அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*********
Additive Colours - 28.07.2026:
Red, blue, green இந்த மூன்று நிறங்களும் தான் Additive colours! இவற்றில் வேறு நிறங்களை சேர்ப்பதால் புதிய நிறம் உண்டாகிறது! எந்த இரண்டு நிறங்களைச் சேர்ப்பதால் புதிய நிறம் உருவாகிறதோ, அந்த இரண்டு நிறங்களும் இடம்பெறணும்! அவற்றோடு புதிய நிறமும் இருக்கணும்! என்ற இலக்கை வைத்து மகள் டிசைன் செய்த ஆடைகள்!
இதைக் கேட்டதும் எனக்குத் தோன்றியது என்னவென்றால் பெற்றோரின் வழியே பிள்ளைகள் இவ்வுலகில் ஜனிக்கிறார்கள்! அவர்கள் எந்தவொரு சூழலிலும் பெற்றோரையும் பெருமைப்படுத்தணும், பிள்ளைகளும் தனித்தன்மையோடு மிளிரணும்! என்ன நான் சொல்வது சரி தானே...:)
********
குரு பூர்ணிமா - 29.07.2026:
இன்று தான் வேதங்களை நான்காக தொகுத்து தந்தவரும், ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படும் லட்சம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய மகாபாரதத்தை உலகுக்கு தந்தவருமான வியாச மகிரிஷி அவதரித்த தினம்! உலகுக்கே குருவான இவர் அவதரித்த திருநாளை குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது! இன்றைய நாளில் நான் மதித்து வணங்கும் குருக்களுக்கு என் வந்தனங்கள்! 🙏 🙏
*******
கங்கா ஆத்து சமையல் - 29.07.2026:
இன்னிக்கு சமையல அம்மா(மாமியார்) பார்த்தா ‘என்ன! இன்னிக்கு கங்கா ஆத்து சமையலான்னு கேட்பா!’ சட்டுன்னு அவா பேர் எனக்கு ஞாபகம் இல்ல! அம்மா எப்பவும் சொல்வாளேன்னு நானும் ரொம்ப நாளா யோசிச்சு பார்க்கறேன்! கங்கான்னு தான் சொன்ன ஞாபகம்!
அவா ஆத்துல கஷ்ட ஜீவனம்னு கொஞ்சமா காய் வாங்கி அதுலயே கறியும் அதையே போட்டு குழம்பும் பண்ணி இப்படி காலத்த ஓட்டுவாளாம்! எப்பக் கேட்டாலும் வெண்டக்கா சாம்பார், வெண்டக்கா கறி, கத்திரிக்கா சாம்பார், கத்திரிக்கா கறி இப்படித்தான் சொல்வான்னு சொல்லியிருக்கா. இன்னிக்கு எதேச்சையா குழம்பும் கறியும் வெண்டக்காயா போனதும் எனக்கு அம்மா சொன்னதெல்லாம் தான் ஞாபகம் வந்துடுத்து!
இடைவெளி - 29.07.2026:
எத்தனையோ நெருக்கடியான சூழலிலும், வீட்டின் பரபரப்பான நேரத்திலும், இடைவிடாத வீட்டு வேலைகளுக்கு நடுவிலும், வீட்டுப் பெரியவர்களையும் கவனித்துக் கொண்டு, அவர்களின் Hallucinationsகளுக்கு மத்தியிலும் தொடர்கள், சிறுகதைகள், பதிவுகள் என்று தொடர்ந்து எழுதியிருக்கேன்! அதிகாலை நேரத்தில் அவர்கள் யாரையும் தொந்தரவு செய்துவிடாமல் சமையல் மேடை மீது அமர்ந்து கொண்டு டைப் செய்திருக்கிறேன்!
எனக்கென்று ஒரு android phone வாங்கியது முதல் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ‘ஒரு விரல் புரட்சி’யாக செல்ஃபோனில் தான் பதிவுகளை எல்லாம் டைப் செய்து வந்திருக்கிறேன்! எதற்காக இந்தக் கதைகள்?? எல்லாம் தான் எங்களுக்குத் தெரியுமே என்கிறீர்களா?? உண்மை தான்!
சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு தம்பதி சமேதராய் வருகை தந்திருந்த வலைப்பதிவர் ‘நெல்லைத் தமிழன்' அவர்கள் கூட அப்படித்தான் சொன்னார்! அவரை நான் பார்த்தது முதல்முறை என்றாலும் எங்கள் இருவரின் பதிவுகள் வழியே எங்களைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தார்! நீங்களும் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன்!
அவரே இன்று எங்கள் வலைப்பூவில் வெங்கட், ஆதி வெங்கட் பதிவுகள் வெளிவந்து நாளாகி விட்டதே! இத்தனை இடைவெளி இருக்காதே! என்று அன்போடு விசாரித்திருந்தார்! உண்மை தான்! நேரம் எப்படி மின்னல் வேகத்தில் செல்கிறது என்று தெரியவில்லை…:) அத்தனை நெருக்கடியிலும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்த நான் தான், இப்போது சிலநாட்களாக எழுத்திலிருந்து விலகி இருந்திருக்கிறேன்!
இன்றைய குரு பூர்ணிமா நாளில் இனி! தொடர்ந்து எழுத ஆர்வம் வர வாக்தேவியின் அருட்கடாட்சமும் வியாச மகிரிஷியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கணும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்! 🙏 🙏
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
29 ஜூலை 2026








வனவாசம் முடிந்து விட்டதா?
பதிலளிநீக்குஆமாம் சார். நேரமின்மையும் எழுத இடைவெளி ஏற்படக் காரணம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
//நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். //
பதிலளிநீக்குஆமாம். நல்லதொரு வாசகம்தான்,
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குAdditive colours பற்றி தெரிந்து கொண்டேன். அதற்கான உங்கள் விளக்கம் ரசனை.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குகங்கா ஆத்து சமையல் நெகிழ்ச்சி...நாங்களும் அபப்டி இருந்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஉங்கள் மெனுவில் வெண்டைக்காய் மோர்க்குழம்பும் சேர்த்திருக்கலாம்!
மோர்க்குழம்பே நான் செய்வதில்லை என்பதால் எனக்குத் தோன்றவில்லை...:) மோர்க்குழம்பு எனக்குப் பிடிக்கும் என்றாலும் இங்கு செல்லுபடியாகாது...:) வெண்டக்காய் போட்டு வத்தக்குழம்பு செய்வேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நெல்லைத்தமிழன் தம்பதிகள் வருகை - மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமுகநூலிலும் உங்கள் பதிவு எதுவும் சமீபத்தில் என் கண்ணில் படவில்லை. இந்த கலர் சமாச்சாரம் எழுதி இருந்ததை நேற்று பார்த்தேன். நீங்கள் எழுதி என் கண்ணில் படவில்லையா, நீங்களே எழுதவில்லையா, தெரியவில்லை.
குருபூர்ணிமா நாளில் மீண்டும் தொடங்கி இருப்பது சந்தோஷம். இனி இடைவெளியின்றி தொடரட்டும்.
முகநூலும் யாருடைய பதிவுகளையும் காண்பிப்பதில்லை என்பது உண்மை தான் என்றாலும் நானும் எழுதவில்லை..:)
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. எதுவுமே அளவோடு இருந்தால், எல்லாமே சிறக்கும் இல்லையா.? அருமையான வாசகம்.
நிறங்கள் பற்றிய தங்கள் கணிப்பு நன்று. உங்கள் மகளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
குரு பௌர்ணமி அன்று தங்களுக்கு பூரண நல்லாசிகள் கிடைக்க நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கங்கா சமையல் பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது. நானும் இப்படித்தான் ஒரே காய்யுடன் சில சமயம் சமையல் செய்வேன்.
சகோதரர் நெல்லைத்தமிழர் அவர் மனைவியுடன் தங்கள் வீட்டுக்கு வந்துள்ளதை அறிந்து மகிழ்ந்தேன். அவரின் ஆன்மீக எண்ணங்கள் அனைவரையும் சிறப்புற வாழ வைக்கும். இனி உங்கள் பணிகளும் தொய்வின்றி நல்லதாக தொடங்கும். அனைத்தும் இறைவனருள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அவரின் ஆன்மீக எண்ணங்கள் எல்லோரையும் நன்றாக வைத்திருக்கட்டும்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.
