எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 23, 2017

பணம் மட்டுமே போதாது – இந்த ஞாயிறில் சில காணொளிகள்


அன்பின் நண்பர்களுக்கு, கடந்த சில வாரங்களாக, ஞாயிற்றுக் கிழமைகளில் நான் எடுத்த சில காணொளிகளைப் பகிர்ந்து கொண்டேன். இந்த ஞாயிறில் நான் ரசித்த சில விளம்பரங்கள் – நம் ஊரில் [தமிழகத்தில்] இவற்றைப் பார்க்க வாய்ப்பு இருக்கும் என்று தோன்றவில்லை. அதனால் இங்கே உங்கள் பார்வைக்கு…..

பணம் மட்டும் போதாது – அனைவரிடத்தும் அன்பு செலுத்துங்கள்

பணத்தினால் அன்பை வாங்க முடியாது என்பதைச் சொல்லும் “Currency” எனும் விளம்பரம் – அந்த விளம்பரம் ஒரு ஊறுகாய்க்கு என்பதைக் கடைசியில் தான் தெரிந்து கொள்ள முடிந்தது! பாருங்களேன். 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்த பிறகு வந்த விளம்பரம்!


நட்பா, இல்லை மனிதமா – Choice is yours!

தானாகவே கார் கதவு திறந்து ஏறிக்கொள்ளும் ஒரு மனிதர் – மஹிந்த்ரா மின்சாரத்தில் செலுத்தப்படும் ஒரு காருக்கு இப்படி ஒரு விளம்பரம் – ஹிந்தியில் என்றாலும் புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன் – நடுநடுவே ஆங்கிலமும் உண்டு! பாருங்களேன்.


பப்பிள் கம் பேப்பரில் ஒரு ஓரிகாமி!

அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் உறவு எப்போதுமே ஸ்பெஷல். அப்பா செய்து தரும் பேப்பர் பொம்மைகள் கூட பெண்ணுக்குப் பொக்கிஷம் தான்! பாருங்களேன்.


என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த காணொளிகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

16 comments:

 1. சிறுவன் எதையோ கொடுத்து பொருள் வாங்கும் தீம் இன்னொரு ஏதோ விளம்பரத்திலும் பார்த்த நினைவு. ஆனாலும் ரசிக்க முடிந்தது. அடுத்த இரண்டு விளம்பரங்களையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. முதல் படத்தின் தீம் வேறு ஏதோ விளம்பரத்திலும் பார்த்த நினைவு எனக்கும்.... எதில் என்பது நினைவிலில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. மூன்று காணொளிகளும் மிக அருமை. முதல் காணொளி மிக மிக அருமை. தன் பொக்கிஷத்தை கொடுத்து சப்பத்திக்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் வாங்கி கொடுத்த குழந்தையின் அன்பு அருமை. பொக்கிஷத்தின் அருமை தெரிந்த பெரியவரின் அன்பு நெகிழ வைத்த காணொளி. தேவை அறிந்து கொடுப்பதும் ஆனந்தம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 3. காணொளிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம்..

  ரசித்தேன்.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 5. ஒவ்வொன்றும் குறும்படம் போல் அருமை ! பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

   Delete
 6. வீடியோக்களை நேரமுள்ளபோது திரும்ப வந்து பார்க்கிறேன்..

  //பணம் மட்டும் போதாது – அனைவரிடத்தும் அன்பு செலுத்துங்கள்//
  எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைபோலத்தான்.. அன்பை மட்டும் கொடுத்தால் போதுமா என்பினம்.. இரண்டுமே தேவைதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 7. மூன்று காணொளி விளம்பரங்களையும் இரசித்தேன்! ஒவ்வொன்றும் ஒரு காணொளிக் கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. எல்லாக் காணொளிகளும் அருமை ஜி. மிகவும் ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....