அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அலைபேசி வழி பதிவுகள் - எழுத்தாளருடன் ஒரு சந்திப்பு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
அடேயப்பா, தன்னோட dress மாதிரியே படுக்கையையும் ready பண்ணி படுத்துக்கணுங்கிற ராதாவோட அழகுணர்ச்சியை பாராட்டத்தான் வேணும்… (ஏற்கெனவே ஏகப்பட்ட நகை, dress முழுக்க ஜரிகை இதுல தலைகாணி உரைல வேற சம்கி, ஜரிகை… எப்படி நிம்மதியா தூக்கம் வருது! உறுத்தாதா..😧)
என்ன கிருஷ்ணா குறு குறு ன்னு பாக்கற?
முழுச்சுக்கிட்டியா?? எப்படி ஒரு பூ மாதிரி தூங்கறேன்னு பாத்து ரசிச்சேன் ராதா.... இந்தா coffee...😊
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
கிருஷ்ணா எனக்கு ஒரு சின்ன ஆசை....
சொல்லு ராதா....
நீ flute ல கண்ணே கலைமானே வாசிக்கணும், அதைக் கேட்டுக்கிட்டே நான் தூங்கணும்...😌
ராதா, This is too much. விட்டா கைல அலுமினியப் பாத்திரத்தக் குடுத்து என்னை ஆட்றா ராமா ன்னு ஆடச் சொல்லுவ... ம்ம்ம்ம் C,mon.. எழுந்திரு,....(சின்ன ஆசைங்குபோதே நெனச்சேன்...😕.)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
ஒரே ஒரு பூவத்தானே வெக்கச் சொன்னேன். அதுக்கு என்ன இத்தனை யோசனை கிருஷ்ணா?
நீ ஈசியா சொல்லிட்ட ராதா… அந்த ஒரு பூவுக்குள்ள இடத்தைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்...
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
இப்பிடி மயக்கற மாதிரி திரும்பி பாக்கறது, சிரிக்கிறது இதிலெல்லாம் நான் மயங்கமாட்டேன் கிருஷ்ணா, ஒழுங்கா வீட்டுக்குள்ள வா. ராத்திரி இந்த நேரத்துல சுத்தக்கூடாது....
(சே ஒரு மனுஷன் காத்தாட நிலா வெளிச்சத்துல தோட்டத்துல உலாத்தறது ஒரு குத்தமாடா.....)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
*******
*******
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
19 ஜூலை 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....