எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 30, 2012

தலைநகரிலிருந்து – பகுதி 18 - அபீஷ்ட வரசித்தி விநாயகர்
ஜூலை முதல் ஞாயிறன்று தில்லி இர்வின் சாலையில் [தற்போதைய பாபா கடக் சிங் மார்க்] உள்ள அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். ஜூன் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு நண்பர் ஞாயிறன்று நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தில்லியின் புகழ்பெற்ற சுப்பராம பாகவதர் குழுவிலிருக்கும் திரு ஜே. ராமகிருஷ்ணன் மற்றும் ஓ.வி. ரமணி குழுவினர் திவ்யமாய் நாம சங்கீர்த்தனம் செய்தனர். பக்கவாத்தியமாக மிருதங்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் திரு ரங்கராஜன் செவிக்கு உணவளித்தார்.

ஒவ்வொரு ஞாயிறன்றும் இக்கோவிலில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யும் கோல் மார்க்கெட் விஷ்ணு சஹஸ்ரநாம சங்கத்தினர் இந்நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டனர். அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவில் தில்லியிலுள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. இந்த ஊர்க்காரர்களால் “மலாய் மந்திர்” என அழைக்கப்படும் ராமகிருஷ்ண புரத்திலுள்ள மலை மந்திர் [உத்தர ஸ்வாமிமலை] புகழ்பெற்றதாக இருந்தாலும், அதை விட பழைய கோவில் அபீஷ்ட வரசித்தி விநாயகர் கோவில். 

ஜே.கே. பிர்லா அவர்கள் வழங்கிய இடத்தில் திரு சங்கர ஐயர் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த கோவில் கும்பாபிஷேகம் 31 அக்டோபர் 1952-ல் முதல் முறையாக நடத்தப்பட்டது. 47 வருடங்களுக்குப் பிறகு 22 ஏப்ரல் 1999-ல் புனருத்தாரணம் செய்யப்பட்டது. இக்கோவில் பிரதான தெய்வமான அபீஷ்ட வரசித்தி விநாயகர் உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும், கீர்த்தியில் பெரியவர். விசேஷ நாட்களில் தங்கக் கவசமணிந்து ஜொலிக்கிறார். 

விநாயகர் தவிர நவக்கிரங்கள், துர்காதேவி, ஹரிஹரபுத்ரன், குருவாயூரப்பன், ஆஞ்சனேயர், சுப்ரமண்யர் ஆகியோருடைய சந்நிதிகளும் இங்கே உண்டு. பிரதோஷம், சனிக்கிழமைகளில் இங்கே நிறைய பக்தர்கள் வந்து இறைவனை வணங்கி இன்புறுகிறார்கள். பொதுவாகவே சனிபகவான் என்றாலே பலருக்கு பயம். அதுவும் வட இந்தியர்களுக்கு சனிஜி என்றாலே பயம்ஜி! சனிக்கிழமைகளில் குடும்பத்துடன் வந்து சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து வெளியே அமர்ந்திருக்கும் வறியவர்களுக்கு தானம் செய்துவிட்டுப் போவார்கள். 

மாதத்தின் முதல் ஞாயிறுகளில் இங்கே திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது.  வயதான பெண்கள் வந்து திருப்புகழ் பாடல் பாடுகின்றனர்.  இங்கே இருக்கும் உற்சவ மூர்த்திகள் அழகு.  சாதாரணமாக பலர் மஹாபாரத கிருஷ்ணர் அர்ஜுனனுக்கும், பீஷ்மருக்கும் உலகத்தில் உள்ள அனைத்தும் தன்னுள் அடங்கியிருப்பதைக் காண்பித்த விராட ரூபத்தினை புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.  ஆனால் அந்த விராட ரூபத்தினை சிலையில் பார்த்திருப்பது கடினம்.  வேறெங்கும் பார்த்திராத விராட ரூபத்தில் ஒரு உற்சவ மூர்த்தி இக்கோவிலில் இருக்கிறது. 


