ஞாயிறு, 5 ஜூலை, 2020

எந்தை – குறும்படம் – தந்தையர் தினம்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 

கோபப்பட்டு வென்று விட்டாய் என்றால், உன் கோபம் பெரிது என்று அர்த்தமல்ல; அதைத் தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம்.

 

எந்தை – சமீபத்தில் தந்தையர் தினம் சமயத்தில் யூட்யூபில் பார்த்த ஒரு காணொளி  (அனுப்பி வைத்த நண்பர் சுபரமணியன் அவர்களுக்கு நன்றி). கிராமத்துக் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அப்பா, அலைபேசி வாங்கத் தரவில்லையே என அவரை மனதில் திட்டுவதோடு, தனது செயலாலும் வருந்த வைத்த ஒரு பெண்… கிராமத்தில் இருக்கும் பெரியவருக்கு ஒரு கடிதம் வர, அதைப் படிக்கும்போது தனது தவறு உணர்ந்து கொள்கிறாள்.  நல்லதொரு கான்செப்ட் – சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.  எனக்குப் பிடித்தது.  நடிப்பு பற்றியெல்லாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை – சிலருக்குப் பிடிக்கலாம் – சிலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம்! ஆனால் என்னைப் பொறுத்த வரை நல்லதொரு படம் - பாருங்களேன்.

 

காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!

 

எந்தை

 

நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நலமே விளையட்டும்.

      தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  2. வாசகம் மிகவும் சிறப்பு.  இதை உணர்ந்தவர்கள் மறுபடி சினம் கொள்ள மாட்டார்கள்.

    குறும்படம் -  திருந்துகிறாளா அந்தப் பெண்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      /திருந்துகிறாளா அந்தப் பெண்?/ வழக்கம்ம் போல படம் பார்க்கவில்லை என்று தெரிந்து விட்டது! :)

      தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகம் சிறப்பு
    ஒருவருடைய கடிதம் இந்தப் பெண்ணை உணர வைத்து விட்டது.
    அருமையான கருத்தை சொன்ன பா'டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      கடிதம் இந்தப் பெண்ணிற்கும் தந்தையின் பெருமையை உணர வைத்து விட்டது நல்லதே.

      தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காணொளி மிகவும் பிடித்தது...

    என்றுமே தந்தையர் தினம் தான்... அதை உருவாக்கிய அன்னையர் தினமும் என்றுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      என்றுமே தந்தையர்/அன்னையர் தினம் தான்! - உண்மை.

      தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வாசகம் செம செம ஜி. இதனை நான் வேறு விதத்தில் சொல்லுவதுண்டு அடிக்கடி.

    எந்தை குறும்ப்படம் பார்த்திருக்கிறேன். மீண்டும் பார்த்தேன் இப்படம் கிட்டத்தட்ட நீங்கள் இங்கு பகிர்ந்திருந்த ஒரு குறும்படத்தின்/விளம்பரத்தின்? கருத்து போல் இருந்தது எனக்கு. அவள் அப்பா ஆட்டோ ஓட்டுநர். அவர் ஒரு மொபைல் வாங்கி வைத்திருப்பார் தன் மகளுக்கு...அவருக்கு விபத்து ஏற்படும்...அப்போது அவர் கடிதம் பார்த்துப் புரிந்துகொள்வாளே அப்படம்.

    ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      ஆமாம் இந்தப் படமும் முன்பு பகிர்ந்த விளம்பரம்/குறும்படம் போலவே! ரசித்ததில் மகிழ்ச்சி.

      தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. "தாங்கிக் கொண்டவர்களின் பொறுமை பெரிது என்று அர்த்தம்"
    மிகவும் அருமையான சொற்றொடர். குறும்படம் காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார் ராஜசேகர் ஜி.

      குறும்படம் முடிந்த போது காணுங்கள்.

      தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அருமையான குறும்படம். அதுவும் இறுதியில் வரும் அறிவுரைகள் அருமையயானவை. படத்தை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அருமையான குறும்படம் . நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  9. படம் நன்றாக இருக்கிறது வெங்கட்ஜி.
    வாசகம் மிகவும் பிடித்தது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  10. குறும்படம் இப்பொழுதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன் நல்ல மெசேஜ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி.

      நீக்கு
  11. குறும்படம் நன்றாக இருக்கிறது.
    அன்பை வழங்கிவிட்டாள் அந்த பெண்.
    கடைசியில் அன்பைப்பற்றி சொல்லியது அருமை.
    அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      /அன்பை கொடுத்தால் அன்பை பெறலாம்/ உண்மை.

      நீக்கு
  12. வாசகம் அருமை. குறும்படம் சூப்பர். கடிதம் படித்த பெண்ணின் குரலும் அந்தக் குரல் வெளிப்படுத்திய உணர்வுகளும் அருமை. வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகள் குறும்படம் தயாரித்தவர்களுக்கும், இயக்கியவருக்கும், நடித்தவர்களுக்கும் சேரட்டும்!

      வாசகம், குறும்படம் இரண்டுமே உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. குறும்படம் பார்த்து ரசித்தேன். நன்றாக உள்ளது. அதில் நடிப்பவர்களும் நன்றாக நடித்துள்ளனர். வசனங்கள் சிறப்பாக உள்ளது. இறுதியில் சொல்லிச் செல்லும் வசனங்களும் உருக்கமாக இருந்தது. தந்தையர்கள் பாசத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் சிறந்த படமொன்றை பகிர்ந்தமைக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம்/குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....