கலர் காம்பினேஷன், ஆடை வடிவமைப்புகள் மிக அருமை.
பதிலளிநீக்குஓவியத்தில் ஆரம்பித்து வாழ்க்கைப் பாதையாக வடிவமைப்பை எடுத்துக்கொண்ட மகள் அவரது துறையில் நல்லா வரட்டும்.
இந்த ஆடைகள்லாம் ரெகுலராக போட்டுக்கொள்வது போல இல்லையே. பார்ட்டிகளுக்கான ஆடை வடிவமைப்பு போல இருக்கு
ஆமாம் சார். இது ரெகுலர் ஆடை இல்லை! அவளின் பாடத்திற்கான நியதிகளை பின்பற்றி வரைந்தது!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
நான் கமலா ஹரிஹரன் மேடம் மாத்திரம்தான் மொபைலில் (அதிலும் ஐபேட் மாதிரியோ என நினைத்தேன்) நீள நீள பதிவுகள், கருத்துகள் எழுதறாங்கன்னு நினைத்தேன்.
பதிலளிநீக்குநீங்க மொபைல்லதான் இதுவரை எழுதியிருக்கீங்க என்பதை நம்பவே முடியலை. அசுர உழைப்பு, ஆர்வம் இருந்தாலொழிய சாத்தியமே இல்லை. பயணத்தின்போது என் பதிவுகளுக்கு மறுமொழி பெரியதாக எழுதவேண்டிய அவசியம் வரும்போதும் என்னால் எழுத முடியாது. மடிக்கணினி இருந்தால்தான் எழுதுவேன்.
மனம் நிறைந்த பாராட்டுகள் உங்கள் உழைப்புற்கு.
தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சார். எனக்கு பழகிவிட்டது.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
தொடர்ந்து எழுதுங்க என்று சொல்லும்போதே...மொபைலிலேயே பதிவுகள் எழுதுவதை நினைத்து. உடல் ஒரு மிஷின்... அதற்கும் தாங்கும் சக்தி குறையும் என்பதையும் சொல்ல விழைகிறேன். 24 வயசுல எங்க அப்பா வீட்டுல பெரிய மாமரத்தில் ஏறி பல கிளைகள் போய் மாங்காய் பறித்ததும் ஐம்பதுகளில் அடிப்பாகத்தில் ஏணி வைத்துக்கொண்டு கொஞ்சம் ஏறினாலும், போதும் எதுக்கு ரிஸ்க் என்று தோன்றியதையும் நினைத்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குஉண்மை தான்! உடல் எனும் மிஷினுக்கும் அவ்வப்போது ஓய்வும் தேவை தாங்கும் சக்தியும் தேவை. தங்களின் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
ரோஷ்ணியின் ஆடை வடிவமைப்பு அருமை.
உங்கள் பதிவை முகநூலில் படித்தேன்.
//குரு பூர்ணிமா நாளில் இனி! தொடர்ந்து எழுத ஆர்வம் வர வாக்தேவியின் அருட்கடாட்சமும் வியாச மகிரிஷியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கணும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்! 🙏 🙏//
இறையருளும், குருவருளும் துணை நிற்கட்டும்.
தொடர்ந்து எழுதுங்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்கு'
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் மனைவியுடன் வந்தது மகிழ்ச்சி. நிறைய கருத்து பரிமாற்றம் நடந்து இருக்கும்.
ஆமாம்மா. நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம். இனிமையான மாலைப்பொழுதாக அமைந்தது!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
குருபூர்ணிமா நாளில் குருவை வணங்குவோம்.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் அவர்களின் சந்திப்பு மகிழ்வான தருணமாக இருந்திருக்கும்.
ரோஷிணிக்கு வாழ்த்துகள்.
ஆமாங்க மாதேவி. நெல்லை சாரின் சந்திப்பு இனிமையான மாலைப் பொழுதாக அமைந்தது.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.