ஞாயிறு, 12 ஜூலை, 2020

அம்மா – குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


நன்றாக பேசி பழகுபவன் எல்லாம் நமக்கு நல்லதையே செய்வான் என்று நினைக்காதே. தேளின் கொடுக்கில் மட்டுமல்ல… சுவையான தேன் சேகரித்துக் கொடுக்கும் தேனியின் கொடுக்கிலும் ’விஷம்’ தான் இருக்கிறது.


அம்மா – சமீபத்தில் யூட்யூபில் பார்த்த ஒரு காணொளி.  படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவி – அவளுக்கு ஒரு குழந்தை – ஊரே அவளைப் பற்றி புறம் பேசுகிறது – புறம் பேசுவதற்கு மனிதர்களுக்குச் சொல்லித் தரவா வேண்டும்? பலரிடம் இயல்பாக இருக்கும் குணம் அதல்லவா? அவள் குழந்தையையும் வளர்த்து, கல்லூரிக்கும் சென்று படிக்கிறாள். குழந்தையும் வளர்ந்து பள்ளிக்குச் செல்கிறது.  மாலை நேரத்தில் ஓவியம் கற்றுக் கொடுக்க வருகிறார் ஒரு ஓவிய ஆசிரியர்.  தன்னையும் அம்மாவினையும் ஒரு ஓவியமாக வரைகிறாள் அந்தச் சிறு குழந்தை.   அதிக வசனங்கள் இல்லாமல் மிகக் குறைவான வசனங்களே – காட்சிகளிலையே கதை கொண்டு செல்லும் திறமை.  இந்தக் குறும்படம் எனக்குப் பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடிக்கலாம் – தாய்லாந்து நாட்டிலிருந்து இந்த குறும்படம். மிகக் குறைவான வசனங்கள் என்று சொல்லி இருந்தேன் – அவற்றுக்கும் ஆங்கில சப் டைட்டில்கள் உண்டு – அதனால் தைரியமாகப் பார்க்கலாம்!  பாருங்களேன்!
காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


அம்மா


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 கருத்துகள்:

 1. வெங்கட் , குறும்படம் சிறப்பு. இப்படியும் இனிய பெண்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோ.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. காலை வணக்கம் சகோதரரே

  அருமையான வாசகம். குறும்படம் நன்றாக உள்ளது. ஒரு அம்மாவின் பாசத்தை அதில் நடிப்பவர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அந்த குழந்தையை அவர் கண்டெடுக்கும் போது என் மனமும் பதைத்து கண்களில் நீர் வந்து விட்டது. அவரும் நன்றாக உணர்ச்சிவசப்பட்டு நடித்துள்ளார். குழந்தையின் நடிப்பும் நன்றாக உள்ளது. அம்மாவின் பாசத்தில் ஜனிப்பதிலிருந்து கட்டுண்டு வளர்ந்து வருவதால், நம் நினைவிருக்கும் வரை பிரிக்க முடியாத ஒரு பந்தம் அம்மா..! படம் எனக்கும் ரொம்பவும் பிடித்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம், குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. குறும்படத்தினை நீங்களும் ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 5. தாய்ப்பாசம் என்பது உலகம் முழுவதும் ஒன்றுதான்.

  வாசகம் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படமும் வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 6. குழந்தையின் புன்முறுவல் நமக்கும் ஒட்டிக் கொள்கிறது எதார்த்தமான நடிப்பில்.அருமையாக தாய்மையின் அழகை வெளிப்படுத்தினாலும் அந்த குழந்தையை பெற்ற தாயை நினைக்கும்போது முள் போல் தைப்பதும் உண்மை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /குழந்தையின் புன்முறுவல் நமக்கும் ஒட்டிக் கொள்கிறது./ - உண்மை.

   /அந்த குழந்தையை பெற்ற தாயை நினைக்கும்போது முள் போல் தைப்பதும் உண்மை/ - அதே. அவருக்கு என்ன அப்படி ஒரு சூழலோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நுஸ்ரத் சலீம்.

   நீக்கு
  2. அவருக்கு என்ன அப்படி சூழலோ it shows ur maturity.ஆனாலும் ஒரு பையில் குழந்தையை பார்த்ததும் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை.கூடவே நம் நாட்டில் சாக்கடையில் எடுக்கப்பட்ட சுதந்திரமும் ஞாபகத்துக்கு வருகிறாள்.

   நீக்கு
  3. பையில் குழந்தையைப் பார்த்ததும் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை - உண்மை தான். அக்குழந்தை என்ன தவறு செய்தது - அப்படி அங்கே கிடைக்க!

   சாக்கடையில் எடுக்கப்பட்ட சுதந்திரம் - வேதனை.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நுஸ்ரத் சலீம் ஜி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 9. குறும்படம் மிக அருமை.
  குழந்தையை குப்பை போடும் இடத்தில் கண்டு எடுக்கும் போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
  எல்லோரும் அருமையாக நடித்து இருக்கிறார்கள். அம்மாவும் குழந்தையும் மிக அருமையாக நடித்து இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முஹம்மது நிஜாமுத்தீன் ஜி.

   நீக்கு
 11. அருமையான வாசகத்துடன் பதிவில் இணைத்துள்ள குறும்படம் மனதைத் தொட்டது. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 12. அருமையான வாசகம்.
  உலகில் அப்படித்தான் இருக்கிறது..
  நன்றி மா.

  அம்மா குறும்படம் தியாகத்தின் சிகரம்.
  அந்தச் சின்ன வயதில் இவ்வளவு பெரிய பொறுப்பை
  எடுத்துக் கொள்ள எத்தனை கருணை வேண்டும்!!!

  இத்தனை அழகான அம்மா,பெண் பாசத்தை
  அற்புதமான வகையில்
  படம் எடுத்திருக்கிறார்கள். நடிப்பும் சிரிப்பும்
  மனதை கொள்ளை கொள்கிறது.
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....