செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கதம்பம் – மிளகுக் குழம்பு – கலாம் – அகல்யா – வண்டு - வானம்



ப்ரெட் சாண்ட்விச் வித் ஃப்ரெஷ் ஜூஸ்


 
இன்று சற்றே மாறுதலாக உருளைக்கிழங்கு ஸ்டஃப் செய்த ப்ரெட் சாண்ட்விச்சும், பைனாப்பிள் ஃப்ரெஷ் ஜூஸும்...

ரோஷ்ணி கார்னர்:



மகள் பள்ளிக்காக தன்னுடைய நோட்டில் தீட்டிய கலாம் அவர்களின் ஓவியம்!!!

மொட்டை மாடியிலிருந்து…









வானத்தின் வர்ண ஜாலம் – ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய்….

படித்ததில் பிடித்தது - அகல்யா:



மூன்றாவது முறையா! நான்காவது முறையா!! நினைவில்லை. பலமுறை வாசித்திருந்தும் நேற்று இந்தப் புத்தகத்தை புதிதாய் வாசிப்பது போலவே இருந்தது. ஆழ்ந்து வாசிக்கும் போது அந்த கதாபாத்திரங்கள் நம் கண்முன்னே பேசுவது போலவே இருக்கும்.

சிவசுப்ரமணியன் என்கிற சிவசுவுக்கும் அகல்யாவுக்கும் இடையில் தான் கதை நகர்கிறது. அகல்யா ஒரு இளம் விதவை. சிவசு ஒரு முற்போக்குச் சிந்தனையுள்ள இளைஞன். இவர்கள் இருவருக்குமே ஒருமித்த சிந்தனை. பொதுநலத்தில் இன்பம் காணுவார்கள்.

அவர்களிடையேயான காதலும், புரிதலும், ஊடலும், கருத்துப் பரிமாற்றங்களும், தன்னலம் பாராத எண்ணங்களும் என வரிக்கு வரி நம்மை கவர்கிறது. இப்படி ஒரு கணவன் மனைவி இருக்க முடியுமா??? அல்லது கதைமாந்தர்களுக்கு மட்டுமே வசப்படுமா??

சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கென பள்ளி ஆரம்பிப்பதும், போரில் இறந்ததாய்க் கருதப்பட்ட அகல்யாவின் முன்னால் கணவன் உயிருடன் வருவதும், என காட்சிகள் துண்டு துண்டாய் விரிகின்றன..அத்தனை சந்தர்ப்பத்திலும் பக்குவப்பட்ட மனிதனாக சிவசு உடனிருக்கிறான்.

அதன் பின்பு அகல்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன??? வாசித்து முடித்த போது கண்ணீர்த் திவலைகள் உருண்டு திரண்டன. ஏனென்று புத்தகத்தை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்...

ஆடிப்பெருக்கு….


அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துகள். இந்த வருடம் போல் என்றும் காவிரி கரைபுரண்டு ஓடி வளமாக்கட்டும். பயிர்பச்சை செழித்து வளர்ந்து விவசாயிகளின் மனம் குளிரட்டும். நல்லதே நடக்கட்டும்.

பொதுவாக மகளை நம்பி சமைக்க முடியாது. வேண்டாம் என்றால் வேண்டாம் தான்! அதனால் மூன்று சாதங்கள் தான் எப்போதும். இந்த முறை அதையே ஐந்தாக பங்கு போட்டு கலந்தேன்.

தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர்சாதம், எலுமிச்சை சாதம், இஞ்சி சாதம் [எண்ணெயில் சீரகம், மிளகாய், இஞ்சித்துருவல் சேர்த்து பிரட்டி, சாதம் சேர்த்து உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்த பின்னர் வேர்க்கடலை ஒன்றும் பாதியுமாக உடைத்து சேர்க்க வேண்டியது தான். ஓரளவு எலுமிச்சை சாதம் போல் தான். இஞ்சித்துருவல் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கணும். புத்தகம் ஒன்றில் போட்டிருந்தது!] இனிப்புக்காக சிறுதானியத்தில் நாட்டுசர்க்கரை சேர்த்து பாயசம்.

சொம்பு நிறைய காவிரி நீரையும் வைத்தேன். நல்லதே நடக்கட்டும்.

மிளகுக் குழம்பு….





நேற்றிலிருந்து தலையில் நீர் கோர்த்துக் கொண்டு அவஸ்தை. கீழே குனிந்தாலே பாரமாக இருக்கிறது. அதனால் இன்று அம்மா செய்யும் மிளகு குழம்பு செய்தேன்.

என் மாமியார் இதே குழம்பில் காய்ந்த மாங்கொட்டைகளைப் போடுவார். புளிப்பும், காரமுமாய் அருமையாக இருக்கும். நானும் பல நாட்களாக அவரிடம் செய்து தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன்!

