எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, March 22, 2013

ஃப்ரூட் சாலட் – 38 – வெற்றி ஓசை – தினச் செலவுக்கு 86400 – நெஞ்சோடு சேர்த்து!

இந்த வார செய்தி:

இந்திய பேட்மிண்டன் போட்டிகளில் பல வீரர்கள்/வீராங்கனைகள் பங்குபெற்று இந்தியாவிற்குப் பெருமை தேடித் தருகிறார்கள்.  சமீபத்திய லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற சானியா நேவாலை மறந்து விட முடியுமா?

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தினைச் சேர்ந்த அ. சுகில் இந்த புகழ்பெற்ற இறகுப் பந்து வீரர்களின் பட்டியலில் இடம் பெறும் நாள் வெகு அருகில்! பயிற்சி பெறத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இவர் பெற்ற வெற்றிகள் பல – அதுவும் மாநில அளிவிலும், தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு குவித்த வெற்றிகள், கோப்பைகள் என பெரிய பட்டியலே இருக்கிறது.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் அ. சுகில். தந்தை கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள அச்சகத்தில் இயந்திரம் இயக்குபவராக பணி புரிகிறார். தாய் வீட்டினை திறம்பட நிர்வாகிப்பவர்.  இவருக்கு ஒரு சகோதரர் அஜ்மல். தற்போது இருபத்தி இரண்டு வயதாகும் சுகில் விடாது பயிற்சி செய்தால் நிச்சயம் பல வெற்றிகள் அவரை வந்தடையும் என்பது உறுதி.

ஒன்றை சொல்ல மறந்து விட்டேன் – அ. சுகில் ஒரு மாற்றுத் திறனாளி. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் மட்டுமல்லாது அனைவருக்குமான பொதுப் பிரிவுகளுக்கான போட்டிகளிலும் பங்குகொண்டு பரிசுகள் வென்ற இவரது தன்னம்பிக்கைக்கு ஒரு பூங்கொத்து.

- செய்தி – 17.03.2013 தினமணி. தினமணி நாளிதழுக்கு நன்றி.
         
இந்த வார முகப்புத்தக இற்றை:

HOLDING ON TO ANGER IS LIKE DRINKING POISON AND EXPECTING THE OTHER PERSON TO DIE – LORD BUDDHA.

இந்த வார குறுஞ்செய்தி

WAVES ARE INSPIRING, NOT BECAUSE THEY RISE AND FALL BUT BECAUSE EACH TIME THEY FALL, THEY NEVER FAIL TO RISE AGAIN.

ரசித்த புகைப்படம்: 


படத்தில் சொல்வது போலத்தான் ஒவ்வொரு ஞாயிறும் நினைக்கிறேன்!

ரசித்த காணொளி:

உங்களுக்கு ஒரு சவால்! – காணொளியில் இருப்பது போல உங்களால் பாத்திரங்களை இவ்வளவு சுத்தமாக கழுவ முடியுமா!ரசித்த பாடல்:

இன்று ரசித்த பாடலில் ஒரு மலையாளப் பாடல். ஒரு ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல். எனக்குப் பிடித்தது!  உங்களுக்கும் பிடிக்குமென நினைக்கிறேன்.


படித்ததில் பிடித்தது:

தினச்செலவுக்கு 86400 ப்ரீ
 
"
உங்கள் கடைசி வாழ்நாள் வரை, தினமும் உங்கள் பாங்க் கணக்கில் 86400 டிபாசிட் செய்யப்படும். ஆனால், அதை அன்றே செலவழித்து விட வேண்டும் என்பது தான் நிபந்தனை. தயாரா?'' என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்? ""போடுங்க புண்ணியவானே போடுங்க! நீங்க நல்லாயிருக்கணும், தினமும் பைவ் ஸ்டார் ஓட்டலுக்குப் போவேன்,
கண்டதையெல்லாம் வாங்கிப் போடுவேன்!'' என்பீர்கள். ஆனால், நீங்க நினைக்கிற மாதிரி இது பணம் கிடையாது.

ஒருநாளைக்கு எத்தனை விநாடி.... 86400 விநாடி. இதை தினமும் கடவுள் நம் கணக்கில் டெபாசிட் செய்து விடுகிறார். இதில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் நல்லமுறையில் செலவழிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். காலை 6 மணிக்குள் எழுந்திருத்தல், கடவுளை வணங்கி விட்டு அன்றாடப்பணிகளை மளமளவெனக் கவனித்தல், செய்யும் தொழிலை சிரத்தையாக செய்தல், மாலையில் கோயிலுக்கு செல்லுதல், பிள்ளைகளுக்கு நல்ல கதைகளைச் சொல்லுதல், பாடம் கற்றுக் கொடுத்தல், முன்பின் தெரியாதவர்களுக்கு கூட உதவி செய்தல்... இன்னும் எத்தனை எத்தனையோ நற்செயல்களைச் செய்யலாம்.

இப்படி நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு ஏற்ப, நம் கணக்கில் புண்ணியம் டெபாசிட் ஆகிக் கொண்டே இருக்கும். எவ்வளவு புண்ணியம் சேர்ந்திருக்கிறதோ, அதற்கேற்ப கடவுளின் வீட்டிலும், மனதிலும் இடம் ஒதுக்கப்படும்.

