வியாழன், 29 நவம்பர், 2018

திரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் பதிவு




கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல என்பார்களே. அது போல் தான் நான் தில்லிக்குச் சென்றதும்.

திருமணம் பற்றிய எண்ணமே உருவாகாத வேளையில் குடும்பச்சூழலை புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தேன். சம்பள பேக்கேஜ் எல்லாம் அப்போது கேட்கத் தோணலை. ”மத்திய அரசுப் பணி. அது போதுமே! மகளுக்கு சோற்றுக்கு கவலையில்லை”. இதுவே என் பெற்றோர் அப்போது எண்ணியது.

கல்லூரியில் பயின்று சிறிது காலம் வேலையும் பார்த்திருந்தாலும் எனக்கு வெளி உலகம் தெரியாது. வீடு, கல்லூரி என சிறு வட்டத்திற்குள்ளாகவே சுழன்றவள். அதிகம் பேசவும் மாட்டேன். நட்புவட்டம் மிக மிகச் சிறியது.

என்னவருக்கோ பல வருடங்களாக அங்கு இருப்பதால் நட்புவட்டம் மிகப்பெரியது. பொதுச் சேவை வேறு நிறைய. யாருக்கு எதுவென்றாலும் முதல் ஃபோன் எங்கள் வீட்டிற்குத் தான் வரும்.

தினமுமே அலுவலகம் முடிந்து வீடு வந்து சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஏதேனும் ஒரு நண்பர் வீட்டிற்குத் தான் அழைத்துச் செல்வார். வார இறுதிகளிலும் அவர்களோடு கெட் டு கெதர் இருக்கும்.

மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள் நான். தெனாலி கமல் போல் எல்லாவற்றுக்கும் பயம். ஒரு அறையிலேயே தனியாக இருக்க பயப்படுவேன். அப்படியிருக்க திடீரென ஏதேனும் நட்புவட்டத்தில் உதவி தேவைப்பட்டால் உடனே கிளம்பி விடுவார். பின்பு நான் தனியே தான். ஒரு ஆளிற்காக தனியே சமைக்கவும் பிடிக்காது. மூன்று வருடங்களுக்குப் பிறகு எனக்கு ஒரு துணையாக மகள் கிடைத்தாள்.

பொதுவாகவே எந்தவொரு இடத்திற்கும் தனியே செல்வதை விட நட்புவட்டத்தோடு செல்வது தான் அவருக்கு பிடிக்கும். முதலில் இது போன்ற விஷயங்கள் சிறு சிறு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் தந்தாலும் பின்பு புரிந்து கொள்ளத் துவங்கினேன்.

சுயநலமில்லாத பொது நலத்தை எண்ணுபவர். கர்ண பரம்பரையில் வந்தவரோ என்று சற்றே எண்ணக்கூடும். சற்றும் யோசிக்காமல் தானம் செய்து விடுவார். அவர்களாக திருப்பி தந்தால் தான் உண்டு.

பல ஊர்களைச் சுற்றிப் பார்ப்பதில் அவருக்கு அலுப்பே ஏற்படாது. தொடர்ந்து பயணிக்கச் சொன்னாலும் தயாராக இருப்பார். நான் அப்படியே நேரெதிர். விமானத்துக்கும், ரயிலுக்கும் உங்க சொத்தை பங்கிட்டு தரீங்களா!!! என்று நான் கேட்பதுண்டு.

நான் நன்றாக சமைக்கத் துவங்கியதும் என்னவரால் தான். நட்புவட்டத்தில் ஏதேனும் ஒரு குடும்பத்தை வாரஇறுதியில் சாப்பிட வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருப்பார். அவர்களுக்கு சமைத்து தான் நான் பழகியது.

இது போன்று எனக்குக் கிடைத்த அனுபவங்களால் தான் இன்று யாரையும் சார்ந்திராது எல்லாவற்றையும் சமாளிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.

இந்த புராணம் எல்லாம் எதற்கு என்று கேட்கிறீர்களா!!! பொதுசேவையில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனது பற்றி என்னவர் எழுதிய பதிவிற்கு [அவரைக் காணோம்பா – இரவு முழுவதும் பூத உடலுடன்…] என்னுடைய கருத்தை சிலர் விரும்பிக் கேட்டிருந்தனர். அதற்காகவே இந்தப் பதிவு.