[பட உதவி: கூகிள்]

இக் கோவிலுக்குப் பக்கத்தில் வட இந்திய கோவில் ஒன்றும், ப்ராச்சீன் [புராதனமான!] ஹனுமான் கோவிலும் உள்ளன.  செவ்வாய், வியாழன் கிழமைகளில் இங்கே பக்தர்கள் அலைமோதுகிறார்கள்.  கோவில் பக்கத்திலே வளையல் கடைகளும், மெஹந்தி போடுபவர்களும், டாட்டூ போடுபவர்களும் நிறைய இருப்பார்கள்.  நம் ஊரில் பெண்கள் வளைகாப்பிற்கு வளையல்கள் அடுக்கிக் கொள்வார்கள் என்றால், இங்கே திருமணம் அன்று அடுக்கிக் கொண்ட வளையல்களை பல மாதங்களுக்குக் கழட்டுவதில்லை!  விதவிதமான, அழகான வளையல்கள் இங்கே கிடைக்கும். 


[பட உதவி: கூகிள்]


எங்கு சென்றாலும், சாப்பாட்டுக் கடைகளும் நமக்கு முக்கியமல்லவா.  இங்கேயும் வெளியே சமோசா, பகோடா, பானிபூரி, பேல் பூரி, ஆலு டிக்கா, என பலவித வாசனைகள் நாசியை அடைந்து நாவில் எச்சிலூற வைக்கும்.  பிறகென்ன, சப்புக் கொட்டி சாப்பிட்டு பர்ஸை கொஞ்சம் “லைட்” ஆக்கி, வயிற்றை “ஹெவி”யாக்கிவிட வேண்டியது தான்!சரி கோவில் என ஆரம்பித்து சாப்பிடுவதில் முடித்து விட்டேனோ! ”நீ சரியான சாப்பாட்டு ராமன்”னு சொல்லிடப் போறாங்க!  ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். முதல் பாராவில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்னு சொன்னேனே, அவருக்கு நண்பர் ஒருவர் அழகான விஷ்ணு படத்தை பரிசளித்தார். அதில் என்ன விசேஷம்னு கேட்கறீங்களா? படத்தில் விஷ்ணுபகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே அந்த படம் வரையப் பட்டிருந்தது!  திறமை எங்கிருந்தாலும் பாராட்டத்தானே வேண்டும்…

மீண்டும் ”தலைநகரிலிருந்து…” தொடரின் வேறோர் பகுதியில் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

54 comments:

 1. அருமையான பகிர்வு வெங்கட். நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பால்ஹனுமான் ஜி.

   Delete
 2. கோவில்களைத் தரிசித்தால் மட்டும்தானா புண்ணியம்? கோவில்களைப் பற்றிய பதிவுகளைப் படித்தாலும் அதே புண்ணியம் நம்மை வந்தடையும் என்று நம்புகிறேன்.

  அத்தகைய பதிவுகளை எழுதுகிறவர்களுக்கும் புண்ணியம் கட்டாயம் சேரும்.

  வாழ்க வெங்கட் நாகராஜ்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி!

   Delete
 3. படத்தில் விஷ்ணுபகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே அந்த படம் வரையப் பட்டிருந்தது! திறமை எங்கிருந்தாலும் பாராட்டத்தானே வேண்டும் --

  பாராட்டுக்கள்.... வாழ்த்துகள்!!!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   Delete
 4. ஆஹா... அந்த உற்சவமூர்த்தி அருமை! ஒருமுறை இந்தக்கோவில்களுக்குப் போயிருக்கேன். அப்போ பார்த்த நினைவில்லை:(

  ஆனால் அந்த அழகு கொஞ்சும் முகத்துடன் அனுமனைக் கண்டது இன்னும் மனசில்!

  நேரம் இருந்தால் பார்க்க ஒரு சுட்டி:

  http://thulasidhalam.blogspot.co.nz/2007/03/blog-post_27.html

  விஷ்ணு படம் சூப்பர்!!!!

  ReplyDelete
  Replies
  1. சில மாதங்களுக்கு முன் தான் விராட ரூப உற்சவ மூர்த்தி கோவிலுக்கு ஒருவர் அளித்தார். அனுமனின் உற்சவ முர்த்தியும் புகைப்படம் எடுத்திருக்கிறேன் முன்பே. கொஞ்சம் தேட வேண்டும். தேடி உங்களுக்கு அனுப்புகிறேன்.

   உங்கள் பதிவினையும் நாளை படிக்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. நல்ல பகிர்வு.