86400
ஐ இனியேனும், பயனுள்ள வகையில் செலவழியுங்கள். ஏனெனில், இந்தக்காலம் இறைவனால் மிச்சம் வைக்கப்படுவதில்லை. அன்றைய தினம் அன்றே கழிந்து போகும். இதை குறைக்கவும் முடியாது, கூட்டவும் முடியாது. காலம் என்னும் தோழனுடன் கைகோர்க்க தயாராகுங்கள்.

     -    மின்னஞ்சலில் எனக்கு வந்தது!


என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க் நனாறி மோகன் குமார்.

   Delete
 2. 86400 மேட்டர் அற்புதம்! மன்டேக்கு ரியாக்ஷன் காட்டும் அந்தப் பையனையும் மிக ரசித்தேன். மாற்றுத் திறனாளி என்று முடங்கி விடாமல் ‌பேட்மிண்டனில் திறமை காட்டி விருதுகளை வென்று கொண்டிருக்கிற சுகிலுக்கு நல்வாழ்த்துகள்! ருசிமிக்க சாலட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 3. சுகிலுக்கு வாழ்த்துக்கள் !
  புத்தாவுக்கு நன்றி !
  அலை அலையாய் மகிழ்ச்சி !
  ஹோம்வொர்க் இன்னும் முடிக்கல போல !
  அந்த குரங்கை இங்கே கொஞ்சம் அனுப்பி வையுங்கள் !
  செம ஒல்லி ! really horrible !
  மின்னஞ்சல் செய்தி சூப்பர் !
  இம்முறை கவிதை இல்லாதது சற்று ஏமாற்றமே !

  ReplyDelete
  Replies
  1. அடுத்த வாரம் ஒரு கவிதை பகிர்ந்து விடுகிறேன்.

   செம ஒல்லி! - Really Horrible? எதைச் சொல்றீங்க?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 4. ஃப்ரூட் சாலட் – 38 அருமை. பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. மின்னஞ்சல் செய்தி சூப்பர்ப்...

  அ. சுகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. தினச் செலவுக்கு 86,400 ஃப்ரீ.... கடைசி ஐட்டம் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. பணமா இருந்தால் நல்லா இருக்கும்.. :P
  நல்ல பகிர்வு வெங்கட் சார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 8. தினச் செலவு செய்தி சிறப்புங்க.
  வழக்கம் போலவே சாலட் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 9. ஒரு பக்கம் பேபி சிட்டிங் செஞ்சுட்டே இன்னொரு பக்கம் வேலையைக் கவனிக்கும் நம்ம முன்னோரின் திறமை ஜூப்பர்.

  எல்லா அயிட்டங்களுமே அருமை. கடைசி அயிட்டம் அசத்தல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 10. உங்களுக்கு ஒரு சவால்! – காணொளியில் இருப்பது போல உங்களால் பாத்திரங்களை இவ்வளவு சுத்தமாக கழுவ முடியுமா!

  சத்தியமா முடியாது சாமி :) இத்தோடு இன்னொன்றையும்
  கவனியுங்கள் பெத்த பிள்ளையை முதுகில் சுமந்த படியே தான்
  தான் செய்யும் பணியிலும் சிறப்பாக உழைக்கிறது !!....அருமையான
  பகிர்வு மிக்க நன்றி .மேலும் தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 11. monday syndrome!பள்ளிச் சிறுவர்களுக்கு மட்டுமல்ல;அலுவலகம் செல்லும் பெரியவர்களுக்கும் உண்டு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன்.

   Delete
 12. சுகில் மேலும் மேலும் சாதனை படைக்க வாழ்த்துகள். இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு பாராட்டுகள்!
  இந்த வார ப்ரூட் சாலடில் குரங்குக்குத் தான் முதல் பரிசு. என்னமா பிரஷ் வைத்துக் கொண்டு தேய்த்து, தேய்த்து, முதுகில் குட்டியுடன்....!
  அடுத்த இடம் 'நீயாணு' பாட்டிற்கு. இனிமையான பாடல்!
  86400 நல்ல கணக்கு.
  அருமையான சுவையான பழக்கலவை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 13. போட்டிகளிலும் பங்குகொண்டு பரிசுகள் வென்ற இவரது தன்னம்பிக்கைக்கு ஒரு பூங்கொத்து. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 14. என் கணக்கிலும் இன்று 86400 வரவாயிற்று. சிதம்பரனாரிடம் சொல்லி விடாதீர்கள். வரி போட்டுவிடுவார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 15. படம் சூப்பர் ,சுசில் பற்றிய குறிப்புகும் நன்றி
  காணொளி கடவுளே எப்படித்தான் இவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கிறதோ
  86400-க்கு மிகவும் நன்றி அதில்தான் உங்களுக்கு இந்த பின்னுடமும் நீங்கள் அதிகம் செலவு செய்ததில் சிலதுளி உங்களுக்காக

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   தங்களது முதல் வருகையோ?

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்க்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 17. அ.சுகிலின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.வெற்றிகள் வந்து அடைய வாழ்த்துக்கள்.

  குரங்கார் தன் குட்டியை சுமந்து கொண்டு தன் வேலையை சிரத்தையாக செய்வது அருமை.


  ஒருநாளைக்கு எத்தனை விநாடி.... 86400 விநாடி. இதை தினமும் கடவுள் நம் கணக்கில் டெபாசிட் செய்து விடுகிறார். இதில் ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் நல்லமுறையில் செலவழிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.//

  முடிந்தவரை அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவோம்.
  பாடல் பகிர்வு இனிமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 18. சுகிலுக்கு வாழ்த்துக்கள் மின்னஞ்சல் சிறப்பான செய்தி.

  ReplyDelete
 19. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....