திங்கள், 6 ஜூலை, 2026

Post 3866 - 6 ஜூலை 2026 : இன்று கடை விடுமுறை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


******

இன்று கடை விடுமுறை!

இத்தனை நேரம் பதிவு வெளிவந்து இரண்டு மணி நேரம் ஆகியிருக்க வேண்டுமே? ஏன் வரவில்லை என்ற எண்ணம் பதிவினை வாசிக்கும் ஶ்ரீராம், கீதா ஜி போன்ற நண்பர்களுக்கு வந்து இருக்கும். வழக்கமாக முதல் நாளே பதிவு Schedule செய்து வைப்பது வழக்கம். சில சமயங்களில், வார இறுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கான பதிவுகள் கூட Schedule செய்து வைத்திருக்கிறேன். 

ஆனால் சமீபமாக வீட்டுச் சூழல்கள், பணிச் சுமைகள், திட்டமிடா பயணங்கள் காரணமாக அப்படி Schedule செய்து வைக்க முடிவதில்லை. அதனால் கடைகளில் எழுதி வைப்பது போல “இன்று கடை விடுமுறை” என்று ஒரு பதாகை வலைப்பூவில் கூட வைக்க வேண்டிய கட்டாயம். குடும்ப நிகழ்வுகள் காரணமாக சிறு பயணம் ஒன்றில் இருப்பதால் இந்தப் பதிவினை கூட அலைபேசி வழி தான் தட்டச்சு செய்து பதிவிடுகிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இப்படியான சிறு பதிவுகள் வரலாம் அல்லது வராமலும் போகலாம். 

உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா, என்று ஒரு படத்தில் விவேக், ஆளில்லா டீக் கடையில் டீ ஆற்றும் சர்தார்ஜி இடம் கேள்வி கேட்பாரே, அந்த நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது எனக்கு. இரண்டு நாட்களில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு…..  




















மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…..


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

06-07-2026



1 கருத்து:

  1. ​போட்டோக்கள் அழகாக உள்ளன. கல்லைக்கண்டால் நாயைக்காணோம் நாயைக்கண்டால் கல்லைக்காணோம் என்று தருணம் வாய்த்தால் காமெரா இல்லை காமெரா இருக்கும்போது தருணம் வாய்ப்பதில்லை என்றே அமையும். ஆனால் ஏரிப் படங்கள் தக்க தருணத்தில் சரியான கோணத்தில் எடுக்கப்பட்டு சிறப்பாக உள்ளன. கடைசி தென்னை ஷாட் பாலு மகேந்திரா ஷாட் போல் அருமையாக உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....