  /திறமை எங்கிருந்தாலும் பாராட்டத்தானே வேண்டும்…/ நிச்சயமா. உயரிய பரிசுதான் கிடைத்திருக்கிறது உங்கள் நண்பருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. ஓய் நேத்து ஞாயிறு பதிவு போட்டுட்டு அப்புறம் நீங்க ஆளையே காணும். மாலை நாலைந்து பதிவர்கள் ஒண்ணா சேர்ந்தோம். அப்போ உங்களுக்கு கால் பண்ணா, காலும் போகலை. என்னா நடக்குது தில்லியிலே?

  ReplyDelete
  Replies
  1. // என்னா நடக்குது தில்லியிலே?//

   ஒண்ணும் நடக்கலை ஓய்!

   வெள்ளியன்று இரவு தில்லியிலிருந்து கிளம்பி ஒரு பயணம்! இன்று மதியம் தான் வீடு திரும்பினேன் மோகன். பயணத்தில் இருந்ததால் உங்களது அலைபேசி அழைப்பில் பிரச்சனை இருந்திருக்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மோகன்.

   Delete
 7. நான் தில்லி வந்த புதிதில் முதலில் சென்ற கோவில் இதுதான். இந்தக் கோவிலின் வெளியில் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் கோவிலின் உள்ளே சென்றதும் அவ்வளவு அமைதியைக் காணலாம். அப்படித்தானே ஜி!

  ReplyDelete
  Replies
  1. //கோவிலின் வெளியில் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் கோவிலின் உள்ளே சென்றதும் அவ்வளவு அமைதியைக் காணலாம். அப்படித்தானே ஜி!//

   ஆமாம் ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்]...

   Delete
 8. சஹஸ்ரநாமங்களாலேயே விஷ்ணு படமா... வியப்பளித்தது. அருமையான பொக்கிஷம்தான். ஆலயம் பற்றி நீங்கள் விவரித்ததும் நல்லாவே இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்! விஷ்ணுவின் ஆயிரம் நாமாக்களினாலேயே படம் வரைந்திருந்தது வித்தியாசமாக இருந்தது கணேஷ் ஜி....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ் ஜி!

   Delete
 9. விஷ்ணு படமும் பகிர்வும் நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 10. இனிய பயண அனுபவம் மூலம் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.. நன்றி சார் !

  (த.ம. 3)

  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   உங்கள் பக்கத்திற்கு நாளை வருகிறேன்...

   Delete
 11. நல்ல தகவல்கள் வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவி அழகன்.

   Delete
 13. ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே அந்த படம் வரையப் பட்டிருந்தது! திறமை எங்கிருந்தாலும் பாராட்டத்தானே வேண்டும்…
  உண்மையில் படமும் பதிவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 14. Replies
  1. வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நண்பர் வரலாற்று சுவடுகள்.

   Delete
 15. விஷ்ணுபகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே அந்த படம் வரையப் பட்டிருந்தது! திறமை எங்கிருந்தாலும் பாராட்டத்தானே வேண்டும்//
  அருமையான பரிசு.

  நாங்களும் இந்தக் கோவிலை போன முறை வந்த போது பார்த்தோம்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சென்ற முறை நீங்கள் சென்றது அறிந்து மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 16. 2011 மே மாதம் டில்லி வந்திருந்தோம்.அப்போது இந்தக் கோவில் பற்றி தெரியவில்லை.தெரிந்திருந்தால் பார்த்திருப்போம்.தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஓ.. மே மாதத்தில் தில்லி வந்திருந்தீர்களா? நான் சென்னை வந்திருந்தேன் அதே சமயத்தில்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளீதரன்

   Delete
 17. வட இந்தியர்களுக்கு சனிஜி என்றாலே பயம்ஜி!//

  :))

  விராட‌ விக்க‌ர‌க‌மும், விஷ்ணு ச‌க‌ஸ்ர‌நாம‌ம் அட‌ங்கிய‌ ப‌ட‌மும் என‌ எங்கே சென்றாலும் எல்லோரும் தெரிந்து கொள்ள‌ வேண்டிய‌ செய்திக‌ளுட‌ன் தான் அமைகிற‌து ச‌கோ த‌ங்க‌ள் ப‌திவுக‌ள்...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 18. பயணங்கள் தொடரட்டும் நண்பா...!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 19. //படத்தில் விஷ்ணுபகவானின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தினாலேயே அந்த படம் வரையப் பட்டிருந்தது! //

  இங்கு கூட சில இடங்களில் ஸ்ரீராமஜயம் எழுதி அதிலேயே ஆஞ்ஜநேயர் போன்ற படங்களை வரைந்து கோயில்களில் வைத்துள்ளனர்.

