செவ்வாய், 26 மார்ச், 2019

கதம்பம் – டோக்ளா – வெஜ் புலாவ் – முகநூலும், யூட்யூபும் – கொட்டிக் கவிழ்



சாப்பிட வாங்க – டோக்ளா – 17 மார்ச் 2019


டெல்லியில் இருந்த வரை அவ்வப்போது சுவைத்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமானது. உப்பு, புளிப்பு, காரம் என எல்லாம் கலந்த சுவையில் மெத்தென்ற பக்குவத்தில் ஆவியில் வைத்த பண்டம் இது. டெல்லியில் ஒருமுறை செய்து பார்த்திருக்கிறேன். இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு நேற்று செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் செய்து பாருங்கள். செய்முறை தெரிந்து கொள்ள டோக்ளா.

வாங்க சாப்பிடலாம் - புலாவ் & வெங்காய ராய்த்தா!! - – 17 மார்ச் 2019



வேறு எந்த புலாவும் செய்யப் போவதில்லை என்பதால் வெஜிடபிள் என்று குறிப்பிடவில்லை.

Facebook Vs Youtube – 18 மார்ச் 2019

இப்போதெல்லாம் முகப்புத்தகத்தை விட YouTube பக்கம் தான் நிறைய உலாவுகிறேன். நிறைய விஷயங்களைத் தேடிப் பார்க்கிறேன். முன்பெல்லாம் YouTube என்றாலே எனக்கு ஒரு அலர்ஜி! கன்னா பின்னா காணொளிகள் தான் இதில் இருக்கும் என்று ஒரு எண்ணம்.

இங்கே பிடித்தவர்களின் பக்கங்களை subscribe செய்து கொள்ளலாம். அப்படி நான் பார்த்த ஒன்று தான் "அனிதா குப்புசாமி" அவர்களின் தளம். விதவிதமான தலைப்புகளில் இவரின் காணொளிகள் உள்ளது. அதில் அவர்கள் இல்லத்தில் உள்ள மாடித்தோட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு ஏக்கத்தையே உண்டாக்கியது.

தொட்டிகளிலேயே அத்தனை விதமான பழங்களையும், காய்கறிகளையும், மலர்களையும், மூலிகைகளையும் வளர்த்து இருக்கிறார். சுத்தமும், சுகாதாரமும் நிறைந்த காய்கனிகள். எவ்வித ரசாயனங்களும் இல்லாமல்!

அபார்ட்மெண்ட் வாழ்வில் இதெல்லாம் சாத்தியமில்லை. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும், சுயநலமில்லாத மனிதர்களும் தேவை.

டெல்லியில் மாடியில் உள்ளவர்களுக்கே மொட்டை மாடி சொந்தம் என்ற விதிகள் உண்டு. அப்படி எங்களுக்கு கிடைத்த மாடியை வெறுமனே தான் வைத்திருந்தோம். அப்போதெல்லாம் இணையத்தில் இத்தனை பரிச்சயமில்லை. 2010-ல் தான் நான் எழுத ஆரம்பித்தது.

இதையெல்லாம் என்னவரிடம் பகிர்ந்து கொண்ட போது, "எல்லாவற்றிலும் + - உண்டு என்றார்" அதுவும் சரி தானே!!!

இந்தக் காணொளியை கட்டாயமா பாருங்க.




மார்க் நினைவுபடுத்திய விஷயம் – 19 மார்ச் 2019

மூணு வருஷத்திற்கு முன்னர் இப்படி நடந்தது என நினைவூட்டினார் மார்க்! சமீபத்தில் கூட இதே மீண்டும் நடந்தது!

என்ன! அதற்குள் அடுத்ததா!!!
சென்ற வாரம் தானே.
வீட்டில் கேலி செய்வார்களே!
சற்று கவனமாக இருந்திருந்தால்…

சிறு பிராயத்தில் மகள்
ஒருநாள் செய்த போது
நடுஇரவு வரை கூட
அமர்ந்து முடித்தேனே….

இப்போது நானே இந்த
வேலையை குழந்தையாக
செய்து விட்டேனே…
வெட்கமாக உள்ளது….

எப்போது எங்களை பிரித்து
விடப் போகிறாய் என
என்னை கேட்கும் நான்
கொட்டிக் கவிழ்த்த என்
.
.
.
.