சூடான சாதத்துடன் மிளகு குழம்பு, பொரித்த அரிசி அப்பளத்துடன் ஜோர்.

வண்டு:



நடுஇரவில் திடுமென விழிப்பு!!
கழுத்துப் பரப்பில் வியர்வை!
புரண்டு படுத்தும் ஏனோ
நித்திரையில்லை!!

ஏதேதோ சிந்தனை
முந்தைய இரவில்
குழல்விளக்கைச் சுற்றி
பறந்து திரிந்த வண்டு...

அதை விரட்டி விட்டும்
சுற்றிச் சுற்றி வந்தது!!
அடித்து நசுக்கியதில்
உயிரை விட்டது!!

ஏனோ! இது நினைவுக்கு வர
மானசீகமாய் மன்னிப்பு
கேட்டதும், துயில் என்னைத்
தழுவத் தொடங்கியது!!!

சும்மா ஒரு நாலு வரி...:)) யாரும் அடிக்க வராதீர்கள்.

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

32 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். மிளகு குழம்பு ஈர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம். மிளகு குழம்பு... எனக்கும் பிடிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நாங்கள் வைத்திருந்த சாண்ட்விச் மேக்கர் உடைந்த பிறகு வேறு வாங்கவில்லை. தோசைக்கல்லில்தான் சாண்ட்விச்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மானுவல் சான்ட்விச் டோஸ்டர் இருக்கே! ஆனால் அது நான் ஸ்டிக்! :(

      நீக்கு
    2. நம்ம ஊர் ப்ரெட் டோஸ்டருக்கு ஏற்றதல்ல! அதனால் பெரிய இழப்பல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. மானுவல் சாண்ட்விச் டோஸ்டர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  3. ரோஷ்ணி இப்போது உங்கள் இருவரையுமே வரைவார் என்று நினைக்கிறன். திறமை கூடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை வரைய முயற்சிக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வானத்தின் காட்சிகள் எப்பவுமே சுவாரஸ்யம்தான்.

    அகல்யா - எப்பவோ படித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வானம், நீர்நிலை, மலைகள் - இவை அனைத்துமே எப்போதும் ஸ்வாரஸ்யம்....

      அகல்யா - நானும் படித்து பல வருடங்களாகிவிட்டது. ஊருக்குப் போகும்போது படிக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஆடிப்பெருக்கு - கண்ணைக்கவர்கிறது.

    கவிதை - மீண்டும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடிப் பெருக்கு - ஐந்து வித சாதம்! உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அனைத்தும் அருமை...

    மிளகு குழம்பு செம...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. மகளின் திறமைக்கு பாராட்டுகள் எங்கரேஜ் ஹெர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. கதம்ப சாத படம் மிக அருமையா வந்திருக்கு. கதம்பமும் அருமை. படத்திலிருந்து இன்னும் ஸ்ரீரங்கத்தில் கட்டடங்கள் கட்ட வயல் மிச்சம் இருக்கு என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணு படப் போகுதையா நெல்லைத் தமிழரே! :))))

      நீக்கு
    2. ஸ்ரீரங்கத்தில் கட்டடங்கள் - :) இன்னும் கொஞ்சம் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. மகளின் ஓவியம் மிகவும் அழகு! அகல்யா கதைக்கான விமர்சனம் நீங்களும் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதைச்சொல்வது போல அருமையாக இருந்தது!

    மிளகுக்குழம்பு எப்படி செய்வதென்று எழுதவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிளகுக் குழம்பு எப்படி செய்வதென்று எழுதவில்லையே.... எழுதச் சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  11. எல்லாமே முகநூலில் வாசித்தது. அதனால் அரிசி அப்பளம் எடுத்துக்கிட்டு ஐ ம் கோயிங்க்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  12. முகநூலிலும் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன். பாலகுமாரன் படிச்சே எத்தனையோ ஆண்டுகள்! கடைசியாப் படிச்சது அப்பம், வடை, தயிர்சாதம், விகடனில் வந்ததா? குங்குமமா? நினைவில் இல்லை! அதான்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பம், வடை, தயிர்சாதம் - நான் படித்ததில்லை. அவரது ஆரம்ப கால எழுத்துகளை மட்டுமே என்னால் ரசிக்க முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. அனைத்தும் முகநூளில் படித்துவிட்டேன்.
    ரோஷ்ணியின் ஓவியம் அருமை.
    உங்களின் திறமைகளுக்கு பாராட்டுக்கள்.
    கொசு கடிக்கும் போது கை தன்னிச்சையாக அடித்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொசு கடிக்கும்போது கை தன்னிச்சையாக அடித்து விடுகிறது - ஹாஹா.... உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....