வெள்ளி, 17 ஜூலை, 2020

அமேசான் வெளியீடுகள் – பாந்தவ்கர் வனப்பயணம் - மின்னூலாக

அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் ஆரம்பிக்கலாம் வாங்க!


 

*****


அமேசான் வெளியீடுகள் பற்றி அவ்வப்போது இங்கே எழுதி வருகிறேன்.  பொதுவாக வலைப்பூவில் பதிவுகள் வெளியிட்டதும், அந்தத் தகவலை WhatsApp Status-ஆகவும் முகநூலில் ஒரு இற்றையாகவும் பதிவு செய்வது எனது வழக்கம்.  அதனால் எனது வலைப்பூவினை வாசிப்பவர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் இந்த மாதிரி தகவல் தருவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.  சென்ற வாரத்தில் ஒரு வட இந்திய நண்பரிடமிருந்து WhatsApp வழி – “உங்களிடம் பேச வேண்டும்! உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ சொல்லுங்கள்” என்று ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அவரிடம் பொதுவாக பேசியதில்லை! வழியில் பார்க்கும்போது ஹலோ ஹலோவுடன் சரி.  அல்லது ஒரு சிறு புன்முறுவல்!  அத்தனை தான்!  நட்பு என்று சொல்வதை விட பரிச்சயமானவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்! 


என்ன பேச வேண்டுமோ? சரி எதுவாக இருந்தாலும் என்ன, நாமே பேசலாமே என அவரை அழைத்தேன்.  அவர் சொன்ன விஷயம் – “நீங்கள் தமிழில் வலைப்பூவில் எழுதுவதை நான் படித்துக் கொண்டு வருகிறேன் ! நன்றாக இருக்கிறது!”  எனக்குள்  சிறு அதிர்ச்சி – அவரோ ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மைதிலி Bபுந்தேல்கண்டி மொழிகள் அறிந்தவர்! தமிழில் வலைப்பூவை படித்தேன் என்கிறாரே? – எதிர் கேள்வி கேட்டேன் – “Google Translate மூலம் படித்தீர்களா? அது அத்தனை நன்றாக இருக்காதே!  தோராயமாகத் தான் Google மொழிபெயர்க்கும்!”  


”ஆமாம் ஜி!  இருந்தாலும் நீங்கள் சொல்ல வரும் விஷயத்தினை ஓர் அளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.  அதிலும் நீங்கள் மின்னூல் வெளியிடுவது பற்றி எழுதி இருந்த சில கட்டுரைகள் பிடித்திருந்தன. உங்களுக்குத் தெரியுமா என எனக்குத் தெரியாது – நானும் ஹிந்தியில் கவிதைகள் எழுதுவேன். அவற்றை மின்னூலாக மாற்றும் ஆவல் எனக்குண்டு.  உங்கள் கட்டுரைகள் படித்தபின் அதை செயல்படுத்த நினைத்தேன்.  KDP தளத்தில் மின்னூல் பதிவேற்ற முயற்சி செய்து பார்த்தேன் – அதில் சில சந்தேகங்கள் இருக்கவே உங்களை அழைத்தேன்!” என்று சொன்னார்.  அவருக்கு இருந்த சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து வைத்தேன்.  மேலும் சந்தேகங்கள் உண்டெனில் அழைக்கிறேன் எனச் சொல்லியதோடு நன்றியையும் தெரிவித்து அழைப்பினைத் துண்டித்தார்.  விரைவில் அவரது ஹிந்தி கவிதைகள் அமேசான் தளத்தில் மின்னூலாக வெளிவரலாம்! 


ஏதோ ஒரு விதத்தில் இந்த கட்டுரைகள் சிலருக்கு பயனுள்ளதாக இருந்ததில் மகிழ்ச்சி.  மின்னூல் வெளியீடுகள் செய்வதில் சிலருக்கேனும் உதவ முடிந்ததில் ஒரு திருப்தி.  சின்னச் சின்ன விஷயங்கள் கூட நம்மைச் சிறகடிக்கச் செய்யும் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு புரிய வைக்கின்றன அல்லவா! சரி இந்த வாரத்தின் எனது மின்னூல் வெளியீடு பற்றிய தகவலையும் சொல்லி விடுகிறேன்.  இந்த வாரத்தில் எனது ஒரு மின்னூல் வெளியாகி இருக்கிறது.  மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மற்றும் Bபாந்தவ்கர் வனத்திற்குச் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்கள் அடங்கிய, ஒரு மின்னூல்!  மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள முகவரி – “Bபாந்தவர் வனப்பயணம்”.
மேலும் ஒரு தகவல் – “ஏழு சகோதரிகள் பாகம் 4” மின்னூலை ஐந்து நாட்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் – இந்திய நேரப்படி இன்று மதியம் 12.30 மணியிலிருந்து வரும் புதன் கிழமை மதியம் 12.29 மணி வரை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்கம் செய்து முடிந்தால் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்!  இது வரை வெளியிட்ட எங்கள் அனைத்து மின்னூல்களுக்கான சுட்டி – மின்னூல்கள்!

 

என்ன நண்பர்களே... இன்றைய பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திப்போம்... சிந்திப்போம்... 

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


34 கருத்துகள்:

 1. வாசகம் சிறப்பு.  மொழி தெரியாதவர் கூட படித்துப் பயனுறுவது மிகவும் பாராட்டத்தக்கது.  ஆச்சர்யம்தான்.  மின் நூலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி.

