திங்கள், 3 செப்டம்பர், 2018

கதம்பம் – பால் கொழுக்கட்டை – கையெழுத்து – மூக்குத்தி – சுண்டல் போண்டா – காணாமல் போயிருந்தால்…

பால் கொழுக்கட்டை!!


 
வரலக்ஷ்மி நோன்புக்காக கொழுக்கட்டை செய்ய ஒரு தம்ளர் அரிசி ஊறவைத்திருந்தேன். ஐந்து மணிக்கு எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தும் பூஜைக்கான நைவேத்தியங்களில் சர்க்கரைப் பொங்கலும், வடையும் தான் செய்ய முடிந்தது. இது போக சமையல். மந்திரமும் நானே, பூஜையும் நானே, சமையலும் நானே என்பதால் நல்ல நேரத்திற்குள் ஆரம்பிக்கணும் என்று கொழுக்கட்டையை தவிர்த்து விட்டேன்.

நனைத்து வைத்த அரிசியை தண்ணீரோடு ஃப்ரிட்ஜில் வைத்து விட்டேன். இன்று அதை மையாக அரைத்து தண்ணீரை கொதிக்க வைத்து மாவை விட்டு கிளறினேன்.

முக்கால் பங்கை சேவையாக பிழிந்து ஆவியில் வைத்து விட்டேன். மீதியை குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி பாலில் வேகவிட்டு, ஏலக்காயும் சர்க்கரையும் சேர்த்து இறக்கியுள்ளேன். மகளுக்கு மிகவும் பிடித்துள்ளது.

ரோஷ்ணி கார்னர்:



மகளின் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த கட்டுரை பாடத்திலிருந்து.

லஞ்ச் பாக்ஸ்!!



காய்கறிகள் சேர்த்த புலாவுடன், வாழைக்காய் சிப்ஸ். எண்ணெயில் உப்புத் தண்ணீர் தெளித்து செய்தது.

மூக்குத்தி!!!



நேற்று மாத இதழ் ஒன்றில் வாசித்ததும் மகளுக்காக படம் பிடித்து வைத்துக் கொண்டேன். அவளும் இரண்டு வருடங்களுக்கு முன்பே விருப்பப்பட்டாள். நகைக்கடை வரை போய், அவள் அப்பா "இப்பவே எதற்கு" என்று கேட்டு குழப்பி விட்டுவிட்டார் :) அதன் பின் பயமும், குழப்பமும் சேர வர மறுத்து விட்டாள்.

இப்போது மீண்டும் குத்திக்கணும் என்று ஆசைப்படுகிறாள். அப்பா பயமுறுத்தும் முன் செய்து விடணும்:) நான் பத்து வயதிலேயே குத்திக்கொண்டேன்.

மூக்கணாங்கயிறு என்ற பதிவில் என் அனுபவத்தை பகிர்ந்திருப்பேன். முடிந்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

சுண்டல் போண்டா!!!



சோதனை முயற்சியாக செய்த போண்டா. பச்சைப்பயறு சுண்டல் செய்தேன். நன்றாக ஊறியதாலோ என்னவோ, தாளிப்பில் வேகவைத்த பயறு சேர்த்து பிரட்டியதும் கூட்டணி அமைத்துக் கொண்டது:)

மொத்தமாக இருந்த சுண்டலை அப்படியே குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் போட்டெடுத்தேன். சுவையான அதேசமயம் சத்து நிறைந்த சிற்றுண்டி தயார்.

செவ்வானம்



இந்த வாரம் எடுத்த செவ்வானத்தின் படம்.

காணாமல் போனவர் தினம்…

30 – ஆகஸ்ட் - இன்னிக்கு காணாமல் போனவர் தினமாம். ஆறு வருடங்களுக்கு முன் டெல்லியிலிருந்து நான் எழுதிய என் அனுபவம். என் வலைப்பூவில் இருந்தது. அது ஒரு பொற்காலம்.

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!!!

தலைப்பைப் பார்த்ததுமே யாரைக் காணோம், எதைக் காணோம் என்று எல்லோரும் பயந்துட்டீங்களா? பதட்டப்பட வேண்டாம். பல வருடங்களுக்கு முன்னால் நிஜமாகவே என் பெயர் இப்படி காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் வந்திருக்க வேண்டியது. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் மனதில் பயத்தை உண்டு பண்ணுகிறது.

