அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சினிமா உலகம் - Beyond Periods பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
ஒண்ணுக்கு ரெண்டு வேல் அதுவும் வெள்ளில வெச்சுக்கட்டும், முத்துலயே எல்லா நகையும் போட்டுக்கட்டும், வெள்ளைப் பட்டும் உடுத்திக்கட்டும்... வேண்டாங்கல... அசத்தலா நல்லாத்தான் இருக்கு... ஆனா எனக்கு மூணுவரி முத்து மாலையோட நிறுத்தியிருக்கலாம்.... என் நிறமென்ன! அழகென்ன! ஹ்ம்ம்.... எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்....😒
ஓம் முத்துவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணா பூஜை முடிஞ்சு ஆரத்தியும் காண்பிச்சாச்சு..
கிளம்பலாமா? வா.
நீங்க கிளம்புங்கோ மாமா. நான் கொஞ்சம் தாச்சினுட்டு வரேன். அசதியா இருக்கு... கவலைப் படாதீங்கோ. பிரசாதத்தை எல்லாம் நான் பத்திரமா பாத்துக்கறேன். (நீங்க திரும்பி வரும்போது அது கொஞ்சம் குறைஞ்சிருந்தா கண்டுக்காதீங்கோ...😜)
சர்தான்... விநியோகத்துக்கு மிஞ்சும்னு நினைக்கிறேன்....😕
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
இந்தா பழம், ஆ காட்டு... வேற என்ன வேணும் என் பசு செல்லத்துக்கு?
ஒண்ணும் வேணாம் கிருஷ்ணா, உன்னோட அன்பே போதும்... அப்புறம், அந்த flute ஐ கழுத்து வரைக்கும் கொண்டு வந்துட்ட... அப்படியே ஒரு ரெண்டு இன்ச் இறக்கி light ஆ சொரிஞ்சு விடு பாப்போம்....
சர்தான், என் flute க்கு நல்ல வேலை..... கொஞ்சினா போச்சு....🤨
ஜெய் ஶ்ரீ கோபால கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
கிருஷ்ணா எனக்கொரு சந்தேகம்...
Very good👏🏻 இப்பிடி கேட்டு தெரிஞ்சுக்கிட்டாத்தான் அறிவு வளரும்... கேளு ராதா...
அதில்ல கிருஷ்ணா, இரவு நேரம், நிலவின் ஒளி நம் பின்பக்கத்தில் விழுகிறது. நம்ம பக்கத்துல, முன்னால எந்த விளக்கும் இல்ல, எங்கிருந்து புத்தகத்துல வெளிச்சம் விழுது?
(அதான பாத்தேன்.. எங்கடா subject லேர்ந்து ஏதாவது சந்தேகம் கேக்கப்போறாளோன்னு நெனச்சு ஒரு நிமிஷம் திகைச்சுப் போயிட்டேன்..😏)
அது உன் சந்திரவதனத்திலிருந்து பெருகும் ஒளியால் ராதா...😇
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
********
இது மாதிரி நின்னா migraine தலவலி போயிடுமா நாதா????
ஆமா தேவி... யாரோ ஜோரா மசாஜ் பண்ணி விடற மாதிரி இருக்கும்... (ஆனா நீ நின்னா ஒரு புது தலைவலி ஆரம்பிக்கும், எனக்கு......😕)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
********
ஏன் நந்தி bro, பசங்க கைல பூக்களைக் கொடுத்துட்டு மகேஸ்வரனும் தேவியும் சுவாரசியமா பேசிக்கிட்டிருக்காங்க... நம்மளைப் பத்தி யோசிச்சாங்களா? முருகனோட வாகனம் வேற என் பின்னால நின்னு தோகை விரிச்சு கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டிருக்கு....
இவங்க பேசி முடிக்கறதுள்ள நாம வேணா அந்த அருவில light ஆ தலய நனைச்சுட்டு வரலாமா...
தும்மினா தெரிஞ்சுடும். பேசாம கம்முனு குந்து இங்கயே...... என்ன
பேசிக்கறாங்கன்னுதான் கொஞ்சம்
கவனிப்பமே.....
ஒட்டு கேக்கலாம்கிறதை polished ஆ சொல்ற... ஹ்ம்ம்..
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
********
ஸ்ஸ்ஸப்பப்பா இப்பவே கண்ணக் கட்டுதே..... instalment basis ல சாப்பிட்டிருக்கணும்.... இன்னிக்கி ஆஷாட ஏகாதசியாச்சா.... வேற சாப்பாடு கிடையாது....
அதுவும் ரெண்டு பானையப் பார்த்தவுடனே கொஞ்சம் தடுமாறிட்டேன்.... சரி ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு மிச்சத்தப் பாத்துக்கலாம்....
அப்புறம் மொத்தமா வாயை அலம்பிக்கிட்டா போச்சு... இல்ல அம்மா பாத்தா தொடச்சி விடப்போறா... என்ன, கொஞ்சம் திட்டிக்கிட்டே செய்வா.. அதனால என்ன? நாம கேக்காததா....😏
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
26 ஜூலை 2026








படங்களும் அழகு. வரிகளும் ரசனை. ரசித்தேன். சிரித்தேன்.
பதிலளிநீக்குபதிவினை ரசித்தமைக்கு நன்றி ஶ்ரீராம்.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குபடங்களும் அதற்கு கொடுத்த வரிகளும் அருமை.
குட்டி கிருஷ்ணனை ரசித்தேன்.
வாசகம் மற்றும் பதிவினை ரசித்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குஎன்னாச்சு.. இன்னும் வெங்கட், ஆதி வெங்கட் பதிவுகளே வரலை.. இவ்வளவு இடைவெளி இருந்ததில்லையே
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன். தங்கள் அன்பிற்கு நன்றி. பதிவுகள் வெளியிடுவதில் கொஞ்சம் தாமதம் ஆகிறது. விரைவில் வெளியிட முயற்சிக்கிறோம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நீக்குபடங்களும் வரிகளும் ரசனை.
பதிலளிநீக்குபிரசாதத்தை பத்திரமா பார்த்துப்பேன் ;)
சிவனாருக்கு வந்த தலைவலி ஹா..ஹா.
ஆ ஷாட ஏகாதசி.....ஹா...ஹா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி ஜி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்கள் பகிர்ந்த அருமையான படங்களும், அதற்கு பொருத்தமான வாசகங்களும் மிக நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன். அவர்களது இந்த சொல்லவொண்ணா திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ரசித்த உள்ளங்களுக்கு (என்னை வானளாவ புகழ்ந்த கமலா மேடத்திற்கு special ஆக) மிக்க நன்றிகள்.
பதிலளிநீக்குவிஜி.