ஞாயிறு, 5 ஜூலை, 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி எழுபத்தி எட்டு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கோவை உலா - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



முருகா கீழ பாரு தண்ணிக்குள்ள உன்ன மாதிரியே ஒரு பையன், அட என்ன மாதிரியே ஒரு bro... ஐ...


ஹ்ம்ம்… அது நம்மளோட பிரதிபலிப்புதான்னு சொல்லி இவனுக்குப் புரியவெக்கறதுக்குள்ள நம்ம தாவு தீரப்போவுது...☹️என்னம்மா photo எடுத்தாச்சா? 


ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



அம்மா கொஞ்சமா புதுசா fresh ஆ எடுத்த அந்த வெண்ணையக் குடேன்...


அதென்ன கிருஷ்ணா நீ வெண்ணைக்கு கைய நீட்டினா அது பெருசாயிடுது.. இல்ல என் பிரமையோ.... 


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



ஏன் லக்ஷ்மி, நீலத் தாமரை கிடைக்கலயோ? 


தேடினா கிடைச்சிருக்கும்.... ஆனா எனக்கு செந்தாமரைதான் பிடிக்கும். contrast ஆ எடுப்பா இருக்கில்ல? ஆமா ஏதோ குரல்ல நக்கல் இருக்கற மாதிரி இருக்கு?🤨


சே சே… நீ எவ்வளவு efforts எடுத்திருக்கன்னு பாராட்டினேன் லச்சு.... என் டிரஸ்க்கு மொதக்கொண்டு...😊(நல்ல வேளை சங்கு வெள்ளைலதான் கிடைக்கும்...😌)


ஓம் விஷ்ணுவே நமஹ🙏🏻🙏🏻🙏🏻



*******



பாத்து கிருஷ்ணா… ரொம்ப pressure கொடுக்காத.. லேசா அந்த துவாரத்துல வாய் வெச்சு ஊதினா போதும்....


(கன்னம் உப்பிருக்கறதப் பாத்தா flute பறந்தாலும் ஆச்சர்யபடறதுக்கில்ல..😕) 


தெரியும்மா... அங்க ஏதோ தூசி  அடைச்சிக்கிட்டிருந்துது… அதான்.... என்னை கலாய்க்கலைன்னா உனக்கு பொழுது போகாதே......😕


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



அப்பாடி எவ்வளவு பெரிய பட்டாம்பூச்சி! எத்தனை அழகா இருக்கு இல்ல கிருஷ்ணா...


ஆமாமாம். இப்ப நீ பழத்துலேர்ந்து கைய எடு  🐒 bro அப்பத்தான் என்னால உரிச்சுத் தர முடியும்...


(தருவானா??........

நம்பலாமா… தருவான் தருவான்… நம்ம கிச்சா தான...)


monkey bro உன்னோட mann ki baat கேட்டுடுச்சு… கவலைபடாதே சகோதரா...


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******




Flute ஐ கையில எடுத்துக்கணும், அதே சமயம் butter ம் கைல இருந்தா better... குனிஞ்சு எடுக்கும்போது தலப்பாகை (அது இப்போ ரொம்ம்ம்ம்ப முக்கியம்!!!யாரு கேட்டா...🤨காதுல பூ வேற!) கீழ விழக்கூடாது....ஆனா tension ஐ முகத்துல காட்டிக்காம smile பண்ணணும்.... சே... இந்த உலகத்துல விஜிம்மா...இவ்வளவு challenges தேவையா....அதுவும் ஒரு குட்டிப்பாப்பாக்கு...😒


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******




*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

5 ஜூலை 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....