எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 1, 2013

ஃப்ரூட் சாலட் - 35 – கடல் – நட்பு – மன்மதன் அம்பு - பாக்கர்வாடிஇந்த வார செய்தி:

நீங்கள் கடற்கரைக்கு குடும்பத்துடனோ, அல்லது காதலியோடோ செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். செல்லும்போது நிச்சயம் அங்கே தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடாது இருக்க மாட்டீர்கள். கூடவே குளிர்பானங்களும் குடிப்பீர்கள் தானே. அப்படி குடித்த பிறகு அந்த குளிர்பானம் இருந்த பிளாஸ்டிக் குப்பிகளை என்ன செய்வீர்கள்?

இவ்வளவு பெரிய கடல் தான் இருக்கிறதே, அதிலே தூக்கி எறிந்து விட்டு, உங்களது பின்பக்கம் ஒட்டி இருக்கும் மணலை தட்டி விட்டு வீட்டுக்குச் செல்வீர்களா? அப்படி எனில் நீங்கள் கட்டாயம் இந்தக் காணொளியைக் காண வேண்டும். பசிஃபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு ஆளில்லாத ஒரு தீவு. அங்கே பல்லாயிரக் கணக்கில் பறவைகள். அவற்றில் பல இறந்து கிடக்கின்றன. இறந்து போன பறவைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பிகளின் மூடிகள், பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள் என நிறைந்து இருக்கிறது. அங்கே மனித நடமாட்டமே இல்லை என்று சொல்லுமளவுக்கு இருந்தாலும், பறவைகளின் வயிற்றில் எங்கேயிருந்து வந்தது இந்த பிளாஸ்டிக் குப்பைகள்?

பிளாஸ்டிக் இலகுவான தன்மை கொண்டது என்பதால் கடலில் தூக்கி எறியப்பட்ட பின் இது போல தீவுகளில் வந்து சேர்கிறது. அங்கே இருக்கும் பறவைகளுக்கு இது உணவா என்பது தெரியாமல், தின்றுவிட, இது அவற்றின் மென்மையான வயிற்றுக்குள் சென்று உடலுறுப்புகளைக் கிழித்து விட மரணம் சம்பவிக்கிறது – அதுவும் பல நாட்கள் அவதிப்பட்டு கொடுமையான மரணம்.

இந்தக் காணொளியைக் கண்ட பின்பும் ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை இப்படிக் கடலிலும் நீர் நிலைகளிலும் தூக்கி எறிந்தால், அவர் மனிதரே அல்ல! மனித உருவில் இருக்கும் மிருகம் என்று சொல்லலாம் இல்லையா?


இந்த வார முகப்புத்தக இற்றை:

இந்த வார குறுஞ்செய்தி

நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது. நல்ல நட்பை இழக்க ஒரு நிமிடம் போதும்!

ரசித்த புகைப்படம்: என் வீட்டில் பல ஓட்டைகள்
இருப்பினும் இது எனது வீடு!
நான் ரசிக்கும் வீடு!

ரசித்த காணொளி:

பேப்பர் அம்பு விட்டிருக்கீங்களா நீங்க? இந்தக் காணொளி பாருங்க, இதுல ஒரு சிறுகதையே இருக்கு! ஆறு நிமிடங்கள் ஓடும் காணொளி. கொஞ்சம் பொறுமை வேணும் பார்க்க! :) இது ஒரு வால்ட் டிஸ்னி தயாரிப்பு.


ரசித்த உணவு:

படம் இணையத்திலிருந்து...


பூனே நகரின் மிகவும் பிரபலமான நொறுக்குத்தீனிகளில் ஒன்று தான் [B]பாக்கர்வாடி.  ஃப்ரை செய்யப்பட்ட இந்த பாக்கர்வாடி தேநீரோடு சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். பூனே சென்று திரும்பும் நண்பர்கள் இருந்தால் வாங்கி வரச் சொல்லுங்கள். இப்போதைக்கு படத்தில் பார்த்து மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்!


படித்ததில் பிடித்தது:

காத்திருக்கையிலே....

மின்சாரம் திடீரென அறுபட
எலக்ட்ரானிக் சாதனங்களின்
மௌனம் தாளாமல்
வெளிவருகையில் தான்
தெரிந்தது –
பால் நிலாவின் அழகு.

பேருந்துக்கான
காத்திருப்பின் போது,
பரவசப்படுத்தியபடி
பறந்து சென்ற
இணைப் பறவைகளும்
கடந்து சென்ற
வண்ணத்துப் பூச்சியும்
ஆயுசுக்கும் நினைவிலிருக்கும்.

எரிச்சலான
சிக்னல் காத்திருப்பில்
பரிசாகக் கிடைத்தது
க்ரெச்-சுக்கு அழைத்துச்
செல்லப்பட்ட
பிள்ளையின் சிரிப்பு!