முழுதும் படிக்க காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!!! தலைப்பில் க்ளிக்கலாம்!

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். கொழுக்கட்டையின் இடத்தில இடம் பிடித்ததா பால் கொழுக்கட்டை...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ரோஷ்ணியின் கையெழுத்து அழகாய் இருக்கிறது. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. சுண்டல் போண்டா பற்றி முகநூலிலும் வாசித்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பச்சைப்பயறில் வெல்லம் தேங்காய் சேர்த்துக் கிளறிச் சிய்யம் மாதிரிப் போடுவோம். மற்றவற்றையும் முகநூலில் வாசித்தேன். பால் கொழுக்கட்டை நாங்க வெல்லம் போட்டுத்த் தேங்காய்ப் பால் விட்டுத் தான் செய்வோம். இப்போல்லாம் ஓட்டல்களிலும் பால், சர்க்கரை சேர்த்தே கொடுக்கிறாங்க. நல்லா வந்தா இரண்டுமே ருசி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. ///சிறிது நேரத்திற்கு பின் அவர் சிரித்துக் கொண்டே வருகிறார்///
    இப்படியெல்லாம்கூட பயமுறுத்துவாரா..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. அருமையாக இருக்கிறது எல்லாம்.
    முகநூலில் அனைத்தும் பார்த்து மகிழ்ந்து விட்டேன்.
    மீண்டும் இங்கும் பார்த்து படித்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  10. சுண்டல் போண்டா, லஞ்ச் பாக்ஸ் எல்லாம் அருமை. மகளின் கையெழுத்து மிக அருமை. கையெழுத்து ஒருவரின் தலையெழுத்து என்று சொல்வார்கள். தெளிந்த சிந்தனை இருக்கிறவர்களுக்கு கையெழுத்து அழகாக இருக்கும். பாராட்டுகள்.

    அது என்ன... பால் கொழுக்கட்டை மாதிரியே இல்லையே.... முடிந்தபிறகு படம் எடுக்கவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் கொழுக்கட்டை மாதிரியே இல்லையே.... :) அவங்க தான் பதில் சொல்லணும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    கதம்பம் அருமை. பால் கொழுக்கட்டை. வெஜிடபுள் புலாவ், வாழைக்காய் சிப்ஸ், சுண்டல் போண்டா அனைத்தும் அருமை.

    தங்கள் மகளின் கையெழுத்து மிக அழகாக உள்ளது. அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

    செவ்வானத்தின் படம் மிக அழகு. ரசித்தேன்.

    மூக்குத்தி பதிவு, காணாமல் போன பதிவு இரண்டையும் போய் பார்த்து வந்தேன். மிக ஸ்வாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள். நன்றாக இருந்தது

    நானும் ஐந்தாவது படிக்கும் போது ஆசைப்பட்டு மூக்கு குத்திக் கொண்டு தளுக்கு போட்டுக் கொண்டேன். பழைய நினைவுகளை அசைபோட வைத்தது.

    காணாமல் போக இருந்த நேரங்கள் படித்த போது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. தங்கள் பயத்தை நானும் உணர்கிறேன். என் பெரிய மகன் மூன்று வயதிருக்கும் போது கபாலி கோவிலில் ஒரு கால்மணி நேரத்திற்கும் மேலாக காணாமல் போய் கிடைத்தான். அந்த பயம் என் நெஞ்சை விட்டு இன்னமும் நீங்கவில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  12. சுண்டல் போண்டா வித்யாசம். பால் கொழுக்கட்டை எங்கே. ஹ்ம்ம் :( ரோஷ்ணியின் கையெழுத்து அற்புதம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  13. பால்கொழுக்கட்டை வித்தியாசமான சிற்றுண்டி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு
  14. பதிவு மிக நன்றாக இருக்கிறது...படிக்க பல செய்திகள் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குத்தூசி ஐயா.

      நீக்கு
  15. ரோஷ்ணியின் கையெழுத்து மிக அருமை. அந்த 'நு'வும் 'து'வும் வித்தியாசமாய் ஆனால் அழகாய் இருக்கிறது.

    அது பால்க்கொழுக்கட்டையா! ரசமலாயாக்கும்னு நினைத்து விட்டேன். பசி நேரத்துல பட்ஷணப்பதிவு படிக்காதே, படிக்காதேன்னு சொன்னா கேட்டாத்தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....