இதுபோல நிகழ்காலத்தை எண்ணி எதிர்காலத்தில் வருத்தப்படாமல் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.

விரைவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
நட்புடன்

ஆதி வெங்கட்

24 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அந்தப் பதிவு நல்லாவே நினைவில் இருக்கு...

    வெங்கட்ஜி ஜூப்பர்!!!
    ஆதி கிட்டத்தட்ட இதே இதே நான்.....எனக்கும் நட்பு வட்டம் அதிகம்....பொதுப்பணி, ஊர் பயணம் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்..இருந்தது ஒரு காலத்தில்..ஆனால் பொறுப்புகள் அதிகமாகிய போது அதுவும் நாம் பெண்கள்...ஸோ எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது...நட்புகளுடன் வெளியே போக (இந்த நட்புகள் வெளியிலும் உண்டு, வீட்டில் என் கசின்ஸ் எல்லோருமே உறவையும் தாண்டி பழகுபவர்கள்...நட்புகள்தான்!!!பெரிய ஒரு வட்டமே இருக்கு!)

    அழகா சொல்லிருக்கீங்க வெங்கட்ஜி பற்றி....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தன் எண்ணங்களை அருமையாகப் பகிர்ந்து கொண்டிருக்கார் ஆதி வெங்கட். இம்மாதிரி நிகழ்வுகளால் தான் மனதில் தைரியமும் பக்குவமும் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. ஆதி அருமையாக சொன்னீர்கள்.

    //இது போன்று எனக்குக் கிடைத்த அனுபவங்களால் தான் இன்று யாரையும் சார்ந்திராது எல்லாவற்றையும் சமாளிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.//

    நல்ல தன்னம்பிக்கியயான வார்த்தைகள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி...

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.....

      நீக்கு
  7. யதார்த்த உண்மை நிகழ்வுகளை விவரித்த விதம் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. உண்மை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. Very interesting article. All the South Indian who are in Delhi can easily relate themselves with this article. In fact, it rekindled my memory when I came to Delhi in 1983.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  10. அழகாய் எழுதியிருக்கிறீர்கள் ஆதி! நானும் உங்கள் நிலைமையில் தனியே திருமணமான புதிதில் மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்தில் வசிக்க நேர்ந்தது. அதனால் உங்கள் மன உண்ர்வுகள் அப்போது எப்ப்டியிருந்திருக்கும், மொழி புரியாத ஊரில் எப்படி சமாளித்திருந்திருப்பீர்கள் என்பதை அப்படியே 100 சதவிகிதம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல எதற்குமே யாரையாவது சார்ந்திருக்கும் குணம் போய் தன்னம்பிக்கையும் தைரியமும் எப்போதும் கூடவே இருக்குமென்பதும் உண்மை தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  11. உங்கள் எண்ணங்களை அழகாக வெளிப்படித்தியிருகிரீர்கள்.
    //சுயநலமில்லாத பொது நலத்தை எண்ணுபவர். கர்ண பரம்பரையில் வந்தவரோ என்று சற்றே எண்ணக்கூடும். சற்றும் யோசிக்காமல் தானம் செய்து விடுவார். அவர்களாக திருப்பி தந்தால் தான் உண்டு.// வெங்கட் என்னும் பெயர் கொண்டவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ? துரை செல்வரஜ் சாரைத்தான் கேட்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் என்ற பெயர் கொண்டவர்கள் இப்படித்தான் இருப்பார்களோ? ஹாஹா.... இருக்கலாம் - இப்படி இல்லாமல் இருக்கும் சில வெங்கட்களை சந்தித்ததுண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  12. Your feel is live. There is a time to bid goodbye to the old. Thinking either about the moment that has passed or about a moment that is still to come is a waste of time and energy. Handle each day as it comes and tomorrow will be taken care of tomorrow./kayal ramasamy

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது முதல் கருத்துரை - சிறப்பான கருத்துரை! மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....