செவ்வாய், 13 நவம்பர், 2018

தீபாவளி – அன்றும் இன்றும் – ஆதி வெங்கட்





அன்றைய பண்டிகைகளுக்கும் இன்றைய பண்டிகைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம் அம்மா, அப்பா கொண்டாடியதில் பாதி நாம் கொண்டாடினோம் என்றால் நம் பிள்ளைகள் அதற்கும் குறைவு.



அன்று மகளிடம் என் சிறுவயதில் அப்பா அம்மாவோடு கொண்டாடிய தீபாவளி பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். தீபாவளிக்கு தீபாவளி மட்டுமே புதுத்துணி. அப்பாவுக்கு எவ்வளவு பணத்தட்டுபாடு இருந்தாலும் எங்களுக்கு புத்தாடை எடுத்துத் தந்து அழகு பார்ப்பார். ஆனால் அவர் புதுசு உடுத்திக் கொள்ளமாட்டார்.

அம்மா ஒரு வாரம் முன்பிருந்தே மண்ணெண்ணெய் ஸ்டவ்வை ஹாலில் வைத்துக் கொண்டு பலகாரங்கள் செய்ய ஆரம்பிப்பார். குழந்தைகள் சில நாட்கள் வைத்து சாப்பிடட்டுமே என்று பார்த்து பார்த்து செய்வார். ஆனால் மாலை தேநீரோடு தான் சாப்பிட கிடைக்கும். இடையில் எல்லாம் கிடைக்காது!

பட்டாசு லிஸ்ட் கொடுத்ததும் அப்பா எங்களை கேட்டு டிக் செய்ததை, அம்மா 100 ரூபாய்க்கு ஒரு பெரிய ஒயர்க்கூடையில் வாங்கி வருவார். அவை மூன்று பாகங்கள் போடப்படும். தம்பிக்கு, எனக்கு, கார்த்திகை பண்டிகைக்கு. வெடிகள் எல்லாம் தம்பிக்கு, மத்தாப்பு, தீப்பெட்டி எனக்கு.

புத்தாடைகள் வாங்கிய பின் அதை அக்கம் பக்கத்து வீடுகளில் காண்பித்து பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இது ஒருவகை சந்தோஷம் தரும் விஷயம். எங்க வீட்டுல உங்கள விட விலை கூடுதலாக எடுத்திருக்காங்க என்று சொல்லிக்கணும்.

வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படும். அதில் அவரவர் கையெழுத்தில் அன்புப் பரிமாற்றங்கள் இருக்கும்.

இப்போது அப்படியல்லவே!!! எப்போது வேண்டுமானாலும் புதுத்துணி எடுத்துக் கொள்ளலாம். நினைத்த போதெல்லாம் பலகாரங்களை கடையில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

என்ன இருந்தாலும் அன்று காத்திருந்து கிடைத்ததில் தான் சுகமும், சந்தோஷமும் இருக்கு என்று தான் நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நேற்றைக்கு எங்கள் குடியிருப்புத் தோழி ஒருவர் பால்கனியில் அப்புறமா வாங்கப்பா! புடவை பார்க்கலாம் என்றார். அவர்கள் கிராமப் பின்னணி கொண்டவர்கள். இந்த விஷயம் என்னைப் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டது.

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

ஆதி வெங்கட்

28 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி, வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் ஆதி! இதேதான் எங்கள் கிராமத்திலும். பலகாரங்களை எல்லாம் சின்னவர்கள் நாங்கள் பாட்டி ஒ ரு தட்டில் வைத்துத் தர ஒவ்வொரு வீடாகக் கொண்டு கொடுத்துவிட்டு வருவோம். தீபாவளி அன்றுதான்...அதே போல அவர்களும் கொண்டு தருவார்கள். வீட்டிற்குப் போகும் போது கண்டிப்பாக ஒரு ஸ்வீட் கிடைக்கும். எங்கள் விட்டுக்கு வந்து தருபவர்களுக்கு ஒக்கோரை கொடுக்கப்படும்...கண்டிப்பாக அல்வா உண்டு....

    பட்டாசு எல்லாம் ரொம்பக் குறைவாக வாங்குவார்கள். ஆனால் பசங்க ரோட்டுல ஒவ்வொருவர் வாங்கியதையும் சேர்த்து வைத்துக் கொண்டு வெடிப்பார்கள்.

    காலையில் யார் வீட்டில்முதல் வெடி என்று இருக்கும்.....

    இப்போது வெடி வெடிப்பதில்லை என்றாலும் அட்லீஸ்ட் கொண்டாட்டம் பகிர்தல் மகிழ்வு என்று இருக்கலாமே அதுவும் இல்லாமல் போய்விட்டது என்பது கொஞ்சம் டல்லாகத்தான் இருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு ஸ்வீட் க்கு பதில் காசு கைவிசேடம் எனும் பெயரில் ஒரு ரூபா, ஐம்பது காசு என தருவார்கள். வீட்டில் செய்யும் ஸ்வீட்டை சொந்தக்காரர்கள். நட்புக்கள் என கொடுக்க நான் நீ என் போட்டி போடுவோம். அப்போது தானே காசு வரும். அன்றிரவும் வான்னில் லைக் எல்லாம் கட்டி ஸ்பீக்கர் செட் போட்டு பாட்டு பாடி வரும் ஐஸ்கிரிம் வாங்க காசும் சேரும். பண்டிகை, கோயில் திருவிழா எனில் ஒருவகை புது இரத்தம் பாயும் . இப்பொது பண்டிகை வருவதும் போவதும் தெரிவதே இல்லை கீதா/