ஓடலும்
தேடலுமாய்
நகரும் நாட்களில்
இப்படி ஏதற்கேனும்
காத்திருக்கையில்தான்
ரசிக்க முடிகிறது
வாழ்க்கையை!

-          எம். சுதா முத்துலஷ்மி.
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

66 comments:

 1. நல்ல வெரைட்டி! சுவையானவையும் கூட!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Bandhu ஜி!

   Delete
 2. அது இதுன்னு தனியா எதையும் குறிப்பிட்டுப் பாராட்ட முடியலை வெங்கட். டோட்டலா எல்லாத்தையும் ரசிச்சேன். டேஸ்ட்டி ப்ரூட் சாலட்! தாங்க்ஸ்யா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி கணேஷ் அண்ணே!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 4. நெகிழி பற்றிய அருமையான விழிப்புணர்வு
  பகிர்வு நண்பரே....
  உணர்ந்துகொள்ள வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. சற்றே இடைவெளிக்குப்பின் உங்களது கருத்துரை.....

   மிக்க மகிழ்ச்சி மகேன்.....

   Delete
 5. சற்று பணிச்சுமையும்...
  விடுமுறையும் கலந்துவிட்டது நண்பரே...
  இனி தொடர்ந்து வலைப்பக்கம் வருவேன்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி மகேன்.....

   Delete
  2. ரஸித்தேன். அனைத்து அருமை. குறுஞ்செய்தி மிகவும் உண்மை.

   பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

   Delete
  3. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. பால் நிலாவின் அழகு ,வண்ணத்துப் பூச்சி,இணைப் பறவைகள் .
  செல்லப்பிள்ளையின் சிரிப்பு ரசிக்கவைத்தது ..


  பல்லாயிரக் கணக்கில் பறவைகள்
  பரிதாபப் படவைத்துவிட்டது ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. இயற்கையின் படைப்பில்தான் எத்தனை அதிசயங்கள். அந்தப்பறவைக்கூட்டைப் பார்த்தீங்களா?.. மூங்கிலால் செஞ்ச ஊஞ்சல் மாதிரியே இருக்கு!!!!

  மராட்டியர்களுக்கு ரொம்பவே பிடிச்ச பாக்கர்வடி நமக்கும் ரொம்பவே பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 8. கடலில் பொறுப்பில்லாமல் தூக்கி எறியப் படும் பொருட்களை பறவையினங்கள் சாப்பிட்டு துடி துடித்து இறப்பது பற்றிய காணொளி மிகவும் வருத்தப்பட வைக்கிறது. பாவம் பறவைகள்!

  காணொளியைப் பார்த்து நொந்த இதயங்களுக்கு பறவை+பறவைக் குஞ்சுகளின் படங்கள் மிகுந்த ஆறுதல்.அதுவும் 'எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் என் வீடு' அருமை!

  காத்திருக்கையில் தான் ரசிக்க முடிகிறது வாழ்க்கையை - கவிதை அற்புதம். பல நேரங்களில் எல்லோருமே உணர்ந்த ஒரு விஷயம் இது.

  புத்துணர்ச்சி ஊட்டும் பழக்கலவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 9. //என் வீட்டில் பல ஓட்டைகள்
  இருப்பினும் இது எனது வீடு!
  நான் ரசிக்கும் வீடு!//

  "என் வீட்டில் பல காலதர்கள்!
  அதனால் நாங்கள் அதன் காதலர்கள்!"

  புகைப்படம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஈஸ்வரன்.

   Delete
 10. காணொளியைப் பார்த்து மனம் கனத்து போனது. இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும்.

  குறுஞ்செய்தி அருமை.
  எனது வீடு நான் ரசிக்கும் வீடு அருமை.


  இப்படி ஏதற்கேனும்
  காத்திருக்கையில்தான்
  ரசிக்க முடிகிறது
  வாழ்க்கையை!//

  காத்திருக்கையில் எவ்வளவு விஷ்யங்களை இழந்து இருக்கிறோம் என்று தெரியும். கவிதை அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 11. என்னுடைய முக நூலிலும் நான் சார்ந்துள்ள ஓசை சுற்றுச்சூழல் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்துள்ளேன்... மிக்க நன்றி செய்திக்கு... கவிதை அபாரம்...வெங்கட் சார்...

  ReplyDelete
  Replies
  1. முக நூலில் பகிர்ந்தமைக்கு நன்றி எழில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சமுத்ரா.

   Delete
 13. ஃப்ரூட் சாலட் அனைத்தும் அருமை...

  முதல் செய்தி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 15. anne kaanoliyai paarththen!

  nonthen.....

  ReplyDelete
  Replies
  1. காணொளி பார்த்து ஒருவராவது திருந்தினால் சரிதான்.

