகத்தான் இருந்திருக்கும்.(எனக்கும் அந்த மொழி தெரியாததால் அப்படி கூறுகிறேன்.) ஆனால் அதனை தொட்டபடி வந்த அதன் மொழிப்பெயர்பான தமிழ் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.மனதாற ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் கவிதையும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  5. Amazing poetry sir.I really liked your use of words.Your poems ooze of perfection. I gotta read it again.Thank you for sharing this one

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  7. வாசகம் நன்றாக இருக்கிறது. காணொளி ஓவியத்தில் நடுதரவர்க்கத்தை அழகாய் வரைந்து இருக்கிறார்கள்.

    கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் ஓவியங்களும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா....

      //கவிதை மிக அருமை// நன்றிம்மா...

      நீக்கு
  8. இந்தி கொஞ்சம் தெரியும். இருந்தும் கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. நடுத்தரர் (அதாவது மத்யமர்) என்றால் யார்?

    ஹிந்தியில் உருக்கமாக எழுதியவருக்கும் வாசித்தவருக்கும் தமிழில் மொழி பெயர்த்தவருக்கும் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுத்தரர்/மத்யமர் - எப்பவும் சொல்ற வார்த்தை தானே....

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முஹம்மது நிஜாமுத்தீன் ஜி.

      நீக்கு
  10. ஹிந்தி தமிழ் இரண்டுமே ரசிக்கும்படி இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

      நீக்கு
  12. நடுத்தர வர்கத்தின் பலதரப்பட்ட பிரச்சனைகளை சில வரிகள் கொண்ட கவிதைக்குள் அடைத்தது நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
      மத்யமரைப் பற்றிய கவிதை மிக மிக அருமை.
      இவ்வளவு அழகாக மொழி பெயர்த்தவருக்கு, திரு சுப்ரமணியத்துக்கு மனம் நிறை
      பாராட்டுகள்.
      இதுதான் அப்பட்டமான உண்மை.
      மேலிருப்பவர்களுக்குக் கவலை இல்லை. கீழிருப்பவர்களுக்கு
      வழியில்லை.
      இரண்டும் கெட்ட நிலமைதான் மத்யமருக்கு.

      நல்ல தினமாக இருக்க வாழ்த்துகள்.

      நீக்கு
    2. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா.

      நீக்கு
    3. கவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      உங்கள் பாராட்டுகளை நண்பருக்குத் தெரிவித்து விடுகிறேன்.

      //மேலிருப்பவர்களுக்குக் கவலை இல்லை. கீழிருப்பவர்களுக்கு வழியில்லை// நிதர்சனம்.

      நீக்கு
  13. நல்ல மொழிபெயர்ப்பு. வாழ்த்துகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....