  நல்லதொரு பகிர்வு. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  [என் பதிவினில் தங்களுக்கு மேலும் ஓர் விருது காத்திருக்கிறது]

  ReplyDelete
  Replies
  1. ஹனுமான் படம் நானும் பார்த்திருக்கிறேன் ஜி.

   வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   எனக்கும் ஆதிக்கும் ஒரு விருதினை அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

   Delete
 20. விராட் தரிசனம் கிட்டியதில் மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 21. கோயில்கள் பற்றி விவரத்தொகுப்புக் கேட்டிருந்தேனே..

  நீங்கள் சொல்லித்தான் இந்த அனுமான்கோயில் போய்வந்தோம் நாங்களும்..

  ReplyDelete
  Replies
  1. இந்த ஞாயிறன்று தேடுகிறேன்...

   ஆமாம் நீங்கள் சென்று வந்தது நினைவிலிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   Delete
 22. தலைநகர் பற்றிய தகவல்கள் அருமை. ( உங்களின் இந்த தொடரைப் படிக்கும் போதெல்லாம் என்னால் டில்லிக்கு இந்நாள் வரை வர முடியாமல் போனது குறித்து மனதில் ஒருவித ஏக்கம்தான். )
  திரு VGK.(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களிடமிருந்து தாங்கள்
  “ SUNSHINE BLOGGER AWARD “ என்ற விருதினை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. //உங்களின் இந்த தொடரைப் படிக்கும் போதெல்லாம் என்னால் டில்லிக்கு இந்நாள் வரை வர முடியாமல் போனது குறித்து மனதில் ஒருவித ஏக்கம்தான்.//

   எப்போது வரவேண்டுமோ வாருங்கள்... தில்லி காத்திருக்கிறது!

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 23. உத்சவ மூர்த்தி விஷயம் உண்மையிலேயே புதுசு தான்!

  @துளசி ரீச்சர் - நீங்க எந்த இடத்தை பத்திதான் எழுதாம விட்டுருக்கீங்க சொல்லுங்கோ? :)

  ReplyDelete
  Replies
  1. //@துளசி ரீச்சர் - நீங்க எந்த இடத்தை பத்திதான் எழுதாம விட்டுருக்கீங்க சொல்லுங்கோ? :)//

   அதானே... அவங்க போகாத இடம் எது!

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தக்குடு.

   Delete
 24. நல்ல பதிவு. பலவற்றை அறிகிறேன் டென்மார்க்கிலிருநது. நன்றி. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 25. பர்ஸை லைட்டாக்கி, வயிற்ரை ஹெவியாக்கி...! ஆஹாநல்ல பல தகவல்களுடன் பயணப் பகிர்வு அருமை.

  சஹஸ்ரநாமத்திலேயே ஓவியமா.... அட!

  (பிள்ளையாரப்பா.... என்ன மன்னிச்சுக்கோ.... அவசரத்துல அபிஷ்டு வினாயகர்னு படிச்சுட்டேன்...புத்தி....புத்தி...)

  ReplyDelete
 26. //பிள்ளையாரப்பா.... என்ன மன்னிச்சுக்கோ.... அவசரத்துல அபிஷ்டு வினாயகர்னு படிச்சுட்டேன்...புத்தி....புத்தி...//

  அதானே நமக்கு எங்க போகும்! நான் கூட முதல்ல இப்படித்தான்! :))

  தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 27. விஷ்ணு சஹஸ்ரநாமாவளியாலேயே வரையப்பட்ட படத்தையும் படம் பிடிச்சுப்போட்டிருக்கலாம். கண்ணாலேயாவது பார்த்திருக்கலாமே. இந்தப்பிள்ளையார் பத்திக் கேட்டதில்லை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கடைசியாகப் போட்டிருக்கும் படம் விஷ்ணு சஹஸ்ரநாமாவளியாலேயே வரையப்பட்ட விஷ்ணு படம் தான்.


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 28. OHO, did not notice the last picture. wonderful, thank you.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....