ஞாயிறு, 19 ஜூலை, 2020

Ripple - குறும்படம்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


An simple act of caring creates an endless ripple.

 

Ripple – சமீபத்தில் மீண்டும் கண்டு ரசித்த ஒரு குறும்படம். எத்தனை முறை இந்தக் குறும்படத்தினைப் பார்த்திருப்பேன் என என்னிடம் கணக்கில்லை. 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு குறும்படம் – தாய்லாந்திலிருந்து.  நீங்கள் செய்யும் ஒரு சின்ன உதவி உங்களுக்கே, கூட திரும்பி வரக்கூடும். முடிந்த வரை இல்லாதவருக்கு உதவி செய்வோம் என்பதைச் சொல்லும் சிறந்த ஒரு குறும்படம்.  படத்தில் நடித்த அனைவருமே தங்கள் பங்கினை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் அந்தச் சிறுமியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பாருங்களேன்.


 

 

காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!

 

Ripple

 

நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

32 கருத்துகள்:

 1. ஆ...    பலமுறை பார்த்திருக்கிறீர்களா?  நானும் அப்புறமாய் இந்தப் படத்தை ஒருமுறை பார்த்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தபோது பாருங்கள் ஸ்ரீராம். நல்லதொரு குறும்படம் இது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. எப்போதும் வாசகத்துடன் பொருத்தமாக பதிவுகள் தரும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

  குறுப்படமும் நன்றாக உள்ளது. நல்லதொரு நேரங்களில் செய்யும் உதவிகள் நம்மை தக்க சமயத்தில் திருப்பி வந்தடையும் என்பது உண்மைதான். எதையும் எதிர்பார்க்காமல் சுற்றி வரும் உலகமும் உருண்டையானதுதானே..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் படித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 6. குறும்படம் மிகவும் அருமையாக இருந்தது...

  வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
  குறியெதிர்ப்பை நீர துடைத்து

  இந்தக் குறளுக்கு ஒரு பதிவு எழுதி வைத்துள்ளேன்... இந்த காணொளியும் இணைக்கலாம் போல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி தனபாலன். உங்கள் பதிவிலும் இணைக்கலாமே!

   நீக்கு
 7. குறும்படத்தில் இருக்கும் குட்டி குழந்தை கவர்கிறாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார் ராஜசேகர்.

   நீக்கு
 8. குறும்படம். சாயந்திரமாத்தான் பார்க்கணும். இப்போ முடியாது! சத்தமில்லாமல் செய்யும் வேலைகள் தான் இப்போ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் முடிந்தபோது பாருங்கள் கீதாம்மா. நன்றாகவே இருக்கும்.

   நீக்கு
 9. //நீங்கள் செய்யும் ஒரு சின்ன உதவி உங்களுக்கே, கூட திரும்பி வரக்கூடும்//

  அவர் செய்த உதவி அவருக்கே திரும்ப கிடைத்து இருக்கிறது.
  மிகவும் அருமையான குறும்படம்.
  குழந்தை நன்றாக நடித்து இருக்கிறாள். எல்லோருமே சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் படித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. நல்லதோர் குறும்படம். சொல்லும் செய்தியும் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு
 11. விடாமுயற்சியுடன் விடாமல் குறும்படம் பார்த்துவிட்டேன். ரேவதி போட்டிருக்கும் யூ ட்யூப் கொஞ்சம் பெரிசு என்பதால் நாளை மத்தியானம் தான் உட்காரணும். முழுசாப் பார்க்கணுமே! இது நன்றாக ரொம்பவே உணர்வுபூர்வமாக இருந்தது. ஆனால் இம்மாதிரி நடக்கும்/நடந்திருக்கிறது/நடந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

   நீக்கு
 12. இந்தக் குறும்படம் நானும் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. Ripples நல்ல குறும்படம். நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்பதை அருமையாக சித்தரிக்கும் படம். நடித்த குழந்தை உள்ளத்தை உருக்கிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி ராமசுவாமி ஜி.

   நீக்கு
  2. நன்றி ஒருவர்க்கு செய்தக்கால்
   அன் நன்றி அன்றே தருங்கொல் என வேண்டா.
   நின்று தளரா
   தென்னை தாளுண்ட நீரைத்
   தலையாலே தான் தருதலால்.
   +++++++++++++++++++++++++++++++
   அன்பு வெங்கட், எத்தனை அருமையான படம். இனிமை கொடுக்கப் பெருகும்.
   துன்பம் பகிரக் குறையும்.
   மிக மிக நன்றி மா.

   நீக்கு
  3. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. நானும் முன்பே இந்தப் படம் என் தோழி சொல்லிப் பார்த்திருக்கிறேன் . மனத்தைத் தொட்ட படம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....