ஞாயிறு, 17 மார்ச், 2019

ஐம்புலன்களுக்கு விருந்து – நிழற்பட உலா – பகுதி நான்கு



தலைநகரின் சாகேத் பகுதியில் உள்ள பூங்காவில் [Garden of Five Senses] நடந்த தோட்டத் திருவிழா சென்ற போது எடுத்த நிழற்படங்களின் நான்காவது தொகுப்பு இதோ இந்த வார ஞாயிறில். இப்பூங்காவில் எடுத்த படங்களின் கடைசி பகுதி இது. இன்னும் நிறைய படங்கள் உண்டு. அவற்றைக் காண விருப்பம் இருப்பவர்கள் காண, கீழே தொகுப்பின் சுட்டியைத் தந்திருக்கிறேன்.

தலைநகரில் எந்த நிகழ்வு என்றாலும் சில கலைஞர்களைக் காண முடியும். தங்களது விறுவிறுப்பான இசையாலும், நடனத்தினாலும் நிகழ்ச்சியைக் காண வருபவர்களைக் கவர்ந்து விடுவார்கள். தலைநகர வாசிகள், குறிப்பாக வட இந்தியர்கள், இப்படியான இசையைக் கேட்டால், கைகளைத் தூக்கிக் கொண்டு களத்தில் குதித்து விடுவார்கள் – நம்மை போல அவர்களுக்கு பெரிதாக வெட்கம் வருவதில்லை! கோதாவில் இறங்கி ஒரு குத்தாட்டம் போட்டு விடுவார்கள் – மக்கள் பார்க்கிறார்களே என்ற வெட்கமோ, தயக்கமோ அவர்களுக்கு வருவதே இல்லை! பார்த்தால் பார்த்துக்கோ என்ற எண்ணத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். இந்த நிகழ்விலும் அப்படி சிலர் ஆடினார்கள்! அப்படி ஆடியபோது எடுத்த ஒரு சிறு காணொளி கீழே இணைத்திருக்கிறேன்.

வாருங்கள் பூக்களை, நிழற்படங்களை ரசிக்கலாம்!



















 படத்தில் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள்!







இந்தப் பூங்கா உலாவில் எடுத்த நிழற்படங்கள் நிறையவே இருக்கிறது. அத்தனையும் இங்கே பகிர்ந்து கொள்வது சாத்தியமல்ல! கூகிள் ஃபோட்டோஸ் பகுதியில் சேமித்து வைத்திருக்கிறேன். அத்தனை படங்களையும் பார்க்க விருப்பம் இருந்தால் கீழ் கண்ட சுட்டியின் மூலம் பார்க்கலாம்!


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில நிழற்படங்களோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

    நம்மை போல அவர்களுக்கு பெரிதாக வெட்கம் வருவதில்லை! கோதாவில் இறங்கி ஒரு குத்தாட்டம் போட்டு விடுவார்கள் – //

    ஆமாம் ஆனால் இங்கும் இப்போது ஆங்காங்கே எப்பவேனும் இருக்கிறது (நான் சென்னையைச் சொன்னேன்.)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி!

      அவர்களுக்கு இது பழக்கமாகி விட்டது. நம்மால் முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இந்தக் கலைஞர்களுக்கு ஏதேனும் வருமானம் கிடைக்குமா?

    அந்தப் பூ மண்டபம் ரொம்ப அழகாக இருக்கின்றன ஜி!

    அட! ஒட்டகச் சிவிங்கி அருகில் நம்ம உயரமான வெங்கட்ஜி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அது நினைக்குது நமக்குப் போட்டியா இது யாருனு!!!

    படங்கள் எல்லாமே அழகு!

    காணொளி பிறகு...நேற்றைய காணொளியும் பார்க்கலை பார்க்கிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விழா ஏற்பாடு செய்தவர்கள் நாள் கூலி கொடுப்பதுண்டு. அது தவிர விழாவிற்கு வரும் சிலரும் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள் - அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட பின்னர். அவர்களுடன் படம் எடுத்துக் கொள்ளவும் காசு வாங்குவதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அவர்கள் ரத்தத்தில் இருக்கிறது போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அவர்கள் ரத்தத்தில்! ஹாஹா. இருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அனைத்துப் படங்களையும் ரசித்தேன். பூம்புலியும் பூமண்டபமும் கலையழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூ மண்டபம் - இண்டியா கேட்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. //படத்தில் இரண்டு ஒட்டகங்கள் //

    ஹா... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. இப்படி கலைஞர்களுடன் மக்களும் ஆடும் காணொளி நீங்க முன்னரும் பகிர்ந்ததிருந்தது நினைவுக்கு வந்துச்சு.....

    காணொளி நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அது வேறு இடம். வேறு குழு - வேறு சிலர் ஆடியது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அனைத்துப் படங்களும் அழகாக உள்ளன.
    நடன கலைஞர்கள் படங்கள், ஒற்றை ரோஜா (ரோஜாவா அது?) படம் நிஜப்புலி போலிருக்கும் பூக்கள் படம், மண்டபமாக மலர்ந்திருக்கும் படம் அனைத்தும் அருமை.

    "இரு ஒட்டகச்சிவிங்கிகள்" வாசகம் புன்னகைக்க வைத்தது.

    காணொளி பிறகு காண்கிறேன். தங்கள் கொடுத்த சுட்டிக்கும் நிதானமாக சென்று பூக்களின் அழகை ரசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை ரசித்தமைக்கு நன்றி. காணொளியும் சுட்டியில் உள்ள படங்களும் முடிந்த போது பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  8. அருமையான படங்கள். காணொளி கண்டேன். கூகுள் ட்ரைவ் ஆல்பத்தில் உள்ள படங்களும் கண்டு இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூகிள் ட்ரைவ் படங்களையும் நீங்கள் பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. சீனா ஐயாவின் மறைவு துயரம் தந்தது தனபாலன். ஆழ்ந்த இரங்கல்கள்.

      நீக்கு
  10. படங்கள் அருமை சித்தரே ...
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  12. அனைத்து படங்களும் மிக அருமையாக இருக்கிறது.
    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வ்றுகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. நம்மவர்களுக்கு செல்ஃப் கான்ஷியஸ்னெஸ் அதிகம் அம்பர்நாது அலும்னி சந்திப்பில் பல வடக்கத்திய நண்பர்களின் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம்கண்டிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. 'படத்தில் இரண்டு ஒட்டக சிவிங்கிகள்' என்ற தங்களின் நகச்சுவையை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....