செவ்வாய், 21 ஜூலை, 2020

அந்தமானின் அழகு - மின்னூல் வடிவில் எப்போது?

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்.  

முயற்சி, முயற்சி, முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே எதிலும் நிபுணராவதற்கே பின்பற்ற வேண்டிய விதி - வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன். 

*****


அந்தமானின் அழகு பயணத் தொடராக வலைப்பூவில் எழுதும்போது சிலர் என்னிடம் கேட்ட கேள்வி - இந்தப் பயணத் தொடர் எப்போது மின்னூலாக வெளி வரும் என்பது தான். சமீபத்தில் ஒரு நண்பரும் அலைபேசி வழி இதே கேள்வியைக் கேட்டிருந்தார்.  மின்னூலாக வெளியிடுவதற்கான வேலையைத் துவங்கி இருக்கிறேன். விரைவில் வெளிவரலாம். வெளியிட்டதும் இங்கேயும் முகநூலிலும் தகவல் தெரிவிக்கிறேன்.  பொதுவாக குழுவினருடன் பயணம் சென்று வந்தாலும், என்னைத் தவிர குழுவில் உள்ளவர்கள் யாரும் பயணம் பற்றிய தங்கள் எண்ணங்களை எழுதியதில்லை. இந்த முறை அனைவரிடமும் அவரவர் எண்ணங்களை எழுதித் தரச் சொல்லியிருந்தேன். அப்படி எழுதியவற்றை இங்கே எனது தளத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  

நண்பர் ஸ்ரீபதி அவர்களை எல்லோருமாகச் சேர்ந்து எழுதித் தந்தே ஆகவேண்டும் என உசுப்பேத்தி விட மொத்தம் 19 பக்கங்களுக்கு எழுதித் தள்ளிவிட்டார் - பயணத்தில் பார்த்த அனைத்து விஷயங்களும் இதில் எழுதி இருக்கிறார்.  அதைத் தனித் தனிப் பதிவுகளாக வெளியிட்டால் மூன்று அல்லது நான்கு பதிவுகளாக வெளியிட வேண்டியிருக்கும். ஆகையால் ஒரே பதிவில் வெளியிட யோசித்து அவரது பயண அனுபவத்தினை PDF வடிவில் இந்தப் பதிவில் சேர்த்திருக்கிறேன்.  பொதுவாக இப்படிச் செய்வதில்லை என்பதை நீங்களும் அறிவீர்கள்.  நண்பரின் கைவண்ணத்தில் அந்தமான் பயணம் படிக்கலாம் வாருங்கள்.  


என்ன நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்கள். நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை... 

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி. 

16 கருத்துகள்:

 1. வணக்கம் ஜி
  முயற்சி எடுத்து தொழில் நுற்பத்தில் கலக்குகின்றீர்கள்....
  இதுவும் நன்றே.. பிறகு படிப்பேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கில்லர்ஜி.

   முயற்சிகள் - முடிந்த போது செய்கிறேன்! நண்பர் தனபாலன் இதில் முன்னோடி! எத்தனை முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. Sripathi's பதிவு மிகவும் அருமையான சிந்தனைகள், விவரித்த விதம் தொடக்கம் முதல் பயணம் முடிந்தவரை நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியிருந்தார். இந்த பதிவைப் படித்த முக்கால் மணி நேரத்தில் மீண்டும் நாம் எல்லோரும் அந்தமானில் இருந்ததுபோல் ப்பிரம்மைஏற்பட்டது‌‌. இந்த பதிவை எமது கணினியில் one drive ல் சேமித்துவிட்டேன், அந்தமான் பயணம் பற்றிய நினைவுகளை அசைபோட ஏதுவாக இருக்கும். ரங்கராஜன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பதிவு உங்களுக்கும் பிடித்ததாக இருந்ததில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பயண அனுபவம் நன்றாக இருக்கிறது. படங்களும் சேர்த்திருந்தால் அருமையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண அனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   படங்கள் - ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறேன். இங்கேயும் அதனால் சேர்க்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அருமை... உங்கள் அந்தமான் மின்னூலை விரைவில் வரட்டும்...

  இந்த கோப்பு இணைப்பும் சிறப்பு... உங்கள் கோப்பை "ஏரிகள் நகரம் நைனிதால்" இணைத்த தொழினுட்ப பதிவும் ஞாபகம் வருகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடைய பதிவும் நினைவில் இருக்கிறது தனபாலன். நண்பர் மீரா செல்வக்குமார் இப்போதெல்லாம் எழுதுவதே இல்லையே?

   அந்தமான் மின்னூல் - வெளியாகிவிட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வாழ்த்துகள்
  PDF
  அருமை
  குறிப்பாக
  பாண்ட் சூப்பர்ப் (பதிவின்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி கஸ்தூரிரங்கன்.

   ஃபாண்ட் - நண்பர் தனபாலன்/நீச்சல்காரன் வழிகாட்டலில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. மிக அருமையாக ஒன்றையும் விடாமல் மிகவும் ரசித்து எழுதி இருக்கிறார்கள்.

  நினைவுகள் எப்போதும் இருக்கும் அருமையான பயண அனுபவம்.

  மீண்டும் இந்த அருமையான நட்பு குழு பயணம் செய்து மகிழ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   சூழல் சரியான பிறகு தான் பயணிக்க வேண்டும்! பார்க்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பி டி எப் இணைப்பு சிறப்பு.  இந்தப் பதிவின் எழுத்துருக்களும் அழகாய் இருக்கின்றன.  அந்தமான் பயணம் சீக்கிரம் மின் நூலாக வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. pdf என்னால் படிக்க முடியாது ஐய்யா. எனவே யாரிடமாவது குடுத்து படிக்கிறேன்.
  இன்று அடுக்களை இல்லயா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுக்களை - :) முகநூலில் ஒன்றும் எழுதவில்லை அவர். அதனால் இன்றைக்கு வேறு பதிவு அரவிந்த்.

   பிடிஎஃப் - மன்னிக்க வேண்டுகிறேன். தேவையெனில் உங்களுக்கு Word ஃபைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....