அஞ்சறைப் பெட்டி சாமான்கள்….:)

பின்குறிப்பு:- சொல்ல வரும் விஷயத்தை புதிர் போல சுருக்கி சொல்லி பார்த்தேன். தவறாக யாரும் கவிதை என நினைத்து ஓடி விடாதீர்கள்....:)) கவிதை படைக்கும் கவிஞர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.....:))

நீரின்றி அமையாது உலகு – 22 மார்ச் 2019


பூமியின் பரப்பளவில் 30 விழுக்காடு தான் நிலம். மீதி 70 விழுக்காடு நீர் தான். அதிலும் உப்புநீர் போக உபயோகிக்க ஏதுவான நீர்நிலைகளை நாம் சரியாகத் தான் உபயோக்கிறோமா என்றால் நம்மிடம் பதிலில்லை.

காடுகளையும், மரங்களையும் அழித்து மழை பொய்த்து விட்டது. தொழிற்சாலைகளின் கழிவுநீரால் நீர்நிலைகளில் மாசு. மக்கள் தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை நீர்நிலைகளில் வீசியெறிந்து மாசடைய செய்வது என்று ஒருபுறம்.

மறுபுறம் தண்ணீரே கிடைக்காமல் எவ்வளவோ மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, கிடைத்தவர்களோ வாசல் தெளிக்கிறேன், பாத்ரூம் ஷவரில் குளிக்கிறேன், வாஷிங் மெஷினில் துவைக்கிறேன் என்று வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உலக தண்ணீர் தினமான இன்று முதலாவது தண்ணீரின் அருமையை உணர்ந்து சிக்கனமாக பயன்படுத்துங்கள். ஒவ்வொரு துளியும் உன்னதமானது.

அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் நீரை ஒருநாள் உங்களை நீங்களே ஆய்வு செய்து பாருங்கள். அப்போது தான் தெரியும் நாம் எவ்வளவு நீரை வீணடிக்கிறோம் என்று.

நீர்நிலைகளை தூர்வாரி சுத்தப்படுத்துவோம். மாசடைவதை தடுப்போம். மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நாமே ஒன்றிணைந்து பணி செய்வோம்!

பிளாஸ்டிக்கை தவிர்ப்போம். அவை வடிகால்களில் அடைத்துக் கொள்ளாமல் பாதுகாப்போம். மரக்கன்றுகளை நடுவோம். விழாக்காலங்களில் மரக்கன்றுகளையும், விதைப்பந்துகளையும் பரிசளிப்போம்.

மனிதர்களைப் போலவே பறவைகளும், விலங்குகளும் இந்தக் கோடையில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றன. உங்களால் இயன்ற அளவு அவைகளுக்கு உணவும், நீரும் தாருங்கள்.


தண்ணீர் சிக்கனம்! தேவை இக்கணம்!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

30 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    டோக்ளா மற்றும் புலாவ் வாவ்! சூப்பரா இருக்கிறதே! டோக்ளா எனக்கும் மிகவும் பிடிக்கும். வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். செய்வதுண்டு. புலாவும். எடுத்துச் சாப்பிடனும் போல இருக்கிறது நீங்கள் செய்திருப்பது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நானும் புலாவ் ரைஸ் குக்கரில் தான் செய்வேன் நல்லா உதிர் உதிரா வரும்...

    அஞ்சரைப் பெட்டி ஹையோ அது மிக்ஸ் ஆயிடுச்சுனா பிரிப்பது கடினம் தான்...ரசித்தேன் உங்க வரிகளை...சஸ்பென்ஸ்!! முதலில்!!

