வியாழன், 30 ஜூலை, 2020

வாசிப்பனுபவம் – ஓலைக்காத்தாடி – நான்கு சக்கரமும் ஆறு கால்களும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே – சார்லி சாப்ளின். இன்றைக்கு இரண்டு நூல்களின் வாசிப்பனுபவம் பற்றிய தகவல்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. இரண்டுமே கிண்டில் வழி வாசித்த மின்னூல்கள் தான். ஒன்று பயணம் பற்றியது! தலைப்பு கவரும் படி இருந்ததால் உடனே தரவிறக்கம் செய்து கொண்டேன். மற்றொன்று கவிதைகள் அடங்கிய மின்னூல்! முதலில் கவிதைகளைக் காணலாம்! 

ஓலைக்காத்தாடி – விமலன்: விமலன் அவர்களின் ஓலைக்காத்தாடி மின்னூல் சமீபத்தில் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொண்டேன். அவரது தாய் தந்தைக்கு சமர்ப்பணம் செய்திருந்த மின்னூல். முதல் கவிதையே மின்னூலின் தலைப்பாக! அலுவலகத்தில் இருக்கும் ஒரு மின்விசிறி பற்றிய கவிதை. சத்தம் அதிகமாக வருகிறது என்று பழுதுபார்க்க மின்பணியாளர் வந்து “இதற்கு செய்கிற செலவிற்கு, மின்விசிறியை மாற்றி விடுவதே மேல்” என்று சொன்னதற்கு அருகிலிருந்த முதியவர் சொன்ன பதில் மனதைத் தொட்டது! “அந்த மின்விசிறி இதுவரை தன் வாழ்வில் எத்தனை பேரை ஆசுவாசப்படுத்தி இருக்கும்? முடிந்தவரை ஓட விடுங்களேன்!”. முதியவர் சொன்னதாகச் சொன்ன வரிகள் பல விஷயங்களை நமக்குச் சொல்லிச் செல்வதாக உணர்கிறேன். ”விருந்தாளி” என்ற தலைப்பிட்ட கவிதையும் மனதைத் தொட்டது. கொத்தனார் வேலை செய்யும் அப்பாவிற்கும் வீட்டு வேலை செய்யும் அம்மாவிற்கும் பிறந்த மகன் – தனது மகனுடன் படித்தவன், வீடு தேடி வந்து, தனது படிப்பிற்காக உதவி கேட்பதைச் சொல்லும் கவிதை! 

மின்சாரம் என்ற கவிதையும் இங்கே குறிப்பிடலாம்! தேநீர் கடை வைத்திருக்கும் ஒரு கடைக்காரருடனான பேச்சு பற்றிய கவிதை. முன்பெல்லாம் பரபரப்பாக பல பொருட்களை விற்ற கடையில் இப்போது தேநீர் மட்டும்! காரணம்… 

“வீட்டுக்காரி கீழ விழுந்ததுல 
இடுப்பு ஒடிஞ்சு போச்சு. 
படுக்கையில கெடக்குறா, 
ஒன்பது மணிக்கு கடை எடுத்துவச்சிட்டு அவளுக்குப் போயி நாந்தான் 
எல்லாம் பாக்கணும்” என்ற அவர் 
காதருகே வந்து மெதுவாக கேட்கிறார். 
“சார் மலம் கழிக்கும் கோப்பை 
எங்கு என்ன விலையில் 
கிடைக்கும்” என! 

பதினைந்து கவிதைகள் கொண்ட சிறு நூல்! அமேசான் தளத்தில் ரூபாய் 50/-க்குக் கிடைக்கிறது. 

நான்கு சக்கரமும் ஆறு கால்களும் – நா. கார்த்திக் மணி. வால்பாறை! எனக்கு மிகவும் பிடித்த இடம்! கல்லூரி சமயத்தில் இங்கே செல்ல திட்டமிட்டுச் சென்று, மலைப்பாதையில் வண்டியைச் செலுத்த இயலாத ஓட்டுனராக அமைந்ததில், பாதி வழியில் திரும்பி வர வேண்டியிருந்தது! மறக்க முடியாத பயணம் அது! வால்பாறைக்கு கோவையிலிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்களில் மூன்று பேராகச் சென்று வந்த பயணம் பற்றிய மின்னூல். பார்த்த இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்குமென்று நினைத்து படிக்கத் தொடங்கினேன். ஆனால் மின்னூல் வழி ஆசிரியர் சொன்ன தகவல்கள் – பயணத்தில் உடன் வருபவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எத்தனை கவனம் கொள்ள வேண்டும் என்பது பற்றிய விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். அவருடன் வந்தவர்களால் கிடைத்த அனுபவங்களையும், அவர்கள் பார்த்த, சந்தித்த நபர்களையும் பற்றிச் சொல்லி இருக்கிறார். இதுவும் மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்ட மின்னூல் தான். அமேசான் தளத்தில் ரூபாய் 49/-க்குக் கிடைக்கிறது. 

என்ன நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை… 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

26 கருத்துகள்:

 1. இரண்டுமே சுவாரஸ்யமான நூல்கள் என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. இன்றைய புதுமொழி அருமை..
  தங்களது வாசிப்பு அனுபவமும் இனிமை..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 3. நூல்களின் விமர்சனம் ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கிறது ஜி.

  விமலன் சாருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. சுவாரசியமான நூல் அரிமுகங்கள், நிச்சயம் படிக்கிறேன்.
  நானும் நீங்கள் பகிர்ந்த RECEIVER தளத்தை தினமும் தொடர்ந்து நூல்கள் தரவிறக்கம் செய்கிறேன்.
  திரு நாகஜோதி போன்ற ஓட்டுனர் எல்லா இடங்களிலும் தங்களுக்கு அமைந்தால் இன்னும் பல நூல்கள் எங்களுக்கு கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
 6. மின் நூல்கள் மதிப்புரைநன்றாக உள்ளது அவற்றை வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

   நீக்கு
 7. நூல் விமர்சனம் நன்று வெங்கட்ஜி!

  விமலன் சகோவுக்கு வாழ்த்துகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 8. மின்னூல் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. வெங்கட் ,

  ஆசைப்படுவதை மறந்து விடு. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே – சார்லி சாப்ளின்… ம்ம்ம்ம் … ஆசை பட்டதை(??) ….. மறக்க முடியாததால்தான் சிலருக்கு பிரச்சனையே.

  இரண்டு புத்தகங்களும் சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. டீக்கடைக்காரரின் அக்கறையும் அன்பும் சிலிர்க்க வைக்கின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

   நீக்கு
 11. மிக நல்ல விமர்சனம் அன்பு வெங்கட்.
  விமலன் அவர்களின் ஓலைக்காத்தாடிக்குள் எத்தனை உருக்கமான விஷயங்கள்.
  அனைத்தையும் நீங்கள் ரசித்து பின் பதிவிடுவது மனதுக்கு இதம்.
  உருக வைக்கிறது.
  அவருக்கு மனம் நிறை பாராட்டுகள்.
  வால்பாறை பற்றிய பயண நூல்,
  கூட்டிச்செல்லும் துணைகளைப்
  பற்றி விரிந்ததும் அழகு.

  அழகான இடம். நூலை எழுதிய கார்த்திக் அவர்களுக்கும்
  வாழ்த்துகள்.
  மிக நன்றி மா. பத்திரமாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 12. மதிப்புரைகள், படிக்கும் ஆவலைத் தூண்டின. ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 13. புத்தகங்களின் விமர்சனம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....