   இன்றைய பதிவும் அந்த நண்பர் படித்துவிட்டு இன்று WhatsApp வழி அளவளாவிக் கொண்டிருந்தார்.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. வாசகம் நன்றாக உள்ளது. உண்மையானது கூட... மொழி தெரியாவிடினும், உங்கள் பதிவுகளை அவர் வாசித்து மகிழ்வது அவருடனான உங்களின் நட்பின் சிறப்பை அறிவிக்கிறது. அவருக்கு உடனே நீங்கள் உதவியது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  உங்களது புதிய மின்னூலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.எனக்கும் இதில் ஆர்வம் இருப்பினும், நான் இன்னமும், மின்னூலுக்கு ஏற்ப எதுவும் சிறப்பாக எழுதவில்லையோ எனத் தோன்றி என் ஆர்வத்தை தடை செய்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி. உங்கள் ஆக்கங்களையும் மின்னூலாக வெளியிடலாம்.

   நீக்கு
 3. முதலில் புதி மின்நூலுக்கு வாழ்த்துகள் ஜி

  பிறருக்கு உதவுவதில் ஓர் சுகம் உண்டு இதை அனுபவித்தவர்களுக்கு புரியும்.

  கூகுள் டிரான்ஸ்லேட்டர் முன்பு மாதிரி இல்லை ஜி நல்ல முன்னேற்றம்.

  சமீப காலமாக ஜப்பான் மொழி பதிவுகளை கூகுள் வழியாக படித்து கருத்துரை கொடுக்கிறேன் ஓரளவு சரியாக செல்கிறது.

  ஓர் சவாலாக இதை செய்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

   பிறருக்கு உதவுவதில் சுகம் தான்.

   கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் - நானும் சமீபத்தில் பயன்படுத்தினேன். முன்பை விட பரவாயில்லை.

   ஜப்பான் மொழி - உங்கள் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

   நீக்கு
 4. வாழ்த்துக்கள் ஐய்யா.
  உங்கள் பதிவுகள் பற்றிய தகவல்கள் வேற்று மொழியினரையும் சென்று சேர்வது பிரம்மிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. சந்தோசத்தில் மிகப் பெரிய சந்தோசம், அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பது தான்...

  மின்னூல்களுக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தோசத்தில் மிகப்பெரிய சந்தோசம் - உண்மை.

   வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. மின்னூலுக்கு வாழ்த்துகள்ண்ணே!

  பதிலளிநீக்கு
 7. அன்பு வெங்கட்,
  உங்களது பயணங்கள் எல்லாமே பயன் உள்ளவை தான். மானசீகமாக
  எல்லா இடங்களையும் பார்க்கிறோம்.
  உங்கள் மின்னூல்களும் அப்படியே பயன் படும்.
  அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வாசகம் அருமை. மின்னூலுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. உங்கள் பதிவுகள் - குறிப்பாக - மின்னூல் வெளியிடுவது பற்றியவை- இன்னும் பல நாட்களுக்குப் பலருக்கும் பயன்படுவது உறுதி. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் பற்றிய தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தால் மகிழ்ச்சி இராய. செல்லப்பா ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மொழி புரியாதவரும் உங்கள் பதிவைப் படித்துப் பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. மின் நூலுக்கு வாழ்த்துகள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்திய உங்களுக்கு நன்றி அபிநயா.

   நீக்கு
 11. மின்னூலுக்கு வாழ்த்துக்கள்

  நீங்கள் மின்னூல் போட பிறருக்கும் உதவி வருவது மகிழ்ச்சி.
  //சின்னச் சின்ன விஷயங்கள் கூட நம்மைச் சிறகடிக்கச் செய்யும் என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு புரிய வைக்கின்றன அல்லவா! //

  உதவி சின்ன உதவியா? பெரிய உதவியா என்று இல்லாமல் உதவி செய்வது மகிழ்ச்சிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி கோமதிம்மா.

   உதவி சிறியதா பெரியதா என்பது முக்கியமல்ல செய்வதுதான் முக்கியம் என நீங்கள் சொல்வது சரிதான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. புதிய மின் நூலுக்கு வாழ்த்துகள்! மின் நூல் வெளியிடுவது பற்றி பலருக்கு ஏற்படும் ஐயங்களைத் தீர்க்கும் விதமாக ஒரு பதிவு இடலாமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   சந்தேகங்களை தீர்க்கும் விதமாக ஒன்றிரண்டு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. புதிய மின்னூலுக்கு வாழ்த்துகள். உங்கள் உதவி மிகப் பெரிய உதவி.

  பதிலளிநீக்கு
 14. ஐயா வணக்கம்,
  நான் முத்துசாமி.
  தங்களிடம் ஒரு வினா கேட்கலாமா? நீங்கள் அமேசானில் பதிவேற்றும் மின்நூல்களில் இடம் பெரும் புகைப்படங்கள் குறிப்பிட்ட அளவுகளில் அமைந்துள்ளது. இதற்கென்று நிலையான அளவுகள் வைத்துக் கொண்டு பதிவேற்றுகிறீர்களா? என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். முடிந்தால் விடையளியுங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முத்துசாமி ஐயா.

   நிலையான அளவு படங்கள் என்று இல்லை. சாதாரணமாக படங்களை உள்ளீடு செய்து பிறகு அளவை குறைத்து விடுவது வழக்கம். ஏனென்றால் கிண்டில், அலைபேசி போன்றவற்றில் படிக்கும்போது பெரிய அளவு படம் சேர்ப்பதில் படிப்பவருக்கு கடினமாக இருக்கலாம். அதனால் படத்தின் அளவை குறைத்து விடுவது வழக்கம். தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. வெங்கட்,

  ஹிந்தி கவிஞரையும் கவர்ந்துவிட்டீர்கள் சபாஷ்....உங்கள் புதிய மின்னூலுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோ.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....