வெள்ளி, 19 ஜூன், 2020

ஏழு சகோதரிகள் மின்னூல் – நான்கு பாகங்களாக – அமேசான் தளத்தில்…

 

அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.


”நாம் தலைகுனிந்து செய்யும் செயல் ஒன்று நம்மைத் தலைநிமிரச் செய்கிறது என்றால் அது புத்தக வாசிப்பு மட்டுமே!”

 

ஏழு சகோதரிகள்… சில வருடங்களுக்கு முன்னர் ”ஏழு சகோதரிகள்” என்று அழைக்கப்படும் மாநிலங்களுக்கு 15 நாட்கள் பயணமாக நண்பர்களுடன் சென்று வந்ததை எனது வலைப்பூவில் எழுதி வந்தேன்.  தற்போது இந்த லாக்டவுன் நாட்களில், அலுவலக வேலை நேரம் போக மற்ற கிடைத்த நேரங்களில் எல்லாம் எனது வலைப்பூவில் எழுதிய பல பயணக் கட்டுரைகளைத் தொகுத்து தொடர்ந்து மின்னூல்களாக வெளியிட்டு வருகிறேன். அந்த வரிசையில் “ஏழு சகோதரிகள்” பயணத் தொடரையும் தொகுத்து வெளியிட்டு விட்டேன். வலைப்பூவில் எழுதியபோது மொத்தம் 103 பகுதிகள் – சில மாதங்களில் வெளியிட்டேன். என்னதான் வலைப்பூவில் இருந்தாலும், ஒரே இடத்தில், ஒரு தொகுப்பாக சேர்த்து வைப்பதும் நல்லது தானே.  அனைத்து பகுதிகளையும் ஒரே மின்னூலாக வெளியிடுவதில் சில சிரமங்கள் இருந்ததால் நான்கு பாகங்களாக வெளியிட்டு இருக்கிறேன். அந்த நான்கு பாகங்களும் அவற்றின் விவரங்களும் இன்றைய பதிவில்!


ஏழு சகோதரிகள்இப்படி அழைக்கப்படும் மாநிலங்கள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களே ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு நிறைய பேர் வருவதில்லை. ஏதோ இந்த மாநிலங்கள் அண்டை நாடான சீனாவில் இருப்பது போல பலருக்கும் ஒரு பயம். அப்படி பயம் இல்லாதவர்களும், சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் இங்கே பயணிக்க யோசனை செய்கிறார்கள். ஏழு சகோதரி மாநிலங்களில் மிசோரம் தவிர்த்துஅதற்கே தனியாக ஒரு வாரமாவது தேவை என்பதால்மற்ற ஆறு மாநிலங்களுக்கும் கடைசியாக மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தா வந்து அங்கே சில இடங்களைப் பார்த்து விட்டு அவரவர் இருப்பிடத்தினை அடைவதாக திட்டம்.


முதல் பாகத்தில் மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் பற்றிய அனுபவங்கள்/தகவல்கள் என்றாம் இரண்டாம் பாகத்தில் அசாம் மாநிலத்தின் காமாக்யா கோவில், காசிரங்கா வனப்பயணம் போன்ற அனுபவங்கள்!  மூன்றாம் பாகம் முழுவதுமே அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் அழகான ஏரிகள், பனிபடர்ந்த மலைச்சிகரங்கள், எல்லைப் பகுதிகள், பழங்குடி மக்கள், அவர்களது திருவிழா என பல விஷயங்களையும் சொல்லி இருக்கிறேன்.  கடைசி – அதாவது நான்காம் பாகத்தில் மேலும் இரண்டு மாநிலங்கள் – மேகாலயா மற்றும் திரிபுரா தகவல்கள்.  கூடவே மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து காளி Gகாட், Bபேலூர் மட், கடை வீதிகள் என ஒரு உலா!  மொத்தமாக பதினைந்து நாட்களின் பயணத்தினை நான்கு பாகங்களாக மின்னூல் வழி பகிர்ந்து இருக்கிறேன்.  இந்த மின்னூல்கள் வழி பகிர்ந்து கொண்ட விதம்விதமான அனுபவங்கள், வித்தியாசமான உணவு வகைகள், பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள், கலாச்சாரம் என அனைத்துமே வித்தியாசம்.


