திங்கள், 27 ஜூலை, 2020

மின்னூல்கள் - இலவச தரவிறக்கம் - லாக்டவுன் ரெசிப்பீஸ்


அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்! இந்த ஊரடங்கு நேரத்தில் எங்கேயும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே மாலைநேரத்தில் ருசிக்க என் மகளுக்கு செய்து கொடுத்து, முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட ரெசிபிக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவை இப்போது மின்னூலாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன். அமேசான் தளத்தின் வழியே வெளிவந்துள்ள இந்த மின்னூலில் சட்டென்று செய்யும்படியான 25 ரெசிபிக்கள் உள்ளன. பெரும்பாலும் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து தான் செய்திருக்கிறேன். அமேசான் தளத்தின் வழியே வெளிவரும் என் மூன்றாம் மின்னூல் இது. 45 பக்கங்களும், 25 ரெசிபிக்களும் கொண்ட இந்த நூலின் விலை ரூ 50 மட்டுமே. 

அந்த மின்னூலை (லாக்டவுன் ரெசிபீஸ்) இன்று முதல் மூன்று நாட்களுக்கு இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வாசித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன். அமேசானில் அக்கவுண்ட்டும் + கிண்டில் app டவுன்லோடும் செய்து கொண்டால் புத்தகத்தை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். மின்னூலை இலவசமாக டவுன்லோட் செய்து வாசிக்க இணைப்பு இதோ.


எனக்கே மீண்டும் செய்ய நினைக்கும் போது உதவியாக இருக்குமே என்று ஒரு சேமிப்பாக இந்த மின்னூல் :) எல்லோரின் ஆதரவும் கிடைக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் வெளியிட்ட, எனது பயணக் கட்டுரைகள் அடங்கிய எனது இரண்டாவது மின்னூல் - அமேசான் தளத்தில் கிடைக்கிறது. அதற்கான சுட்டி கீழே!கூடவே இன்னும் ஒரு தகவலும் - என்னவரின் ஜெய் மாதா தி மின்னூலும் தற்போது அமேசான் தளத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்ரா (ஜம்மு) அருகே இருக்கும் மாதா வைஷ்ணவதேவி கோவிலுக்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்களும், தகவல்களும் அடங்கிய மின்னூல் இது. தரவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள சுட்டியைக் க்ளிக்கலாம்!


இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழேயுள்ள பக்கத்தில் பார்க்கலாம். 


நூல்களை தரவிறக்கம் செய்து படிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி. 

நட்புடன், 


ஆதி வெங்கட், 
திருவரங்கம்.

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. அஹா மூன்று மின்னூல்களா. வாழ்த்துக்கள் ஆதி ! நாங்களும் வைஷ்ணோதேவி போய் வந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. மின் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 5. மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள் ஆதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 6. மின்னூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்
  தரவிறக்கம் செய்து கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. மிக மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....