புதன், 7 ஜனவரி, 2015

ஏற்காடு – கிளியூர் நீர்வீழ்ச்சியும் மதிய உணவும்!

ஏழைகளின் ஊட்டி – பகுதி 6  

ஏழைகளின் ஊட்டி – பகுதி 1 2 3 4 5


ஏரிக்கரையில் அமர்ந்து இயற்கையின் எழிலையும் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் சந்தோஷம் கொள்வதையும் ரசித்துக் கொண்டிருந்தோம். கண்களுக்கு குளுமையும் மகிழ்ச்சியும் கிடைத்துக் கொண்டிருந்தது – மனது அங்கிருந்து நகர மறுத்தது!  காலையில் சாப்பிட்ட பொங்கல் வடை ஜீரணமாகியிருக்க, வயிறு “எக்ஸ்க்யூஸ் மீ! என்னைக் கொஞ்சம் கவனியேன்!என்று மனதுக்கு ஆணையிட, மனதில்லாது நகர்ந்தோம். 



Kiliyur Falls in Season - இணையத்திலிருந்து....

ஏற்காடு நகரில் இருக்கும் பெரும்பாலான உணவகங்கள் அசைவம் மட்டுமே தருபவை. சில அசைவம்/சைவம் இரண்டும் கலந்தவை. வெகுக் குறைவான உணவகங்கள் மட்டுமே சுத்த சைவம். அதில் காலையில் சுற்றுலாத்துறையின் உணவகத்தில் சாப்பிட்ட அனுபவம் அங்கே செல்லத் தடை விதித்தது.  வேறென்ன சைவ உணவகம் இருக்கிறது என்று விசாரித்தோம்.  ஏரியிலிருந்து பகோடா பாயிண்ட் செல்லும் வழியில் ஒரு நல்ல சைவ உணவகம் இருப்பதாகத் தெரிந்தது.



சரி என்று அந்த உணவகத்திற்கே வண்டியை விட்டோம்.  அதிக உட்காரும் வசதிகள் இல்லையெனிலும் அத்தனை சுற்றுலாப் பயணிகள் இல்லாத காரணத்தினால் சுலபமாக அமர்ந்து கொள்ள இடம் கிடைத்தது. தேவையானதைச் சொல்லி விட்டு காத்திருந்தோம்.  உணவகங்களில் இப்படி காத்திருப்பது கொஞ்சம் பிரச்சனையான விஷயம் தான். நல்ல பசிக்கும்போது தான் உணவு தாமதமாக வரும்.  பசியை மறக்க உணவகத்தில் வேறு யார் யார் இருக்கிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள் என்று நோட்டம் விட ஆரம்பித்துவிடுகிறது கண்களும் மனதும்!

பட உதவி: இணையம்

அப்படி பார்க்கும்போது ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு குடும்பம் – கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தை. உணவகத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் அவர்களைப் பார்ப்பதும் குறைவான சத்தத்தில் ஏதோ பேசுவதுமாகவே இருந்தார்கள்.  ஏதோ பிரபலம் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  பிறகு தான் தெரிந்தது, அவர் கோலங்கள் போன்ற சீரியல்களில் நடித்த அஜய் என்கிற கௌரவ் கபூர் என்று. 

அதற்குள் நாங்கள் சொல்லி இருந்த உணவு வகைகள் வந்து சேர அவற்றை ஒரு பிடி பிடித்தோம்.  பசித்திருந்ததால் உணவு பிடித்திருந்தது! :) சரி ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று கேட்டால் “Dairy Day” தான் கிடைத்தது. தில்லியில் பல நிறுவனங்களின் ஐஸ்க்ரீம் கிடைக்க, தமிழகத்தில் சில வகைகள் மட்டுமே கிடைப்பது எனக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான்!  ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த வகை ஐஸ்க்ரீம் எடுத்து சாப்பிட்ட பின் உணவுக்கான தொகையைச் செலுத்தி அங்கிருந்து நகர்ந்தோம். சரி அந்த உணவகம் என்ன என்பதைச் சொன்னால் என்ன என்று கேட்பதற்கு முன் சொல்லி விடுகிறேன் - அது மலர் ரெஸ்டாரெண்ட்.



உணவு உண்ட பிறகு நாங்கள் சென்ற இடம் ஏற்காடு நகரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு. மழைக்காலங்களில் நிறைய தண்ணீர் இருக்கும்.  படித்துக் கொண்டிருந்த காலத்தில் இப்படி நிறைய தண்ணீர் இருக்கும்போது பார்த்ததுண்டு. அதை மீண்டும் பார்க்கப்போகிறோம் என்ற எண்ணத்துடன் அங்கே சென்றோம். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையெங்கும் காப்பி எஸ்டேட்கள் இருக்க, அதில் வேலை செய்பவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். 



நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையின் அருகே வண்டியை நிறுத்தவும், மழை தூற ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது! பாதையின் அருகே இருந்த தேநீர் கடையில் சற்று காத்திருந்தோம்.  மழை சற்று நின்ற பிறகு நீர்வீழ்ச்சியை நோக்கி படிகளில் இறங்க ஆரம்பித்தோம். அவ்வளவு தூரம் சென்று பார்த்தபோது ஏமாற்றமே – தண்ணீர் ஏதோ ஒரு ஓரத்தில் கொஞ்சமாக கொட்டிக் கொண்டிருந்தது. அத்தனை சிரமப்பட்டு கீழே சென்றதற்கு இயற்கைக் காட்சிகளை கொஞ்சம் ரசித்துவிட்டு வாகனத்தினை நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.  மீண்டும் பல படிகளில் ஏற வேண்டும் என்ற எண்ணமே கால்களுக்கு வலியைத் தந்தது!  அடுத்ததாகச் சென்ற இடம் என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்!
   
மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


38 கருத்துகள்:

  1. உங்களுடன் வருவது போலவே உள்ளது. புகைப்படங்கள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளன. வாழ்த்துக்கள். கால் வலி சரியான பின் தொடருங்கள். உடன் வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. நீர்வீழ்ச்சியை எதிர்பார்த்து ,பாறையைக் கண்டால் கால்கூட வலிக்கத்தானே செய்யும் :)
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  3. Sir, to be frank, I recently visited Yercad but never seen all these places. I also asked many people for tourist spots but nobody said the places what you have suggested. Your information are really valid and useful.
    I always admire with your travel information, which is indeed detail and useful. You should publish a e-book for the users.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்காடில் நிறைய இடங்கள் உண்டு. நான் பார்த்ததும் சில இடங்கள் தான்.....

      இ-புக் - நல்ல தளம் இருந்தால் சொல்லுங்களேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

      நீக்கு
  4. சென்றமுறை ஏற்காடு சென்றபோது,கிள்ளியூர் அருவியை பார்க்காமல் திரும்பிய எனக்கு தங்கள் பதிவின் மூலம் அதை (தண்ணீர் அதிகம் கொட்டாத நிலையிலும்) இரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி! படங்கள் வழக்கம்போல் அருமை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  6. அருமையான பதிவு! கிளியூர் ஃபால்ஸ் சென்ற அனுபவம் உண்டு...ஏற்காடு நிச்சய்மாக ஏழைகளின் ஊட்டிதான். சைவப்ப்ரியர்களுக்கு சாப்பாடு கஷ்டம்தான் அங்கு.

    ரசித்தோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  7. வணக்கம்
    பயணஅனுபவம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்... படங்கள் அழகு.. த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  8. "//நல்ல பசிக்கும்போது தான் உணவு தாமதமாக வரும்.//" - உண்மை. நானும் இந்த சங்கடத்தை அனுபவித்திருக்கிறேன்.
    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரா !

    நீங்கள் ஒவ்வொருத்தரும் உங்களது பயண அனுபவத்தைச் சொல்லும்
    போது கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது சகோதரா .வாழ்த்துக்கள்
    மென் மேலும் இனிய அனுபவங்கள் தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

      நீக்கு
  12. ஏற்காடு சென்றதில்லை. பதிவினைப் படிக்கும் போது எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  13. புகைப்படங்கள் கவர்ந்தன! சிறந்த பயணப்பகிர்வு! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. புகைப்படங்கள் அருமை ஐயா
    ஏற்காடு சென்றிருக்கின்றேன் ஆனால் கிளியூர் நீர் வீழ்ச்சிக்கு
    சென்றதில்லை
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  16. பதில்கள்
    1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  17. பார்க்காத இடம், உங்கள் பார்வையில்பார்த்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே!

    பயண அனுபவம் பகுதி 6 ஐ இன்றுதான் படித்தேன். இயற்கையின் எழில் மிகும் படங்கள் அற்புதம்.
    நல்லதொரு சைவ உணவகத்தை சுட்டி காட்டியமைக்கு நன்றிகள். (ஏற்காடு பயணம் மேற்க்கொண்டால், செளகரியமாக இருக்கும். இல்லை! பயணம் செல்லும் யாருக்காவது தெரிவிக்கவும் இயலும்.)

    இனிதான பயணம் கால்வலி குணமாதும் தொடரட்டும். நாங்களும் வலிகள் ஏதுமின்றி, வலைத்தளம் மூலம் தொடர்கிறோம்..பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....