    நீர் சேமிப்பு மிக மிக அவசியம். நான் துணி துவைக்கும் தண்ணீரை வைத்துதான் பாத்ரூம் கழுவி டைல்ஸ் க்ளீனிங்க் கடைசி தண்ணீர் கொண்டு வீடு துடைத்தல் என்று என்று எவ்வளவு சிக்கனம் செய்ய முடியுமோ அவ்வளவு. அரிசி களையும் தண்ணீர் காய் கழுவும் தண்ணீர் எல்லாம் முன்னர் பால்கனிதோட்டத்தில் விடுட்டுடுவேன்..இல்லை என்றால் அருகில் இருக்கும் மாட்டுத் தொழுவத்தில் கொடுத்துவிடுவேன்...அக்வாகார்ட் ஆர் ஓ விலிருந்து வெளியாகும் தண்ணீரை பாத்ரூம் பக்கெட்டுகளில் நிரப்பி வைத்துவிடுவேன்...டாய்லெட் யூஸிற்கு என்று..
    .இப்ப இங்கு பங்களூரில் தோட்டம் எதுவும் இல்லை...அக்வா க்வார்ட் இல்லை பபிள் டாப் என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் சிக்கனம் இப்போதைய முக்கியத் தேவை. அனைவரும் உணர்ந்து கொள்வது நலம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    முகநூலிலும் டோக்ளா, புலாவ் தாவல்களைப் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அஞ்சறைப்பெட்டி கலவரங்கள் எல்லா வீட்டிலும் அடிக்கடி நிகழ்வது என்று நினைக்கிறேன். அதைக் கவிதை வடிவில் தந்திருப்பதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஞ்சறைப் பெட்டி கலவரங்கள்! ஹாஹா... கலவரம் தான் அது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இந்த மாதிரி குழந்தை கவிழ்த்த அஞ்சரைப் பெட்டி கடுகு முதலியவற்றை சிறு தீயில் வாணலியில் வறுத்து போடி செய்து எந்த குழம்பிலும் 1 டீ ஸ்பூன் போட்டு உபயோகித்தார்கள் என்று ஒரு ப்ளோகில் பார்த்தேன். பிடித்துப் போகவே அவர்கள் போடி தீர்ந்தவுடன் மீண்டும் அதே போன்று எல்லாவற்றையும் கலந்து பொடி உண்டாக்கிக் கொண்டார்களாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பொடி நன்றாக இருக்க, இப்படி மீண்டும் கலந்து பொடி! நல்லது தான். புதிது புதிதாய் முயற்சிகள் செய்து கொண்டே இருப்பது தான் நல்லது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. YouTube இன்று நல்ல சம்பாத்தியமும் கொடுக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல சம்பாத்தியமும் கொடுக்கிறது - நிறைய காணொளிகள் சேர்த்து விளம்பரமும் அதில் வர சம்பாத்தியம் உண்டு. எல்லோருக்கும் வாய்ப்பதில்லை! முயற்சி நிறைய தேவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  8. MTR khaman Dhokla ready mix is very nice. Very fast, can have in minutes.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம்.டி.ஆர். டோக்ளா மிக்ஸ் திருச்சியில் கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  9. எனக்கு அஞ்சறைப்பெட்டி கொட்டிக் கவிழ்ந்தது இல்லை. மாமியாருக்கு அடிக்கடி ஆகும். முடிஞ்ச வரை பிரிச்சுட்டு மிச்சத்தை வறுத்துப் பொடியாகச் செய்து பயன்படுத்திப்போம். சில சமயங்களில் அடைக்கு அரைக்கையில் அதில் சேர்ப்பதும் உண்டு. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வறுத்துப் பொடி செய்வது - இது கூட நல்லாதான் இருக்கு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. டோக்ளா இங்கே போணி ஆகாது. வெளியே கிடைக்கையில் வாங்கிச் சாப்பிடுவது தான். வெஜிடபுள் ரைஸ் நிறையப் பண்ணினால் தான் ரைஸ் குக்கரில் வைக்க முடியுது! இல்லைனா அப்படியே கடாயிலேயே பண்ணிடுவேன். இல்லைனா சின்ன ப்ரஸ்டிஜ் குக்கரில் ஒரே சத்தம்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோக்ளா சிலருக்குப் பிடிப்பதில்லை!

      வெஜிடபுள் ரைஸ் - கடாயிலேயும் பண்ணிடலாம்! ஒருவருக்கு எனில் இப்படித்தான் இங்கே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  11. நானும் அதிகம் யூட்யூப் பக்கம்தான் சுத்திக்கிட்டிருக்கேன். ஆனா, கிராஃப்ட் பக்கம்தான். அதுப்போக சமையல் பார்ப்பேன். எப்பவாவது பாட்டு பார்ப்பேன்..

    புலாவ் நல்லா வந்திருக்கும் போல! பார்க்கவே நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  12. 'டோக்ளா'...இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    'புலாவ்'...இங்கெல்லாம் புலவு என்போமே, அதுவா? படத்தில் பார்க்கிற மாதிரி புலவெல்லாம் நான் சாப்பிட்டதில்லை. நண்பர்கள் இதுகளைப் புகழ்ந்துரைப்பதைப் பார்க்கும்போது சாப்பிடணும்போல இருக்கு.

    யூ டியூப் பக்கமெல்லாம் அதிகம் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோக்ளா ஒரு குஜராத்தி உணவு. நன்றாகவே இருக்கும்.

      புலவு, புலாவ்! இர்னடும் ஒன்று தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அறிவிலிநம்பி.

      நீக்கு
  13. அம்மணிக்கு மிகவும் பிடித்தமான ஒரு உணவு - டோக்ளா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்...

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....