   Delete
 16. அனைத்தும் வழக்கம் போல விறுவிறுப்பு துறுதுறுப்பு!
  ஹல்திராம்ஸ் இல் பாகர்வாடி கிடைக்கிறது.
  புனே நண்பர்கள் இல்லாதவர்கள் இதை வாங்கி சுவைத்து
  ஓரளவிற்குத் திருப்தி பட்டுக் கொள்ளலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 18. //என் வீட்டில் பல ஓட்டைகள்
  இருப்பினும் இது எனது வீடு!
  நான் ரசிக்கும் வீடு!//

  சொந்தமாக வீடு என்பதே எத்தனை எத்தனை இன்பமான கனவு...

  வழக்கம் போல அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 19. இந்தஃப்ரூட் சாலட்- ல் எனக்கு ,மிகவும் பிடித்தது குறுசெய்திதான் மிக உண்மை அப்புறம்...பூனேபாக்கர்வாடி சூப்பர் படம் அதைவிட குருவிகள் கொஞ்சுகின்ற அழகில் அருமை (நான் புதுசு பதிவுலகத்திற்கு )

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலர் பாலன்.

   Delete
 20. என்ன ஒரு கொடுரம் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு கலங்கி விட்டேன் சார், எனது முகப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 21. பறவைகளைப் பற்றிய செய்தி மிகவும் வருந்தத்தக்கது.

  முகப்புத்தக இற்றை,குறுஞ்செய்தி,படம் காணொளி அனைத்துமே அருமை.


  //ஓடலும்
  தேடலுமாய்
  நகரும் நாட்களில்
  இப்படி ஏதற்கேனும்
  காத்திருக்கையில்தான்
  ரசிக்க முடிகிறது
  வாழ்க்கையை!//

  கவிதை சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி

   Delete
 22. எதை விட்டுவிட்டு
  எதை எடுத்துச் சொல்வது
  என்று தெரியாமல்
  எல்லாமே அருமை
  என்று ஒரே வார்த்தை போதும்
  என்றே நினைக்கிறேன் நாகராஜ் ஜி.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா.

   Delete
 23. அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 24. ஃப்ரூட் சாலட் சுவையோ சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 25. பிளாஸ்டிக்கை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது.
  அந்தப் பறவைகளைப் பார்க்கும் போது மனம் நடுங்குகிறது.கடலில் மட்டுமல்ல எங்குமே பிளாஸ்டிக்கை வெளியே எறிபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
  எத்தனை கொடுமை செய்கிறோம் வாயில்லா ஜீவன்களுக்கு!

  கவிதை ஸுப்பர்.
  காத்திருப்பதும் ஒரு சுகம் தான்.

  விழிப்புணர்வு பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 26. ப்ரூட் சாலட் அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 27. எதைச் சொல்வது எதைவிடுவது வெங்கட்.
  பறவைகளை நினைத்து உருகுவதா. மனித மிருகங்களை நினைத்துக் கொதிப்பதா.
  மிக அருமையான பதிவு.
  மிக உணர்ச்சி வசப்பட வைத்துவிட்டது. என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.குழந்தைகளைக் குப்பை போடாமல் இருக்கச் சொல்லி வளர்க்கணும்.
  சிறு கவிதைகளும் அருமை.மனம் நிறைந்த வாழ்த்துகள் மா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 28. ஃப்ரூட் சாலட் சுவையோ சுவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 29. முதலாம் காணொளி வேதனை:(.

  /பூனே சென்று திரும்பும் நண்பர்கள் இருந்தால்./ பாக்கர்வாடியோடு Shrewsbury Biscuits (cookies)-ம் சேர்த்து வாங்கி வரச் சொல்லலாம்:)!

  நல்ல தொகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. பிஸ்கட்ஸ்... இது எனக்கு புதுசு!.... அடுத்த முறை அங்கிருந்து தோழி வரும்போது சொல்லி விடுகிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 30. சுற்றுச்சுழல் பற்றி அக்கறையின்றி செயல்படும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!

   Delete
 31. சூழல் கெடுப்பதினால் வரும் விளைவு அந்தோ பரிதாபம் எத்தனை பறவைகள் :(.

  இந்த பிளாஸ்ரிக்கை முழுதாகவே தடைசெய்ய வேண்டும்.

  புகைப்படம் குருவியும் கூடும் அழகு. கவிதை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   பிளாஸ்டிக் தடை - பேப்பரில் மட்டுமே இருக்கிறது. பல இடங்களில் இன்னும் பிளாஸ்டிக்-ன் ஆதிக்கம் தான் :((

   Delete
 32. இந்தஃப்ரூட் சாலட் எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது.. ஃப்ரூட் சாலட் பண்ணினால் அனுப்புங்கள்...

  ReplyDelete
  Replies
  1. அனுப்பி விட்டால் போகிறது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....