ஏழு சகோதரிகள்-பாகம் 1  (மணிப்பூர், நாகாலாந்து)


ஏழு சகோதரிகள்-பாகம் 2  (அசாம்)


ஏழு சகோதரிகள்-பாகம் 3  (அருணாசலப் பிரதேசம்)


ஏழு சகோதரிகள்-பாகம் 4  (மேகாலயா, திரிபுரா)


அமேசான் தளத்தில் வெளியிட்ட மின்புத்தகங்களை, கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து படிக்க முடியும். இந்தக் கட்டுரைகளை மின்புத்தகமாக தரவிறக்கம் செய்து வாசிக்க விரும்புபவர்கள் தங்களது கிண்டிலிலோ அல்லது அலைபேசியிலோ/கணினியிலோ தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.  அமேசானில் கணக்கு வைத்திருந்தால் போதும்.  கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இல்லாதவர்கள் பணம் செலுத்தி படிக்க வேண்டியிருக்கும்.


மற்றுமொரு மகிழ்ச்சியான தகவலும் – வாரம் ஒரு மின்னூல் என வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி வரை, அமேசான் தளத்திலிருந்து அந்த மின்னூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் வசதியைத் தந்து வருகிறேன்.  அப்படி தந்த மின்னூல்கள் அந்த வாரத்தில் அதிக தரவிறக்கம் செய்யப்பட்டு நல்லதொரு வரவேற்பைப் பெற்று அமேசான் தளத்தில் ”Travel and Tourism" பட்டியலில் "Top 100 Free" பகுதியில், மின்னூல்கள் வெளியிட்ட நாட்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. தரவிறக்கம் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி.


இதுவரை வெளியான எனது மின்னூல்கள் அனைத்திற்குமான சுட்டி....


எனது மின்னூல்களின் பட்டியல்


இது வரை இந்த மின்னூல்களை வாசிக்காத நண்பர்கள் இருந்தால், தரவிறக்கம் செய்து வாசித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லலாமே!


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

30 கருத்துகள்:

  1. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  4. வாழ்த்துகள் ஜி தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வாங்கிவிட்டேன் ஐய்யா. வாழ்த்துக்கள். எப்படி பயனம் செய்யவேண்டும் என எங்களுக்கு சொல்லிக் கொடுத்த குருக்களில் தாங்களும் ஒருவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நூலை தரவிறக்கம் செய்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  8. "Top 100 Free" பகுதியில், மின்னூல்கள் வெளியிட்ட நாட்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.//

    மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. பாராட்டுக்கள் மகிழ்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. வாழ்த்துகள், பாராட்டுகள் வெங்கட்ஜி.

    துளசிதரன்

    நல்ல பொருத்தமான வாசகம் ஜி

    ஏழு மாநில சகோதரிகள் மிக மிக பயனுள்ள தகவல்கள் அடங்கிய உங்கள் சுற்றுலா பதிவு. மின்னூலுக்கு வாழ்த்துகள் ஜி

    //அந்த வாரத்தில் அதிக தரவிறக்கம் செய்யப்பட்டு நல்லதொரு வரவேற்பைப் பெற்று அமேசான் தளத்தில் ”Travel and Tourism" பட்டியலில் "Top 100 Free" பகுதியில், மின்னூல்கள் வெளியிட்ட நாட்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.//

    பாராட்டுகள் வாழ்த்துகள் ஜி! மகிழ்வான விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நேற்று முதல் இலவசமாகத் தரும் “திரிவேணி சங்கமம்” நூல் கூட முதல் 100 இடங்களில் ஒன்றை பிடித்திருக்கிறது!

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  11. அன்பு வெங்கட்,
    நல் முயற்சியால் உங்கள் புத்தகங்கள்
    வெளிவருவது மிக மிக மகிழ்ச்சி.
    என்றும் உங்கள் பயணங்கள் நம் தாய் நாட்டை
    வலம் வரச் சொல்கின்றன.
    கண்திறந்து லயிக்கச் செய்கின்றன.
    மென்மேலும் வளர மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. எப்போதும் நீங்கள் டாப்தான். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  15. வாழ்த்துகளும், பாராட்டுகளும். தொடர்ந்து பல மின்னூல்கள் வெளியிடவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....