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  3. குட்மார்னிங். இனிய நினைவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      நினைவுகள் - இனியவையும் சில!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அன்றைய தீபாவளிக்கும் இன்றைய தீபாவளிக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்! இன்னும் ஐம்பது வருடங்களில் எப்படி இருக்குமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஐம்பது வருடங்களில்.... தீபாவளி இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அந்த நாள் அந்த நாள்தான். அக்கால நினைவுகள் என்றும் இனிமை தரும். இந்த தீபாவளியின்போது அந்நாளைய என் தீபாவளி அனுபவங்கள் தினமணி தீபாவளி இதழில் வெளியாகிருந்தது. நீங்கள் கூறிய பல கருத்துகள் என்னுடைய கருத்துகளோடு ஒத்திருப்பதை இப்பதிவு மூலம் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவும் படித்தேன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. நினைவுகள் மலர்ந்து -
    பதிவில் மணம் வீசுகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. நினைவுகள் அருமை ஆதி.

    என் மாமியார் வீட்டில் மாலைதான் கொடுப்பார்கள் இஷ்டப் பட்ட நேரத்தில் நொறுக்கு தீனிக்கு தடை.
    எங்கள் வீட்டில் அப்பா பண்டம் பிள்ளைகள் தின்ன தானே செய்து இருக்கிறாய்? கேட்கும் போது கொடு என்பது.

    நீங்கள் சொல்வது போல் வைத்து சாப்பிட என்று டின் டின்னாக் செய்தது அந்த காலம். தீபாவளி பலகாரம் கார்த்திகை பொரி உருண்டை வரும் வரை இருக்கும். ஒவ்வோரு பண்டிகை பலகாரங்களை எதிர்ப்பார்த்த குழந்தைகள் இப்போது இல்லை.

    இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் செய்கிறோம்.
    நினைத்த போது செய்கிறோம் நீங்கள் சொன்னது போல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டின் டின்னாக செய்த காலம் இப்போது இல்லை. எல்லாம் சாப்பிடும் இஷ்டமும் பலருக்கு இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  8. காத்திருந்து கிடைத்தால் சந்தோசம்... எதிர்பார்த்தால் சங்கடம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. உண்மைதான் சகோ இன்றைய தலைமுறைக்கு கிடைத்தது எல்லாம் நவீணம், நாகரீகம் என்ற பெயரில் அவசரம்தான்.

    நாமெல்லாம் நிதானமாக அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. அந்தக்கால நினைவுகளில் மூழ்கினால் நமக்கு வயசாகிறது என்று அர்த்தம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. தீபாவளிக் கதைகளை சொல்ல அனைத்து தலைமுறைகளுக்கும் கதைகள் இருக்கும். தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். சென்னையில் இந்த தீபாவளியின் போது நான் இருந்த சிறிய தெருவில் ஒரே வெடிச் சத்தம். சின்னதும் பெருசுமா ஒரே கொண்டாட்டம்தான். அப்போது ஒரு போலீஸ் வாகனம் ஒய்ங் ஒய்ங் - ன்னு சத்தம் போட்டுக்கிட்டே மெதுவா நுழைஞ்சுது. சுப்ரீம்கோர்ட் ஆர்டர்-ஐ அமுல் படுத்துறாங்களாம். வெளியில் ஒரு பயலக் காணோம். பெருசுங்கல்லாம் வீட்டுக்குள்ள போய்விட்டார்கள். பொடிசுகள் மட்டும் ஒண்ணும் தெரியாத மாதிரி கமுக்கமா நின்னுதுங்க. போலீஸ் வண்டி கிராஸ் பண்ணியதுதான் தாமதம், ஒரு பொடிசு, பத்து பதினோரு வயசுதான் இருக்கும். போலீஸ் வண்டிக்கு பின்னாடி போய் போட்டான் பாருங்க ஒரு வெடி. அந்தப் பையன் கண்டிப்பா அவன் பிள்ளைக்கிட்டே போலீஸ்காரனுக்கே பயப்படாம தீபாவளிக்கு வெடி போட்ட கதையை சொல்லுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  12. நாம் எல்லாருமே, ஒரு விஷயத்திற்காக ஏங்குவதும், அது கிடைத்தவுடன்,'சீ,இவ்வளவுதானா?' என்று ஏமாறுவதுமான காக்கா முட்டை சிறுவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  13. https://alpsnisha.blogspot.com/2016/10/blog-post_29.html
    என்னுடைய பண்டிகை நினைவுகள் இங்கே.. புதுத்துணி, ஸ்வீட் எல்லாமே பண்டிகைக்கு பண்டிகை எனும் காலத்தில் பண்டிகை திருவிழாக்களை விரல் விட்டு எண்ணி எதிர்பார்ப்போம்.

    உங்கள் நினைவுகள் அருமை . மேல் வீட்டம்மா சேலை குறித்து ஒன்றும் சொல்லவே இல்லை. ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவும் படிக்க வேண்டும். படிக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....